Published:Updated:

நெல்லை டவுனில் போத்தீஸ் ஸ்வர்ண மஹால் திறப்பு!

போத்தீஸ் ஸ்வர்ண மஹால்
போத்தீஸ் ஸ்வர்ண மஹால்

நெல்லை டவுனில் போத்தீஸின் ஸ்வர்ண மஹால் நகை கடை திறப்பு விழா, சிறப்பாக நடைபெற்றது.

கடந்த 4 தலைமுறைகளாக ஜவுளி விற்பனையில் புகழ்பெற்ற நிறுவனம் போத்தீஸ். முதலில் ஶ்ரீவில்லிபுத்தூரில் தனது விற்பனையகத்தை துவங்கிய இந்நிறுவனம் பின்னர் நெல்லை, சென்னை, மதுரை, கோவை, திருச்சி, நாகர்கோவில், புதுச்சேரி, திருவனந்தபுரம், பெங்களூரு என தென் இந்தியா முழுவதும் தனது விற்பனையகங்களை திறந்து மக்கள் மனதில் நீங்கா இடத்தைப் பிடித்துள்ளது.

கடந்த 35 ஆண்டுகளுக்கு முன் நெல்லையில் ஜவுளி விற்பனையை துவங்கி, பட்டுப்புடவைகள், ரெடிமேட் ஆடைகள், பலரக துணி வகைகள், வீட்டு உபயோகப் பொருட்கள், உணவுப் பொருட்கள், வாழ்க்கை நளின பொருட்கள் விற்பனை என மக்களின் அன்றாட வாழ்க்கையின் ஓர் அங்கமாக மாறிவிட்டது.

நெல்லை டவுன் வடக்கு ரதவீதிக்கென்றே தனி அடையாளத்தை ஏற்படுத்திய போத்தீஸ் நிறுவனம், தற்போது முதன்முறையாக தங்க நகை விற்பனையகத்தை துவங்கியுள்ளது. டவுன் போத்தீஸ் கடையை அடுத்த சத்தியமூர்த்தி தெருவின் துவக்கத்தில் போத்தீஸ் ஸ்வர்ண மஹால் என்ற பெயரில் தங்க நகைக்கடையை துவக்கியுள்ளது. இதன் திறப்பு விழா சிறப்பாக நடைபெற்றது. இதில் முக்கிய பிரமுகர்கள் பங்கேற்றனர்.

போத்தீஸ் ஸ்வர்ண மஹால்
போத்தீஸ் ஸ்வர்ண மஹால்

போத்தீஸ் ஸ்வர்ண மஹால் தங்க நகைக்கடையில் வாடிக்கையாளர்களின் மனதை ஈர்க்கும் வகையில் பல்வேறு டிசைன்களில் தங்க நகைகள் விற்பனைக்கு அணிவகுத்து வைக்கப்பட்டுள்ளன.

திறப்பு விழாவையொட்டி முன்னதாக 150 ஜோடிகளுக்கு இலவச திருமணம் நடத்தி வைக்கப்பட்டுள்ளது. டவுன் சாப்டர் பள்ளி வளாகத்தில் நடக்கும் விழாவில் அரசு அறிவுறுத்தியுள்ள வழிகாட்டுதல்களின்படி 50 பேர் மட்டுமே பங்கேற்கும் வகையில் இந்து, முஸ்லிம், கிறிஸ்தவர், என மும்மதத்தைச் சேர்ந்த 3 ஜோடிகளுக்கு மட்டும் காலை 9 மணிக்குள் திருமணம் நடத்தி வைக்கப்பட்டது. தேர்வு செய்யப்பட்டுள்ள மீதமுள்ள 147 ஜோடிகளும் அவரவர் வீடுகளில் அரசு வழிகாட்டுதல்களின்படி திருமணம் நடத்திக் கொண்டனர்.

மணமக்களுக்கு தேவையான கட்டில், பீரோ உள்ளிட்ட அனைத்து சீர்வரிசை பொருட்களும், மணமக்களுக்குக் 12 கிராம் தங்கமும், ரூ.10 ஆயிரம் பணமுடிப்பும் போத்தீஸ் நிறுவனம் சார்பில் இந்த திறப்புவிழா நிகழ்வாக வழங்கப்பட்டது.

இதுகுறித்து போத்தீஸ் ரமேஷ் கூறியதாவது, "நூற்றாண்டை நெருங்கும் போத்தீஸ் நிறுவனம், 4 தலைமுறைகளாக மக்களின் பேராதரவோடு ஜவுளி தொழிலில் ஈடுபட்டுள்ளது. முதல்முறையாக தங்க நகை வியாபாரத்தில் இப்பொழுது அடியெடுத்து வைக்கிறோம். இந்த நிறுவனத்திற்கு போத்தீஸ் ஸ்வர்ண மஹால் என்று பெயர் சூட்டியுள்ளோம்.

மக்கள் என்றும் மதிக்கும் பூர்ண கும்பத்தை இதன் அடையாளச் சின்னமாக்கியுள்ளோம். பூர்ண கும்பம் சவுபாக்கியத்தின் அடையாளம் செழுமையின் சின்னம். சுபமங்களத்தின் ஆரம்பம் இதுவே பரிபூரணம் என்பதாலேயே இதை தேர்வு செய்துள்ளோம். எங்களுடைய இந்த தங்க பயணத்தை திருநெல்வேலியில் இருந்து துவங்குகிறோம்.

போத்தீஸ் ஸ்வர்ண மஹால்
போத்தீஸ் ஸ்வர்ண மஹால்

மக்களுக்கு போத்தீஸ் ஸ்வர்ண மஹால் அளிக்கும் உத்தரவாதம் மிக மிக தூய்மையான தங்கம், அழகழகான டிசைன்கள், பலப்பல ரகங்கள், இவை அனைத்தும் மக்கள் எதிர்பார்க்கும் மிக மிக மிக சரியான விலையில் வழங்குகிறோம். டவுன் கடையின் கீழ்தளத்தில் தங்க நகைகளும், முதல் தளத்தில் வெள்ளி, வைர நகைகளும் அழகழகாய் காட்சிப்படுத்தப்பட்டு உள்ளன" என்றார்.

திறப்பு விழா சலுகையாக ஒரு பவுனுக்கு ரூ.1000 தள்ளுபடி வழங்கப்படுகிறது. இச்சலுகை ஜூலை 1 முதல் 16 வரை வழங்கப்படுகிறது.

திறப்பு விழாவை முன்னிட்டு அரசு அறிவுறுத்தியுள்ள வழிகாட்டுதல் நெறிமுறைகளைப் பின்பற்றி வாடிக்கையாளர்கள் அனைவருக்கும் கடை நுழைவாயிலில் சானிடைசர் வழங்கப்படுகிறது. வாடிக்கையாளர்கள் கண்டிப்பாக முகக் கவசம் அணிந்து வர வேண்டும் என்றும், 50 சதவிகித வாடிக்கையாளர்கள் மட்டுமே அனுமதிக்கப்படுவர் என்றும், கொரோனா பரவலை தடுக்கும் வகையில் சமூக இடைவெளியை பின்பற்ற வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

அடுத்த கட்டுரைக்கு