Published:Updated:

அம்மா பிறந்த ஊர்! - வாசகர் பகிர்வு #MyVikatan

அம்மா பிறந்த ஊர்
அம்மா பிறந்த ஊர்

தன் அம்மா பிறந்த கிராமம் குறித்து சென்னை வாசகர் எழுதிய கவிதை..

பொறுப்புத் துறப்பு : இந்தக் கட்டுரை வாசகரின் படைப்பு. கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்களுக்கும் கருத்துகளுக்கும் அதன் ஆசிரியரே பொறுப்பாவார். கட்டுரை சம்பந்தமாக உங்களுக்கு ஆட்சேபனை இருந்தால், my@vikatan.com-க்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்!

அப்பவெல்லாம்

ஊருக்குள் பேருந்து

வாராது..

விளக்குரோட்டில்

இறங்கி 3 மைல்

நடந்து செல்ல

வேண்டும்

அம்மா பிறந்த

ஊருக்கு..!

அம்மா பிறந்த ஊர்
அம்மா பிறந்த ஊர்

வளைந்து நெளிந்து

செல்லும் அந்தச்

சாலையில்

நடப்பதன் களைப்பு

போக்குவதற்காக

மைல் கல்லில்

யார் இந்தக் கல்லை

வைப்பது என்று

பந்தயம் வைப்பாள்

என் தாயார்..!

முதலில் கல்

வைப்பதில் எனக்கும்

என் தம்பிக்கும்

போட்டி பலமாக

இருக்கும்..

இப்பவும்

அப்படியே

இருக்கிறது

அந்தச் சாலை..

அம்மா பிறந்த ஊர்
அம்மா பிறந்த ஊர்

வயலில்

விளைந்த

கதிர்கள் வரப்போரம்

சாய்ந்து கிடக்கின்றன.

இரை எடுக்க

காத்திருக்கும்

கொக்குகள்

பயிர்களோடு

குசலம் விசாரித்துக்

கொண்டிருக்கின்றன.

அம்மா பிறந்த ஊர்
அம்மா பிறந்த ஊர்

அன்று நான்

பார்த்த சனங்கள்

யாரும் இப்போது

இல்லை.

ஆனால்

ஒரே ஒரு

முன்னேற்றம்

இப்போது

ஊருக்குள்

வந்து செல்கின்றன

நகரப்பேருந்து..!

--

-சி.அ.அய்யப்பன்

விகடனில் உங்களுக்கென ஒரு பக்கம்...

உங்கள் படைப்புகளைச் சமர்ப்பிக்க இங்கே க்ளிக் செய்க https://www.vikatan.com/special/myvikatan/

My Vikatan
My Vikatan

ஏதோ ஓர் ஊரில், எங்கோ ஒரு தெருவில் நடந்த ஒரு விஷயம்தான் உலகம் முழுக்க வைரலாகிறது. உங்களைச் சுற்றியும் அப்படியொரு வைரல் சம்பவம் நடந்திருக்கலாம்... நடந்துகொண்டிருக்கலாம்... நடக்கலாம்..! அதை உலகுக்குச் சொல்வதற்காகக் களம் அமைத்துக் கொடுக்கிறது #MyVikatan. இந்த எல்லையற்ற இணையவெளியில் நீங்கள் செய்தி, படம், வீடியோ, கட்டுரை, கதை, கவிதை என என்ன வேண்டுமானாலும் எழுதலாம். மீம்ஸ், ஓவியம் என எல்லாத் திறமைகளையும் வெளிப்படுத்தலாம்.

உங்கள் படைப்புகளைச் சமர்ப்பிக்க இங்கே க்ளிக் செய்க https://www.vikatan.com/special/myvikatan/

அடுத்த கட்டுரைக்கு