Published:Updated:

அழுக்குவேட்டி! - நெகிழ்ச்சிப் பகிர்வு #MyVikatan

Representational Image
Representational Image

அப்பாவைப் பற்றிய நெகிழ்ச்சியான கவிதை...

பொறுப்புத் துறப்பு : இந்தக் கட்டுரை, வாசகரின் படைப்பு. கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்களுக்கும் கருத்துகளுக்கும் அதன் ஆசிரியரே பொறுப்பாவார். கட்டுரை சம்பந்தமாக உங்களுக்கு ஆட்சேபனை இருந்தால், my@vikatan.com-க்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்!

அப்போதெல்லாம்

அப்பாவின் கழுத்துக்கும்

வயிற்றுக்கும் – என்

காலும் தலையும் கிடக்கும்.

Representational Image
Representational Image

அப்பாவின் வெற்றுடம்பை

கட்டிப்பிடித்து நெஞ்சின் மேலே

ஒண்ணுக்கு அடிப்பதில்

ஒரு சுகம்.

மூத்திரவாடை ராத்திரியிருந்தும்

அடுத்த நாளும் எனை சுமக்க

அப்பாவுக்கு ஆசை பிறக்கும்!

இப்போதும் அப்பாவின்

இதயத்தைத் திறந்துபாருங்கள்

உட்கார்ந்து இருப்பேன் நான்!

Representational Image
Representational Image

எப்படியாயினும்...

வாழ்வின் ஓட்டத்தில்

அப்பா உடுத்திப்போடும்

அழுக்கு வேட்டியின்

மேலாவது படுத்துறங்கும் பாக்கியம்

என்னைப்போன்று

சிலருக்கு மட்டும்தான்

கிடைக்கிறது!

ஆர்.மோகன்ராஜ்

விகடனில் உங்களுக்கென ஒரு பக்கம்...

உங்கள் படைப்புகளைச் சமர்ப்பிக்க இங்கே க்ளிக் செய்க https://www.vikatan.com/special/myvikatan/

My Vikatan
My Vikatan

ஏதோ ஓர் ஊரில், எங்கோ ஒரு தெருவில் நடந்த ஒரு விஷயம்தான் உலகம் முழுக்க வைரலாகிறது. உங்களைச் சுற்றியும் அப்படியொரு வைரல் சம்பவம் நடந்திருக்கலாம்... நடந்துகொண்டிருக்கலாம்... நடக்கலாம்..! அதை உலகுக்குச் சொல்வதற்காகக் களம் அமைத்துக் கொடுக்கிறது #MyVikatan. இந்த எல்லையற்ற இணையவெளியில் நீங்கள் செய்தி, படம், வீடியோ, கட்டுரை, கதை, கவிதை என என்ன வேண்டுமானாலும் எழுதலாம். மீம்ஸ், ஓவியம் என எல்லாத் திறமைகளையும் வெளிப்படுத்தலாம்.

உங்கள் படைப்புகளைச் சமர்ப்பிக்க இங்கே க்ளிக் செய்க https://www.vikatan.com/special/myvikatan/

அடுத்த கட்டுரைக்கு