Published:Updated:

`அப்பா பக்கோடா..!' - ஒரு WFH நாளில் பெய்த மழையின் நினைவுகள் #MyVikatan

Representational Image
Representational Image ( Pixabay )

ஏனோ எனக்கு இந்தப் பால்ய காலத்து பாடல் மனதில் ஒலித்து கொண்டேயிருந்தது...

பொறுப்புத் துறப்பு : இந்தக் கட்டுரை வாசகரின் படைப்பு. கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்களுக்கும் கருத்துகளுக்கும் அதன் ஆசிரியரே பொறுப்பாவார். கட்டுரை சம்பந்தமாக உங்களுக்கு ஆட்சேபனை இருந்தால், my@vikatan.com-க்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்

ஒரு ஒர்க் ஃப்ரம் ஹோம் (Work From Home) வார இறுதி நாளின் (வெள்ளிக்கிழமை) மாலை பொழுதில் வேலைக்கு இடையேயான ஒரு சிறு இடைவெளியில் (Break) என் படுக்கையறையையொட்டிய பால்கனியில் (Balcony) நின்று வெளியில் பெய்துகொண்டிருக்கும் மழையை வேடிக்கை பார்த்து கொண்டிருந்தேன். ஏனோ எனக்கு இந்தப் பால்ய காலத்து பாடல் மனதில் ஒலித்துக்கொண்டிருந்தது.

"மழை வருது மழை வருது நெல் அள்ளுங்க...

முக்கா படி அரிசி போட்டு முறுக்கு சுடுங்க...

ஏத்திரைக்கிற மாமனுக்கு எடுத்து வையுங்க...

சும்மா இருக்கிற மாமனுக்கு சூடு வையுங்க..."

என்று விளையாட்டாக முடியும் இந்தப் பாடல்கூட உழைப்பின் முக்கியத்துவத்தை உணர்த்துகிறது.

Representational Image
Representational Image
Pixabay

ஒரு காலத்தில் வீட்டிலிருந்து வேலை செய்கிறேன் என்று சொன்னால்,

"ஏய் நீ வேலை வெட்டிக்குப் போகாத வெட்டி ஆபீஸரா..." என்று கிண்டல் செய்வார்கள். வேலைக்குப் போகாம வீட்ல இருக்கிறதை எவ்வளவு கௌரமா சொல்றான் பாரேன் என்று கிண்டல் செய்வார்கள்.

ஆனால், இன்று அப்படி ஒரு நிலை ஏற்பட்டிருக்கிறது. வீட்டிலிருந்து வேலை (Work From Home) என்ற பதம் பொதுவாக எல்லோராலும் பயன் படுத்தப்படுகிறது. இது போன்ற கொடிய நோய்கள் சர்வதேச பரவலாக்கம் (Pandemic) மூலம் பரவும் கால கட்டத்தில் வேறு வழியின்றி என் போன்ற மென்பொறியாளர்கள் (Software Engineers) எங்கள் வேலையை வீட்டிலிருந்து செய்ய கூடிய ஒரு நிலை இருக்கிறது.

ஆனால், எல்லா வேலை செய்பவர்களும் அவ்வாறு வீட்டிலிருந்து வேலை என்ற நிலைப்பாட்டை எடுக்க முடியாது என்பது நிதர்சனமான உண்மை. அதுபோன்றோருடைய நிலைமை மிகவும் வருந்தத்தக்கதே.

அந்த ஈரக்காற்றில் மனம் லேசானது போன்ற ஓர் உணர்வு. என் மனது என்னுடைய பால்யகாலத்துக்குப் பயணப்பட்டது.

எல்லா காலங்களிலும் மழை என்பது அனைவருக்கும் மகிழ்ச்சியையும் உற்சாகத்தையும் கொடுக்கும் என்பது அனைவரும் ஒப்புக்கொள்ளும் விஷயம். என்னுடைய பள்ளி காலத்தில் எப்பொழுது மழை பெய்தாலும் மழையுடன் வேறொரு விஷயமும் எங்களுக்கு உற்சாகத்தைக் கொடுக்கும்.

Representational Image
Representational Image
Pixabay

அந்தச் சில்லென்ற ஈரக்காற்றில் உடல் சிறிது நடுங்கும் பொழுது சூடாகசேதாவது நொறுக்குத் தீனி சாப்பிட்டால் எப்படி இருக்கும். நாங்கள் பலமுறை அவ்வாறு சாப்பிட்டிருக்கிறோம். பஜ்ஜி, போண்டா அல்லது பக்கோடா அல்லது சுடச்சுட மொறுமொறுப்பான முறுக்கு இது போல ஏதாவது ஒரு தின்பண்டம் எங்களுடைய அம்மா செய்வார். வீட்டின் வெளியில் உள்ள திண்ணையில் அமர்ந்து மழையை வேடிக்கை பார்த்துக்கொண்டே சாப்பிடுவோம். எவ்வளவு சாப்பிட்டோம் என்பது தெரியாமல் சாப்பிடுவோம்.

இது போன்ற நாள்களில் மிளகு ரசத்துடன் பருப்புத் துவையல் சூடான சாதம்தான் இரவு உணவாக இருக்கும். நாம் தின்ற எண்ணெய்ப் பலகாரம் செரிப்பதற்கு இது ஒரு எளிய உணவு.

இன்று வயதாகிவிட்டதால் பல மழை நாள்களில் இந்த நினைவுகள் தரும் நிறைவு மட்டுமே சாத்தியப்பட்டிருக்கிறது. நம்முடைய வாழ்க்கை முறை (Life Style) உடல் உழைப்பு குறைவான நிலைக்கு மாறியதாலும் பல தேவையற்ற உடல் கோளாறுகளாலும் எல்லா மழை நாள்களிலும் ஏதேனும் நொறுக்கு தீனி உண்பது இயலாத காரியம்.

Representational Image
Representational Image
Pixabay

ஆனால், இன்று என்னுடைய பிள்ளைகளுக்கு மழைக்கும் சூடான தின்பண்டங்களுக்குமான தொடர்பும் அதில் நாம் அடைந்த அந்த அதீத நிறைவும் புரியுமா என்ற கேள்விக்கு எனக்கு நிச்சயமாகப் பதில் தெரியவில்லை.

"அப்பா எனக்கு பக்கோடா போட்டுத் தர்றீங்களா..." என்ற என்னுடைய சிறிய பையனின் குரல் கேட்டு மீண்டும் நிகழ்காலத்துக்கு வந்தேன்.

மழை நேரத்து உணர்வுகள் என்பது எல்லா காலத்திலும் ஒன்னுதான்போல என்று நினைத்துக்கொண்டே என் மகனுக்கு பக்கோடா போட சமயலறைக்குள் நுழைந்தேன்.

- ஆனந்தகுமார் முத்துசாமி.

விகடனில் உங்களுக்கென ஒரு பக்கம்...

உங்கள் படைப்புகளைச் சமர்ப்பிக்க இங்கே க்ளிக் செய்க https://www.vikatan.com/special/myvikatan/

My Vikatan
My Vikatan

ஏதோ ஓர் ஊரில், எங்கோ ஒரு தெருவில் நடந்த ஒரு விஷயம்தான் உலகம் முழுக்க வைரலாகிறது. உங்களைச் சுற்றியும் அப்படியொரு வைரல் சம்பவம் நடந்திருக்கலாம்... நடந்துகொண்டிருக்கலாம்... நடக்கலாம்..! அதை உலகுக்குச் சொல்வதற்காகக் களம் அமைத்துக் கொடுக்கிறது #MyVikatan. இந்த எல்லையற்ற இணையவெளியில் நீங்கள் செய்தி, படம், வீடியோ, கட்டுரை, கதை, கவிதை என என்ன வேண்டுமானாலும் எழுதலாம். மீம்ஸ், ஓவியம் என எல்லாத் திறமைகளையும் வெளிப்படுத்தலாம்.

உங்கள் படைப்புகளைச் சமர்ப்பிக்க இங்கே க்ளிக் செய்க https://www.vikatan.com/special/myvikatan/

அடுத்த கட்டுரைக்கு