Published:Updated:

மகளிர் தினம்: SICCIயுடன் இணைந்து கொண்டாடிய ராஜலட்சுமி கல்விக் குழுமம்!

மகளிர் தினம்

இந்த விழாவில் மருத்துவம், தொழில்முனைவு, தகவல் தொழில்நுட்பம் மற்றும் உடல்நலன் உள்ளிட்ட துறைகளில் சாதனை பெற்ற எட்டு வெற்றிகரமான பெண்களுக்கு விருதுகள் வழங்கி கௌரவிக்கப்பட்டது.

மகளிர் தினம்: SICCIயுடன் இணைந்து கொண்டாடிய ராஜலட்சுமி கல்விக் குழுமம்!

இந்த விழாவில் மருத்துவம், தொழில்முனைவு, தகவல் தொழில்நுட்பம் மற்றும் உடல்நலன் உள்ளிட்ட துறைகளில் சாதனை பெற்ற எட்டு வெற்றிகரமான பெண்களுக்கு விருதுகள் வழங்கி கௌரவிக்கப்பட்டது.

Published:Updated:
மகளிர் தினம்

ராஜலட்சுமி கல்விக் குழுமம் தென்னிந்திய தொழில் மற்றும் வர்த்தக சங்கத்தோடு (SICCI) இணைந்து மார்ச் 11 2022 அன்று சர்வதேச மகளிர் தினத்தை சிறப்பாக கொண்டாடியது. இந்த விழாவில் மருத்துவம், தொழில்முனைவு, தகவல் தொழில்நுட்பம் மற்றும் உடல்நலன் உள்ளிட்ட துறைகளில் சாதனை பெற்ற எட்டு வெற்றிகரமான பெண்களுக்கு விருதுகள் வழங்கி கௌரவிக்கப்பட்டது. இந்த விழாவில் சிறப்பு விருந்தினர்களாக திரு வி.என் சிவசங்கர், துணைத் தலைவர் SICCI மற்றும் வி.என்.எஸ் லீகல்-ன் நிறுவனர், திருமதி ஜெசிந்தா லசாரஸ் ஐஏஎஸ் அயலகத் தமிழர் நலன் மற்றும் மறுவாழ்வு ஆணையர் மற்றும் திருமதி லிஸ்ட் ஆல் போட் பாரி புதுச்சேரி மற்றும் சென்னை காண பிரெஞ்சு தூதரக அதிகாரி வருகை தந்திருந்தனர்.

2022 ஆம் ஆண்டுக்கான சிறந்த பெண் சாதனையாளர்களுக்கான ராஜலட்சுமி விருதுகள் கீழ்காணும் பெண்களுக்கு வழங்கி கௌரவப்படுத்தப்பட்டன.

மகளிருக்கான மருத்துவத் துறை விருது, டாக்டர் ஜெய்ஸ்ரீ கஜராஜ், தாய்மை மற்றும் மகப்பேறு மருத்துவர், எம்ஜிஎம் ஹெல்த்கேர் அப்போலோ புற்றுநோய் சிறப்பு மருத்துவமனை முதுநிலை மருத்துவர் .

சுய முன்னேற்றத்துக்கான மேடைப்பேச்சில் சிறப்பான பங்களிப்புக்காக விருது திருமதி பாரதி பாஸ்கர், சிட்டி வங்கி செயல்பாடு தலைவர் பிரபல பட்டிமன்ற பேச்சாளர் .

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

தன்னிலைப்பு கட்டிடக்கலையில் சிறப்பான பங்களிப்புக்காக விருது முனைவர். பொன்னி எம். கன்செஸ்ஸாவோ, முதன்மை கட்டிடக்கலைஞர், ஆஸ்கர் & பொன்னி ஆர்க்கிடெக்ட்ஸ்

தொழில்முனைவு துறையில் வாழ்நாள் சாதனையாளர் விருது திருமதி. ராதா தகா நிறுவனர் திரிகுனி ஃபுட்ஸ்.

சிறந்த தலைமைப் பண்புக்கான விருது திருமதி. தென்றல் ராஜேந்திரன் துணைத்தலைவர் மனிதவளத்துறை சி எஸ் எஸ் கார்ப்ஸ்

மனிதவள வளர்ச்சி சேவை துறையில் சிறப்பான பங்களிப்புக்காக விருது திருமதி மாயா ஸ்ரீகுமார் துணைத் தலைவர் மனித வளம் காக்னிசன்ட் டெக்னாலஜிஸ்.

டிஜிட்டல் தகவல் தொழில்நுட்பத்தில் சிறப்பான பங்களிப்புக்காக விருது திருமதி சோனியா ராமதாஸ் இயக்குனர் காமதேனு டெலி ஃபிலிம்ஸ்

நோய்த்தடுப்பு உடல் நலத் துறையில் சிறப்பான சேவைக்காக விருது திருமதி ஷைனி சுரேந்திரன் ஸ்போர்ட்ஸ் மற்றும் நோய்த்தடுப்பு உடல் நலன் ஊட்டச்சத்து நிபுணர்.

விழாவில் தமது துவக்க உரையில் முனைவர். தங்கம் மேகநாதன், தலைவர், ராஜலக்ஷ்மி கல்வி நிறுவனங்கள் அவர்கள் 'கல்வி என்பது பெண்கள் அதிகாரம் பெற்று சிறப்பாக செயல்பட வைக்க உங்கள் குடும்பத்திற்கும் சமூகத்திற்கும் ஒரு மதிப்பு கூட்டும் சக்தியாக மதிப்பு அமைய வேண்டும்" கல்வியின் சிறப்பு அம்சத்தை எடுத்துரைத்தார். மேலும் அவர் இந்திய பெண்களில் உள்ள திறமைகளை சரியாக அங்கீகரிக்கப்படும் அது பெண்களின் முன்னேற்றத்திற்கும் நாட்டின் பொருளாதாரத்திற்கும் ஏற்றமாக அமையும் என்பதை வலியுறுத்தினார். தமது உரையை நிறைவு செய்கையில், சமூகத்தின் பாதுகாப்பாளர்கள் ஆக தமது சீரிய பங்கினை அளித்த பெண்மணிகளுக்கு தமது நன்றியையும் பாராட்டுக்களையும் தெரிவித்துக் கொண்டார்.

விருது பெற்ற அனைவரும், மாணவர்களை ஊக்கப்படுத்துவதற்காக வெகு உற்சாகமாக தங்களது உரைகளை அளித்தனர். அவர்கள் தங்களது வாழ்க்கையில் எவ்வாறு தடைகளை முறியடித்து வெற்றியை தக்க வைத்தனர் என்பதை மாணவர்களிடம் பகிர்ந்துகொண்டனர். அவர்களுக்கு விடாமுயற்சி மற்றும் சுய ஊக்கம் பெண்கள் எதிர்கொள்ளும் சவால்களில் துவண்டு விடாது வெற்றியை தக்க வைப்பதற்கு உந்துதல் சக்தியாக அமைந்தது என்பதை முன்வைத்தனர். நிகழ்ச்சியில் அனைத்து மாணவர்களும் மிகவும் ஆவலோடும் உற்சாகத்தோடும் பங்குபெற்றனர்.

ராஜலட்சுமி கல்விக் குழுமம் ஏற்பாடு செய்த மகளிர் தின விருது வழங்கும் விழா இன்றைய சந்ததி மட்டுமல்லாது வருங்கால சந்ததியினருக்கும் நல்ல சிறப்பான ஒரு வழிகாட்டியாக அமையும் என்பதில் எள்ளளவும் சந்தேகமில்லை.