Published:Updated:

அழகு அல்ல ஆரோக்கியம்... பிரசவத்துக்குப் பின் பெண்கள் சந்திக்கும் பிரச்னைகள்...

தாமிரா
தாமிரா

டம்மி டக்கிங் என்பது அழகு சார்ந்த அறுவை சிகிச்சை போன்றதொரு எண்ணம் நம் மக்களின் மனங்களில் நிலவுகிறது. இதனால்தான் பிரசவத்தின்போதே இச்சிகிச்சையை சத்தமின்றி முடித்துக்கொள்ள பல பெண்கள் விரும்புகின்றனர்.

"'குழந்தை பெற்றுக்கொள்வதற்கு முன்னர் அழகாக இருந்தேன், இப்போது என்னுடைய வசீகரம் எங்கே?', பொதுவாக குழந்தை பெற்ற பல பெண்களுக்குத் தங்களைக் கண்ணாடியில் பார்த்துக்கொள்ளும்போது தோன்றும் கேள்வி இது. தாயாகும்போது உடலில் பல மாற்றங்கள் நிகழ்கின்றன. பிரசவதுக்குப்பின் பெண்களுக்கு ஏற்படும் மன உளைச்சலை 'போஸ்ட்பார்ட்டம் டிப்ரெஷன் (Postpartum Depression)' என்கிறோம். இதனோடு அழகு குறித்த கவலையும் சேர்ந்துகொள்வது தாய்மார்களுக்கு நல்லதல்ல" என அறிவுறுத்துகிறார் அழகியல் மருத்துவரும், பிளாஸ்டிக் அறுவை சிகிச்சை நிபுணருமான டாக்டர் ஜெயந்தி ரவீந்திரன், நிறுவனர், தாமிரா.

பிரசவத்துக்குப் பின் ஏற்படும் உடல் மாற்றங்கள்..."

கர்ப்ப காலத்தில் தாயின் எடை அதிகரிக்கிறது. பால் சுரப்பிகள் செயல்பட ஆரம்பிப்பதால் மார்பகம் பெரிதாகிறது; பிரசவத்துக்குப் பிறகு, அடிவயிறு விரிந்து சுருங்குவதால் தழும்புகள் ஏற்படுவது, பால் சுரப்பு நின்றபிறகு மார்பகங்கள் தொய்ந்துவிடுவது, வயிறு, அடிவயிறு மற்றும் கால்களுக்கு இடைப்பட்ட தசைகள் வலுவிழப்பது உள்ளிட்ட மாற்றங்கள் தாய்மார்களின் உடலில் நிகழக்கூடியவை. பிரசவத்துக்கு முன்னும் பின்னும் உணவு, ஒய்வு மற்றும் உடற்பயிற்சியில் கவனம் செலுத்துவதால் இவற்றைக் கட்டுப்பாட்டில் வைக்க முடியும்.

"அடிவயிற்றில் தழும்புகள்..."

குழந்தையைத் தாங்கும்போது வயிற்றுப் பகுதியின் தசைகள் பலூன் போல விரிவடைகின்றன. ஒருமுறை அதிக அழுத்தம் கொடுத்து ஊதப்பட்ட பலூன் மீண்டும் பழைய நிலைக்கு வராது, அதன் வடிவத்தில் தொய்வு ஏற்பட்டிருப்பதை கவனித்திருப்பீர்கள். இதுவே குழந்தை வெளிவந்த பின்னர் அடிவயிற்றுப் பகுதியில் நடைபெறுகிறது. விரிவடைந்த தோல் மீண்டும் சுருங்கும்போது, அதிகப்படியான தோல் வயிற்றைச் சுற்றித் தொங்குகிறது, விரிந்து சுருங்கியதால் ஏற்பட்ட வடுக்கள், தோலின்மேல் கோடுகளாக காட்சியளிக்கின்றன. இந்த வடுக்களை மறையவைக்க முடியாது என்பதே நிஜம், இதைத் தாய்மை தரும் அடையாளமாகவே கருத வேண்டும். இருந்தாலும் வைட்டமின் சி மற்றும் ஜிங்க் (Zinc) நிறைந்த உணவுகள், (டாக்டர் பரிந்துரைக்கும்) மருந்துகளை உட்கொள்வதால் தோலில் ஏற்படும் வடுக்களை முடிந்தளவு தடுக்கலாம்!" என்கிறார் டாக்டர் ஜெயந்தி."

அழகு அல்ல ஆரோக்கியம்... பிரசவத்துக்குப் பின் பெண்கள் சந்திக்கும் பிரச்னைகள்...

உடலின் மேற்பகுதியின் எடையைத் தாங்க இடுப்புத் தசைககளும் வயிற்றுத் தசைகளும் வலிமையாக இருக்க வேண்டும். கர்ப்பத்தின்போது கணத்த வயிறு முன் தள்ளப்படுகிறது, பிரசவத்துக்குப் பின்னர் அடிவயிற்றுப் பகுதி வலுவிழந்து தொங்குகிறது, இதனால் பெண்களுக்கு முதுகு வலி ஏற்படுகிறது. இதற்கு அடிவயிற்றைச் சுற்றி இருக்கும் அதிகபட்ச கொழுப்பு மற்றும் தோலை நீக்கி, வயிற்றுத் தசையை இறுக மூடும் டம்மி டக்கிங் (Tummy Tucking) அறுவை சிகிச்சை உதவுகிறது. ஆனால் டம்மி டக்கிங் செய்து எடை குறைக்க விரும்பும் 'திருமணமாகாத இளம்பெண்களுக்கு' முதலில் தகுந்த உடற்பயிற்சியையும் டயட்டையுமே பரிந்துரைக்கிறோம்.""டம்மி டக்கிங் என்பது அழகு சார்ந்த அறுவை சிகிச்சை போன்றதொரு எண்ணம் நம் மக்களின் மனங்களில் நிலவுகிறது. இதனால்தான் பிரசவத்தின்போதே இச்சிகிச்சையை சத்தமின்றி முடித்துக்கொள்ள பல பெண்கள் விரும்புகின்றனர். டம்மி டக்கிங் என்பது தாய்களின் நலனைப் பேணும் ஒரு நடவடிக்கை என நாம் உணர வேண்டும், மேலும் இச்சிகிச்சையை பிரசவம் முடிந்து குறைந்தது 6 முதல் 12 வாரங்கள் கழித்தே செய்ய வேண்டும். கருப்பை பழைய நிலைமைக்கு வர இந்தக்காலம் அவசியமாகும். மேலும், பிரசவம் முடிந்து இனி குழந்தைகள் வேண்டாம் என எண்ணும்தாய்மார்களுக்கே டம்மி டக்கிங் செய்யப்படவேண்டும்.

"யூரினரி இன்காண்டினென்ஸ்"

நம் நாட்டில் அதிகம் பேசத் தயங்கப்படும், ஆனால் அதி முக்கியத்துவம் வாய்ந்தவொரு பிரச்னைதான் யூரினரி இன்காண்டினென்ஸ் (Urinary incontinence). குழந்தை பெற்ற பெண்களின் பிறப்புறுப்பு விரிந்து சுருங்கி, அடிப்பகுதி தசைகள் வழுவிழப்பதனால், இருமல், தும்மல் மற்றும் உடல் அதிர்வின்போது அனிச்சையாக சிறுநீர் வெளியேற வாய்ப்புண்டு. வயதான பெண்கள் மற்றும் குழந்தை பெற்ற பெண்கள் பலருக்கு இந்தப் பிரச்னை இருந்தாலும், கூச்சம் கருதி இந்த நிலைப்பற்றி எவரும் வெளிப்படையாய் பேசுவதில்லை. நம் அம்மா, சகோதரி, தோழி யாருக்கு வேண்டுமானாலும் இக்குறைபாடு இருக்கலாம், ஆனால் அவர்கள் இதைப்பற்றி வெளியில் சொல்வது கிடையாது. பிரச்னையோடும், மன உளைச்சலோடும் வாழுகின்றனர். இந்தக் குறைபாட்டை அடிவயிற்று உடற்பயிற்சிகள் மூலமும், அறுவை சிகிச்சை மூலமும் சரிசெய்ய முடியும். இதுகுறித்த விழிப்புணர்வு அதிகமாக ஏற்படுத்தப்பட வேண்டும்." என வலியுறுத்துகிறார் டாக்டர் ஜெயந்தி.

அழகியல் அல்ல ஆரோக்கியவியல்...!

"ஹார்மோன் கோளாறு, சினைப்பைக் கட்டிகள் (PCOD), சீரற்ற மாதவிடாய், தைராய்டு கோளாறு, வாழ்வியல் மாற்றங்கள் போன்ற காரணங்களால் பெண்களின் உடல் எடை அதிகரிக்கிறது. இதனால் ஆரோக்கியம் குலைந்து மன உளைச்சலே எஞ்சுகிறது. மார்பகத்தைப் பொறுத்தவரை, கைக்கூட்டிலிருந்து இடுப்பு வரை செல்லும் 'மில்க்லைன்' பக்கமும் சிலருக்கு மார்பகம் வளரும், இது மூன்றாவது மார்பகம் போலக் காட்சியளிக்கும், இப்பிரச்னை உள்ளவர்கள் இருபுறமும் கைகளை அடக்கி வைப்பதற்கு கஷ்டப்படுவார்கள். ""மரபியல் காரணமாக பெரிய மார்பகம் கொண்ட பெண்கள் கிண்டலுக்கு உள்ளாகிறார்கள். ஆற்றல் வாய்ந்த விளையாட்டுகளில் பயிற்சிபெறும் வீராங்கனைகளுக்கு மார்பகம் சிறிதாக இருக்க வாய்ப்புண்டு, இதனாலும் அவர்கள் கேலிக்கு உள்ளாகிறார்கள். பெண்களின் தன்னம்பிக்கையை உயர்த்துவதற்காக, கூல் ஸ்கல்ப்டிங் (Coolsculpting), லிப்போ சக்ஷன் (Liposuction) போன்ற எடை குறைப்பு சிகிச்சைகளும், மார்பகங்களின் அளவினை சரிசெய்யும் பிரெஸ்ட் லிஃப்ட் (Breast Lift), பிரெஸ்ட் ஆக்மேண்டேஷன் (Breast Augmentation) மற்றும் பிரெஸ்ட் ரிடக்ஷன் (Breast Redcution) உள்ளிட்ட சிகிச்சைகளும் உதவுகின்றன.

""அழகு சார்ந்தது என ஒதுக்கப்படும் பல சிகிச்சைகள் ஆரோக்கியத்துக்கு எவ்வளவு முக்கியமானது என்பதைப் பார்த்தோம். உடலை அழகாக, இளமையாக வைத்துக்கொள்வதால் மன ஆரோக்கியமும், நம்பிக்கையும் அதிகரிக்கிறது. இதனால் நம் அன்றாட வாழ்வில் நேர்மறையான மாற்றங்கள் நிகழ்கிறது. அழகியல் என்கிற சொல்லின் மேல் நாம் கொண்டுள்ள தயக்கத்தை விடுவோம், அழகு சார்ந்த சிகிச்சைகளும் ஆரோக்கியம் சார்ந்ததே என்பதைப் புரிந்து செயல்படுவோம்" என்கிறார் டாக்டர் ஜெயந்தி ரவீந்திரன். இவர் தலைமையில் செயல்பட்டுவரும் தாமிரா (Tamira) அழகியல் மருத்துவ மையம், சென்னை கோபாலபுரம் முதல் தெருவில் இயங்கிவருகிறது.

மேலும் விவரங்களுக்கு:

Toll Free: 180030001613

Phone: 7397257128

பின் செல்ல