Published:Updated:

சண்டைகளும் சமாதானங்களும்..! - லாக் டெளன் Couple Goals #MyVikatan

பகல் தூக்கம் போடுவது பேஷனாகிப்போன இக்காலத்தில்கூட கொஞ்சம் கண் அசந்தாலும் கிரீஸ்டப்பாவை எட்டி உதைப்பதுபோல் ``எந்திருங்க தொப்பை போட்டிடும்’’ என்று எழுப்பி விடுகிறார்...

பொறுப்புத் துறப்பு : இந்தக் கட்டுரை வாசகரின் படைப்பு. கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்களுக்கும் கருத்துகளுக்கும் அதன் ஆசிரியரே பொறுப்பாவார். கட்டுரை சம்பந்தமாக உங்களுக்கு ஆட்சேபனை இருந்தால், my@vikatan.com-க்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்

"'நம்மை திட்டுபவர்களைத்தான் நாம் அதிகம் திருப்திபடுத்த வேண்டும்" என்பார் கமல்ஹாசன்.

இது இல்லறத்துக்கு பொருந்தும் முக்கிய வாசகம். சண்டையும் சமாதானமும் இருகண்கள் போல் கணவன் மனைவிக்கு. வீட்டில் நடக்கும் ஜாலியான இந்த நாள்களைக் கடக்காதவர்களே இருக்க முடியாது.

கணவனின் பார்வையில் ஒரு ஜாலிக்காக...

லாக்டெளன் எப்ப முடியும் என்ற எதிர்பார்ப்பை ஏற்படுத்தியதில் மனைவிக்கு முக்கிய பங்கும் உண்டு. கத்துக்கிட்ட மொத்த வித்தயைக் காட்டினாலும் நம் முதுகில் மொத்தும் வித்தையைத் தெரிந்தவர் அவர்தான். சத்ரியன் விஜயகாந்த் கண் சிவக்கிற மாதிரி கோபப்பட்டாலும் அண்ணாச்சி அருமைநாயகம்போல கூல் சிரிப்பில் நமக்கே டென்ஷன் ஏறும்.

Representational Image
Representational Image
taylor hernandez on Unsplash

இருவருக்கும் சண்டை வந்தால் நான் ஹோட்டல் போவதும், அவங்க அம்மா வீட்டுக்குப் போவதும் நின்றுவிட்டதால் டெலிகேட் பொசிசன் ஏற்பட்ட மகான் மாதிரி கம்முனு இருக்க வேண்டியதாக இருக்கிறது.

ஒரே வீட்டில் இருப்பதால் எங்கேயும் போக முடியாமல் கோபத்தைக் கொட்டித்தீர்க்கும் களமாய் இருக்கிறது லாக்டெளன்.

#சும்மா சும்மா

முன்பெல்லாம் எதுவாக இருந்தாலும், ``அவர்கிட்ட கேட்கணும்’’ என்று மரியாதையாகச் சொன்னவர்கள் இப்போது எதுவாக இருந்தாலும், ``சொன்னாதான் செய்வியா’’ என்று தூள் சொர்ணாக்கா ரேஞ்சுக்கு பேச ஆரம்பித்துவிட்டார்.

``சும்மாதான இருக்கீங்க கடைக்குப் போங்க, சும்மாதான இருக்கீங்க குழந்தைகளைத் தூங்க வைங்க’’ என்று தொடங்கி ``சும்மாதான இருக்கீங்க துணி மடிங்க’’ என்று நாள் முழுவதும் இந்த சும்மா என்கிற வார்த்தையை ஓயாமல் சொல்ல ஆரம்பித்துவிட்டார்.

மேலும் ஒட்டடை அடிக்க, குப்பை கொட்ட என்று சகலத்துக்கும் இப்போது நான்தான். முன்பாவது இருவரும் பகிர்ந்து வேலைகளைச் செய்வோம். இப்போது முழு நேரமும் நான்தான்... அதனால் ``ஆபீஸ் எப்ப சார் திறப்பீங்க’’ என்று தல-தளபதி பட ரிலீஸ் தேதிபோல் எதிர்பார்ப்பை ஏற்படுத்திவிடுகிறார்கள்.

பகல் தூக்கம் போடுவது பேஷனாகிப்போன இக்காலத்தில்கூட கொஞ்சம் கண் அசந்தாலும் கிரீஸ்டப்பாவை எட்டி உதைப்பதுபோல் ``எந்திருங்க தொப்பை போட்டிடும்’’ என்று எழுப்பி விடுகிறார்.

தப்பித்தவறி சாதம் மீதமானால் நாமே சாப்பிட வேண்டுமென பணிக்கப்பட்டிருப்பதால் நேரம் தவறாமல் சாப்பிடுவது சிறப்பு.

#எதுக்கெல்லாம் சண்டை வரும்?

*மனைவியின் புதுப்புடவையையோ பேன்சியில் வாங்கிய புது ஜிமிக்கியையோ பாராட்டாமல் இருந்தால்.

*நாலு பேர் பாராட்டுவது போல் நல்லபடியா புதுப்புடவைக்கு நான் ப்ளீட் பிடித்துவிடாமல் சுருக்கமாய் இருந்தால்.

Representational Image
Representational Image
Harli Marten on Unsplash

*வீட்டுக்கு வரும்போது ஏன் லேட்டு என்று அம்மா கேட்டால் நலன் விசாரணை. அதுவே மனைவி கேட்டால் புலன் விசாரணை. அதுக்கு தக்க விளக்கம் கொடுக்கவில்லையெனில் அவ்வளவுதான்.

*அம்மாவை பத்தி சொல்லும்போது அமைதியாக இருக்கணும். அதை விட்டுவிட்டு ``நீ கொஞ்சம் அட்ஜஸ்ட் பண்ணிக்கோ’’ என்று சொல்லிவிட்டால்..

*மனைவி முன்னால் சைட்டடிப்பதும் மனைவிக்குத் தெரியாமல் மது அருந்துவதும்.

*ஆசையாக அயர்ன் பண்ணுங்க என்று சொன்னால் எனக்கு வேலை இருக்கு என்று போனால் வாலன்டியராக வலிய வந்து மாட்டுகிறோம் என்று அர்த்தம்.

*எதாச்சும் ஆர்வமாகச் சொல்ல வரும்போது ஆச்சர்ய ரியாக்‌ஷனுடன்தான் கேட்க வேண்டும்.

*தினசரி அவர்கள் போடும் கோலத்தைப் பாராட்ட வேண்டும். பக்கத்துப்போர்சனில் இருக்கும் பெண் போட்ட கோலத்தைத் தெரியாமல் பாராட்டுவது சோப்பு போடாமல் ஷேவ் செய்வதுபோல் கொடுமையானது. யார் கோலம் போட்டாரென தெரிந்து கொண்டு சொல்வது உத்தமம்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

#எங்கள் வீட்டில் எல்லா நாளும்

பழைய படத்தில் வரும் மியூசிக் மாதிரி மெலடியாக இருந்த வாழ்க்கை ஹோம் தியேட்டர் இசை மாதிரி தெறிக்க விடுகிறது இந்த விடுமுறையில்.

முதல்ல வாரத்துக்கு ஒரு முறை உப்புமா, அடுத்த லாக்டெளன்ல வாரம் இருமுறை, இப்ப மூணு நாலுமுறை கணக்கில்லாம போகுது. என்னம்மா நீங்க இப்பிடிப் பண்றீங்களேம்மா.

இந்த ப்ரிட்ஜில் வைத்த இட்லி மாவு கெட்டுப்போக வாய்ப்பில்ல ராஜா என்கிற மாதிரி நம்மைப்பார்த்து கேட்கும்... ஒரு மாமாங்கமாக அந்த மாவை வைத்துதோசை சுடுறீங்களே நியாயமாரே?

வீட்டில் யார் மேல் கோபம் இருந்தாலும் நம் மேல்தான் காட்டுவார்கள். அதை அவர்கள் வைக்கும் குழம்பு காட்டிக் கொடுத்திடும்.

Representational Image
Representational Image
Claudio_Scott from Pixabay

#வேலைனு சொல்வதில் வெள்ளைக்காரி

பேய் வர்றதை சில அறிகுறி மூலம் தெரிந்துகொள்வது மூலம் மனைவிக்கு கோபம் வருவதையும் சில பாத்திரங்களை உருட்டுதல், அதிகாலை மின்விசிறி அணைப்பதன் மூலம் தெரிந்து கொள்ளலாம்.

#அம்மாவுக்கும் மனைவிக்குமான சமாதான தூதுவரே ஆண்கள்தான்.

லாக்டெளனில் ஒரே வீட்டில் இருப்பதால் கொரொனா லிஸ்ட் மாதிரி பிரச்னை குறைவதே இல்லை.

என்னதான் சமாதானம் சொன்னாலும் பிஞ்சு போன செருப்புக்கு பின்னூசி குத்தினது போல கொஞ்சநாள்தான் வருது.

*ஆன்லைன் க்ளாஸ் நம்ம மொபைலில் இன்ஸ்டால் செய்துவிடுவது அவர்களின் ராசதந்திரங்களில் ஒன்று. Work from home-ஐ விட கொடுமையானது worksheet from home தான்.

``வீட்ல ஒரு காய்கறியும் இல்ல இங்கெல்லாம் ஆனை விலை விக்குது. உழவர் சந்தைக்கு ஒத்தையில் போய் வாங்கி வாங்க’’ என்று சொல்லும்போது எப்பப்பாரு என்னைய வச்சே டெஸ்ட் பண்ணு என்று சொல்லும் மைண்ட் வாய்ஸ்.

எதாச்சும் காமெடி பார்த்து சிரித்துக்கொண்டிருக்கும்போது சட்டென்று ஒரு கை சின்ன வெங்காயத்தை உரிக்க கொடுத்துட்றாங்க.

நாமே பைக் கழுவுற மாதிரி குழந்தையை கஷ்டப்பட்டு குளிப்பாட்டி விட்டாலும் அதிலும் மேனேஜர் மாதிரி குறை கண்டுபிடித்தால் எப்படி?

Representational Image
Representational Image
Mabel Amber from Pixabay

#சண்டைனு வந்திட்டா...

அனைத்து ராசி ஆண் அன்பர்களே இந்த லாக்டெளனில் மனைவியுடன் வாக்குவாதம் செய்வது பக்கவாதம் வருவது போல் பயங்கரமானது. முன்பு சண்டை வந்தால் அலுவலகம் சென்று மாலை வருவோம்.

கொஞ்சம் சண்டையோட நின்றுவிடும். ஆனால், இப்போது இருவரும் நேருக்கு நேர் பார்த்துக்கொள்வதால் என்ன சக்கர வியூகம் வகுத்தாலும் அவர்களின் உக்கர வியூகத்தைத் தடுக்க முடியவில்லை. ஏடிஎம் போறேன் என்று சொல்லி எஸ்கேப் ஆகவும் முடியாததால் செக்மேட்தான் வீட்டில்.

தப்பித்தவறி சண்டை வந்தால் மனைவிகளின் டெம்ப்ளேட் வசனங்கள்...

*நான் ஒருத்தி இருக்கிறதால் எல்லாத்தையும் சகிச்சிட்டு வாழறேன். வேற ஒருத்தியா இருந்தா எப்பவோ ஓடிப்போயிருப்பா.

*நான் என்ன மத்தவங்க மாதிரி புடவை, நகையெல்லாம் வேணும்னா கேட்கிறேன். சிவனேனு நான் உண்டு வேலை உண்டுனு இருக்கிறேன்.

*போய்ப் பாருங்க ஊர்ல உலகத்தில எப்பிடியெல்லாம் புருஷன் பொண்டாட்டிய பார்த்துக்கிறான்னு.

*எத்தனை மாப்பிள்ளை வந்தாங்க என் கெரகம் இங்க வாக்கப்படணும்னு தலையில எழுதியிருக்கு.

Representational Image
Representational Image
Becca Tapert on Unsplash

*அப்படியே சில சமயம் அம்மிக்கல்ல எடுத்து உங்க மண்டைல போட்டுட்டு போயிடலாம்னு தோனும். இந்தக் குழந்தைக அநாதை ஆயிடக் கூடாதேனு பார்க்கிறேன்.

*நான் என்ன உனக்கும் உங்க அம்மாவுக்கும் வேலைக்காரியா

என இதுபோன்ற எவர்கிரீன் வசனங்கள் ஒவ்வொரு சண்டையிலும் இடம் பெறும்.

#இயல்பு நிலை திரும்பும்

எல்லா சண்டையிலும் கணவனின் ஒரு sorryயும், தவறுணர்ந்து கேட்கும் தார்மிக மன்னிப்பும்தான் மிடில்க்ளாஸ் தம்பதிகளை கோர்ட் படியேறாமல் வைத்திருக்கிறது. மூன்று நாள் பேசாமல் வீராப்பு காட்டும் இருவரும் நான்காம் நாள் நடப்பதெல்லாமே சிரிச்சா போச்சு ரவுண்ட்தான்.

தம் கட்டி சிரிப்பை அடக்குவதும், அதென்ன அவ்லோ திமிர்னு மனைவி சொல்லும்போது அடிபணிவதும்தான் வாழ்வியல் அழகு.

அதற்குப் பின் அந்தச் சுவடே இல்லாமல் எப்போதும் போல் இருப்பதே நல்ல நட்பு. சண்டை போடச் செய்யும் வார்த்தைகளை விட சமாதானம் செய்யும் வார்த்தைகளைச் சொல்வதில் இருக்கு ஆண்களின் மொழிவளம். மண வாழ்க்கை வெற்றியடைய இருவர் தேவை; தோல்வியடைய ஒருவர் போதுமென சொல்வார்கள். இருவரின் பரஸ்பர சண்டைகளும் சமாதானங்களும்தான் சுவை குன்றாமல் வாழ்க்கையை நகர்த்துகிறது.

- மணிகண்டபிரபு

விகடனில் உங்களுக்கென ஒரு பக்கம்...

உங்கள் படைப்புகளைச் சமர்ப்பிக்க இங்கே க்ளிக் செய்க https://www.vikatan.com/special/myvikatan/

My Vikatan
My Vikatan

ஏதோ ஓர் ஊரில், எங்கோ ஒரு தெருவில் நடந்த ஒரு விஷயம்தான் உலகம் முழுக்க வைரலாகிறது. உங்களைச் சுற்றியும் அப்படியொரு வைரல் சம்பவம் நடந்திருக்கலாம்... நடந்துகொண்டிருக்கலாம்... நடக்கலாம்..! அதை உலகுக்குச் சொல்வதற்காகக் களம் அமைத்துக் கொடுக்கிறது #MyVikatan. இந்த எல்லையற்ற இணையவெளியில் நீங்கள் செய்தி, படம், வீடியோ, கட்டுரை, கதை, கவிதை என என்ன வேண்டுமானாலும் எழுதலாம். மீம்ஸ், ஓவியம் என எல்லாத் திறமைகளையும் வெளிப்படுத்தலாம்.

உங்கள் படைப்புகளைச் சமர்ப்பிக்க இங்கே க்ளிக் செய்க https://www.vikatan.com/special/myvikatan/

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு