Published:Updated:

மௌனங்களும் பயணங்களும்... கவிதை #MyVikatan

Representational Image
Representational Image

ஒரு நிமிட வாசிப்பு...

பொறுப்புத் துறப்பு : இந்தக் கட்டுரை வாசகரின் படைப்பு. கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்களுக்கும் கருத்துகளுக்கும் அதன் ஆசிரியரே பொறுப்பாவார். கட்டுரை சம்பந்தமாக உங்களுக்கு ஆட்சேபனை இருந்தால், my@vikatan.com-க்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்!

மௌனங்கள் பேசி கேட்டதுண்டா..?

மௌனங்களின் மொழிகள் என்றேனும் புரிந்ததுண்டா..?

இல்லையெனில்

இல்லையென்று உணருங்கள்

Representational Image
Representational Image

ஓா் நீண்ட பயணம்

எதிலேனும்

எப்படியேனும்

என்றேனும்

அது இன்றாகினும்

பயணப்படுங்கள்

தனிமையில்

தொ(ல்)லைபேசிகள் வேண்டாம்

இணை(யா)ய தொடா்புகள் வேண்டாம்

மொழியறியா தேசம் செல்லுங்கள்

வழியறியா பரதேசம் போங்கள்

Representational Image
Representational Image

காதல்

காமம்

துரோகம்

ஏமாற்றம்

தோல்வி

வெற்றி

அன்பு

பாசம்

கோபம்

வன்மம்

மகிழ்ச்சி

சந்தோசம்

சுயநலம்

மக்கள் தலைவர்! - கவிதை #MyVikatan

என அனைத்தையும் அசைபோடுங்கள்

அசைபோடும் பசுவினைப் போல

அசையா நினைவுகளை

சூழ்நிலை அறியும்

சூட்சுமம் புரியும்

மௌனங்கள் பேசும் மொழி புரியும்

Representational Image
Representational Image

ஆம்;

மௌனமாய் நிதானிக்கையில்

நிதானிக்கும் மௌனங்களின்

வெளிப்பாடுகள்

அருவிகளின் இடுக்கிடையில்

வசிக்கும்

குருவி போல

ஆா்ப்பரிக்கும் அருவிகளின் பின்னால்

அமைதியாய் வாழும்

அந்த மௌனங்கள் புரியும்

புரியுமானால்

மௌனங்களின் மொழி புரியும்

மௌனங்களின் வழி புரியும்

மௌனங்களின் வலி புரியும்

இதுதான் எதாா்த்தம்

என சூட்சும அா்த்தம் புரியும்

பயணப்படுங்கள்

மௌனமாய்ப் பயணப்படுங்கள்

மௌனங்களோடு பயணப்படுங்கள்

மௌனங்களுக்காகப் பயணப்படுங்கள்

Representational Image
Representational Image

வெற்றிகளுக்கான சூட்சுமங்கள்

மௌனமாய்

உங்களுக்காகக் காத்திருக்கின்றன...♥

-உப்பத்தூா் உத்ரகுமாா்

அடுத்த கட்டுரைக்கு