Published:Updated:

முதல்வர் நிவாரண நிதி: ராம்ராஜ் காட்டன் ரூ.1 கோடி நிதியுதவி!

ராம்ராஜ் காட்டன் நிதியுதவி
ராம்ராஜ் காட்டன் நிதியுதவி

ராம்ராஜ் காட்டன் நிறுவனம், கொரோனா நிவாரண நிதியாக ரூபாய் ஒரு கோடி வழங்கியுள்ளது.

கொரோனா பேரிடர் மேலாண்மை காலத்தில் தமிழக மக்களின் துயர் துடைக்கும் பணிகளில் பங்கேற்கும் விதமாக, ராம்ராஜ் கட்டன் நிறுவனம் கொரோனா நிவாரண நிதியாக ரூபாய் ஒரு கோடி வழங்கியுள்ளது. நேற்று (20-05-2021 - வியாழக்கிழமை) திருப்பூரில் நடைபெற்ற தொழில் முனைவோர் கலந்தாலோசனை கூட்டத்திற்கு வருகை புரிந்த தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்களிடம் ராம்ராஜ் காட்டன் நிறுவனர் K.R.நாகராஜன் ரூபாய் ஒரு கோடிக்கான காசோலையை வழங்கினார். ராம்ராஜ் நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர்கள் B.R.அருண் ஈஸ்வர் மற்றும் S.அஸ்வின் ஆகியோர் உடனிருந்தனர்.

அடுத்த கட்டுரைக்கு