Published:Updated:

நவோதயா பள்ளிகள் தமிழகத்துக்குள் வருவதில் இருக்கும் சிக்கல்கள்..! - வாசகர் பார்வை #MyVikatan

School Student
School Student ( Husniati Salma on Unsplash )

தமிழகத்தில் இந்தித் திணிப்பு கூடாது என்பதில் மாற்றுக்கருத்து இல்லை. ஆனால்...

பொறுப்புத் துறப்பு: இந்தக் கட்டுரை வாசகரின் படைப்பு. கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்களுக்கும் கருத்துகளுக்கும் அதன் ஆசிரியரே பொறுப்பாவார். கட்டுரை சம்பந்தமாக உங்களுக்கு ஆட்சேபனை இருந்தால், my@vikatan.com-க்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்!

படிப்பு என்பதே வயிற்றுச்சோற்றுக்கு வழியில்லாதவர்கள் மாதச் சம்பளத்துக்கு வழி தேடிக்கொள்ளும் முயற்சி
ஜெயகாந்தன்

சமீபத்தில் வெளியான NSO (National statistical office) அறிக்கையின்படி இந்தியக் குடும்பங்கள் ஒவ்வொரு ஆண்டும் குழந்தையின் கல்விக்காக ரூ. 25,000 கோடி செலவு செய்வதாக கூறியுள்ளது. இது மத்திய பட்ஜெட்டில் மூன்றில் ஒரு பங்கு ஆகும். 2017-18-ம் ஆண்டு ஆய்வின்படி கிராமப்புறங்களில் 38% பேர் மேல்நிலைக் கல்வி முடிக்கின்றனர்.

டிஜிட்டல் கல்வியில் நகரத்தில் 23%, கிராமத்தில் 4% பேரும், கிராமப் புறங்களில் அரசுப் பள்ளிகளை நாடுவோர் 76% பேரும், நகரத்தில் 38% பேரும் பயில்கின்றனர்.

School Student
School Student
Church of the King on Unsplash

1986-ம் ஆண்டு ஏற்படுத்தப்பட்ட புதிய கல்விக் கொள்கையில், தான் படித்த டேராடூன் பள்ளி போல் உண்டு, உறைவிடப் பள்ளி போல இருக்க வேண்டும் என நினைத்த பிரதமர் ராஜீவ் காந்தியின் முயற்சியால் ஒவ்வொரு மாவட்டத்துக்கும், ஒரு நவோதயா பள்ளி (பின்னர் ஜவஹர் எனும் பெயர் சேர்த்து ஜவஹர் நவோதயா வித்யாலயமாய் மாறியது) என்ற அடிப்படையில் தமிழகம் நீங்கலாக, நாடு முழுவதும் 636 உண்டு உறைவிட நவோதயா பள்ளிகள், 8 மண்டலங்களில் இயங்கி வருகின்றன.

தமிழகத்தைத் தவிர அனைத்து மாநிலங்களிலும் வெற்றிகரமாக செயல்பட்டு வருகிறது.

பாட்டு புக், டேப் ரெக்கார்டர்..! - சினிமா உலகின் எவர் கிரீன் காலகட்டம் `1980s’ #MyVikatan

ஜவஹர் நவோதயா வித்யாலயா

இந்தியாவில் முதல் ஜவஹர் நவோதயா பள்ளி, மகாராஷ்டிர மாநிலத்தில் உள்ள `அமராவதி’ மற்றும் ஹரியானா மாநிலம் ஜஜ்ஜார் என்னுமிடத்தில் நிறுவப்பட்டது.

சி.பி.எஸ்.இ பாடத்திட்டத்தை அடிப்படையாகக் கொண்டு, ஆறாம் வகுப்பு முதல் பன்னிரண்டாம் வகுப்பு வரையிலான உண்டு உறைவிடப் பள்ளிகளாக (Residential School) செயல்படுகின்றன. ஐந்தாம் வகுப்பின் இறுதியில் விண்ணப்பித்து, நுழைவுத் தேர்வின் அடிப்படையில் 6,11-ம் வகுப்பிற்கு சேர்க்கை நடைபெறும். பள்ளிக்கான ஐந்து ஏக்கர் நிலத்தினை அந்தந்த மாநில அரசு ஏற்படுத்தித் தர வேண்டும்.

75% கிராமப்புற மாணவர்களுக்கும், 25% நகர்ப்புற மாணவர்களுக்கும் இட ஒதுக்கீடு வழங்கப்பட்டுள்ளது. இதில் 33% பெண்களுக்கும், மாற்றுத்திறனாளிக்கு 3.5% இட ஒதுக்கீடும், தாழ்த்தப்பட்ட பிரிவைச் சேர்ந்த மாணவர்களுக்கு 22.5% வகுப்புவாரியாகயும், தற்போது ஓபிசி பிரிவினருக்கும் 27% இடஒதுக்கீடு உள்ளது.

School Student
School Student
Nikhita S on Unsplash

இந்தி, ஆங்கிலம், மாநில மொழி என மும்மொழிக் கொள்கை போதிக்கப்படுகின்றன.11 மற்றும் 12-ம் வகுப்புகளில் இந்தி, ஆங்கில மொழிகளில் மட்டுமே பாடங்கள் பயிற்றுவிக்கப்படும். பள்ளிக் கட்டணம் மிகக்குறைவு என்பதால் பெற்றோரின் முதல் விருப்பம் இதுவாகும். உண்டு உறைவிடப் பள்ளி என்பதால் உணவுக்கட்டணம் இலவசம். கேந்திரியா வித்யாலயாவில் மாநில மொழிக்கு கொடுக்கும் முன்னுரிமையை விட நவோதயாவில் முன்னுரிமை அதிகம்.

கடந்த ஆண்டு தேர்ச்சி சதவீதத்திலும் கே.வி-யை விட நவோதயா கூடுதலாய் தேர்ச்சி பெற்றுள்ளது.

ப்ளஸ்..


*வகுப்புக்கு இரு பிரிவுகள் மட்டுமே. ஒவ்வொரு பிரிவிலும் 40 மாணவர்கள் ஒரு வகுப்பில் 80 மாணவர்கள் படிப்பார்கள்.


*ஒவ்வொரு பள்ளிக்கும் 30 ஏக்கர் நிலத்தை மாநில அரசு ஒதுக்க வேண்டும்.


*ஒரு மாணவருக்கு ஒரு ஆண்டிற்கு சுமார் ரூ.70,000 முதல் 80,000 வரை என்ற அளவில், தமிழகத்திற்கு சுமார் ரூ.600 கோடிக்கும் மேல் நிதி அளித்து, 38 மாவட்டங்களில் மத்திய அரசு நவோதயா பள்ளிகளை அமைக்கும்.


* கட்டடம், உண்டு-உறைவிடம், ஆசிரியர்களின் சம்பளம் உள்ளிட்ட அனைத்தையும் மத்திய அரசு ஏற்றுக்கொள்கிறது.

School student
School student
Husniati Salma on Unsplash


* 6 ஆம் வகுப்பிலிருந்து 10ஆம் வகுப்பு வரை தமிழில் படித்துக் கொள்ளலாம். விரும்பினால் சமூக அறிவியல் மற்றும் அறிவியல் பாடங்களை இந்தியில் படிக்கலாம்.

* 11, 12 ஆம் வகுப்புகளில் ஆங்கிலம்தான் பயிற்றுமொழி, இந்தி கட்டாயப் பாடமாக இருந்தாலும் பள்ளி முதல்வரின் தீர்மானத்தின் படி மாணவர்களுக்கு இந்தி பரிபூரணமாகத் தெரியும் வரை ஆங்கிலமே பயிற்றுமொழியாக இருக்கும்.

* கேரளா, ஆந்திரா போன்ற இந்தி பேசாத மாநிலங்களில் பிராந்திய மொழி முதன்மைப் பாடமாகவும், ஆங்கிலம் இரண்டாம் மொழிப் பாடமாகவும், இந்தி மூன்றாம் மொழிப்பாடமாகவும் வைக்கப்பட்டுள்ளது.

* 9 முதல் 12-ம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்களிடம் குறைந்தபட்சக் கட்டணமாக 600 ரூபாய் பெறப்படுகிறது. பழங்குடியினர், தாழ்த்தப்பட்டோர், பெண்கள், வறுமைக்கோட்டுக்குக் கீழ் உள்ளோர் இந்தக் கட்டணத்தைச் செலுத்த வேண்டியதில்லை.

* அரசு ஊழியர்களின் பிள்ளைகள் எனில், மாதந்தோறும் ரூபாய் 1,500 அல்லது அவர்கள் பணிபுரியும் நிறுவனத்தில் பெறுகிற குழந்தைகள் கல்வி உதவித் தொகை இவற்றில் எது குறைவானதோ அது வசூலிக்கப்படும்

* நவோதயா பள்ளியைச் செயல்படுத்த மாவட்ட ஆட்சியர், மத்திய அரசின் பிரதிநிதி, பெற்றோர், அந்த ஊரின் முக்கியமான நபர்கள் உள்ளிட்ட ஒரு குழு அமைக்கப்படும். அந்தக் குழுவின் வழிகாட்டலின்படியே பள்ளி இயங்கும்.

நவோதயா பள்ளிகளை தமிழகத்தில் ஏன் எதிர்க்கிறார்கள்? #DoubtOfCommonMan

ஏன் கூடாது?

தமிழகத்தில் இந்தி திணிப்புக் கூடாது என்பதில் மாற்றுக்கருத்து இல்லை. ஆனால், விருப்பப் பாடமாய் படிக்க CBSE, Matric, Kendriya Vidyalaya பள்ளிகளில் இருக்கிறபோது நவோதயா பள்ளிகள் வந்தால், தமிழ் மொழி அழியும் என நினைப்பது சரியல்ல. ஒரு நவோதயா பள்ளியில் ஒரு வகுப்புக்கு 80 பேர் என்றால், 6 முதல் 12-ம் வகுப்பு வரை 560 பேர் படிக்கலாம். தமிழ்நாட்டில் 38 மாவட்டங்களுக்கும் என்றால், 21,280 மாணவர்கள் பலன் அடைவார்கள்.

மாநில அரசுக்கு நிதிச்சுமை இல்லாமல் இத்தனை மாணவர்களுக்கு பலன் கிடைப்பது மகிழ்ச்சிதானே.

School
School

நவோதயா பள்ளிகளில் பயின்ற பலர் மருத்துவ நுழைவுத்தேர்வில் வெற்றி பெற்றிருப்பது குறிப்பிடத்தக்கது.

34 வருடங்கள் முடிந்துள்ள நிலையில், இனியும் பழைய காரணம் சொல்வதை புதிய தலைமுறையினர் ஏற்க மறுக்கின்றனர். மத்திய அரசின் எல்லாத் திட்டங்களையும் எதிர்ப்பது நியாயமல்ல. மாற்றத்தை முன்னெடுக்கும் கேரளாவில் நவோதயா பள்ளி உள்ளது. அங்கு, அவர்கள் மலையாளத்தை மறந்துவிடவில்லை, அழித்துவிடவும் இல்லை.

`மொழி தான் பிரச்சனையெனில் தனியார் பள்ளிகளில் இரு மொழிக்கொள்கையை தளர்த்திய அரசு, நவோதயா பள்ளிகளை ஆரம்பிக்க தயக்கம் ஏன்?’ என மதுரை உயர் நீதிமன்றக் கிளை கேள்வி எழுப்பியது குறிப்பிடத்தக்கது. நவோதயா பள்ளிகள் தமிழகத்தில் கொண்டுவரப்பட்டால் அரசுப் பள்ளிகள் செயலிழக்கும் என்பது கற்பனாவாதம். நவோதயா பள்ளிகளை எதிர்ப்பதன் மூலம் தனியார் பள்ளிகளுக்கு உதவி புரிகிறதா என சாமானியன் கேட்கும் கேள்விக்கு பதில் இல்லை.

#நவோதயா பள்ளிகள் எதிர்க்கக் காரணம்

* நுழைவுத் தேர்வு மூலம் சேர்க்கை நடைபெறுவதால் அனைத்து மாணவர்க்கும் சமமான வாய்ப்பு கிடைக்காது.


* அனைவருக்கும் கல்வி என இல்லாமல் குறிப்பிட்டவர்க்கு மட்டும் நவோதயா கல்வி அமையும்.


* மாநில சுயாட்சியில் மத்திய அரசு தலையிடுவதாகக் கூறப்படுகிறது.

* இந்தி கட்டாயம் என்பதை எதிர்க்கிறார்கள்.


* பொதுக்கல்வி முறை இல்லாது போகும். கல்வியில் ஏற்றத்தாழ்வுகள் அதிகமாகும்.

புதுச்சேரியில் உள்ள நவோதயா பள்ளி..
புதுச்சேரியில் உள்ள நவோதயா பள்ளி..
Kuruz_Dhanam.A

* இத்தனை தொகையை மத்திய அரசு ஒரே பள்ளிக்கு ஒதுக்காமல் அனைத்து அரசுப் பள்ளிகளுக்கும் ஒதுக்கினால் எல்லாப் பள்ளிகளும் நவோதயா பள்ளிகள் போல மிளிருமே என்பது கல்வியாளர்கள் வாதம்.

புதுச்சேரியில் உள்ள நவோதயா பள்ளியில் தமிழ்தான் முதன்மைப் பாடமாகவும் இந்தி விருப்பப்பாடமாகவும் உள்ளது. சம்ஸ்கிருதம் இல்லை.

நவோதயா பள்ளியை முன்வைத்து மாவட்டம் முழுவதும் கல்வி கற்பதில் ஒரு போட்டி மனப்பான்மை வரும். ஆகவே, மொழிப் பிரச்னை இல்லை என்பது கண்கூடாகத் தெரிகிறது. கல்வியை மாநிலப் பட்டியலுக்கு கொண்டு வந்து மாநிலத்திற்கு ஏற்ப கல்வி முறை, பள்ளிகளை வகுக்க முயல வேண்டும் அல்லது அதுவரும் வரை நவோதயா போன்ற வாய்ப்புகளைப் பயன்படுத்தி திறமையுள்ள மாணவ, மாணவியருக்கு கிடைக்க வழிவகை செய்ய வேண்டும். எல்லாவற்றையும் எளிதாய் எடுத்துக் கொள்வது அத்தனை எளிதல்ல ஏழைகளுக்கு.!

-ராணி பிரியதர்ஷிகா

விகடனில் உங்களுக்கென ஒரு பக்கம்...

உங்கள் படைப்புகளைச் சமர்ப்பிக்க இங்கே க்ளிக் செய்க https://www.vikatan.com/special/myvikatan/

My Vikatan
My Vikatan

ஏதோ ஓர் ஊரில், எங்கோ ஒரு தெருவில் நடந்த ஒரு விஷயம்தான் உலகம் முழுக்க வைரலாகிறது. உங்களைச் சுற்றியும் அப்படியொரு வைரல் சம்பவம் நடந்திருக்கலாம்... நடந்துகொண்டிருக்கலாம்... நடக்கலாம்..! அதை உலகுக்குச் சொல்வதற்காகக் களம் அமைத்துக் கொடுக்கிறது #MyVikatan. இந்த எல்லையற்ற இணையவெளியில் நீங்கள் செய்தி, படம், வீடியோ, கட்டுரை, கதை, கவிதை என என்ன வேண்டுமானாலும் எழுதலாம். மீம்ஸ், ஓவியம் என எல்லாத் திறமைகளையும் வெளிப்படுத்தலாம்.

உங்கள் படைப்புகளைச் சமர்ப்பிக்க இங்கே க்ளிக் செய்க https://www.vikatan.com/special/myvikatan/

அடுத்த கட்டுரைக்கு