Published:Updated:

என்னைத் தட்டிக்கொடுத்த முத்தான இரண்டு பாடல்கள்..! - வாசகி பகிர்வு #MyVikatan

கவியரசு கண்ணதாசன்
கவியரசு கண்ணதாசன்

அன்னாரது பாடல்களில் அவ்வப்போது நம்மைத் தட்டிக்கொடுப்பதாக நான் நினைக்கும் இரண்டு பாடல்களின் சில வரிகளை நினைவுபடுத்த விரும்புகிறேன்.

பொறுப்புத் துறப்பு : இந்தக் கட்டுரை வாசகரின் படைப்பு. கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்களுக்கும் கருத்துகளுக்கும் அதன் ஆசிரியரே பொறுப்பாவார். கட்டுரை சம்பந்தமாக உங்களுக்கு ஆட்சேபனை இருந்தால், my@vikatan.com-க்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்!

சிறிது மனது உற்சாகம் பெற வேண்டுமென்றால் பல வெளிநாட்டு ஆல்பம் பாடல்களைத் தட்டிவிடும் பழக்கத்தை நம்மில் சிலர் கொண்டிருப்போம். ஆனால், அவ்வப்போது வீட்டில் பெரியவர்கள் கேட்கும் பழைய பாடல்கள் சட்டென்று நம் கவனத்தை ஈர்த்தபடி நம்மைத் திரும்பிப் பார்க்க வைக்கும்.

கவியரசு கண்ணதாசன்
கவியரசு கண்ணதாசன்

கூர்ந்துகூட கேட்காமலேயே நம் மனதில் நம்பிக்கை விதையை விதைத்திருக்கும். பெரும்பாலும் அந்த வைர வரிகளுக்கு சொந்தக்காரராக கவியரசு கண்ணதாசனே இருந்திருப்பார்.

``என்னப்பா பெரிய வெளிநாட்டு நம்பிக்கை வரிகள்! இவர விடவா வாழ்க்கையை எளிதாக யாரேனும் புரிய வைக்கப்போறாங்க...’’ என்றிருக்கும். அன்னாரது பாடல்களில் அவ்வப்போது நம்மைத் தட்டிக்கொடுப்பதாக நான் நினைக்கும் இரண்டு பாடல்களின் சில வரிகளை நினைவுபடுத்த விரும்புகிறேன்.

நம்பிக்கையாக வாழ்வதற்குத் தேவையான அத்தியாவசிய குணங்களுள் ஒன்று நம்மை நாமே முழுதாக அறிந்திருக்க வேண்டும். நமக்கு எது வரும், எதில் நாட்டம், எது நமக்கு ஏற்புடையது அல்ல என்று. இந்தச் சின்ன ரகசியத்தைத்தான் பெரிய சுய முன்னேற்ற வகுப்புகளில்கூட கற்பித்து வருகிறார்கள். அதைக் கண்ணதாசன் மிக அழகாக இரண்டே வரிகளில் கூறியிருப்பார்.

கவியரசு கண்ணதாசன்
கவியரசு கண்ணதாசன்

"தன்னைத் தானும் அறிந்து கொண்டு ஊருக்கும் சொல்பவர்கள் தலைவர்கள் ஆவதில்லையா... உன்னை அறிந்தால்."

அடுத்து நம்மில் வெற்றிக்கான நேர்மறை எண்ணத்தை விதைக்க அதே பாடலில் இந்த வரியையும் சேர்த்து ஊட்டியிருப்பார்.

"மாபெரும் சபைதனில் நீ நடந்தால் உனக்கு மாலைகள் விழ வேண்டும்."

``நீ படிக்கலேனா அவ்வளவுதான், எரும மாடுதான் மேய்க்கணும்’’ என்று திட்டி எதிர்மறையாகப் பேசும் சமுதாயத்துக்கு மத்தியில் இப்படி ஒரு வரியை ஊட்டியிருப்பது அசாத்தியமானது

அடுத்தது, ``தங்கங்களே நாளையத் தலைவர்களே'' என்று வரும் பாடலில் `ஊரு எப்படி இருந்தா என்ன நீ ஒழுங்கா இரு’ என்பதை அழுத்தமாக இரண்டு வரிகளில் சொல்லியிருப்பார்.

``யாரும் பொய்யைச் சொன்னாலும் நீங்கள் மெய்யைச் சொல்லுங்கள். யாரும் தீமை செய்தாலும் நீங்கள் நன்மை செய்யுங்கள்’’ என்று அதே பாடலில் Procrastination அதாவது காலம் கடத்தி எந்த ஒரு செயலையும் செய்யாமல் இருக்க பக்கம் பக்கமாய் கட்டுரை எழுதாமல் நச்சென்று இரு வரிகளில் கூறியிருப்பார்.

Representational Image
Representational Image

``என்றும் ஒன்றே செய்யுங்கள் ஒன்றை நன்றே செய்யுங்கள் நன்றும் இன்றே செய்யுங்கள் நீங்கள் எதிலும் வெல்லுங்கள்’’ என்று எவ்வளவு ஆழமான கருத்துகளை எளிதாகக் கூறிவிட்டார். அதுதான் கவியரசோ. நேற்று அவரது பிறந்தநாள் என்பதால் இதை எழுத வேண்டும் என்று தோன்றியது. நேற்று இன்று நாளை மட்டுமல்ல என்றுமே அவர் வரிகளோடு நாம் வாழ்ந்து கொண்டிருக்கலாம்!

- நாக சரஸ்வதி

விகடனில் உங்களுக்கென ஒரு பக்கம்...

உங்கள் படைப்புகளைச் சமர்ப்பிக்க இங்கே க்ளிக் செய்க https://www.vikatan.com/special/myvikatan/

My Vikatan
My Vikatan

ஏதோ ஓர் ஊரில், எங்கோ ஒரு தெருவில் நடந்த ஒரு விஷயம்தான் உலகம் முழுக்க வைரலாகிறது. உங்களைச் சுற்றியும் அப்படியொரு வைரல் சம்பவம் நடந்திருக்கலாம்... நடந்துகொண்டிருக்கலாம்... நடக்கலாம்..! அதை உலகுக்குச் சொல்வதற்காகக் களம் அமைத்துக் கொடுக்கிறது #MyVikatan. இந்த எல்லையற்ற இணையவெளியில் நீங்கள் செய்தி, படம், வீடியோ, கட்டுரை, கதை, கவிதை என என்ன வேண்டுமானாலும் எழுதலாம். மீம்ஸ், ஓவியம் என எல்லாத் திறமைகளையும் வெளிப்படுத்தலாம்.

உங்கள் படைப்புகளைச் சமர்ப்பிக்க இங்கே க்ளிக் செய்க https://www.vikatan.com/special/myvikatan/

அடுத்த கட்டுரைக்கு