Published:Updated:

இது வழித்தடம் இல்லை, எங்கள் வாழ்க்கைத் தடம்! - நூற்றுக்கணக்கான கிராமங்களின் ஒருமித்த குரல்

Representational Image
Representational Image

அவ்வாறு அனுப்பப்பட்ட அதிகாரிகளின் அறிக்கையும், அமைச்சரின் பரிந்துரையும் எவ்விதச் செயல்வடிவமும் ஆகாமல் கிடப்பிலேயே போடப்பட்டு இருப்பதாக இப்பகுதி மக்கள் கவலை கொள்கின்றனர்.

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள... இங்கே க்ளிக் செய்து இன்றே விகடன் ஆப் இன்ஸ்டால் செய்யுங்கள்!

பொறுப்புத் துறப்பு: இந்தக் கட்டுரை, வாசகரின் படைப்பு. கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்களுக்கும் கருத்துகளுக்கும் அதன் ஆசிரியரே பொறுப்பாவார். கட்டுரை சம்பந்தமாக உங்களுக்கு ஆட்சேபனை இருந்தால், my@vikatan.com-க்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்!

மக்களின் வளர்ச்சிக்கு பெரிதும் துணை நிற்பவை சாலைகளும், போக்குவரத்து வசதிகளும்தான்..! அந்த இரண்டு வசதிகளும் இல்லை என்றால் அந்தப் பகுதியே எவ்வித தொடர்புமின்றி தனித் தீவாக தனித்து விடப்படும். இப்படி இன்னமும் தமிழகத்தின் பல பகுதிகள் இருந்து வருகின்றன. அந்த வரிசையில் புதுக்கோட்டை, இராமநாதபுரம், சிவகங்கை மாவட்டங்களின் ஏராளமான உட்பகுதிக் கிராமங்கள் அரசின் புதிய பேருந்துச் சேவையை எதிர்பார்த்துக் காத்திருக்கின்றன.

Route map
Route map

தமிழகத்தின் மிக முக்கியமான நகரமாக விளங்குபவை திருச்சியும், இராமேசுவரமும். திருச்சிக்கும், இராமேசுவரத்துக்கும் அடிக்கடி பேருந்து வசதிகள்தான் உள்ளதே என நினைக்கலாம். ஆனால் திருச்சியிலிருந்து புதுக்கோட்டை, இராமநாதபுரம், சிவகங்கை இப்படி நான்கு மாவட்டங்களின் கிராம உள்பகுதிகளை இணைக்கும் புதிய வழித்தடத்தில் இந்தப் புதிய பேருந்து சேவை இதுவரை இல்லை என்பதுதான் இப்பகுதி மக்களின் பெரும் கவலையாக உள்ளது. இதனை அரசு தீர்த்து வைத்தால் மிகவும் உதவியாக இருக்கும் என அப்பகுதி மக்கள் எதிர்பார்க்கின்றனர்.

திருச்சி - புதுக்கோட்டையிலிருந்து அரிமளம்-கே.புதுப்பட்டி- ஏம்பல்- கண்ணங்குடி- மங்களக்குடி- அஞ்சுகோட்டை-திருவாடானை-கைகாட்டி ஆர்.எஸ்.மங்களம் - இராமநாதபுரம்- இராமேசுவரம் என 4 மாவட்டக் கிராமங்களை உள்ளடக்கிய சாலைகள் வழியே பல நூற்றுக்கணக்கான கிராமங்கள் உள்ளன. அதனையொட்டி பல்லாயிரக்கணக்கான மக்கள் வசித்து வருகின்றனர். அவர்கள் திருச்சி, புதுக்கோட்டை, திருவாடானை, ராமநாதபுரம், இராமேஸ்வரம் போன்ற நகரங்களுக்குச் செல்ல வேண்டுமானால் தற்போது பல பேருந்துகள் மாறிச் செல்ல வேண்டி இருக்கிறது.

இதனால் அதிகமான கால விரயமும், பண விரயமும்தான் ஆகிறது. இந்தப் புதுவழித்தடத்தில் பேருந்துச் சேவை தொடங்கினால் பல்லாயிரக்கணக்கான மக்கள் பயனடைவார்கள். இப்பகுதியிலிருந்து ஏராளமான மாணவர்கள் பள்ளி, கல்லூரிகளுக்குச் சென்றுவரவும், இளைஞர்கள், பெண்கள் வேலைக்குச் சென்று வரவும், வியாபாரிகளுக்கும், பொதுமக்களுக்கும் மிகப்பெரும் உதவியாக இருக்கும்.

 ராமநாதபுரம் பேருந்து நிலையம்
ராமநாதபுரம் பேருந்து நிலையம்
உ.பாண்டி

இதுதொடர்பான தங்களின் கோரிக்கையை இராமநாதபுரம் நாடாளுமன்ற உறுப்பினர் கே.நவாஸ்கனி, சிவகங்கை எம்.பி கார்த்தி சிதம்பரம் ஆகியோரின் கவனத்துக்கு இப்பகுதி மக்கள் கொண்டு சென்றனர். அவர்களும் உடனடியாக மக்களின் அவசியத் தேவை அறிந்து தமிழக போக்குவரத்து துறை அமைச்சர் ராஜகண்ணப்பனுக்கு பரிந்துரை செய்து கடிதம் அனுப்பினர். போக்குவரத்து துறை அமைச்சர் ராஜகண்ணப்பனும் இரண்டு எம்.பிக்களின் பரிந்துரையை ஏற்று இந்தப் புதிய வழித்தடத்தில் பேருந்துகளை இயக்குவதற்கு வழித்தட ஆய்வு செய்ய அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார். அதிகாரிகளும் தட ஆய்வு செய்து, நேர அட்டவணையும் தயாரித்து சம்பந்தப்பட்ட போக்குவரத்து துறை உயர் அதிகாரிகளுக்கு அனுப்பி வைத்துள்ளனர்.

ஆனால், அவ்வாறு அனுப்பப்பட்ட அதிகாரிகளின் அறிக்கையும், அமைச்சரின் பரிந்துரையும் எவ்விதச் செயல்வடிவமும் ஆகாமல் கிடப்பிலேயே போடப்பட்டு இருப்பதாக இப்பகுதி மக்கள் கவலை கொள்கின்றனர். எனவே, சம்மந்தப்பட்ட அதிகாரிகள் காலதாமதம் இல்லாமல், உடனடியாக புதிய வழித்தடத்தில் பேருந்து இயக்க நடவடிக்கை எடுத்தால் இப்பகுதியின் ஏராளமான கிராமங்களைச் சேர்ந்த பல்லாயிரக் கணக்கான மக்கள் பயனடைவார்கள்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

இதுதொடர்பாக ஏம்பல் அரசு மேல்நிலைப்பள்ளி முன்னாள் மாணவர் சங்கம் பல ஆண்டுகளாக தொடர்ந்து தனது கோரிக்கையை அரசுத் தரப்பிடம் சமர்ப்பித்து வருகிறது. இதுபற்றி அச்சங்கத்தின் முக்கிய நிர்வாகியும் ஏம்பல் வட்டார வளர்ச்சி தொடர்பாக அரசுக்கு தொடர் கோரிக்கைகள் வைத்து வருபவருமான பேரின்பநாதன் கூறியதாவது ..

'' நாங்கள் பல ஆண்டுகளாக இந்தக் கோரிக்கையை அரசிடம் முன்வைத்து வருகிறோம். ஆனால் இதுவரை இந்தக் கோரிக்கை மட்டும் அரசின் செவிகளை எட்டவே இல்லை. தற்போதைய புதிய திமுக ஆட்சியிலாவது விடிவு கிடைத்துவிடும் என்று நம்பிக்கையுடன் காத்திருக்கிறோம். இதுசம்மந்தமாக இராமநாதபுரம் மற்றும் சிவகங்கை தொகுதி எம்பிக்களிடம் கோரிக்கை வைத்தோம். அவர்களும் நமது போக்குவரத்து துறை அமைச்சருக்கு பரிந்துரைக் கடிதம் அனுப்பி வைத்தனர்.

அமைச்சரும் அதனை ஏற்றுக்கொண்டு வழித்தட ஆய்வு செய்யுமாறு அதிகாரிகளுக்கு உத்தரவிட்டு அந்தப்பணியும் முடிந்து போக்குவரத்து துறை உயரதிகாரிகளிடம் அறிக்கையும் கொடுத்துவிட்டனர். ஆனால் அதனை நடைமுறைப்படுத்தாமல் அதிகாரிகள் அலட்சியமாக இருப்பதுதான் வேதனையாக இருக்கிறது. இந்தப் புதிய சேவையால் சுமார் 500க்கும் மேற்பட்ட பல்லாயிரக் கணக்கான கிராம மக்கள் பயனடைவார்கள். மக்களின் அவசியம் உணர்ந்து உடனடியாக இச்சேவை தொடங்க உத்தரவிட வேண்டும்.

பேரின்பநாதன்
பேரின்பநாதன்

திருச்சியும் , இராமேசுவரமும் இந்த வழித்தடத்தில் உள்ள கிராம மக்களுக்கு மிக முக்கியமான நகரங்கள் ஆகும். இது வியாபாரிகள், பொதுமக்கள், மாணவ,மாணவியர், பக்தர்கள் என பல தரப்பு மக்களுக்கும் அவசியத் தேவையான ஒன்று. இதனை அரசு உடனே செய்து தரவேண்டும். ஏனெனில் இந்தப் புதிய வழித்தட பேருந்து சேவை பல்லாயிரக்கணக்கான மக்களுக்கு பெரும் உதவியாக இருக்கும். சொல்லப்போனால் இது வழித்தடம் அல்ல.. இப்பகுதி மக்களுக்கான வாழ்க்கைத் தடம்..! தமிழக அரசு எங்களின் இந்தக் கோரிக்கையை நிச்சயம் நிறைவேற்றும் என நம்பிக்கையுடன் காத்திருக்கிறோம்.” என்றார்.

இந்தப் புதிய வழித்தடத்தில் தமிழக அரசு வெகு சீக்கிரமே பச்சைக் கொடி அசைக்க வேண்டும் என்பதே பல கிராம மக்களின் எதிர்பார்ப்பு..!

-பழ.அசோக்குமார்

விகடனில் உங்களுக்கென ஒரு பக்கம்...

உங்கள் படைப்புகளைச் சமர்ப்பிக்க இங்கே க்ளிக் செய்க https://www.vikatan.com/special/myvikatan/

My Vikatan
My Vikatan

ஏதோ ஓர் ஊரில், எங்கோ ஒரு தெருவில் நடந்த ஒரு விஷயம்தான் உலகம் முழுக்க வைரலாகிறது. உங்களைச் சுற்றியும் அப்படியொரு வைரல் சம்பவம் நடந்திருக்கலாம்... நடந்துகொண்டிருக்கலாம்... நடக்கலாம்..! அதை உலகுக்குச் சொல்வதற்காகக் களம் அமைத்துக் கொடுக்கிறது #MyVikatan. இந்த எல்லையற்ற இணையவெளியில் நீங்கள் செய்தி, படம், வீடியோ, கட்டுரை, கதை, கவிதை என என்ன வேண்டுமானாலும் எழுதலாம். மீம்ஸ், ஓவியம் என எல்லாத் திறமைகளையும் வெளிப்படுத்தலாம்.

உங்கள் படைப்புகளைச் சமர்ப்பிக்க இங்கே க்ளிக் செய்க https://www.vikatan.com/special/myvikatan/

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு