Published:Updated:

வரவேற்ற காஞ்சி சாலையும்... வஞ்சிர மீனும்! #MyVikatan

மீன் பிடிக்கும் சிறுவர்கள்
மீன் பிடிக்கும் சிறுவர்கள்

துள்ளி வந்த மீன்களை அள்ளிப் பிடிக்க ஆவல் கொள்கிறார்கள், அந்த வாண்டுப் பிள்ளைகள்.

பொறுப்புத் துறப்பு : இந்தக் கட்டுரை வாசகரின் படைப்பு. கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்களுக்கும் கருத்துகளுக்கும் அதன் ஆசிரியரே பொறுப்பாவார். கட்டுரை சம்பந்தமாக உங்களுக்கு ஆட்சேபனை இருந்தால், my@vikatan.com-க்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்.

காஞ்சிபுரம் மாவட்டம், சுங்குவார்சத்திரத்தில் இருந்து சென்னையை நோக்கி பைக்கில் சென்றுகொண்டிருந்தேன். எப்போதும் பரபரக்கும் சாலை, என் வரவேற்புக்காக வெறிச்சோடி காத்திருந்தது. ஊரடங்கில், `ராஜ மரியாதை’ கிடைத்த சந்தோஷத்தில், இயற்கையை ரசித்தபடியே ஹாயாக பைக்கை ஓட்டிச் சென்றேன்.

மீன் பிடிக்கும் சிறுவர்கள்
மீன் பிடிக்கும் சிறுவர்கள்

ஸ்ரீபெரும்புதூருக்கு முன் மாம்பாக்கம் என்ற கிராமம் வந்தது. பெயர் பலகையைப் பார்த்ததும் `மாம்பழ’ ஊரோ என்று மனதுக்குள் நக்கலடித்துக்கொண்டே ஊரைக் கடக்க முற்பட்டேன். சில்லென்ற காற்று வீசியது. சலசலவென தண்ணீர் ஓடும் சப்தம். ஒரே ஆச்சர்யம். பைக்கை நிறுத்திவிட்டுத் திரும்பிப் பார்த்தேன்.

ஏரியின் வடிகாலைத் தாண்டி தண்ணீர் பெருக்கெடுத்து ஓடிக்கொண்டிருந்தது. `வருண பகவான் கொட்டித் தீர்த்துவிட்டாரே’ என்று நினைத்துக்கொண்டே பாய்ந்தோடும் தண்ணீரில் விளையாடிக்கொண்டிருந்த வாண்டுப் பிள்ளைகளை ரசித்தேன். அவர்களின் சின்னச் சின்ன குறும்புகள் கண்களுக்கு விருந்தாக அமைந்தது.

மீன் பிடிக்கும் சிறுவர்கள்
மீன் பிடிக்கும் சிறுவர்கள்

இன்னும் சில பிள்ளைகளோ, துணிகளை விரித்து மீன் பிடித்துக் கொண்டிருந்தனர். அந்தக் குழந்தைகள் ஆழ்கடலில் வலை விரித்த நம்பிக்கையில் இருந்தார்கள். நானும் ஆர்வ மிகுதியில் அருகில் சென்று உதவி செய்ய பார்த்தேன். அப்போதுதான் தெரிந்தது, அவர்களும் என்னைப் போன்ற வழிப்போக்கர்களின் குழந்தைகள் என்று..!

ஆர்ப்பரிக்கும் தண்ணீரில் குடும்பத்துடன் கும்மாளமிட்டுக் கொண்டிருந்தனர். அதே பகுதிக்ச் சேர்ந்த குமார் என்பவரும் அன்றைய சமையலுக்காக மீன்பிடி வலையுடன் வந்திருந்தார். போர் அடித்ததால், அவரிடம் பேச்சுக் கொடுத்தேன். கலகலப்பாகப் பேசத் தொடங்கிய அவர்...

மீன் பிடிக்கும் சிறுவர்கள்
மீன் பிடிக்கும் சிறுவர்கள்

``இது ஏரி மீனுங்க... சுற்றுவட்டாரத்தில் நிறைய கிராமம் இருக்கு. எல்லா கிராமத்திலும் பெரிய பெரிய ஏரி இருக்கு. இப்ப வந்த மழைக்குத்தான் ஏரி நிரம்பியிருக்கு. இந்த ஏரி மீனை பிடிச்சிகிட்டுப் போய் பொண்டாட்டி கையால குழம்பு வச்சி சாப்பிட்டா அவ்வளவு ருசியா இருக்கும்’’ என்று பேசிக்கொண்டே 5 கிலோவுக்கும் அதிகமான மீன்களைப் பிடித்துவிட்டார்.

மீன் குழம்பு கதையை அவர் சொல்லச் சொல்ல என் நாக்கு தாண்டவமாடியது. அந்த நபர் மட்டும் சொந்தக்காரனாக இருந்திருந்தால், மீனைப் பிடித்த கையோடு நானும் அவர் வீட்டுக்கே போயிருப்பேன். ஏரியில் இன்னும் நிறைய பேர் இருந்தாங்க. `ஏலேலோ ஐலசா... ஏரி மீன் ஐலசா... வளையப்பிடி ஐலசா... வஞ்சிரம் சிக்கும் ஐலசா’ என்று கோரசாகப் பாட்டுப்பாடி எச்சில் ஊற வைத்தனர்.

மீன்பிடி
மீன்பிடி

சரி, நேரம் ஆச்சி ஊருக்குப் புறப்படலாம் என்று தண்ணீரில் கால் நனைத்தபோது வாண்டுப் பிள்ளைகள் விரித்திருந்த துணியிலும் `விலாங்கு மீன்’ சிக்கியது. உற்சாகத்தில் கூக்குரலிட்ட குழந்தைகளைப் பார்த்த ரோந்து போலீஸார், `எங்களுக்கும் மீன் தருவீங்களா’ன்னு கடந்து சென்றனர். நானும் அங்கிருந்து நடையைக் கட்டி பைக்கில் புறப்பட்டேன்.

- சி.அ.அய்யப்பன்

விகடனில் உங்களுக்கென ஒரு பக்கம்...

உங்கள் படைப்புகளைச் சமர்ப்பிக்க இங்கே க்ளிக் செய்க https://www.vikatan.com/special/myvikatan/

My Vikatan
My Vikatan

ஏதோ ஓர் ஊரில், எங்கோ ஒரு தெருவில் நடந்த ஒரு விஷயம்தான் உலகம் முழுக்க வைரலாகிறது. உங்களைச் சுற்றியும் அப்படியொரு வைரல் சம்பவம் நடந்திருக்கலாம்... நடந்துகொண்டிருக்கலாம்... நடக்கலாம்..! அதை உலகுக்குச் சொல்வதற்காகக் களம் அமைத்துக் கொடுக்கிறது #MyVikatan. இந்த எல்லையற்ற இணையவெளியில் நீங்கள் செய்தி, படம், வீடியோ, கட்டுரை, கதை, கவிதை என என்ன வேண்டுமானாலும் எழுதலாம். மீம்ஸ், ஓவியம் என எல்லாத் திறமைகளையும் வெளிப்படுத்தலாம்.

உங்கள் படைப்புகளைச் சமர்ப்பிக்க இங்கே க்ளிக் செய்க https://www.vikatan.com/special/myvikatan/

அடுத்த கட்டுரைக்கு