Published:Updated:

போத்தீஸ் `2-in1' மகிழ்ச்சியைச் சென்னையில் கொண்டு வந்துள்ளது!

போத்தீஸ்
போத்தீஸ்

போத்தீஸின் நிகரில்லா சேவையிலும், மாபெரும் ஷாப்பிங் பெருமையிலும் இன்றே கலந்திடுங்கள்.

தென்னிந்தியாவின் மாபெரும் ஜவுளி சாம்ராஜ்யம் போத்தீஸ், இதன் 17-வது கிளையைப் போத்தீஸின் மிகச் சிறந்த படைப்பாக, சென்னை குரோம்பேட்டை GST ரோட்டில் கொண்டுவந்துள்ளது!

“போத்தீஸ் ஸ்வர்ண மஹால்” என்ற புதிய தங்க நகை ரீடெய்ல் ஷோரூமையும் அறிமுகம் செய்கிறது. இப்பொழுது ஜவுளியும், தங்க நகையும் ஒரே வளாகத்தில் உள்ளன!

95 ஆண்டுகளுக்கும் மேலாக, நான்கு தலைமுறைகளாக போத்தீஸ் தமது வாடிக்கையாளர்களுக்குத் தன்னிகரில்லா சேவையை வழங்கிவருகிறது. ஏராளமான ரகங்களில் ஜவுளியும், உயர்தரமான பிராண்டட் பட்டுகள், திருமணத்தின் அனைத்து விழாக்களுக்கும் திருமணப் புடவைகள் மற்றும் குடும்பத்தில் அனைவருக்குமான ஆடை ரகங்கள் என எண்ணிலடங்கா ஜவுளி ரகங்களில் தமது வாடிக்கையாளர்களுக்கு எப்பொழுதும் முழு நிறைவான சேவையை வழங்கி வருகின்றது.

போத்தீஸ் தனது 95 ஆண்டு கால அனுபவத்தில் ஏராளமான அனுபவங்களைப் பெற்றுள்ளது. அதன் அடிப்படையில் பட்டுப் புடவைகளில் புதுமையான தொழில்நுட்பத்தை இணைத்து உயர் ரக பிராண்டட் பட்டுகளான சாமுத்ரிகா, வஸ்த்ரகலா, பரம்பரா, வசுந்தரா மயூரி மற்றும் கலாக்‌ஷேத்ரா ஆகிய பட்டுப் புடவைகளைப் படைத்துள்ளது. இந்த வகை புடவைகள் வாடிக்கையாளர்களின் உயரிய ரசனைகளைக் கொண்டு படைக்கப்பட்டதாகும். இதன் கூடுதல் விரிவாக்கமாக இந்தியாவின் நுணுக்கமான ஹெரிட்டேஜ் மற்றும் மேன்மையான டிசைனர் புடவைகள் இளம் தலைமுறையினரை அழகூட்டும் விதமாக படைக்கப்பட்டுள்ளன.

நெல்லை டவுனில் போத்தீஸ் ஸ்வர்ண மஹால் திறப்பு!

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

போத்தீஸின் தனித்துவச் சிறப்புகள்

* உலகின் மிக நீளமான பட்டுப் புடவை (1276 அடி) நெய்து கின்னஸ் சாதனை

* ISO 9001 சான்று பெற்று முதல் ரீட்டெய்ல் ஷோரூம்

* சன் டிவி - ஏ.சி. நீல்சன் ஆய்வில் ‘ புடவைகளுக்கான சிறந்த கடை’ என்ற பெருமை

* 2016-2017 ஆண்டுகளில் இந்தியாவிலேயே அதிக பட்டுப் புடவை விற்றதற்காக “இந்திய அரசு” மற்றும் “சில்க் போர்ட் ஆஃப் இந்தியா” போத்தீஸை கௌரவித்தன.

* ‘கோடாலி கருப்பூர் ஹெரிட்டேஜ் சேலை’யை மீண்டும் உயிர்ப்பித்ததற்கான தேசிய விருது.

போத்தீஸ் நிர்வாக இயக்குநர், திரு. ரமேஷ் தெரிவிக்கையில், “நாங்கள் இங்கு வந்த காலத்திலிருந்து சென்னையைக் கவனிக்கும்பொழுது... கடந்த 25 ஆண்டுகளில் மக்கள் வளர்ச்சி, பொருளாதார வளர்ச்சி மற்றும் அனைத்து வகையிலும் அபரிமிதமான வளர்ச்சியைக் கண்டுள்ளது. மக்களின் வாழ்க்கைத் தரத்தில் பெரும் மாற்றம் அடைந்துள்ளது. அதற்கேற்றவாறு அவர்களுக்கான தேவைகளும் அதிகரித்துள்ளன.

போத்தீஸ்
போத்தீஸ்

அதிவேகமாக வளர்ந்துவரும் இந்த வளர்ச்சியைக் கருத்தில் கொண்டு, போத்தீஸ் அதன் வாடிக்கையாளர்களுக்கு “வாடிக்கையாளர் முக்கியத்துவம்” அணுகுமுறையைக் கொண்டு, அவர்களின் வீட்டின் அருகிலேயே மாபெரும் மற்றும் கண்கவர் ஷோரூமை கொண்டுவந்துள்ளது. இந்த வளாகம் அனைத்து விதமான நவீன வசதிகளையும், சொகுசான அனுபவத்தைத் தரும் சிறப்பம்சங்களையும் தன்னுள் கொண்டுள்ளது. இந்த வளாகத்தில் உங்களின் ஷாப்பின் அனுபவம் இதுவரை காணாத வகையில் பெருமகிழ்ச்சியூட்டுவதாக இருக்கும். போத்தீஸ் பிறப்பிடமான திருநெல்வேலியில் “போத்தீஸ் ஸ்வர்ண மஹால்” வெற்றிகரமான திறப்பு விழாவிற்குப் பிறகு, சென்னையில் மிகப் பெரிய தங்க நகை ஷோரூமைக் கொண்டுவந்துள்ளது. இந்த வளாகத்தில் ஜவுளி மற்றும் ஜுவல்லரி இரண்டும் உள்ளன.”

கொரோனா நிவாரணம்: போத்தீஸ் ரூ. 1 கோடி நன்கோடை!

குரோம்பேட்டையில் உள்ள புதிய ஷோரூம் அதன் பிரமிப்பில் தனித்துவமாகத் திகழ்கிறது. இதன் ஷாப்பிங் அனுபவம் தனித்துவமான வாடிக்கையாளர்களைக் கொண்டதாக இருக்கு. இதில் உள்ள பட்டுப் பிரிவு, சென்னையிலேயே மிகப் பெரியதாகும். இந்த ஜவுளி உலகத்தில் ஏராளமான பாரம்பரிய திருமணப் பட்டுப் புடவை ரகங்கள், அனைத்து விழாக்களுக்கும் ஆடைகள், ஃபேன்சி புடவைகள், டிசைனர் புடவைகள், பட்டுப் புடவைகள், இளம் நங்கையருக்குச் சுடிதார் ரகங்கள், ஆடவர் மற்றும் சிறுவர்களுகு ரெடிமேட் ஆடைகள், புதிதாகப் பிறந்த குழந்தைகளுக்கு ஆடைகள், மணமகன்களுக்கு தனிப் பிரிவில் ஆடைகள் மற்றும் குடும்பத்தில் உள்ள அனைவருக்கும் ஏராளமான ஜவுளி ரகங்கள் என அனைத்தும் உங்களை வியப்பில் ஆழ்த்தும்.

போத்தீஸ் ஸ்வர்ண மஹால் தங்க நகை உலகத்திலேயே மிகப் பெரியதாகும், தங்க நகைகளில் வியப்பூட்டும் ரகங்களும், வேறெங்கும் கிடைக்காத உண்மையான விலையில் உங்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தும்.

குரோம்பேட்டை போத்தீஸில் கூடுதலாக, உயர் ரக சூப்பர் மார்க்கெட்டும் உள்ளது. இதில் வீட்டுக்குத் தேவையான அனைத்து பொருட்களும் குவிக்கப்பட்டுள்ளன. எலக்ட்ரானிக்ஸ், காஸ்மெட்டிக்ஸ், மளிகைப் பொருட்கள், காய்கறிகள், பழங்கள் ஆகியன நம்பமுடியாத மிகக் குறைந்த விலையில் கிடைக்கின்றன. இதுதவிர ஃபுட் கோர்ட்டில் மிகத் தரமான உணவு வகைகள் மிகக் குறைந்த விலையில் வழங்கப்படுகின்றன.

GST ரோட்டின் பிரதானப் பகுதியில், உலகத்தரம் கொண்ட சொகுசான வளாகத்தில், மிகப் பெரிய பார்க்கிங் வசதியுடன் கூடிய உலகத்தர ஷாப்பிங் அனுபவத்தைக் கொண்டாடி மகிழுங்கள். இது உங்களுக்கு மிக அற்புதமான ஷாப்பிங் உலகமாக அமையும்.

போத்தீஸ் கடந்த பல ஆண்டுகளில் தனக்கென ஒரு தனி அடையாளத்தை உருவாக்கி வருகிறது. இதன் பாரம்பரியத்தின் பெருமைகளுடன் சென்னை மக்களின் நெடுநாளையைக் கனவுகளைப் பூர்த்தி செய்யும் வகையில், குரோம்பேட்டையில் புதிய கிளையைப் பிரமிக்கும் வகையில் துவங்கியுள்ளது. போத்தீஸின் நிகரில்லா சேவையிலும், மாபெரும் ஷாப்பிங் பெருமையிலும் இன்றே கலந்திடுங்கள்.

அடுத்த கட்டுரைக்கு