Published:Updated:

`குழந்தைத் தொழிலாளர்களும் தமிழ் சினிமாவும்..!' - வாசகர் பார்வை #MyVikatan

காரணம் அவர் பள்ளியில் உணவு என்கிற முறையை உருவாக்கவில்லை என்றால் இன்று நான் இந்த வார்த்தைகளை எழுதிக்கொண்டிருப்பேனா என்று தெரியவில்லை...

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள... இங்கே க்ளிக் செய்து இன்றே விகடன் ஆப் இன்ஸ்டால் செய்யுங்கள்!

பொறுப்புத் துறப்பு : இந்தக் கட்டுரை வாசகரின் படைப்பு. கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்களுக்கும் கருத்துகளுக்கும் அதன் ஆசிரியரே பொறுப்பாவார். கட்டுரை சம்பந்தமாக உங்களுக்கு ஆட்சேபனை இருந்தால், my@vikatan.com-க்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்

தமிழகமெங்கும் ஒவ்வோர் ஆண்டும் இதே வருடம் காமராஜர் பிறந்தநாள் கொண்டாடப்பட்டு வருகிறது. அனைத்துப் பள்ளி வாசல்களிலும் ஊர் முக்குகளிலும் இன்று காமராஜர் போட்டோதான். அவர் படத்தைப் பார்க்கும்போது மனதுக்கு அவ்வளவு சந்தோஷமாக இருக்கிறது. காரணம் அவர் பள்ளியில் மதிய உணவு திட்டத்தை சட்டமாக்கவில்லை என்றால் இன்று நான் இந்த வார்த்தைகளை எழுதிக்கொண்டிருப்பேனா என்று தெரியவில்லை.

Representational Image
Representational Image
Pixabay

'குழந்தைத் தொழிலாளர்கள்' என்ற முறையை உடைத்து அனைவரையும் படிப்பறிவு கொண்டவர்களாக மாற்றுவதே அவரது முக்கிய நோக்கம். ஆனாலும், இன்றுவரை குழந்தைத் தொழிலாளர்கள் முறை முற்றிலும் அகலவில்லை. பள்ளிப் படிப்பை பாதியில் நிறுத்திவிட்டு லாரி கிளீனர், குட்டி யானை ஓட்டுநர், துணிக்கடை ஊழியர் என்று எதோ ஒரு வேலையில் சிக்கி தொழிலாளர்களாகிவிடுகிறார்கள் குழந்தைகள். அதுபோன்ற குழந்தைத் தொழிலாளர்களின் வாழ்வியலைக் காட்டிய தமிழ் சினிமாக்களைப் பார்ப்போம்.

முதல் படம் இயக்குநர் ஜானகி விஸ்வநாதனின் குட்டி. இந்தப் படத்தில் கிராமப்புற சிறுமி ஒருத்தி நகரத்துக்கு வீட்டுவேலை செய்வதற்காக அனுப்பப்படுகிறாள். அந்த வீட்டில் வேலை செய்யத் தொடங்குகிறாள். அவளுடைய முதலாளியம்மா பள்ளியில் ஆசிரியை. வீட்டிலேயே ஒரு குழந்தையைத் தொழிலாளியாக வைத்திருப்பது, அவரை சங்கடப்படுத்தும், அதே படத்தில் பள்ளியில் ஆசிரியர்கள் கூடி இருக்கும் அறையில் ஒரு சிறுவன் டீ எடுத்துவந்து தருவான். அப்போது அந்த ஆசிரியர்கள் குழந்தைத் தொழிலாளர்கள் பற்றிப் பேச வீட்டிலயே ஒரு சிறுமியைத் தொழிலாளியாக வைத்திருக்கும் ஆசிரியைக்கு குற்ற உணர்வுக்கு ஆளாவார்.

Representational Image
Representational Image
Pixabay

இயக்குநர் பாண்டியராஜ் மற்றும் சிவகார்த்திகேயன் கூட்டணியில் உருவான மிக முக்கியமான படம் 'மெரினா.' மெரினா காமராஜர் சாலையில் உள்ள காமராஜர் சிலைக்கு கீழே உள்ள தளத்தில்தான் மெரினா கடற்கரையில் வேலைசெய்யும் குழந்தைத் தொழிலாளர்கள் படுத்து உறங்குவார்கள். அந்தக் காட்சியை அப்படியே நிறுத்தி அந்த இடத்தில் எழுத்து இயக்கம் பாண்டியராஜ் என டைட்டில் வரும். அந்தக் காட்சி சுருக்கென்று இருந்தது. கல்வி எவ்வளவு முக்கியம் என்பதைச் சொன்ன அந்தப் படத்துக்குச் சிறந்த சமூக விழிப்புணர்வுக்கான தேசிய விருது கிடைத்திருக்க வேண்டும். ப்ச்!

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

இயக்குநர் சற்குணம் மற்றும் விமல் கூட்டணியில் உருவான 'வாகை சூடவா' குழந்தைத் தொழிலாளர்களைப் பற்றி சொன்ன மிக முக்கியமான படம். 'முந்தானை முடிச்சு' படத்தின் பாக்யராஜ் கதாபாத்திரம் போலவே விமல் கதாபாத்திரம், மிக வெகுளியாய் வடிவமைக்கப்பட்டிருக்கும். ஒரு கிராமத்துக்கு ஆசிரியர் வேலைக்குச் செல்கிறார். முதலில் அவரை கோமாளியாகப் பார்க்கும் அந்தக் கிராமம். படத்தின் பின்பாதியில் ஆண்டைகளின் அரசியல் புரிய ஆரம்பித்ததும், கல்வியின் அவசியத்தை உணர்கிறது.

Representational Image
Representational Image
Vikatan team

ஆசிரியர் விமலைக் கொண்டாடத் தொடங்குகிறது. ஆரம்பத்தில் அந்த ஊரை வெறுத்தவர் ஒருகட்டத்தில், ``இது என் ஊரு" என்று அந்த ஊர் மாணவர்களுக்காகவே வாழத் தொடங்குவார்.

இயக்குநர் விஜய் மில்டனின் 'கோலிசோடா' படம் கோயம்பேடு மார்க்கெட்டில் மூட்டை தூக்கும் அடையாளமற்ற சிறுவர்களின் வாழ்வியலை பதிவுசெய்திருக்கும். ``ஆச்சி ஒருவேள நான் உனக்கு பொறந்துறந்தா, நானும் உன் புள்ள மாதிரி ஸ்கூலுக்குப் போயிருப்பேன்" என்று அந்த நான்கு சிறுவர்களில் ஒருவன் கூறும் வசனம் நறுக்கென்று இருக்கும்.

இயக்குநர் பாலாஜி சக்திவேலின் 'கல்லூரி' படத்தில் நாயகனின் தங்கை, பாறை உடைக்கும் தொழிலாளியாகவும், 'வழக்கு எண் 18/9' படத்தில் அம்மா, அப்பா கடன் பிரச்னைக்காகப் பள்ளிப் படிப்பை பாதியில் விட்டுவிட்டு வேலைக்குப் போகும் கதாநாயகன் மற்றும் தள்ளுவண்டி கடையில் அவனுக்குச் உதவியாக இருக்கும் சின்னச்சாமி இருவரும் நம் மனதைக் கலங்கடிக்க வைக்கிறார்கள்.

இயக்குநர் செல்வராகவனின் 'காதல் கொண்டேன்' படத்தில்கூட வினோத்தின் ஃப்ளாஷ்பேக்கில் குழந்தைத் தொழிலாளர்கள் பிரச்னை பேசப்பட்டிருக்கும்.

Representational Image
Representational Image
Zeyn Afuang on Unsplash

இயக்குநர் மணிகண்டனின் 'காக்கா முட்டை' படத்தில் கரி எடுக்கும் குழந்தைத் தொழிலாளர்களைக் காட்டி இருப்பார்கள். இயக்குநர் பா.இரஞ்சித், அந்தப் படத்தைப் பார்த்து கொதித்து எழுந்தார். ``நான் ஸ்கூலுக்குப் போகலனா, எங்கம்மாலாம் என்ன தூக்கிப்போட்டு மிதிக்கும், அந்தப் படத்துல ஒரு காட்சிலகூட அந்தப் பசங்க படிப்ப பத்தி பேசாதது, எனக்கு ரொம்ப பாதிப்பை ஏற்படுத்துது" என்று கூறியிருப்பார்.

அவர் சொன்ன அடுத்த சில நாள்களில் 'விக்ரம் வேதா' படத்தில் குடிசைப்பகுதி சிறுபிள்ளைகள் காசுக்காக போதைப் பொருள்கள் கடத்துகிறார்கள் என்று காட்டி இருந்தார்கள். அதே படத்தில் 'புள்ளி' என்ற கதாபாத்திரம் இருந்ததால் அது பெரிய விவகாரம் ஆகவில்லை.

விஜய்யின் 'நண்பன்' படத்தில் வரும் மில்லிமீட்டர், 'தெறி' படத்தில் சாலையோரங்களில் வரும் பிச்சை எடுக்கும் குழந்தைத் தொழிலாளர்கள், விக்ரமின் 'ஸ்கெட்ச்' படத்தில் கெத்துக்காகக் கத்தி எடுக்கும் சிறுவர் கதாபாத்திரங்கள் நிஜத்தில் இன்றும் நம் கண்முன் வலம்வந்து கொண்டுதான் இருக்கிறார்கள். இவையனைத்துமே என்னை அதிகம் பாதித்த காட்சிகள். இப்படியான காட்சிகள் நிஜத்திலும் சினிமாவிலும் மாறினால் மட்டுமே இந்தியா ஒளிரும்!

- ராசு

விகடனில் உங்களுக்கென ஒரு பக்கம்...

உங்கள் படைப்புகளைச் சமர்ப்பிக்க இங்கே க்ளிக் செய்க https://www.vikatan.com/special/myvikatan/

My Vikatan
My Vikatan

ஏதோ ஓர் ஊரில், எங்கோ ஒரு தெருவில் நடந்த ஒரு விஷயம்தான் உலகம் முழுக்க வைரலாகிறது. உங்களைச் சுற்றியும் அப்படியொரு வைரல் சம்பவம் நடந்திருக்கலாம்... நடந்துகொண்டிருக்கலாம்... நடக்கலாம்..! அதை உலகுக்குச் சொல்வதற்காகக் களம் அமைத்துக் கொடுக்கிறது #MyVikatan. இந்த எல்லையற்ற இணையவெளியில் நீங்கள் செய்தி, படம், வீடியோ, கட்டுரை, கதை, கவிதை என என்ன வேண்டுமானாலும் எழுதலாம். மீம்ஸ், ஓவியம் என எல்லாத் திறமைகளையும் வெளிப்படுத்தலாம்.

உங்கள் படைப்புகளைச் சமர்ப்பிக்க இங்கே க்ளிக் செய்க https://www.vikatan.com/special/myvikatan/

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு