Published:Updated:

இந்த 6 விஷயங்கள் உங்கள் வாழ்க்கையை மாற்றும்! -`Miracle Morning’ புத்தகக் குறிப்புகள் #MyVikatan

Representational Image
Representational Image ( Pixabay )

காலை ஆறு மணிக்குமேல் உறங்குவது என்பது இயல்பிலேயே உடலளவிலும், மனதளவிலும் சோர்வடைந்த மனிதர்களாக நம்மை மாற்றக்கூடியது...

நீங்கள் காலையில் சீக்கிரமாக விழித்துக் கொண்டால், உங்களுக்கு வெற்றிகரமான முழுநாள் காத்திருக்கிறது!
ராபின் ஷர்மா

ஒரு மனிதன் அதிகாலையில் எழுவதே வெற்றிக்கான முதல் தாரக மந்திரமாக இருக்கிறது.

மனிதர்களில் பலரும் வேலை நிமித்தமாக மட்டுமே அதிகாலையில் எழுந்து கொள்கிறார்கள். ஓய்வான நாட்களில் காலையில் நெடுநேரம் தூங்கும் வழக்கத்தையே பலரும் கொண்டிருக்கின்றனர். ஒரு சிலர் மட்டுமே அதிகாலையில் எழுந்து கொள்வதைத் தம் குறிக்கோளாகக் கருதுகின்றனர்.

Sun rise
Sun rise
Ashokkumar.D

வாழ்க்கையில் வெற்றியடைந்த மற்றும் தற்போது வெற்றியை நோக்கிப் பயணித்துக் கொண்டிருக்கும் மனிதர்களின் வாழ்க்கையை நாம் உற்றுநோக்கினால், அவர்கள் அனைவரும் அதிகாலையில் எழக்கூடிய பழக்கத்தைத் கைக் கொண்டவர்களாகவே இருப்பார்கள்!

காலை ஆறு மணிக்குமேல் உறங்குவது என்பது இயல்பிலேயே உடலளவிலும், மனதளவிலும் சோர்வடைந்த மனிதர்களாக நம்மை மாற்றக்கூடியது.

இரவு உறக்கத்திற்காகவும், பகல் பணிகளுக்காகவுமே படைக்கப்பட்டவை.

இயற்கையுடன் இணைந்த வாழ்வு மேற்கொண்டிருந்த நம் முன்னோர்கள் சூரியன் மறைந்த சில நாழிகைகளிலேயே உறங்கச் செல்வதை வழக்கமாகக் கொண்டிருந்தனர். அவ்வாறே அதிகாலையில் துயில் எழுவதை அவர்கள் ஒரு ஒழுக்கமாகவே கருதினர்.

அதிகாலையில் கண் விழிப்பதும், இரவு சீக்கிரமே படுக்கைக்குச் செல்வதும்தான் சிறந்ததொரு வாழ்க்கை முறையாகும்.

Representational Image
Representational Image
Pixabay

மனிதர்கள் காலங்காலமாக இந்த இயற்கை நியதியைப் பின்பற்றி வந்ததால்தான், மன அழுத்தம், ரத்த அழுத்தம், நீரழிவு உள்ளிட்ட இன்று பிரபலமாக உள்ள பல நோய்கள் அன்று பெரிய அளவில் இல்லாமல் இருந்தன.

இன்று பல மனிதர்கள் இரவில் நீண்ட நேரம் விழிக்கின்றனர். பகலில் நெடுநேரம் கழித்து எழுகின்றனர். இது வழக்கமாகி விட்டதால் நம் மூளையில் இருக்கும் மனசுழற்சிக் கடிகாரம் (Circadian Rhythms) இயற்கையின் விதிகளுக்குப் புறம்பாக மாறிவிட்டது. மனித உடல் நோய்களின் கூடாரமாகவும் மாறத் தொடங்கிவிட்டது.

அதிகாலையில் எழுவதன் பயன்கள்:

* உடற்பயிற்சி செய்யப் போதுமான நேரம் கிடைக்கும்.

* குடும்ப மற்றும் பணிச்சூழல் சார்ந்த மன அழுத்தம் குறையும்.

* மனிதர்களின் வளர்சிதை மாற்றம் சீராக இருக்கும்.

* மூளை சுறுசுறுப்பாக இயங்கும்.

சிந்திக்கும் திறன் மேம்படும்.

* ஜீரணத்தன்மை மேம்படும்.மேலும் சரியான நேரத்தில் பசி எடுக்கும்.

Representational Image
Representational Image
Pixabay

* மனிதனின் தன்னம்பிக்கையும், உற்சாகமும் அதிகரிக்கும்.

* எந்த ஒரு பணியையும் எளிதாகத் திட்டமிட முடியும்.

* காலையில் தூய்மையான ஆக்சிஜனைச் சுவாசித்தால் நுரையீரல் வலிமை அடையும்.

* உடலில் உள்ள கழிவுகள் எளிதாக வெளியேறும்.

* உடல் நலனுக்கு மட்டுமல்ல, மன நலனுக்கும் அதிகாலையில் எழுவது சிறந்தது.

ஆனால் அதிகாலையில் எழுந்தவுடன் செல்போனை எடுத்து வைத்துக் கொண்டு அமர்ந்துவிடுவதால் எந்தப் பயனும் ஏற்படப்போவது இல்லை.நம் உடல் மற்றும் மனநலன் மேம்பட சில பழக்கங்களை நாம் கைக்கொள்ள வேண்டும்.

"தி மிராக்கிள் மார்னிங்" கூறும் அதிகாலைப் பழக்கங்கள்:

நீங்கள் ஒரு சிறந்த நாளை விரும்பினால், ஒரு சிறந்த காலையுடன் தொடங்குங்கள் என்கிறார் "தி மிராக்கிள் மார்னிங்" (The Miracle Morning) என்ற நூலை எழுதிய புகழ்பெற்ற அமெரிக்க எழுத்தாளான ஹால் எல்ரோட் (Hal Elrod) நீங்கள் அதிகாலையில் எழுந்ததில் இருந்து, எட்டு மணிக்கு முன்பாகச் செய்யும் பணிகள், உங்கள் வாழ்க்கை முறையையும், வாழ்க்கையின் அனைத்துப் பகுதியையும் வேகமாக மாற்றுகிறது என்கிறார் அவர்.

Representational Image
Representational Image
Pixabay

அவற்றை ஆக்கப்பூர்வமான மாற்றமாக்க வேண்டியது உங்கள் பொறுப்பு என்னும் எல்ரோட், எல்லாவற்றையும் இழந்த பிறகும் கூட நமது வாழ்க்கையை மீண்டும் கட்டியெழுப்ப உதவும் ஆறு காலை பழக்கங்களை தனது தி மிராக்கிள் மார்னிங் நூலில் பட்டியலிடுகிறார்.

மிராக்கிள் காலை புத்தகம் உருவாக்கும் ஆறு காலை பழக்கங்களை மக்கள் நினைவில் வைத்திருப்பதை எளிதாக்குவதற்கு எல்ரோட், `SAVERS’ என்ற சுருக்கத்தை பயன்படுத்துகிறார்.

எல்ரோட் கூறும் SAVERS விளக்கம்:

S - Silence:

(அமைதி)

உங்கள் நாளை அமைதியுடன் தொடங்குங்கள்.அதிகாலையில் எழுந்தவுடன் கண்களை மூடி, அமைதியாகப் படுக்கையில் சில நிமிடங்கள் அமரலாம்.சில ஆழமான சுவாசங்களை எடுத்துக்கொள்வது,

தியானிப்பது போன்றவற்றைச் செய்யலாம்.

A - Affirmations:

(உறுதிமொழிகள்)

நேர்மறையான சுய-பேச்சின் முக்கியத்துவத்தை நாம் அனைவரும் அறிவோம்.அமைதிக்குப் பிறகு ஊக்கமும்,

உற்சாகமும் அளிக்கக்கூடிய சில சுய உறுதிமொழிகளை மனதினுள் கூறுலாம்.

Representational Image
Representational Image
Pixabay

V -Visualizing:

(காட்சிப்படுத்தல்)

அடுத்ததாக நீங்கள் அன்றைய நாள் செய்யவிருக்கும் வேலைகளுக்கான காட்சிகளை மனதிற்குள் உருவகப்படுத்திக் கொள்வது காட்சிப்படுத்தல் எனப்படுகிறது.

E- Exercise:

(உடற்பயிற்சி)

காலைக் கடன்களை முடித்துவிட்டு மிராக்கிள் மார்னிங்கின் நான்காவது பழக்கமான உடற்பயிற்சியைத் தொடங்கலாம்.இது உங்கள் உடலை வலிமையாக்கி,வரக்கூடிய சவால்களை எதிர்கொள்ள உங்கள் மூளையைத் தயார் செய்யும்.

R- Reading:

(படித்தல்)

உள்ளீடு வெளியீட்டை தீர்மானிக்கிறது என்பதை நாம் அனைவரும் அறிவோம்.

மேற்கோள்கள், தியானமுறைகள், தனிப்பட்ட வளர்ச்சி குறித்த புத்தகங்களின் சில பக்கங்களை காலையில் உடற்பயிற்சிக்குப் பிறகு படிக்கலாம்.

S- Scribing:

(எழுதுதல்)

உங்கள் எண்ணங்களையும், உணர்வுகளையும் காகிதத்தில் எழுதி வைப்பதன் மூலம் மனம் தெளிவடையும்.

மிராக்கிள் காலை ஆறு வெவ்வேறு பழக்கங்களைக் கொண்டிருந்தாலும், நீங்கள் அவற்றை ஒன்றாக அடுக்கி, அவற்றை ஒரே செயலாகக் கருதப் போகிறீர்கள் என்கிறார் எல்ரோட். அதாவது ஒவ்வொரு பழக்கமும் அடுத்ததைத் தூண்டப் போகிறது. எனவே நீங்கள் ஒன்றன் பின் ஒன்றாக இவற்றைச் செய்யப் போகிறீர்கள். ஒவ்வொரு பழக்கத்திற்கும் 10 நிமிடம் என நேரம் ஒதுக்கலாம்.

Representational Image
Representational Image
Pixabay

இருப்பினும் பெரும்பாலான மக்களுக்கு காலையில் ஒரு மணிநேரம் கிடைப்பது இல்லை என்பதை எல்ரோட் ஒப்புக்கொண்டு , முதலில் ஒவ்வொரு பழக்கத்தையும் ஒரு நிமிடம் மட்டுமே செய்து தொடங்க வேண்டும் என்று கூறுகிறார். அந்த வழியில் மிராக்கிள் மார்னிங் காலை பழக்கங்களை தொடக்கத்தில் இருந்து முடிக்க 6 நிமிடங்கள் தேவைப்படும். பின்னர் உங்களால் முடிந்தால் காலையில் இன்னும் முன்னர் எழுந்து படிப்படியாக ஒவ்வொரு பழக்கத்திற்கும் அதிக நேரம் ஒதுக்கத் தொடங்கலாம்.

மிராக்கிள் மார்னிங்கின் ஆறு பழக்கங்களைக் கடைப்பிடிப்பதன் மூலம் உங்கள் மன, உடல், உணர்ச்சி மற்றும் ஆன்மீக வாழ்க்கையைச் சிறப்பாக அமைக்க முடியும் என்கிறார் எல்ரோட்!

ஒரு மனிதன் அதிகாலையில் எழுவதும், எட்டு மணிக்கு முன்பு செய்யும் செயல்களுமே அன்றைய தினத்தைத் தீர்மானிக்கின்றன என்று கூறும் ஹால் எல்ரோட்டின்-தி மிராக்கிள் மார்னிங் வழிமுறைகளை நாமும் முயற்சி செய்து பார்க்கலாம்!

- அகன் சரவணன்

விகடனில் உங்களுக்கென ஒரு பக்கம்...

உங்கள் படைப்புகளைச் சமர்ப்பிக்க இங்கே க்ளிக் செய்க https://www.vikatan.com/special/myvikatan/

My Vikatan
My Vikatan

ஏதோ ஓர் ஊரில், எங்கோ ஒரு தெருவில் நடந்த ஒரு விஷயம்தான் உலகம் முழுக்க வைரலாகிறது. உங்களைச் சுற்றியும் அப்படியொரு வைரல் சம்பவம் நடந்திருக்கலாம்... நடந்துகொண்டிருக்கலாம்... நடக்கலாம்..! அதை உலகுக்குச் சொல்வதற்காகக் களம் அமைத்துக் கொடுக்கிறது #MyVikatan. இந்த எல்லையற்ற இணையவெளியில் நீங்கள் செய்தி, படம், வீடியோ, கட்டுரை, கதை, கவிதை என என்ன வேண்டுமானாலும் எழுதலாம். மீம்ஸ், ஓவியம் என எல்லாத் திறமைகளையும் வெளிப்படுத்தலாம்.

உங்கள் படைப்புகளைச் சமர்ப்பிக்க இங்கே க்ளிக் செய்க https://www.vikatan.com/special/myvikatan/

அடுத்த கட்டுரைக்கு