Published:Updated:

``கொலையாளியின் பெயரை எங்க ஊருக்கு ஏன் வெச்சீங்க?’’ - அமெரிக்க மக்களை அதிரவைத்த உண்மை! #MyVikatan

அமெரிக்காவில் வாஷிங்டன், டி.சி போன்ற நகரங்களின் பெயர்களுக்கு விளக்கம் தேவையில்லை. உலகம் போற்றும் தலைவர்களின் பெயரில் உள்ள நகரங்கள் இவை.

பல அமெரிக்க நகரங்களுடைய பெயர்களின் மூலம் ஐரோப்பிய நாடுகளாக இருக்கும். உதாரணமாக, டச்சுப்படை அமெரிக்க மண்ணில் ஒரு தீவை வென்று அங்கே தங்கள் ஆட்சியை நிறுவியது. அந்தப் பகுதிக்கு என்ன பெயர் வைத்தார்கள்? ஐரோப்பிய கண்டத்தில் உள்ள தி நெதர்லாந்து (The Netherlands) நாட்டின் தலைநகரம் ஆம்ஸ்டெர்டாம் (Amsterdam). எனவே, அமெரிக்கக் கண்டத்தில் டச்சுப்படை கைப்பற்றிய அந்தப் பகுதிக்கு வைத்த பெயர் நியூ ஆம்ஸ்டெர்டாம் (New Amsterdam). இந்தத் தீவை இங்கிலாந்து படை வென்று, இங்கிலாந்தில் யார்க்க்ஷயரின் பிரபுவாக இருந்தவரின் நினைவாக, நியூவைச் சேர்த்து ``நியூயார்க்" என்று பெயர் மாற்றம் பெற்றது.

Amherst city
Amherst city

ஆட்சியில் இருப்பவர்கள் பெயர் மாற்றுவது இன்றைக்கும் நடக்கிறது! ஆனால், ஒரு கொலையாளியின் பெயரில் நகரம் இருப்பது நமக்கு ஆச்சர்யமாக இருக்கும். அந்த நகரம் ஆம்ஹெர்ஸ்ட் (Amherst).

அமெரிக்காவின் பாஸ்டன் நகரிலிருந்து 90 மைல் தூரத்தில் உள்ளது இந்த நகரம். இங்கிலாந்தின் படைத்தளபதியாக இருந்த ஃபீல்டு மார்ஷல் ஜெஃப்ரி ஆம்ஹெர்ஸ்ட்டின் பெயர் இந்த நகருக்குச் சூட்டப்பட்டுள்ளது. அமெரிக்காவின் பூர்வகுடிகள் செவ்விந்தியர்கள். இவர்களை ஆம்ஹெர்ஸ்ட் தலைமையிலான இங்கிலாந்துப் படை தோற்கடித்தது. ஆம்ஹெர்ஸ்ட் சிறந்த படைத்தளபதி என்றாலும், இவர்தான் உயிரியல் போரின் (Biological Warfare) முன்னோடி என்று சொல்கிறார்கள். குளிரால் செவ்விந்தியர்கள் கஷ்டப்படுகிறார்கள். எனவே, செவ்விந்தியர்களுக்குக் கம்பளிப் போர்வைகளைக் கொடுத்து உதவ வேண்டும் என்று ஆம்ஹெர்ஸ்ட் அறிவுறுத்தினார்.

Amherst city
Amherst city

நல்ல அறிவுரை தானே என்று நமக்குத் தோன்றும். அந்தக் கம்பளிகளில் சின்னம்மை (Smallpox) நோய்க்கிருமிகளைச் சேர்த்து கொடுக்கச் சொன்னார். அதன் மூலம் செவ்விந்தியர்களை எளிதாகக் கொல்லலாம் என்பது ஆம்ஹெர்ஸ்ட்டின் திட்டம். இவர் எழுதிய இந்தக் கடிதம் வெளிஉலகிற்குத் தெரிந்தபோதுதான், ஆம்ஹெர்ஸ்டின் கொடூர முகம் வெளியே வந்தது. அதனால் ஆம்ஹெர்ஸ்ட் நகரின் பெயரை மாற்ற வேண்டுமென்ற கோரிக்கை அவ்வப்போது எழுகிறது. இந்நகரில் மசாச்சூசெட்ஸ் பல்கலைக்கழகம் மற்றும் ஆம்ஹெர்ஸ்ட் கல்லூரி ஆகிய இரண்டு புகழ் பெற்ற கல்வி நிலையங்கள் உள்ளன. பண்டிதர் ஜவஹர்லால் நேரு அவர்கள் மரணம் அடைந்த பொழுது அவரின் அருகே இருந்த புத்தகத்தில், நான்கு வரிகளை அடிக்கோடிட்டிருந்தார். அந்த வரிகள், "The woods are lovely, dark and deep. But I have promises to keep, and miles to go before I sleep". இதை எழுதியவர் ஆம்ஹெர்ஸ்ட் கல்லூரியில் பேராசிரியராக இருந்த ராபர்ட் ஃப்ராஸ்ட்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

இன்றைக்கும் வாழ்க்கையில் முன்னேறுவதற்கான அடிப்படை தத்துவமாகச் சொல்லப்படுகிற ``Two roads diverged in a wood and I - I took the one less travelled by, and that has made all the difference" என்ற புகழ்மிக்க வாசகத்தை ராபர்ட் ஃப்ராஸ்ட் ஆம்ஹெர்ஸ்ட் கல்லூரியில் இருந்த பொழுது சொன்னார் என்பது குறிப்பிடத்தக்கது. மசாச்சூசெட்ஸ் பல்கலைக்கழகத்தின் சின்னம் Minuteman. ஒரு நிமிடத்தில் தாக்குதலுக்குத் தயாராவதற்கான பயிற்சி பெற்ற வீரர்களுக்குப் பெயர் Minutemen. அமெரிக்கப் புரட்சிப் போரில் ஈடுபட்டவர்கள் இவர்கள். அதனால் Minuteman ஐ பல்கலைக்கழகச் சின்னமாகப் பயன்படுத்துகிறார்கள். மசாச்சூசெட்ஸ் பல்கலைக்கழகத்தின் வேந்தர் (Chancellor) சுப்பஸ்வாமி கும்ப்ளே பெங்களூருவில் பிறந்தவர். இவர் புகழ்மிக்க இந்திய கிரிக்கெட் வீரர் அணில் கும்ப்ளேவின் உறவினர்.

Amherst city
Amherst city

பாகிஸ்தானின் முன்னாள் வெளியுறவுத்துறை அமைச்சர் ஹீனா ரப்பாணி கர் மசாச்சூசெட்ஸ் பல்கலைக்கழகத்தின் முன்னாள் மாணவி.

இப்பொழுது ஒரு சிறிய விளம்பர இடைவேளை எடுத்துக்கொள்ளலாம். இந்தக் கட்டுரையை எழுதுபவர் மசாச்சூசெட்ஸ் பல்கலைக்கழகத்தில் ஆராய்ச்சி பேராசிரியராக இருந்தவர். (என்னைதான் சொன்னேன் :))

Welcome back to the article!

ஹாலிவுட் நடிகை உமா துர்மன் ஆம்ஹெர்ஸ்ட் நகரில் பிறந்தவர். இலங்கைத் தமிழர் பிரச்னை உச்சத்தில் இருந்த பொழுது, அமிர்தலிங்கம் இந்திய பிரதமர் இந்திராகாந்தியிடம் உதவி கேட்டு வந்தார். பிரதமர் இந்திராகாந்தி, அமிர்தலிங்கத்தை அமெரிக்காவிற்கு அனுப்பி அங்குள்ள முக்கியத் தலைவர்களைச் சந்திக்க ஏற்பாடு செய்தார். அப்படி அமிர்தலிங்கம் சந்தித்த ஒரு தலைவர் மேரி எலிசபெத் ஹொவே. மசாச்சூசெட்ஸ் பொதுநலவாயத்தில் (Massachusetts Commonwealth) அவர் கொண்டுவந்த தீர்மானம், தமிழர்களுக்கு இலங்கைத் தீவில் ``சுயநிர்ணய உரிமை" வழங்க அறிவுறுத்தியது. அதற்காக மசாச்சூசெட்ஸ் மாகாணம் ``தமிழ் ஈழ நாள்" கொண்டாடியது. இந்தப் பிரகடனத்தை வெளியிட்டவர் அன்றைய மாகாண கவர்னர் எட்வர்ட் கிங். மேரி எலிசபெத் ஹொவே நார்த்தம்ப்டன் நகரைச் சேர்ந்தவர்.

Amherst city
Amherst city

கனக்டிகட் நதியின் ஒரு கரையில் நார்த்தம்ப்டன் நகரும் மறுகரையில் ஆம்ஹெர்ஸ்ட் நகரும் இருக்கின்றன. எனவே, இலங்கைத் தமிழர் பிரச்னையை உலக அளவில் கொண்டு சென்றதில் பிரதமர் இந்திராகாந்திக்கு உதவிய மேரி எலிசபெத் ஹொவேயுடன் தொடர்புடையது ஆம்ஹெர்ஸ்ட் நகரம். இந்த நகரத்தில் வருடத்தின் அனைத்துப் பருவங்களையும் நன்கு காண/உணர முடியும். இலையுதிர்கால ஆம்ஹெர்ஸ்ட் நகரம் அழகின் உச்சம். இலைகளின் வெவ்வேறு நிறங்களால், நகரே வண்ணமயமாக இருக்கும். குளிர்காலம் புகைப்படங்களில் அழகாக இருந்தாலும் கொஞ்சம் கடினமானது. இக்காலத்தில் பெர்க்க்ஷயர் பனிச்சறுக்கு மையத்தில் பனிச்சறுக்கு விளையாடலாம். கோடைக்காலம் மிக இதமாக இருக்கும். எந்த அளவுக்கு என்றால், மின்விசிறியே தேவைப்படாது.

பெரும்பாலான வீடுகளில் மின்விசிறியே இருக்காது. ஒரு முறை கோடையில் வெப்பம் அதிகமாக இருந்தது. (நான் அங்கு வசித்த சமயத்தில்) ஏசி வாங்கலாம் என்று கடைக்குப் போய் தேடினேன், கிடைக்கவில்லை. கடையின் பணியாளரிடம், ஏசி எங்கே இருக்கிறது என்று கேட்டேன். மன்னிக்கவும், ஏசி விற்றுத் தீர்ந்து விட்டது. ஏசிக்கு மிக நெருக்கமான மின்விசிறி இருக்கிறது, வேண்டுமா என்று கேட்டார் (We don't have AC, the closest we have is electric fan. Do you want one?).

Massachusetts University
Massachusetts University

நல்ல வேளையாக ஏசிக்கு நெருக்கமான கைவிசிறி இருக்கிறது என்று சொல்லாமல் விட்டாரே என்று நினைத்துக்கொண்டு திரும்பிப்பார்க்காமல் வந்துவிட்டேன். இந்நகரில் ஒரு ஐஸ்க்ரீம் கடை இருக்கிறது. அவர்களின் மெனுவில் "இஞ்சி ஐஸ்க்ரீம்" என்று இருந்தது. ``இஞ்சி தின்ற குரங்கு" என்றெல்லாம் பேசிக் கொண்டிருக்கிறோம். இவர்கள் அந்த இஞ்சியில் ஐஸ்க்ரீம் செய்து விற்கிறார்கள் என்பது ஆச்சர்யமாக இருந்தது.

உண்மையில் அந்த ஐஸ்க்ரீம் மிக சுவையானது. அதைப் போன்ற சுவையான ஐஸ்க்ரீம் வேறெதுவுமில்லை என்பது எனது முடிவு. இந்தக் கடையில் பாஸ்டியரைஸ் (Pasteurize) பண்ணாத பால் கிடைக்கும். இது அமெரிக்காவில் அரிது. இந்தக் கடையின் பெயர் FlaYvors. இந்தக் கடை ஆரம்பித்தவரிடம் ஒரு மாடு இருந்திருக்கிறது. அந்த மாடு கன்றுகள் ஈன்றுள்ளன. அவ்வாறு ஈன்று வளர்ந்த மாடுகளிலிருந்து கிடைக்கும் பாலில் நடத்தப்படுவது இந்தக்கடை. அந்த மாட்டின் பெயர் Y என்ற ஆங்கில எழுத்தில் தொடங்கும் (பெயரை மறந்துவிட்டேன்), எனவே கடையின் பெயர் FlaYvors, Flavors அல்ல.

 FlaYvors icecream
FlaYvors icecream

உலகின் மிகப்பெரிய மெழுகுவத்தி தொழிற்சாலை (Yankee Candles) மற்றும் விற்பனை நிலையம் ஆம்ஹெர்ஸ்ட் நகரின் அருகே உள்ளது. இந்த விற்பனை நிலையத்தின் நறுமணம் தனித்துவமானது. அதன் அருகிலேயே ஸ்ட்ராபெரி சாக்லேட் விற்பார்கள். ஸ்ட்ராபெரியை உருகிய சாக்லேட்டில் முக்கி இதைத் தயாரித்திருப்பார்கள். உலகிலேயே முதல்முறையாக இந்தக் கடையில்தான் ஸ்ட்ராபெரி சாக்லேட் உருவாக்கப்பட்டதாக இந்தக் கடையில் இருந்தவர் சொன்னார்.

இது போன்ற தகவல்களைச் சரி பார்ப்பது கடினம். இன்னொரு சிக்கல், பெரும்பாலான அமெரிக்கர்களுக்கு உலகம் என்பது அமெரிக்காவும் ஐரோப்பாவும் மட்டுமே. எது எப்படியோ, சாக்லேட் சுவையாக இருந்தது உண்மை. அதே போல, ஆம்ஹெர்ஸ்ட் அருகே உள்ள தோட்டங்களில் ஸ்ட்ராபெரி, ப்ளூபெரி போன்ற பழங்களைப் பொறுக்க அனுமதிப்பார்கள் (Berry picking).

 FlaYvors icecream
FlaYvors icecream

எது எப்படியோ, சாக்லேட் சுவையாக இருந்தது உண்மை. அதே போல, ஆம்ஹெர்ஸ்ட் அருகே உள்ள தோட்டங்களில் ஸ்ட்ராபெரி, ப்ளூபெரி போன்ற பழங்களைப் பொறுக்க அனுமதிப்பார்கள் (Berry picking). பொறுக்கியவற்றில் தேவையானவற்றை வாங்கிக்கொள்ளலாம். அமெரிக்காவில் வாழ்ந்த காலத்தில் எதையோ இழந்தது போல வாழ்ந்து கொண்டிருந்தேன். ஆனால், ஆம்ஹெர்ஸ்ட் நகரம் எனக்குப் பிடித்திருந்தது. யாரேனும் ஆம்ஹெர்ஸ்ட் நகருக்குப் போனால், ஸ்ட்ராபெரி சாக்லேட் சாப்பிட்டுப் பார்க்கவும். FlaYvors இல் இஞ்சி ஐஸ்க்ரீம் சாப்பிட மறக்காதீர்கள். பொறுக்கியவற்றில் தேவையானவற்றை வாங்கிக்கொள்ளலாம். அமெரிக்காவில் வாழ்ந்த காலத்தில் எதையோ இழந்தது போல வாழ்ந்து கொண்டிருந்தேன். ஆனால், ஆம்ஹெர்ஸ்ட் நகரம் எனக்குப் பிடித்திருந்தது. யாரேனும் ஆம்ஹெர்ஸ்ட் நகருக்குப் போனால், ஸ்ட்ராபெரி சாக்லேட் சாப்பிட்டுப் பார்க்கவும். FlaYvors இல் இஞ்சி ஐஸ்க்ரீம் சாப்பிட மறக்காதீர்கள்.

-கோதண்டம் கிருஷ்ணமூர்த்தி

விகடனில் உங்களுக்கென ஒரு பக்கம்...

உங்கள் படைப்புகளைச் சமர்ப்பிக்க இங்கே க்ளிக் செய்க https://www.vikatan.com/special/myvikatan/

My Vikatan
My Vikatan

ஏதோ ஓர் ஊரில், எங்கோ ஒரு தெருவில் நடந்த ஒரு விஷயம்தான் உலகம் முழுக்க வைரலாகிறது. உங்களைச் சுற்றியும் அப்படியொரு வைரல் சம்பவம் நடந்திருக்கலாம்... நடந்துகொண்டிருக்கலாம்... நடக்கலாம்..! அதை உலகுக்குச் சொல்வதற்காகக் களம் அமைத்துக் கொடுக்கிறது #MyVikatan. இந்த எல்லையற்ற இணையவெளியில் நீங்கள் செய்தி, படம், வீடியோ, கட்டுரை, கதை, கவிதை என என்ன வேண்டுமானாலும் எழுதலாம். மீம்ஸ், ஓவியம் என எல்லாத் திறமைகளையும் வெளிப்படுத்தலாம்.

உங்கள் படைப்புகளைச் சமர்ப்பிக்க இங்கே க்ளிக் செய்க https://www.vikatan.com/special/myvikatan/

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு