Published:Updated:

`சிகை அலங்கார சினேகிதர்கள்!' - லாக் டவுன் நெகிழ்ச்சிக் கவிதை #MyVikatan

Representational Image
Representational Image ( Credits : Pixabay )

சலூன் கடைகளின் சிகை அலங்கார சினேகிதர்கள் குறித்து வாசகர் பகிர்ந்துள்ள நெகிழ்ச்சிக் கவிதை..

பொறுப்புத் துறப்பு : இந்தக் கட்டுரை வாசகரின் படைப்பு. கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்களுக்கும் கருத்துகளுக்கும் அதன் ஆசிரியரே பொறுப்பாவார். கட்டுரை சம்பந்தமாக உங்களுக்கு ஆட்சேபனை இருந்தால், my@vikatan.com-க்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்!

சிகை அலங்கார சினேகிதர்களே…

சௌக்கியமா..?

உங்கள் கை படாமல்

எங்கள் தலைகள் எல்லாம் தறுதலையாய்..!

உங்கள் ‘சிசர்’ பேச்சுக் கேட்காமல்

சிதறத் தொடங்கிவிட்டன..

எங்கள் மீசைக் கூட்டணி..!

Representational Image
Representational Image

இப்போது கூழ் குடித்தால் மட்டுமல்ல…

பால் குடித்தால்கூட பங்கு கேட்கிறது…

உதட்டை ஓவர்டேக் செய்திருக்கும்

தாடியும்… மீசையும்..!

உங்களின் மைப்பூச்சு மூலம்தான்

நாங்கள் பொய்ப்பூச்சு பூண்டு அலைந்தோம்..!

இன்று சாயம் வெளுத்துப்போனோம்..

சம்சாரம் உட்பட

சகலரின் கேலிக்கும் உள்ளானோம்..!

பல தேவ ரகசியங்கள்

இந்த மண்ணில்

காக்கப்படுவதாகச் சொல்கிறார்கள்…

அதில் உடன்பாடில்லை எமக்கு..!

ஆனால் எங்கள் இளமையின்

தேக ரகசியம் காக்க வைக்கும்

தேவதூதர் நீங்கள்தான் என்று

தெரிந்துகொண்டோம் இப்போது..!

Representational Image
Representational Image

‘அண்ணா..அண்ணா..’ என்று அழைத்த

அண்டைவீட்டுத் தங்கைகள் எல்லாம்

இன்று தயங்கி தயங்கி

‘அங்கிள்’ என்று

அழைக்கவே அச்சப்படுகிறார்கள்..!

முடி திருத்தி.. ஒப்பனை செய்து

உங்கள் கண்ணாடியில் முகம் பார்த்தாலே

தன்னம்பிக்கை அங்கே

தலைநிமிர்ந்து நிற்கும்..!

கன்னம் வருடி,

கழுத்துச் சுளுக்கு எடுத்து,

காதுகளில் நெட்டி பறித்துவிடும்

எங்களின் ஆண்பால் தாய்களே…!

கொரோனாவால்

உங்களின் கரங்களை

பற்றிக்கொள்ள முடியவில்லை..!

வாழ்க்கையில்

நட்புக்கும் உறவுக்கும்

கத்தரிபோட பலபேர்..!

Representational Image
Representational Image

ஆனால் நீங்களோ..

கத்தரியாலேயே

நட்பை இணைய வைக்கும்

நவீன ‘குயிக் பிக்ஸ்’..!

வணங்காமுடிகளையும்

வளையவைக்கும் வல்லோரே…

கொரோனா வைரஸ்

நம் தொடர்புக்கு

குழி பறிக்கலாம்..!

கவலை வேண்டாம் உறவுகளே…

விரைவில் மீண்டும் நாம்

‘தலை’ ‘மை’ கழகத்தில்

தாயுள்ளத்துடன் இணைவோம்..!

அதுவரையில் நின்று நின்று சேவை செய்த

உங்கள் கால்கள் ஓய்வெடுக்கட்டும்.. !

ஒப்பனை செய்தே களைத்துப்போன

உங்கள் உடல் நலம் அழகாகட்டும்..!

இன்று ‘மொட்டை’ அடிக்கப்பட்டிருக்கும்

உங்கள் வருமானம் பற்றி

கவலை வேண்டாம்..!

விரைவில் மீண்டும் வளர்(த்)ந்து வருவோம்… !

Representational Image
Representational Image

உங்களை நினைத்து

ஒரு மூச்சு இழுத்துவிட்டாலே

உங்கள் கடை லோஷன்தான்

இன்னும் எங்களுக்குள் உலா வருகிறது…!

உலக அரசியல் பேசாமல்,

நாட்டு நடப்பு விவாதிக்காமல்

உங்களுக்கு நாட்கள் நகர்வது

கஷ்டம்தான் நண்பர்களே… !

தைலத்தைப்போல் மனதுக்குள்

தைரியத்தையும் தடவுங்கள்..

விரைவில்

உங்கள் கடையின்

அகன்ற கண்ணாடியில்

நம் இதயம் பார்த்து

உங்கள் கத்தரியும்

கரமும் கை குலுக்கிக் கொள்வோம்..!

-பழ.அசோக்குமார்

விகடனில் உங்களுக்கென ஒரு பக்கம்...

உங்கள் படைப்புகளைச் சமர்ப்பிக்க இங்கே க்ளிக் செய்க https://www.vikatan.com/special/myvikatan/

My Vikatan
My Vikatan

ஏதோ ஓர் ஊரில், எங்கோ ஒரு தெருவில் நடந்த ஒரு விஷயம்தான் உலகம் முழுக்க வைரலாகிறது. உங்களைச் சுற்றியும் அப்படியொரு வைரல் சம்பவம் நடந்திருக்கலாம்... நடந்துகொண்டிருக்கலாம்... நடக்கலாம்..! அதை உலகுக்குச் சொல்வதற்காகக் களம் அமைத்துக் கொடுக்கிறது #MyVikatan. இந்த எல்லையற்ற இணையவெளியில் நீங்கள் செய்தி, படம், வீடியோ, கட்டுரை, கதை, கவிதை என என்ன வேண்டுமானாலும் எழுதலாம். மீம்ஸ், ஓவியம் என எல்லாத் திறமைகளையும் வெளிப்படுத்தலாம்.

உங்கள் படைப்புகளைச் சமர்ப்பிக்க இங்கே க்ளிக் செய்க https://www.vikatan.com/special/myvikatan/

அடுத்த கட்டுரைக்கு