Published:Updated:

மேல்நிலை வகுப்பு மாணவர்களுக்கு மட்டும் ஏன் தியாக வாழ்வு? #Parenting #MyVikatan

Representational Image
Representational Image ( Vikatan Team )

ஒருவர் தன் பத்து மற்றும் பன்னிரண்டாம் வகுப்புகளில் தனக்கு விருப்பமான வேறு எந்த விதமான செயல்களிலும் ஈடுபடாமல் படித்து ஒரு குறிப்பிட்ட துறைக்கான கல்லூரியில் சேருகிறார் என்றே வைத்துக்கொள்ளுங்கள்...

பொறுப்புத் துறப்பு : இந்தக் கட்டுரை வாசகரின் படைப்பு. கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்களுக்கும் கருத்துகளுக்கும் அதன் ஆசிரியரே பொறுப்பாவார். கட்டுரை சம்பந்தமாக உங்களுக்கு ஆட்சேபனை இருந்தால், my@vikatan.com-க்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்.

பன்னிரண்டாம் வகுப்பு, பத்தாம் வகுப்பு பயிலும் பிள்ளைகளின் பெற்றோர்கள், வீடுகள் விசித்திரமானவை. ஒன்பதாம் வகுப்பிலேயே அறிவுரை தொடங்கிவிடும். தொலைக்காட்சி பெட்டிகள் அணைக்கப்பட்டு இணைப்புகள் துண்டிக்கப்படும். தெருவில் விளையாடும் பக்கத்து வீட்டுப் பிள்ளைகள் சத்தம் போடக் கூடாதென்று அறிவுறுத்தப்படுவர்.

பாடம் படிப்பது தவிர மற்ற செயல்கள் நேர விரயமாய் பார்க்கப்படும். உறங்கலாம், உண்ணலாம், இயற்கை உபாதைகளைக் கழிக்காலம் என்பது தவிர மற்றபடி பெரிதாக வேலை எதுவும் இருக்காது. நன்றாக விளையாடிக் கொண்டிருந்த விளையாட்டுக்குத் தடை. பிடித்த நிகழ்ச்சியை தொலைக் காட்சியில் காண முடியாது. காலாற நடந்து வர முடியாது. நண்பர்களுடன் அளவளாவ முடியாது. உறவினர் வீட்டுக்கெல்லாம் ... ம்ஹும். போனாலும் பத்து அல்லது பன்னிரண்டாம் வகுப்பில் மார்க் எடுத்தால்தான் வாழ்க்கை என்று அறிவுரை கூறி சங்கோஜப்படுத்துவார்கள்.

Representational Image
Representational Image
Vikatan Team

பிடித்த புத்தகம் படிக்க முடியாது. சில பெற்றோர்கள் விடுப்பு எடுத்து ஒன்று அல்லது இரண்டு வருடங்கள் தம் பிள்ளைகளின் பள்ளிக்கு அருகிலேயே வீடு மாற்றிச் சென்ற நிகழ்வுகளும் நீங்கள் அறிந்ததுதான். ஒரு சிலர் இன்னும் ஒரு படி மேலே போய் வீ.ஆர்.எஸ் வாங்கிய நிகழ்வுகளும் நடந்தது உண்டு. இவற்றின் உச்சக்கட்டமாய் பதினோராம், பன்னிரண்டாம் வகுப்புகள் மட்டும் கொண்ட விடுதியுடன்கூடிய அறவைப் பள்ளிக்கூடங்கள் இருந்தன. அங்கு காலை, மாலை இரு நேர தேர்வுகள், இரவு மற்றும் அதிகாலை நேர "study hours". அறவை இயந்திரம் போல படித்ததையே திரும்பத் திரும்ப அரைத்துக்கொண்டே இருக்க வேண்டியதுதான் ஒரே வேலை.

இப்படியான நிகழ்வுகளில் நாம் கவனிக்க வேண்டியது ஒருவர் தன் வாழ்கையில் ஒரு குறுகிய காலத்தில் தன் எல்லா வித செயல்களையும் தியாகம் செய்து ஒரு குறிப்பிட்ட செயலை மட்டுமே மேற்கொண்டு அதில் வெற்றி காண்பது உண்மையான வெற்றியா? அப்படியானால் அவர் தனக்கான மற்ற செயல்பாடுகளில் பின் தங்கிவிட்டாரென்று கொள்ளலாமா.

ஒருவர் தன் பத்து மற்றும் பன்னிரண்டாம் வகுப்புகளில் தனக்கு விருப்பமான வேறு எந்த விதமான செயல்களிலும் ஈடுபடாமல் படித்து ஒரு குறிப்பிட்ட துறைக்கான கல்லூரியில் சேருகிறார் என்றே வைத்துக்கொள்ளுங்கள். அப்படியான கடின உழைப்பின் மூலம் சேரும் பாடத் திட்டத்தை படிக்கவும் அவர் அதே அளவு உழைப்பை, நேரத்தை முதலீடு செய்ய வேண்டிய நிலைக்கு தள்ளப்படுவார். அதாவது, எப்படி தன் பள்ளி இறுதி வகுப்புகளில் மற்ற எல்லா இயல்பான மற்றும் விருப்பமான செயல்களை விட்டு கடுமையாகப் படித்து ஒரு குறிப்பிட்ட துறைக்கான கல்லூரியில் சேர்ந்தாரோ அதே மாதிரியான துறவு நிலையை அக்கல்லூரியிலும் மேற்கொண்டால்தான் அவரால் சிறப்பாக படித்து முடிக்க முடியும்.

Representational Image
Representational Image
Vikatan Team

முக்கியமாக அதிகம் படிக்க வேண்டிய மருத்துவத்துறைக்கு இது மிகப் பொருந்தும். ஒருவர் ஒரு குறிப்பிட்ட செயலில் (எடுத்துக்காட்டாக பத்து, பன்னிரண்டாம் வகுப்புகளில் படிப்பில் மட்டுமே கவனம் செலுத்துவது) மட்டுமே முழு கவனத்தை செலுத்துவதை ஒரு வருடம் செய்யலாம், இரண்டு வருடம் செய்யலாம். வாழ்நாள் அல்லது கல்லூரி படிக்கும் காலம் முழுக்க செய்ய முடியுமா?

அவ்வாறு மற்ற எல்லா செயல்களிலும் ஈடுபடாமல் ஒரு குறிப்பிட்ட செயலில் மட்டுமே ஈடுபட்டு ஒருவர் பெறும் வெற்றி உண்மையில் அவருடைய உண்மை வெற்றியா?

`ரூ.1,500தான் செலவு..கேமரா; நோயாளிகளுக்குப் பொருள்கள்!’- தூத்துக்குடி மாணவர் வடிவமைத்த அசத்தல் கருவி

அன்றாடம் ஒரு மாணவன் செய்யக்கூடிய செயல்களான நிம்மதியான உறக்கம், நண்பர்களுடன் கூடி பேசுதல், விளையாட்டு, பத்திரிகை அல்லது வேறு பிடித்த புத்தகம் படித்தல், அவ்வப்போது நண்பர் அல்லது உறவினர் வீடுகளுக்கு செல்வது போன்ற அன்றாட செயல்களையும் செய்துகொண்டு ஒருவர் படித்து எடுக்கும் மதிப்பெண்தான் அவரின் உண்மையான மதிப்பெண். கல்வி என்பது சீரான தொடர் நிகழ்வு.

Representational Image
Representational Image
Vikatan Team

திடீரென்று பள்ளி வாழ்க்கையின் கடைசி வருடங்கள் எந்திரம் போல படித்து எடுக்கும் மதிப்பெண் பரிட்சையில் ஜெயிக்கவும், கல்லூரியை, துறையை தேர்ந்தெடுக்கவும் உதவும். வாழ்க்கைக்கு உதவுமா. இதனாலேயே கல்லூரி வந்ததும் பள்ளியில் நன்றாகப் படித்த முதல் மாணவர்கள் அரியர் வைப்பது போன்ற நிகழ்வுகள் நடக்கிறது. இயந்திரம் போல ஒரு குறிப்பிட்ட செயலை ஒன்றிரண்டு வருடங்கள் செய்து வெற்றி காண்பது சொன்னதை சொல்லும் கிளிப்பிள்ளைக்கு ஒப்பானதன்றோ. மனிதர் சொன்னதை பல முயற்சிக்குப் பின் கிளியானது சொல்லிவிடலாம் ஆனால், அது மனித பேசும் திறனுக்கு ஈடானதா? சிந்திப்பீர் .

- ராம்குமார்

விகடனில் உங்களுக்கென ஒரு பக்கம்...

உங்கள் படைப்புகளைச் சமர்ப்பிக்க இங்கே க்ளிக் செய்க https://www.vikatan.com/special/myvikatan/

My Vikatan
My Vikatan

ஏதோ ஓர் ஊரில், எங்கோ ஒரு தெருவில் நடந்த ஒரு விஷயம்தான் உலகம் முழுக்க வைரலாகிறது. உங்களைச் சுற்றியும் அப்படியொரு வைரல் சம்பவம் நடந்திருக்கலாம்... நடந்துகொண்டிருக்கலாம்... நடக்கலாம்..! அதை உலகுக்குச் சொல்வதற்காகக் களம் அமைத்துக் கொடுக்கிறது #MyVikatan. இந்த எல்லையற்ற இணையவெளியில் நீங்கள் செய்தி, படம், வீடியோ, கட்டுரை, கதை, கவிதை என என்ன வேண்டுமானாலும் எழுதலாம். மீம்ஸ், ஓவியம் என எல்லாத் திறமைகளையும் வெளிப்படுத்தலாம்.

உங்கள் படைப்புகளைச் சமர்ப்பிக்க இங்கே க்ளிக் செய்க https://www.vikatan.com/special/myvikatan/

அடுத்த கட்டுரைக்கு