Published:Updated:

என்ன பதில் சொல்வது? - வாழ்க்கையைச் சுவாரஸ்யப்படுத்தும் கேள்விகள்! #MyVikatan

Representational Image
Representational Image ( Pixabay )

இத்தகைய சூழல்களின் போது உண்டாகும் கேள்விகளுக்கு வாழ்க்கையை சுவாரஸ்யம் ஆக்குவதில் கணிசமான பங்குண்டு..

பொறுப்புத் துறப்பு: இந்தக் கட்டுரை, வாசகரின் படைப்பு. கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்களுக்கும் கருத்துகளுக்கும் அதன் ஆசிரியரே பொறுப்பாவார். கட்டுரை சம்பந்தமாக உங்களுக்கு ஆட்சேபனை இருந்தால், my@vikatan.com-க்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்!

சில எதிர்பாராத சூழல்களில் மனிதர்கள் எதிர்வினை புரிவது என்பது கடினமான ஒன்றுதான்.

இத்தகைய சூழல்களின் போது உண்டாகும் கேள்விகளுக்கு வாழ்க்கையை சுவாரஸ்யம் ஆக்குவதில் கணிசமான பங்குண்டு!

*வேலை முடிந்தவுடன் விசிட்டிங் கார்டை நீட்டும் அமரர் ஊர்தி ஓட்டுநருக்கு,

*'சொர்க்கத்தில் பள்ளிக்கூடம் உண்டா மாமா' என்னும் பக்கத்துவீட்டு குழந்தைக்கு,

*சில்லறை இல்லாதொரு பொழுதில் ஏ.டி.எம் வாசலில் யாசகம் கேட்கும் பிச்சைக்காரருக்கு,

*அபத்தமான மருத்துவக் குறிப்புகளை அவ்வப்போது பகிரும் தோழருக்கு,

*கடைசிக் கவளத்தை வாயில் போட்ட பிறகு வந்து ஆ கேட்கும் குழந்தைக்கு,

*முதற்காதலியின் இறப்புச் செய்திக்கு தலையணை நனைக்கையில் காரணம் கேட்கும் மனைவிக்கு,

Representational Image
Representational Image
Pixabay

*உறக்கம் கலைந்தவுடன் ஓடிவந்து ஒட்டிக்கொள்ளும் கவலைக்கு,

*ஈடுபாட்டுடன் செய்வதற்குப் பரிசாய் இன்னும் இன்னும் கொடுக்கப்படும் வேலைக்கு,

*மதியத் தூக்கத்தின் கற்பனைகளை ஏளனம் செய்யும் எதார்த்தத்திற்கு,

*பயணத்தின் இடையே வழிகேட்டவர் சரியான இடம் சென்றடைந்து இருப்பாரா என்னும் சந்தேகத்திற்கு,

*ஆழ்ந்த இரங்கல் என்பதுடன் திருப்தியடைந்து அடுத்த வேலையைப் பார்க்கப்போகும் வலைதளக் குழுவிற்கு

என்ன பதில் சொல்வதென்று இன்று வரை கற்கவில்லை!

- அகன் சரவணன்

விகடனில் உங்களுக்கென ஒரு பக்கம்...

உங்கள் படைப்புகளைச் சமர்ப்பிக்க இங்கே க்ளிக் செய்க https://www.vikatan.com/special/myvikatan/

My Vikatan
My Vikatan

ஏதோ ஓர் ஊரில், எங்கோ ஒரு தெருவில் நடந்த ஒரு விஷயம்தான் உலகம் முழுக்க வைரலாகிறது. உங்களைச் சுற்றியும் அப்படியொரு வைரல் சம்பவம் நடந்திருக்கலாம்... நடந்துகொண்டிருக்கலாம்... நடக்கலாம்..! அதை உலகுக்குச் சொல்வதற்காகக் களம் அமைத்துக் கொடுக்கிறது #MyVikatan. இந்த எல்லையற்ற இணையவெளியில் நீங்கள் செய்தி, படம், வீடியோ, கட்டுரை, கதை, கவிதை என என்ன வேண்டுமானாலும் எழுதலாம். மீம்ஸ், ஓவியம் என எல்லாத் திறமைகளையும் வெளிப்படுத்தலாம்.

உங்கள் படைப்புகளைச் சமர்ப்பிக்க இங்கே க்ளிக் செய்க https://www.vikatan.com/special/myvikatan/

அடுத்த கட்டுரைக்கு