Published:Updated:

எங்க வீட்டு சூரியகிர`கணம்’..! - வாசகர் பகிர்வு #MyVikatan

ஞாயிறு ஆனது. மணி 11-ம் ஆனது. கிச்சனிலும் சரி கிச்சனுக்கு வெளியேயும் சரி ஒரு ஈ காக்காகூட இல்லை...

பொறுப்புத் துறப்பு : இந்தக் கட்டுரை வாசகரின் படைப்பு. கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்களுக்கும் கருத்துகளுக்கும் அதன் ஆசிரியரே பொறுப்பாவார். கட்டுரை சம்பந்தமாக உங்களுக்கு ஆட்சேபனை இருந்தால், my@vikatan.com-க்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்

எங்கள் வீட்டில் சூரிய கிரகணத்தன்று நடந்தவற்றை இங்கே பகிர்கிறேன்...

அம்மா, பாட்டி, ‌‌வீட்டில் தெரிந்தவர்கள் தெரியாதவர்கள் என்று எல்லோரும் 2 நாளாக கொரோனாவை விட்டுவிட்டு. சூரிய கிரகணத்தைப் பற்றிதான் பேச்சு. நாளை பட்டினி. விரதம்தான். ஞாயிறு முழு கடையடைப்பு வேறு. எங்கும் ஒன்றும் வாங்கி சாப்பிடவும் முடியாது.

ஞாயிறு ஆனது. மணி 11-ம் ஆனது. கிச்சனிலும் சரி கிச்சனுக்கு வெளியேயும் சரி ஒரு ஈ காக்காகூட இல்லை. வீட்டிலிருந்த வாண்டுகளைக் கூட்டிக்கொண்டு தெருவுக்கு வந்தேன்.

பத்து பவுன் தங்க சங்கிலியைத் தேடுகிறதுமாதிரி அத்தனை வாண்டுகளும் தலையைத் தொங்கப்போட்டபடி இருந்தார்கள். ``ஏன்டா’’ என்று கேட்டதற்கு,

``எங்க டீச்சர் சொல்லிச்சு. சூரியன பாக்கப்படாதுன்னு’’ என்றனர்.

Representational Image
Representational Image

``பாக்கப்படாதுன்னு சொன்ன டீச்சர் பேர் என்ன’’ என்று கேட்டேன் .

``என்னது? பேரா... இப்ப பேரா முக்கியம். மனுசன் பசியிலயிருக்கான். அதுக்கு வழியுண்டான்னு பாப்பியா போ.’’

``சரி சரி... டேய் முத்தா. இங்க வாடா பள்ளத்தெருல இருக்க ஆச்சிட்டப்போய். ஒரு உலக்க வாங்கிட்டுவாடா.’’

`` நான? நா மட்டுமா ? டேய் மூக்கா நீயும் வாடா ஒத்தையிலப் போக பயமாயிருக்கு...’’

`` ஆம்பள உனக்கு எதுக்குடா பயம்...’’

`` எங்க அம்மா சொல்லிருக்கு கிரகணம் புடிச்சு ஆட்டுது வெளிலப்போகாதனு. போனா பாம்பு கண்ண கொத்திடும்னு.’’

``அடகிருக்கு பயல. அப்ப ஏன் வந்த?’’

``அது செல்வி வந்தா. நானும் வந்தேன்.’’

சரி யாரும் போக வேண்டாம் நான் வாங்கியாறேன்’’ என்று நானே உலக்கையை வாங்கி வந்தேன்.

``எம்மா எம்மோய். ஒரு தாம்பளத்தட்டுல கொஞ்சம் குங்குமத்தைக் கரைச்சு எடுத்துட்டுவாம்மா.’’

``எதுக்குடா.’’

``அட எடுத்துட்டுவாம்மா.’’

``நான் வர முடியாது ‌. நீ வந்து எடுத்துட்டுப்போ.’’

அதையும் நானே சென்று எடுத்து வந்தேன்.

தாம்பாளத்தில் குங்குமத்தைக் கரைத்த தண்ணியில் ஊற்றி. அதில் உலக்கையை நிற்க வைத்தால் நிக்கவேயில்லை.

சிருசுகள்ள இருந்து பெருசுங்கவரைக்கும் அந்தக் கண்கட்டி வித்தையை பார்த்தவாறே பசிமறந்து வேடிக்கை பார்த்து கொண்டிருந்தனர். ஜன்னல் வழியாக, கதவுயிடுக்கு வழியாக பார்த்த கண்களும் உண்டு.

சரியாக 11.45-க்கு உலக்கை ஒரு வழியாக நெட்டகுத்தர நின்றது. ``எப்படி இப்படி நிக்குது...’’

``ம்ம் இதுதான் சூரிய கிரகணம். ஏன் உங்க டீச்சர் சொல்லித் தரல்ல?’’

Representational Image
Representational Image

``இந்தா எல்லாரும் அந்தத் தட்ட உத்துப்பாருங்க. நல்லா பாருங்க. என்ன தெரியுது.’’

`` ஒண்ணும் தெரியல்ல’’ என பதில் வந்தது.

``நல்லா பாரு. ஒரு வட்டம் தெரியுதா?’’

நான்கு பேருக்குத் தெரிந்தது. மீதம் பேருக்கு மெதுவாகத் தெரிந்தது. இதுதான் கிரகணம்.

சூரியன், பூமி, சந்திரன் மூன்றும் ஒரே நேர்க்கோட்டில் வரும்போது உண்டாகும். இப்போது இந்த நேரத்தில் புற ஊதாக் கதிர்கள் அதிகம் காணப்படும். கிரகணத்தின்போது கண்களால் சூரியனை நேரடியாகப் பார்க்கக் கூடாது. விளக்கம் சொல்லி முடித்தேன்.

- ஆறுமுகராஜன்

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

விகடனில் உங்களுக்கென ஒரு பக்கம்...

உங்கள் படைப்புகளைச் சமர்ப்பிக்க இங்கே க்ளிக் செய்க https://www.vikatan.com/special/myvikatan/

My Vikatan
My Vikatan

ஏதோ ஓர் ஊரில், எங்கோ ஒரு தெருவில் நடந்த ஒரு விஷயம்தான் உலகம் முழுக்க வைரலாகிறது. உங்களைச் சுற்றியும் அப்படியொரு வைரல் சம்பவம் நடந்திருக்கலாம்... நடந்துகொண்டிருக்கலாம்... நடக்கலாம்..! அதை உலகுக்குச் சொல்வதற்காகக் களம் அமைத்துக் கொடுக்கிறது #MyVikatan. இந்த எல்லையற்ற இணையவெளியில் நீங்கள் செய்தி, படம், வீடியோ, கட்டுரை, கதை, கவிதை என என்ன வேண்டுமானாலும் எழுதலாம். மீம்ஸ், ஓவியம் என எல்லாத் திறமைகளையும் வெளிப்படுத்தலாம்.

உங்கள் படைப்புகளைச் சமர்ப்பிக்க இங்கே க்ளிக் செய்க https://www.vikatan.com/special/myvikatan/

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு