Published:Updated:

என் மனைவிக்கு நன்றி சொல்ல வேண்டும்! - ஒரு கிராமத்தானின் பயணக் கதை - 2

Representational Image
News
Representational Image

ஒரு விஷயத்தில் நான் கவனமாக இருந்தேன். வேலை தனி மகிழ்ச்சி தனி. ஒரு இடம் பிடித்திருந்தால் நிச்சயமாக குடும்பத்துடன் சுற்றுலா போல் செல்வேனே ஒழிய வேலையையும் குடும்பத்தையும் கலக்கமாட்டேன்...

முதலில் விகடன்.காம் இணையதளத்திற்கு என் மனமார்ந்த நன்றி, இந்த வாய்ப்பை அளித்தமைக்கு. ஒரே கட்டுரை எனக்கு பல வாசகர்களை வழங்கியுள்ளது. அமெரிக்கா, மலேஷியா, இந்தியா, கனடா, அயர்லாந்து, துபாய் என்று வாசகர்கள் தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசினர். (எல்லோரும் என் குடும்ப உறுப்பினர்கள் என்பது ஒரு கொசுறு தகவல். அவர்களுக்கு நான்தான் சொன்னேன் என்பது கூடுதல் தகவல் !!!). அதைவிட மகிழ்ச்சி என் கிராமத்தை சேர்ந்த இருவர் தொடர்பு கொண்டது. மேலும் என் சகோதரனின் நண்பர் கோவையிலிருந்து தொடர்பு கொண்டது. (இவர்கள் என் குடும்ப உறுப்பினர்கள் இல்லை. நானும் சொல்லவில்லை என்பது முக்கியமான தகவல்).

விகடனின் வலிமை மறுக்கமுடியாத உண்மை.

Hot Air Balloon ride in Cappadocia, Turkey.
Hot Air Balloon ride in Cappadocia, Turkey.

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

சரி. அனுபவங்கைள பகிர்ந்து கொள்வது ஒரு அங்கம். ஆனால் முக்கியமான மற்றொரு அங்கம், அதை எப்படி கோர்வையாக சொல்லுவது. நான், இதயம் பேசுகிறது மணியன் அவர்கள் போல் நாடுகள் அடுத்து நாடுகள் போனவன் இல்லை. அவர் அதையே முழு நேர வேலையாக செய்தவர். நான் வேலை நிமித்தம் மற்றும் மனமகிழ்வுக்காக அவ்வப்போது பயணம் போகிறவன். அதை விட, வாழ்க்கை என்பதே ஒரு பயணம் என்று நம்புகிறவன். ஆகையால் என் பகிர்வுகள் பெரும்பாலும் மற்ற நாட்டு பயணம் பற்றி இருந்தாலும் அவ்வப்போது வாழ்க்கை பயணத்தையும் அசைபோடலாம். அதை முடிந்தவரை சற்றே கோர்வையோடு சொல்ல முயல்கிறேன். முன்னமே சொல்வது (எச்சரிப்பது?) நல்ல பழக்கம் தானே.

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS

சரி. 50+ நாடுகள் என்று சொன்னேன். ஹலைட்ஸ் என்றால் ஈரான் நாட்டுக்கு மட்டும் 100 முறைக்கு மேல் சென்று வந்திருக்கிறேன். இரண்டு வருடங்கள் என் பணியே ஈரானில் தான். நான் ஒவ்வொரு வாரமும் போய் வருவேன். அதே போல் போலந்து நாட்டுக்கு 30 முறைக்கு மேல். ஒரு வருடம் பணி நிமித்தமாக க்ரகோவ் (Krakow) என்ற ரம்மியமான நகரில் வாழ்ந்தேன். குழந்தைகள் பள்ளி படிப்பு கெடாவண்ணம் குடும்பம் துபாயில் இருந்தது. இந்த தருணத்தில் என் மனைவிக்கு நன்றி சொல்ல வேண்டும். பிள்ளைகள் படிப்பு, நடன அரங்கேற்றம், விளையாட்டு என எல்லாவற்றையும் திறம்பட தனியே செய்தார். நல்லவள், வல்லவள், கொஞ்சம் அழகானவள்னு ஏற்கனவே சொல்லிவிட்டேன். மீண்டும் நினைவு கூறுவது நல்லது, எனக்கு.

Representational Image
Representational Image

பின்னர் ஐக்கிய ராஜ்ஜியம் (United Kingdom), நெதர்லாந்து, அமெரிக்கா, கனடா, எகிப்து, சிரியா, ஜோர்டான், குவைத், ஓமான், சிங்கப்பூர், துருக்கி நாடுகளுக்கு 10-15 முறை சென்று வந்திருப்பேன். ஆஸ்திரேலியாவுக்கு ஒரு சிறப்பிடம். காரணம் சுற்றுலா துவங்கிய முதல் நாளே என் காலை உடைத்துக்கொண்டேன். மற்றும் குறிப்பிடத்தக்க நாடுகள் என்றால் ஈராக் (AK - 47 துப்பாக்கி முனை பயணம்) மற்றும் பாகிஸ்தான் (Marriott குண்டு வெடிப்பு) பற்றி சொல்லவேண்டும்.

அப்புறம் சவுதி - பஹ்ரைன் எல்லையில் பலமணிநேரம் தவிப்பு, துருக்கியில் கடவு புத்தகம் (Passport) யாரோ எடுத்து சென்றது, அமெரிக்கன் இம்மிகிரேஷன் என்னை ஒருமுறைக்குமேல் சந்தேக கேசில் நிறுத்தியது. ரஷ்யா மற்றும் கசக்ஸ்தான் இம்மிகிரேஷன் வேற லெவல். வாய்ப்பே இல்ல ராஜா. வடிவேலு பாஷையில் சொல்லனும்னா "குறுகுறுன்னு" நம்மளை ஒரு மாதிரி பார்ப்பானுங்க. ஏற்கனவே நான் ஒரு மாதிரி இருப்பேன். இவர்கள் பார்வையில் நம் முகம் இன்னும் சகிக்காது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

நாடுகள் மற்றும் அனுபவங்கள் வெவ்வேறு. என் கற்பனை மட்டும் ஒன்றே. எல்லாம் சொல்கிறேன் வாய்ப்பு வரும்போது.

ஒரு விஷயத்தில் நான் கவனமாக இருந்தேன். வேலை தனி மகிழ்ச்சி தனி. ஒரு இடம் பிடித்திருந்தால் நிச்சயமாக குடும்பத்துடன் சுற்றுலா போல் செல்வேனே ஒழிய வேலையையும் குடும்பத்தையும் கலக்கமாட்டேன்.

Magnificent Architecture – Mosque in Isfahan
Magnificent Architecture – Mosque in Isfahan

சரிப்பா, துட்டுக்கு எப்படி? எப்டி எப்டி எப்டி? நீங்க கேட்கலாம். இப்ப நான் திரும்ப என் அம்மா அப்பாவை கூப்பிட, மன்னிக்கவும், குறிப்பிட வேண்டும். எனக்கு நல்ல படிப்பை தந்தார்கள் இல்லையா? நல்ல படிப்பு, நல்ல நிறுவனங்களில் நல்ல பதவியில் அமர வைத்ததா? நானும் முக்கி முநறி ஓரளவுக்கு நல்ல பெயர் மற்றும் பதவி பெற்றேனா? அந்த வருமானத்தை ஓரளவுக்கு மேலாண்மை (manage) செய்து எல்லா செலவையும் எதிர் கொள்ளும் அளவுக்கு என்னை தயார் செய்துகொண்டேனா? அப்படித்தான்.

எங்க அப்பா அம்மா விட்டு சென்ற பெரிய சொத்து கல்வி, நேர்மை, தைரியம், சகோதரி, சகோதரர்கள் மற்றும் அருமையான சொந்தங்கள். அவர்கள் வழி காட்டுதல்தான் எல்லாவற்றிற்கும் அடிப்படை. சரி மீண்டும் விஷயத்துக்கு வருவோமா? இப்போது 2021 ஜூலை. 2021 முழுவதும் இங்க அங்க நகரமுடியவில்லை. 2020 இல் ஒரே பயணம், 10 நாள் சென்னையில். நல்ல நேரம், கொரோனா கட்டுப்பாடுகள் துவங்கும் முன் நான் திரும்பிவிட்டேன்.

Market Square in Krakow – (24 என்கிற படத்தின் சூரியா மற்றும் சமந்தா "அழகியே" பாடல் முற்றிலும் இங்குதான் எடுக்கப்பட்டது, நான் இருந்தபோது)
Market Square in Krakow – (24 என்கிற படத்தின் சூரியா மற்றும் சமந்தா "அழகியே" பாடல் முற்றிலும் இங்குதான் எடுக்கப்பட்டது, நான் இருந்தபோது)

அதற்க்கு முன் என்றால், 2019இல் 44 நாட்கள் கனடா, 37 - அமெரிக்கா, 15 - UK, 10 - அயர்லாந்து, 9 - துருக்கி, 3 - போலந்து. மீதி நாட்கள் இந்தியா மற்றும் துபையில்.

அதெல்லாம் சரி தம்பி, வேலைன்னு ஒன்னு இருக்குமே அது எங்க போச்சுன்னு நீங்க நினைச்சா நியாமான சந்தேகம்தான். இதெல்லாம் செய்யணும்னுதான் நான் 2018இல் முன்கூட்டி-ராஜினாமா (VRS னு தமிழ்ல சொல்லுவாங்களே) செய்துவிட்டேன்.

இப்ப துருக்கி பயணம் பற்றிய ஒரு சுவாரஸ்யமான விஷயத்தை பகிர்ந்துட்டு அமெரிக்காவில் கால் வைக்கலாம். என்ன ஆச்சுன்னு கேளுங்களேன். சும்மா கேளுங்களேன்.

சரி நீங்க இவ்ளோ கேட்ட பிறகு சொல்லியே ஆகவேண்டும். அடுத்த வாரம்.

-சங்கர் வெங்கடேசன்


(சங்கர் வெங்கடேசன் தமிழகத்தின் ஒரு சிறிய கிராமத்தில் பிறந்தவர். பட்டய கணக்காளர். மும்பை, துபாய் என பல்வேறு நாடுகளிலும், எமிரேட்ஸ் ஏர்லைன்ஸ், ராயல் டச்சு ஷெல் நிறுவனம் என பல்வேறு நிறுவனங்களிலும் பணியாற்றி இருக்கிறார். தற்போது துபாயில் ஒரு நிறுவனத்தை நடத்தி வருகிறார். ஆனாலும், தன்னை பயணி என்றே அடையாளப் படுத்திக் கொள்ள விரும்பும் அவர், இது வரை 50 நாடுகளுக்கு மேல் பயணித்திருக்கிறார். தனது பயண அனுபவங்களை விகடன் தளத்தில் தொடர்ந்து எழுத உள்ளார்)

விகடனில் உங்களுக்கென ஒரு பக்கம்...

உங்கள் படைப்புகளைச் சமர்ப்பிக்க இங்கே க்ளிக் செய்க https://www.vikatan.com/special/myvikatan/

My Vikatan
My Vikatan

ஏதோ ஓர் ஊரில், எங்கோ ஒரு தெருவில் நடந்த ஒரு விஷயம்தான் உலகம் முழுக்க வைரலாகிறது. உங்களைச் சுற்றியும் அப்படியொரு வைரல் சம்பவம் நடந்திருக்கலாம்... நடந்துகொண்டிருக்கலாம்... நடக்கலாம்..! அதை உலகுக்குச் சொல்வதற்காகக் களம் அமைத்துக் கொடுக்கிறது #MyVikatan. இந்த எல்லையற்ற இணையவெளியில் நீங்கள் செய்தி, படம், வீடியோ, கட்டுரை, கதை, கவிதை என என்ன வேண்டுமானாலும் எழுதலாம். மீம்ஸ், ஓவியம் என எல்லாத் திறமைகளையும் வெளிப்படுத்தலாம்.

உங்கள் படைப்புகளைச் சமர்ப்பிக்க இங்கே க்ளிக் செய்க https://www.vikatan.com/special/myvikatan/