Published:Updated:

ATM-இல் கார்டை நுழைக்கும் முன்பு இருமுறை கேன்சல் பட்டனை அழுத்த வேண்டுமா?- #Factcheck #MyVikatan

Representational Image
Representational Image ( Pixabay )

இவ்வாறு பகிரப்படும் ஒருசில தகவல்களால் பெரிய பிரச்சனைகள் ஏற்படாமல் இருப்பினும்,தேவையற்ற சில செயல்களைச் செய்யவேண்டிய நிலைக்கு நாம் தள்ளப்படுகிறோம்.

பொறுப்புத் துறப்பு: இந்தக் கட்டுரை, வாசகரின் படைப்பு. கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்களுக்கும் கருத்துகளுக்கும் அதன் ஆசிரியரே பொறுப்பாவார். கட்டுரை சம்பந்தமாக உங்களுக்கு ஆட்சேபனை இருந்தால், my@vikatan.com-க்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்!

சமூக வலைதளங்கள் மூலம் நமக்கு கிடைக்கக்கூடிய பல்வேறு தகவல்களால் மக்களுக்கு பற்பல நன்மைகள் உண்டாகின்றன.ஆனால் இவற்றில் வரக்கூடிய ஒருசில தகவல்கள் போலியான,அடிப்படை ஆதாரமற்றவையாக இருக்கின்றன.

பெரிய பெரிய நிறுவனங்கள் மற்றும் அரசு அமைப்புகளின் பெயர்தாங்கி வரக்கூடிய இத்தகைய போலியான தகவல்களை நாம் உண்மை என்று நம்பிவிடுகிறோம். அதன் பயன் கருதி பலருக்கும் பகிர்கிறோம்.

இவ்வாறு பகிரப்படும் ஒருசில தகவல்களால் பெரிய பிரச்சனைகள் ஏற்படாமல் இருப்பினும்,தேவையற்ற சில செயல்களைச் செய்யவேண்டிய நிலைக்கு நாம் தள்ளப்படுகிறோம்.

இதனால் நம் மதிப்புமிக்க நேரம் தேவையின்றி வீணாக வாய்ப்புண்டு.

ATM-இல் கார்டை நுழைக்கும் முன்பு இருமுறை கேன்சல் பட்டனை அழுத்த வேண்டுமா?- #Factcheck #MyVikatan

ஏ.டி.எம் இல் இருமுறை கேன்சல் பட்டனை அழுத்த வேண்டுமா? -FactCheck

பாதுகாப்பான ஏ.டி.எம் பரிவர்த்தனைக்கு ஏ.டி.எம் இயந்திரத்தில் நமது கார்டை நுழைக்கும் முன்பு,இரண்டு முறை கேன்சல் பட்டனை அழுத்த வேண்டும்.

இதனால் நம்முடைய PlN எண் திருடப்படுவது தவிர்க்கப்படும்.இந்த பாதுகாப்பான நடைமுறையைத் தவறாமல் செய்ய வேண்டும்.இதனை இந்திய ரிசர்வ் வங்கி அறிவுறுத்தியு-ள்ளதாக கூறப்படும் ஒரு தகவல் நீண்ட நாட்களாக சமூக வலைதளங்களில் வலம் வந்து கொண்டிருக்கிறது.நம்மில் பலரும் பாதுகாப்பு கருதி ஏ.டி.எம் களில் கேன்சல் பட்டனை அழுத்தியிருப்போம்.

ஆனால் இந்தத் தகவல் உண்மை இல்லை.ஏ.டி.எம்மில் கேன்சல் பட்டனை இரண்டு முறை அழுத்துவதால் PIN எண் திருடப்படாமல் பாதுகாக்கப்படும் என்பது போன்ற எந்த ஒரு அறிவிப்பையும் ரிசர்வ் வங்கி வெளியிடவில்லை என இந்திய அரசின் பத்திரிகை தகவல் பணியகம் (Press Information Bureau-PIB) தெளிவாக அறிவித்துள்ளது.

எனவே நம்முடைய வங்கிக் கணக்கு மற்றும் ஏ.டி.எம் PIN தொடர்பான விபரங்களை யாருடனும் பகிர்ந்து கொள்ளாமல் இருப்பது,ஏ.டி.எம் அட்டையையும்,PlN எண்ணையும் ஒரே இடத்தில் வைக்காமல் இருப்பது உள்ளிட்ட வங்கிகள் கூறும் பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்வதன் மூலமே நமது ஏ.டி.எம் பரிவர்த்தனைகளை பாதுகாப்பானதாக வைக்க முடியும்.

ஏ.டி.எம்மில் கேன்சல் பட்டனை இரண்டு முறை அழுத்துவதால் எந்தவிதப் பயனும் ஏற்படப் போவதில்லை.

- அகன் சரவணன்

விகடனில் உங்களுக்கென ஒரு பக்கம்...

உங்கள் படைப்புகளைச் சமர்ப்பிக்க இங்கே க்ளிக் செய்க https://www.vikatan.com/special/myvikatan/

My Vikatan
My Vikatan

ஏதோ ஓர் ஊரில், எங்கோ ஒரு தெருவில் நடந்த ஒரு விஷயம்தான் உலகம் முழுக்க வைரலாகிறது. உங்களைச் சுற்றியும் அப்படியொரு வைரல் சம்பவம் நடந்திருக்கலாம்... நடந்துகொண்டிருக்கலாம்... நடக்கலாம்..! அதை உலகுக்குச் சொல்வதற்காகக் களம் அமைத்துக் கொடுக்கிறது #MyVikatan. இந்த எல்லையற்ற இணையவெளியில் நீங்கள் செய்தி, படம், வீடியோ, கட்டுரை, கதை, கவிதை என என்ன வேண்டுமானாலும் எழுதலாம். மீம்ஸ், ஓவியம் என எல்லாத் திறமைகளையும் வெளிப்படுத்தலாம்.

உங்கள் படைப்புகளைச் சமர்ப்பிக்க இங்கே க்ளிக் செய்க https://www.vikatan.com/special/myvikatan/

அடுத்த கட்டுரைக்கு