Published:Updated:

உழைப்பு.. காதல்.. நம்பிக்கை ! - மில்கா சிங் கற்று தந்த பாடம் #MyVikatan

மில்கா சிங்
மில்கா சிங்

மில்கா சிங் அவர்களின் தன்னம்பிக்கை, விடா முயற்சி நிறைந்த வாழ்க்கைப் பாதையை கவிதையாக விவரித்திருக்கிறார் நம் விகடன் வாசகர்..

பொறுப்புத் துறப்பு: இந்தக் கட்டுரை, வாசகரின் படைப்பு. கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்களுக்கும் கருத்துகளுக்கும் அதன் ஆசிரியரே பொறுப்பாவார். கட்டுரை சம்பந்தமாக உங்களுக்கு ஆட்சேபனை இருந்தால், my@vikatan.com-க்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்!

மில்கா சிங் என்பது

ஒரு பெயர் மட்டுமல்ல…

பல தடகள வீரர்களின்

உயிர் நாடி!

ஆதரவற்றவர்களுங் கூட

அகில உலக அளவில்
ஆளுமை செலுத்தலாமென்பதற்கு

இவர் வாழ்வே

உயர் சாட்சி!

மேற்கு பஞ்சாபில்

மேன்மைமிகு குடும்பத்தை

மதவெறிக்குக் காவு கொடுத்த பின்னர்

பதினாலு வயதில்

பரதேசி போல

பாரதம் வந்தவர்…

ஓடியோடி உழைத்தே

உயரம் தொட்டவர்!

நாடு காக்கும் ராணுவத்தில்

நல்லுறுதி கொண்டுழைத்து

தடகள வாழ்வைத்

தனதாக்கிக் கொண்டவர்!

மெல்போர்ன்(1956)ஒலிம்பிக்கின்

தோல்வியால் இவர்

துவண்டுவிட வில்லை!

மில்கா சிங்
மில்கா சிங்

மாறாய் மனதில்

மகத்தான உறுதி பூண்டார்!

ஆசிய விளையாட்டுப்போட்டி(1958)

அப்போதைய டோக்கியோவில்

மிளிர்ந்திட்ட போதுதான்

மின்னல்வேக வீரரானார்!

இருநூறு நானூறு

மீட்டர் பந்தயங்களில்

தங்கப் பதக்கங்களைத்

தட்டி வந்து

புகழ் சேர்த்தார்...

தான் வாழும் பாரதத்திற்கு!

காமன் வெல்த்திலும்

நானூறு மீட்டரில்

நளினமாய் வேகமெடுத்து

தங்கப் பதக்கத்தை

தனதாக்கிக் கொண்ட அவர்

சர்வதேச அளவில்

பாரதத்தை அடையாளம் காட்டினார்!

பிரதமர் நேரு

பிரியமிகுந்து பாராட்ட…

‘நாடே கொண்டாட

அந்நாளை விடுமுறையாக்கும்படி’

மில்காசிங் விடுத்த கோரிக்கையால்

நெகிழ்ந்தார் பிரதமர்…

சிங்கின் நாட்டுப்பற்றை

மனதில் எண்ணி!

மில்கா சிங்
மில்கா சிங்

களத்தில் மட்டுமல்ல

கதாநாயகன் இவர்

நிஜ வாழ்க்கையிலும்

நிர்மல் கௌரின்

கைபிடித்த காதல்கதை

கவின் வரலாறு பஞ்சாபில்!

0.1 நொடி வித்தியாசத்தில்

ரோம் ஒலிம்பிக்கில் (1960)

வெண்கலத்தை இழந்த

வீர வரலாற்று நாயகன்!

1962 ஆசிய விளையாட்டில்

மீண்டும் இரு தங்கம்!

ஆனாலும் டோக்கியோ ஒலிம்பிக்கில்(1964)

நான்காம் இடமே

நம் நாயகனுக்கு!

நான்கே இவருக்கு

நல்ல நம்பரோ?!

91ஆம் வயதிலும்

துவளாமல் இருந்த இவரை

மனைவியின் பிரிவே

வாட்டமுறச் செய்தது!

இதுதான் சமயமென்று

இடைப்புகுந்த கொரோனா

விண்ணுலகம் இவரேக

விரைந்து வழி காட்டிற்று!

ஒலிம்பிக்கின் தங்கப்பதக்கம்

இந்தியனுக்குக் கிடைக்கச் செய்வதே

இவரது ஆத்மாவுக்கு

உண்மையில் நாம் செலுத்தும்

உயர்வான அஞ்சலியாகும்!

-விஜய்,

மெக்லீன்,அமெரிக்கா

விகடனில் உங்களுக்கென ஒரு பக்கம்...

உங்கள் படைப்புகளைச் சமர்ப்பிக்க இங்கே க்ளிக் செய்க https://www.vikatan.com/special/myvikatan/

My Vikatan
My Vikatan

ஏதோ ஓர் ஊரில், எங்கோ ஒரு தெருவில் நடந்த ஒரு விஷயம்தான் உலகம் முழுக்க வைரலாகிறது. உங்களைச் சுற்றியும் அப்படியொரு வைரல் சம்பவம் நடந்திருக்கலாம்... நடந்துகொண்டிருக்கலாம்... நடக்கலாம்..! அதை உலகுக்குச் சொல்வதற்காகக் களம் அமைத்துக் கொடுக்கிறது #MyVikatan. இந்த எல்லையற்ற இணையவெளியில் நீங்கள் செய்தி, படம், வீடியோ, கட்டுரை, கதை, கவிதை என என்ன வேண்டுமானாலும் எழுதலாம். மீம்ஸ், ஓவியம் என எல்லாத் திறமைகளையும் வெளிப்படுத்தலாம்.

உங்கள் படைப்புகளைச் சமர்ப்பிக்க இங்கே க்ளிக் செய்க https://www.vikatan.com/special/myvikatan/

அடுத்த கட்டுரைக்கு