Published:Updated:

சைக்கிள் வெச்சிருந்தாலே அலட்சியப் பார்வை.. இப்போ? -வாசகரின் ஃபிட்னஸ் சீக்ரெட் #MyVikatan

சிறுவயதில் 12ம் வகுப்புவரை சைக்கிளில் சென்று வந்தனர். அப்போது யாருக்கும் இத்தனை பருமனா உடம்பு இருந்ததில்லை...

பொறுப்புத் துறப்பு : இந்தக் கட்டுரை வாசகரின் படைப்பு. கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்களுக்கும் கருத்துகளுக்கும் அதன் ஆசிரியரே பொறுப்பாவார். கட்டுரை சம்பந்தமாக உங்களுக்கு ஆட்சேபனை இருந்தால், my@vikatan.com-க்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்.

`செலவழிக்க செல்வங்கள் இல்லை என்று வருந்தாதே, நீ மட்டும் செலவு செய்ய உன்னிடம் வியர்வைத் துளி இருக்கி றது' என்பார் வைரமுத்து. காலையில் ஒவ்வொருவரும் இந்த வியர்வைக்காக மணிக்கணக்கில் உடற்பயிற்சி செய்வதைப் பார்த்திருப்போம். ஓடுதல், நடத்தல் என்பதையே விதவிதமாய்ச் செய்வர். அன்றைய நாளை மகிழ்ச்சியாய்த் தொடங்க இது அவர்களுக்கு ஒரு உந்துசக்தி.

இதில் திருப்தியடையாதவர்கள் அடுத்து ஒன்றைத் தேடிச் செல்கின்றனர். அதுதான் சைக்கிளிங். தினசரி பிள்ளைகளின் சைக்கிள் வாங்கியோ, பழைய சைக்கிளை விலைக்கு வாங்கியோ தினசரி உடற்பயிற்சி செய்கின்றனர்.

Representational Image
Representational Image
Vikatan team

ஒரு இளைஞர் கூட்டம் இதிலிருந்து மாறுபட்டு சைக்கிளிங்கை ஒரு பிட்னெஸ்க்காகப் பயன்படுத்தி வருவது மிகவும் பிரபலமாகி வருகிறது.

ஒரு முறை எங்கள் பகுதியில் நடைபெற்ற மருத்துவ முகாமில் பேசிய மருத்துவர் உடற்பயிற்சியில் எடை குறைய உடல் தகுதி பெறுவதில் முதலில் நீச்சல், இரண்டாவது சைக்கிளிங் மூன்றாவதுதான் வாக்கிங், ஜாக்கிங் என்றார். அன்றே சைக்கிள் ஒன்றை வாங்கிவிட்டேன். தினசரி அரைமணி நேரம் சைக்கிளிங் சென்றது மிகவும் புத்துணர்ச்சியாய் இருந்தது. தற்போது அதிகம் பேர் சைக்கிள் ஓட்டுவது ஆரோக்கியமாய் இருக்கிறது.

#சைக்கிள் வாங்கலாம்

சிறு வயதில் 12-ம் வகுப்புவரை சைக்கிளில் சென்று வந்தனர். அப்போது யாருக்கும் இத்தனை உடம்பு இருந்ததில்லை.

தற்போது முறையான உடல் உழைப்போ, உணவோ இல்லை. வாக்கிங் சென்றாலும் நண்பர்களுடன் சேர்ந்து சாம்பார் வடை டீ குடிப்பதால் உடல் பருமனும் குறைவதில்லை. அதற்கு மாற்றாக சைக்கிள் ஓட்டுவதைப் பார்க்கின்றனர்.

Representational Image
Representational Image
Vikatan team

பொதுவாக தினசரி ஐந்து கிலோமீட்டர் ஓட்ட சாதாரண சைக்கிளே போதுமானது. அடுத்து செல்ல எம்டிபி எனப்படும் தடிமனான சக்கரங்களுடன் உள்ள சைக்கிள் தினசரி பத்து முதல் பதினைந்து கிலோமீட்டர் வரை செல்லலாம். இதிலேயே டிஸ்க் ப்ரேக்குகள் உண்டு. மண் சாலை, கரடுமுரடான சாலைகளிலும் ஓட்டலாம்.

இதற்கு அடுத்ததாக கியர் வைத்து Hybrid சைக்கிள் டயர் எனப்படும் பார்ப்பதற்குச் சற்று மெல்லியதாய்க் கட்டைவிரல் அகலத்தில் இருக்கும். பத்தாயிரத்தில் இருந்து லட்சம் ரூபாய் வரை இருக்கிறது.

எடை குறைய குறைய விலை அதிகம். இவை நல்ல தரமான சாலையில் மட்டும் ஓட்ட முடியும். முக்கோணச் சட்டங்கள் அலுமினியம் மற்றும் கார்பனால் செய்யப்பட்டவை. முன்னால் மூன்று கியர்கள் மலை ஏற்றத்திற்கும் பின்னால் உள்ள ஏழு கியர்கள் சாலைக்கு ஏற்ற வகையிலும் மாற்றிக்கொள்ளலாம்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

#என்னென்ன அம்சங்கள்

சைக்கிள் வாங்குவதற்கு முதலில் பட்ஜெட்டைத் தீர்மானித்துக்கொள்ள வேண்டும்.

போன் வாங்குவது போல்தான் சைக்கிள் வாங்குவதும் வசதிகளைப் பொறுத்து மாறுபடும்.

இரும்புச் சட்டங்கள் எடை அதிகம் இருந்தால் அதிக தூரம் செல்ல முடியாது. எடை குறைவாய் இருந்தால் அலுப்பின்றி, முதுகு வலியின்றி நீண்டதூரம் செல்லலாம்.

6 கிலோ உள்ள சைக்கிள்கள்கூட உண்டு. ஒரு கையில் தூக்கிச் செல்லலாம். ஆனால் விலை லட்சத்தில் ஆரம்பிக்கும்.

Representational Image
Representational Image
Pixabay

எடைக்கு அடுத்து கியர்கள். ஒரே சமனுள்ள சாலைக்கு, பள்ளமான மற்றும் மேடான பகுதிக்கும் நாம் அளவிடும் சக்தியைப் பொறுத்து கியர் மாற்றி அலுப்பின்றிச் செல்லலாம். நம் இடுப்பளவுக்கு இணையாக சீட் இருக்க வேண்டும். அதற்கேற்ற வகையில் ஹேண்டில் பார் இருந்தால்தான் முதுகுவலி வராது.

சைக்கிள் உயரத்தைத் தீர்மானிக்க வேண்டும். சைக்கிளின் அதிகப்படியான பாகங்களைத் தவிர்த்து எடை குறைக்க வேண்டும்.

பெடல் மிதிக்கும்போது உங்கள் கால்கள் நேராக இருக்கும்படி உங்கள் உயரத்திற்கு ஏற்றவகையில் சரிசெய்ய வேண்டும்.

#சைக்கிளிங் செய்வதில் நன்மைகள்

தினசரி 30 நிமிடங்கள் குறைந்தது சைக்கிளிங் செல்ல வேண்டும். முதல் 10-15 நிமிடங்களில் நீர்ச்சத்து குறையும். அடுத்து 30 நிமிடங்களில் சேமித்து வைத்துள்ள குளுக்கோஸ் எரியும். 45 நிமிடங்களில் தேவையற்ற கொழுப்புகள் எரிக்கும். இரத்த ஓட்டம் சீராகும். Cycling என்கிற சைக்கிள் மிதிப்பது Cardio flexibility strength. தசைகளுக்கு வலு சேர்த்து சீரான இதயத்துடிப்பு, மூச்சுப்பயிற்சி மூலம் நுரையீரல் நன்றாக விரியும். அடிவயிறு கால் தசைகள் வலுப்பெறும். ஆரோக்கியமான தூக்கத்தைக் கொடுக்கும்.

Representational Image
Representational Image
Coen van den Broek on Unsplash

ரத்த அழுத்தம் சீராகும். சுறுசுறுப்பாக உடல் இயங்கும். எலும்புகள் வலுவாகும். மனச் சோர்வு குறையும். உடல் எடை கட்டுப்படுத்த உதவுகிறது. மற்ற உடற்பயிற்சியில் வாரம் 2000 கலோரி எரிந்தால் சைக்கிள் ஓட்டுதலில் ஒரு மணி நேரத்திற்கு 300 கலோரி எரிகிறது.

ஒவ்வொரு நாளும் அரை மணி நேரம் முதல் முக்கால் மணி நேரம் ஓட்டினால் உடலிலுள்ள அதிக கொழுப்பினைக் குறைக்கலாம்.

#டிராப் பார்கள் vs பிளாட் பார்கள்

ஹேண்டில் பார்களில் இருவகை உண்டு. முதலாவதாக

*டிராப் பார்கள்

சைக்கிள் கைப்பிடிகளில் தேர்வு முக்கியமாய்த் தோன்றும். டிராப் பார்கள் என்பவை வளைவாய் இருக்கும். கீழ், நடு, மேல் நிலை என 3 விதமான பொசிசன்களில் ஓட்டலாம்.

நீண்டநேர சவாரி செய்ய ஏற்றது. உடல் ஏரோடைனமிக் எனும் காற்றியக்க வேகத்திற்கு இணங்க குனிந்து ஓட்டுவதால் காற்று எதிர்ப்பிற்கு ஏற்ப ஓட்டமுடியும். இது வேகத்தை அதிகரிக்கும், சோர்வடைய வைக்காது.

மேடான பகுதியில் ஏறும்போது உடல் எடையை முடிந்தவரை முன்னோக்கி மாற்றும் போது ஏறுவது எளிதாக்குகிறது. பெடலிங் செய்ய அதிக சக்தியைக் கொடுக்கும். ஒரு மணி நேரத்தில் ஒரு மைல் கூடுதலாக சவாரி செய்யலாம்.

Representational Image
Representational Image
Dan Russo on Unsplash

3 விதமான கைப்பிடி இருப்பதால் மாற்றி மாற்றி பிடித்துக் கொள்ளவதால் கைவலி வராது. வேகமாய் சவாரி செய்யலாம்.

விலை அதிகம். மூன்று கைப்பிடி இருப்பதால் பிரேக் பிடிப்பதில் சிரமம் இருக்கும். பழுதினால் பிரேக் அல்லது ஷிஃப்ட்டர் கேபிள்களை மாற்ற வேண்டியிருப்பின் பார் டேப்பை அகற்ற வேண்டியிருக்கும்.

ஏரோடைனமிக்ஸ் சிறந்தது என்றாலும், உங்கள் தலை கீழே கோணப்பட்டிருப்பதால் பார்வைக்கு இது சிறந்ததல்ல. நீங்கள் மேலே பார்க்க முடியும். ஆனால் அது உங்கள் கழுத்தை இயற்கைக்கு மாறான நிலையில் வைக்கிறது. இது போன்ற சில மைனஸ்கள் உண்டு.

*ப்ளாட் பார்கள்

வளைவின்றி ஹேண்டில்பார் நீளமாய் இருக்கும். சிறுவயதிலிருந்தே நாம் ஓட்டியவை என்பதால் ஓட்டுவதற்கு எளிது. செல்லும் பாதையில் துல்லியமாய் இயக்கலாம். பாகங்கள் எளிதில் கிடைக்கும். அவசர காலத்தில் பிரேக் நுனியில் இருக்கும். சவாரிக்கு வசதியானது. விலை குறைவு.

ஜி.பி.எஸ் மற்றும் போன் வைக்க ஏற்றது. நேராக ஓட்டுவதால் முதுகு, கைகள், கழுத்திற்கு அழுத்தம் குறைவு. நேராகச் சாலையைக் கவனித்து ஓட்ட முடியும். கண்களுக்கு நல்லது. புதிதாய் ஓட்டுபவர்களுக்கும் சிறந்தது. அவசர காலங்களில் கியர் மற்றும் பிரேக் கேபிள்கள் மாற்றுவது எளிது.

Representational Image
Representational Image
Daniel Frank on Unsplash

*காற்று எதிர்ப்பு இருப்பதால் சில நேரங்களில் வேகம் குறையும். ஒரே பொசிசனில்தான் கை இருக்கும்.

உயரமான பகுதியில் ஏறும்போது காற்றியக்கத்திற்கேற்ப இல்லாமல் நிமிர்ந்து சவாரி செய்வதால் காற்றை எதிர்க்க வேண்டி இருக்கும். எடையை முன்னோக்கி மாற்ற முடியாததால் வேகம் குறையும். சோர்வு ஏற்படும். ஒரு சில சென்டி மீட்டர்கள் மட்டுமே கையை மாற்றி வைத்து ஓட்டவது போன்ற சில மைனஸ்கள் உண்டு.

#ரீ' சைக்கிள்

முன்பு சைக்கிள் வைத்திருந்தோரை அலட்சியமாகவும், இப்போது ஆச்சர்யமாகவும் பார்க்கிறோம்.

சைக்கிள் ஓட்டுவதற்கு மெலிதான ஆடை முக்கியம்.

தூரப் பயணத்திற்கு ஹெம்லெட், Shoe, Knee pad, Elbow pad, கையுறை, தண்ணீர் அவசியம்.

படிப்படியாக கிலோமீட்டரை அதிகப்படுத்த வேண்டும். health app போட்டுக்கொண்டு ஓட்டினால் ஒவ்வொரு கி.மீ முடிவிலும் தகவல் கொடுப்பது உபயோகமானதாய் இருக்கும்.

மிதவான உணவு போதும். அதிகாலையில் சைக்கிள் பயணம் ஆரோக்கியமானது. தூய்மையான ஆக்சிஜன் கிடைக்கும்.

யாருடனும் பேசாமல் தனிமையில் ஓட்டுவதால் தன்னம்பிக்கை வரும். வாயினால் மூச்சு விடாதவரை நல்ல ஸ்டாமினா கிடைக்கும். இன்று விற்கும் பெட்ரோல் விலைக்கு சைக்கிள் அத்தியாவசியமானது. சைக்கிளை அதிகம் பயன்படுத்துவது மாசுக் கட்டுப்பாட்டுக்கும் நல்லது. சைக்கிள் ஓட்டிப்பாருங்கள் அந்த அனுபவம் அலாதியானது.

-மணிகண்ட பிரபு

விகடனில் உங்களுக்கென ஒரு பக்கம்...

உங்கள் படைப்புகளைச் சமர்ப்பிக்க இங்கே க்ளிக் செய்க https://www.vikatan.com/special/myvikatan/

My Vikatan
My Vikatan

ஏதோ ஓர் ஊரில், எங்கோ ஒரு தெருவில் நடந்த ஒரு விஷயம்தான் உலகம் முழுக்க வைரலாகிறது. உங்களைச் சுற்றியும் அப்படியொரு வைரல் சம்பவம் நடந்திருக்கலாம்... நடந்துகொண்டிருக்கலாம்... நடக்கலாம்..! அதை உலகுக்குச் சொல்வதற்காகக் களம் அமைத்துக் கொடுக்கிறது #MyVikatan. இந்த எல்லையற்ற இணையவெளியில் நீங்கள் செய்தி, படம், வீடியோ, கட்டுரை, கதை, கவிதை என என்ன வேண்டுமானாலும் எழுதலாம். மீம்ஸ், ஓவியம் என எல்லாத் திறமைகளையும் வெளிப்படுத்தலாம்.

உங்கள் படைப்புகளைச் சமர்ப்பிக்க இங்கே க்ளிக் செய்க https://www.vikatan.com/special/myvikatan/

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு