Published:Updated:

``பெண்ணை விழுங்கிய 22 அடி நீள மலைப்பாம்பு'' - வயிற்றை அறுத்து சடலத்தை மீட்ட அதிர்ச்சி சம்பவம்!

மலைப்பாம்பு ( ட்விட்டர் )

மனைவியைக் காணவில்லை என்று தேடினர். அடுத்தநாள் அவரும் அவருடன் 300 நபர்களும் சேர்ந்து தேடுதல் பணியைத் தொடர, அப்போது தான் அங்கு 22 அடி நீளமுள்ள (6 மீட்டர்) மலைப்பாம்பைக் கண்டிருக்கிறார்கள்.

`அனகோண்டா’ போன்ற படங்களில் பாம்புகள் முழுவதுமாக மனிதர்களை விழுங்குவதைப் பார்த்திருப்போம். சில நேரங்களில் ஆடுகளையும் மாடுகளையும் பாம்புகள் விழுங்கிய செய்திகளைக்கூட கேட்டிருப்போம். ஆனால், 54 வயது பெண் ஒருவரை மலைப்பாம்பு ஒன்று முழுவதுமாக விழுங்கிய அதிர்ச்சிகரமான சம்பவம் நடந்துள்ளது. 
``பெண்ணை விழுங்கிய 22 அடி நீள மலைப்பாம்பு'' - வயிற்றை அறுத்து சடலத்தை மீட்ட அதிர்ச்சி சம்பவம்!
pixabay

இந்தோனேசியாவின் ஜாம்பி மாகாணத்தில், ஜஹ்ரா என்ற 54 வயது பெண்ணைக் காணவில்லை. பதறிப்போன அவருடைய கணவர் தன்னுடைய மனைவியைக் காணவில்லை என அங்கும் இங்கும் தேடி அலைந்துள்ளார். அப்போதுதான் மனைவியின் செருப்பு, ஹெட்ஸ்கார்ஃப், கத்தி போன்றவை கிடைத்துள்ளன. 

அடுத்த நாள், அவரும் அவருடன் 300 நபர்களும் சேர்ந்து தேடுதல் பணியைத் தொடர, அங்கு 22 அடி நீளமுள்ள (6 மீட்டர்) மலைப்பாம்பைக் கண்டிருக்கிறார்கள். அதோடு அந்தப் பாம்பின் நடுப்பகுதி வயிறு உப்பி இருந்துள்ளது. பாம்புதான் விழுங்கி இருக்க வேண்டும் என்று யூகித்தவர்கள், பாம்பின் தலையை வெட்டிப் பார்த்ததில், வயிற்றில் அவர் மனைவியின் சடலம் இருந்துள்ளது. இதைப் பார்த்து அவர்கள் அதிர்ச்சியில் உறைந்தனர்.

முதலில் மலைப்பாம்பு ஜஹ்ராவை கடித்து, பின்னர் முற்றிலுமாக அவரை சுற்றிக்கொண்டு விழுங்கியுள்ளது. அவரை முழுவதுமாக விழுங்க, பாம்பு சுமார் இரண்டு மணி நேரம் எடுத்துக் கொண்டுள்ளது.

அதன் பின்னர் சமூக வலைதளத்தில், அந்தப் பாம்பின் தலை வெட்டப்பட்டு வயிறு உப்பி இருக்கும் புகைப்படங்கள் பதிவிடப்பட்டன. தற்போது அந்தப் புகைப்படங்கள் வைரலாகி வருகின்றன.