பொறுப்புத் துறப்பு : இந்தக் கட்டுரை, வாசகரின் படைப்பு. கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்களுக்கும் கருத்துகளுக்கும் அதன் ஆசிரியரே பொறுப்பாவார். கட்டுரை சம்பந்தமாக உங்களுக்கு ஆட்சேபனை இருந்தால், my@vikatan.com-க்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்!
மகளிர் தின
கவிதை ஒன்று
எழுத இயலுமா?
என்றது இதழொன்று!
வந்ததே வாய்ப்பென
வடிக்கலாமே
கவிதை ஒன்றை என
அமர்ந்தேன் !
மறு விநாடி…
மனைவி வந்தாள்
``என்னங்க இஞ்சி ”
வாங்கி வா என்றாள்!
இஞ்சி தின்ற குரங்கானது
என்றன் முகம்தான்!
ஒதுங்கினாள்!


ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!
சற்றே தணிந்த பின்
அப்பா என்றே
அருகில் வந்து
`அழகாய் உள்ளதா?
நான் வரைந்த
ஓவியம்' என்றே
நான் வரைந்த
ஓவியம் கேட்டாள்!
ஓவியத்தில் (லும்) நாட்டம்
ஓடியதாலே…
கவிதையின்
எண்ண ஓட்டம்
காணாமல் போனாதால்
கறுத்தது முகம்
கறுத்த முகத்தைக்
கண்ட ஓவியமோ
ஓடி ஒளியலானாள்!
இருவரும்…
கண்களில் புலப்படா
பொழுதினில்…
மகளிர் தின கவிதையை
முடித்து விட்டேன்!
வெளியிட்ட
இதழோ… இதுவே
சிறந்த கவிதை என்றே
கிரீடம் சூட்டியது!
கிரீடத்தின் பின்னணி
கண்டவர்கள்
மனைவியும்… மகளுமல்லவா?
- கே. அசோகன்.