Published:Updated:

இன்டர்வியூக்கள் பலவிதம்.. ஒவ்வொன்றும் ஒரு விதம்..! - அனுபவம் பேசுது #MyVikatan

Representational Image
Representational Image ( Pixabay )

இன்டர்வியூ முடியும் தருவாயில் குழுத் தலைவர், "ஒரு நிமிடம்", என்று கூறி விட்டு , அந்த நபர் குறிப்பிட்டுக் கூறிய தாய்மொழி செய்தித்தாளை, தன் மேஜை உள்ளிருந்து எடுத்து வைத்து....

பொறுப்புத் துறப்பு: இந்தக் கட்டுரை வாசகரின் படைப்பு. கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்களுக்கும் கருத்துகளுக்கும் அதன் ஆசிரியரே பொறுப்பாவார். கட்டுரை சம்பந்தமாக உங்களுக்கு ஆட்சேபனை இருந்தால், my@vikatan.com-க்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்!

இன்டர்வியூ, என்றதும் நினைவுக்கு வருவது நாகேஷ் சோப்பு, சீப்பு, கண்ணாடி என்ற சினிமாவில் அட்டென்ட் செய்த வேலைக்கான இன்டெர்வியூ. தண்ணீரில் விழும் உசிலை மணியை, நாகேஷும் அவர் நண்பர் வீரப்பனும் காப்பாற்ற, அடுத்த நாள் இன்டர்வியூவில் கலந்து கொள்ள சான்ஸ் கிடைக்கிறது. ஓட்டுநர் வேலைக்காக வந்தவர்களில், வீரப்பன் மட்டும் பை சைக்கிளுக்கு, நான்கு வீல் என்று சரியாகச் சொல்ல, டிரைவர் வேலைக்கு செலக்ட் ஆகிறார்.

Representational Image
Representational Image
Pixabay

விற்பனையாளர் வேலைக்கான நேர்முகத் தேர்வில் நாகேஷ், தனது கூர்ந்து கவனிக்கும் திறமையால் வெற்றிபெற்று வேலையைப் பெறுவார். வந்தவர்களுக்கு அந்த நிறுவனத்தின் பொருட்கள் வரிசையாக எழுதி இருக்கும் காகிதம் கொடுக்கப்பட்டு, சிறிது நேரமும் அளிப்பார்கள். அந்த லிஸ்ட் படி தவறாமல் காகிதத்தைப் பார்க்காமல் விடாது கூற வேண்டும். நாகேஷ் சுற்றிப் பார்ப்பார். எதிர் சுவற்றில் பலகையில் அந்த லிஸ்ட் படியே, பொருட்களின் பெயர்கள் இருக்கும் . உசிலை மணி அவரது மூத்த மகன் டைபிஸ்ட் கோபு (இருவரும் வெயிட்டான பார்ட்டிகள்) இருவரையும் அந்த போர்டின் கீழே, சாமர்த்தியமாக, நிற்க வைத்து, நாகேஷ் ஒரு பொருள் விடாமல் சொல்வது போல் சொல்லி (படித்து காண்பித்து) வேலையை வாங்கி விடுவார்.. நிற்க

இன்டர்வியூவில் கலந்து கொண்டவர்கள் மற்றும் நேர்முகத் தேர்வுகளை நடத்தியர்வுகளின் நிலைமைகளை இனி காண்போம்.

இது தான் கேள்வியா ..!


முதல் போட்டியாளர் அழைக்கப்பட்டார் . அவர் அமர்ந்ததும், தேர்வுக் குழுவின் தலைவர், முதல் கேள்வியைக் கேட்டார் . போட்டியாளர் கூறிய பதிலில் குழுவின் தலைவர் மற்றும் இதர நபர்கள் ஆடிப் போய்விட்டனர். அடுத்த கேள்வி கேட்கவே திணறினர்.

அப்படி என்னதான் நடந்தது. கேட்ட கேள்விக்கு விடை தெரியவில்லை,.போட்டியாளருக்கு. தேர்வுக் குழுத் தலைவரை நோக்கி, ``ஒண்டர் புல் கொஸ்டின், லெட் அஸ் மூவ் டு தி நெக்ஸ்ட் ஒன் (அருமையான கேள்வி , நாம் அடுத்த கேள்விக்குப் போகலாம்) என்றார்.

Representational Image
Representational Image
Scott Graham on Unsplash

மாடிப் படிகள் எவ்வளவு ..!

ஒரு நிறுவனத்தில், நேர்முக தேர்வுக் கட்டடத்தின் கீழ் தளத்தில் (கிரவுண்ட் பிளோர்) நடைபெற்றது. வந்த ஒரு போட்டியாளரிடம், நேர்முகத் தேர்வு இரண்டாவது மாடியில் இருந்து, உங்களை மாடி படியில் ஏறி வரச் சொல்லியிருந்தால், என்ன செய்து இருப்பீர்கள் என்று கேட்கப்பட்டது. வந்தவர்,``ஏறி வந்த படிக்கட்டுகளை எண்ணிக் கொண்டு வந்து இருப்பேன்", என்றார்.

இப்பொழுது கீழ் தளத்தில் நடப்பதால்,``என்ன நினைக்கிறீர்கள்".

"நல்ல வேளை படிகளை எண்ணும் வேலை மிச்சம்", என்றார் சிரித்துக் கொண்டே.

தேர்வுக் குழுவில் கேள்வி கேட்டவர் சிரிக்காமல்,``இந்த அறையின் நீளம், அகலம் எவ்வளவு இருக்கும், அளக்கமாலேயே தோராயமாகக் கூறுங்கள்", என்றார்.

அந்த கேள்வியை எதிர்பார்க்காத, நேர்முகத் தேர்வுக்கு வந்தவர் திணறி விட்டார். அந்த குழு கூடியிருந்தது, சிவில் இன்ஜினியர் ஒருவரை தேர்வு செய்ய..

அது தான் கதவு ..!

ஒரு கம்பெனியில் வேலைக்காக வந்தவர், நேர்முகத் தேர்வுக்கான, முதல் கேள்வி கேட்பதற்கு முன்னால் குறிப்பிட்ட பதவிக்கு எவ்வளவு சம்பளம் தருவீர்கள் என்று கேட்க, கடுப்பாகி விட்ட சேர்மன்,``தாங்கள் எவ்வளவு எதிர் பார்க்கிறீங்கள்" என்றார்.

வந்தவர் ஒரு குறிப்பிட்ட தொகையை கூற, சேர்மன் கூறினார். "அதோ தெரிகின்றது இந்த அறையின் கதவு. திறந்துகொண்டு வெளியே செல்லுங்கள், இன்டர்வியூ ஓவர்" என்றார்.

Representational Image
Representational Image
NeONBRAND on Unsplash

தாளம் தந்த வேலை..!

ஒரு நிறுவனத்திற்கு நேர்முகத் தேர்விற்கு வந்த இளைஞன் விரல்களில் மொத்தம் ஆறு மோதிரங்கள் அணிந்து வந்தான். அவனிடம், ஆச்சர்யத்தோடு வினவினார்கள். கடைசிக் கேள்வியாக,"ஏன் இவ்வளவு மோதிரங்கள், ஸ்டைலா அல்லது பேஷனுக்காகவா?" என்று.

அவன் கூறிய பதில் ஆச்சரியப்படுத்தியது. ``இரண்டும் இல்லை
நான் வேலை செய்யும் கால் சென்டரில், இரவு டூட்டியின் பொழுது உறக்கம் வராமல் இருக்க மேஜை மீது மோதிர விரல்களால் தாளம் போட்டு தூக்கத்தை விரட்ட",என்றார்.

செய்து காண்பி என கூறியதும், மோதிரங்கள் விரல்களால் தட்டி அசத்தி விட்டான்.

அந்த போட்டியாளனின் திறமைக்கும் (கேட்ட கேள்விகளுக்கு) சிறப்பாகப் பதில்கள் அளித்தாலும், நேர்மையாக மோதிரங்கள் அணிந்ததற்கு பதில் கூறியதாலும், கவரப்பட்டு அந்த நிறுவனத்தில் வேலை அளிக்கப்பட்டது.

காலை வாரி விட்ட செய்தித்தாள்..!

நேர்முக தேர்விற்கு வந்தவரிடம் தினசரி செய்தித்தாள்கள் படிக்கும் வழக்கம் உண்டா? என்று பொதுவாக கேட்பது வழக்கம். ஒரு இடத்தில், ஆம் என்று கூறியவரிடம், குறிப்பிட்ட நிகழ்ச்சி பற்றி எங்கே படித்தீர்கள் என்று வினவ அவர் கூறினார், தாய் மொழி பத்திரிகையின் பெயரை.. அடுத்த வேறு சில கேள்விகள் கேட்கப்பட்டன.

இன்டர்வியூ முடியும் தருவாயில், குழுத் தலைவர்,``ஒரு நிமிடம்", என்று கூறி விட்டு , அந்த நபர் குறிப்பிட்டுக் கூறிய தாய்மொழி செய்தித்தாளை தன் மேஜை உள்ளிருந்து எடுத்து வைத்து,``எங்கே நீங்கள் கூறிய செய்தியை காண்பிங்கள்" என்றார். அந்த நபர் ஆடிப் போய்விட்டார். ஏனெனில், அந்த செய்தி அந்தப் பத்திரிகையில் வரவே இல்லை. பொய் சொன்னாலும் பொருந்தச் சொல்ல வேண்டும் அல்லவா? அந்த நபர் நொந்து நூடூல்ஸாகி விட்டார் .

Representational Image
Representational Image
Charles Deluvio on Unsplash

டிஸ்ஸபியர்ட்..!

தேசியமாக்கப்பட்ட வங்கி ஒன்றில், அதிகாரி பதவிக்கு இன்டர்வியூ. வந்த நபரிடம்,``ஏன், சி.ஏ.ஐ.ஐ.பி பரிட்சைக்கு ( CAIIB EXAM) அப்பியர் ஆகவில்லை", என்று கேட்டனர் .பதில் வந்தது ``அப்பியர் ஆனேன். .ரீ அப்பியர் ஆனேன். கடைசியில் டிஸ்ஸபியர் ஆனேன்" என்றார். அவர் அடுத்த வருடமும், மறுபடியும் இன்டர்வியூவிற்கு வந்தார்.

தாய் பாசம்..!

ஒரு நிறுவனத்தில், இன்டர்வியூக்கு வந்தவர்கள், உட்கார்ந்து கொண்டிருந்தனர் .இன்டர்வியூ 11 மணிக்குத்தான் ஆரம்பித்தது. அப்பொழுதே அரை மணி லேட் இரண்டு நபர்களுக்கு இன்டர்வியூ முடிந்து விட்டது. அடுத்த நபர் வருவதற்கு முன்பு, குழுத் தலைவர் வெளியே உட்கார்ந்திருந்த ஒரு பெண்ணை அனுப்பும்படி கூறினார். அவர் கவனித்து வந்தார், அறையின் கண்ணாடி ஜன்னல் வழியாக, அந்த குறிப்பிட்ட பெண் மிகுந்த பதட்டத்துடன் காணப்பட்டாள். அடிக்கடி கைக் கடிகாரத்தை பார்ப்பதும், இன்டர்வியூ அறையைக் கவனிப்பதுமாக இருந்தாள்.

உள்ளே வந்த பெண் அமர்ந்ததும், அவளுடைய பெயர் என்ன என்று ஆரம்பிக்கும் முன்பே குலுங்க குலுங்க அழ ஆரம்பித்து விட்டாள். அவளால் கண்ணீரை,கட்டுப்படுத்த முடியவில்லை. இன்டெர்வியூ செய்பவர்களுக்கு, ஒன்றுமே புரியவில்லை. தர்ம சங்கடமாகப் போய்விட்டது. சிறிது நேரம் கழித்து சுதாரித்துக் கொண்டு மன்னிப்பு கோரினாள்.

குழுத் தலைவர், அந்த பெண்ணுக்கு தண்ணீர் கொடுத்துவிட்டு, காபி வரவழைத்து கொடுத்தார். அவள் வேண்டாம் என்று மறுத்தாள். காபியைப் பருகச் செய்து விட்டு அவளை பற்றி கூற சொன்னார்.

அந்த பெண், தனக்கு பிறந்த குழந்தையை விட்டு விட்டு இன்டர்வியூவிற்கு வந்ததாகவும், அதற்கு தான் பால் கொடுக்கும் நேரம் இது, அதனால் அழுதேன் என்றாள்.

குழுத் தலைவர் (அவர் தான் கம்பெனியின் தலைவர் ) ``குழந்தைக்கு ,எவ்வளவு வயதாகிறது" என்றார். அந்த பெண், "ஏழு நாள்கள் ", என்றதும் அனைவரும், திகைத்துப் போய் விட்டனர்.

Representational Image
Representational Image
Cytonn Photography on Unsplash

அப்படி இருக்கையில், எதற்காக இன்டர்வியூவுக்குகு வந்தாய் என்று வினவப்பட்டது.

"கணவர், மாமியார், மாமனார் கட்டாயப்படுத்தினார்கள்" என்றாள் . "அப்படியா, சாரி, நீங்கள் போகலாம்", என்றதும் அந்த பெண்ணுக்கு என்ன செய்வது என்றே தெரியவில்லை. ``உங்களுக்கு எப்பொழுது வசதிப்படும், மறுபடியும் வந்து இன்டர்வியூ கொடுக்க" என்றார் தலைவர்.

"ஒரு மாதத்திற்கு பிறகு", என்று கூற கம்பெனி தலைவர்," உங்கள் இன்டெர்வியூ 45 நாள்களுக்கு பிறகு. அதில் தேர்ச்சி பெற்றால் வேலை", என்று வாழ்த்தி அனுப்பி வைத்தார்.

அந்த பெண் சந்தேகத்துடன் கூடவே சந்தோஷத்துடன், நன்றி கூறி விட்டு சென்றாள்.. அவளுக்குகாக இன்டர்வியூ நடத்தப்பட்டு, அதில் தேர்ச்சி அடைந்து வேலையும் கிடைத்து .

மனிதாபிமான செய்கைக்கு, இந்த இன்டர்வியூ ஒரு எடுத்துக்காட்டு .

-வாசுதேவன்

விகடனில் உங்களுக்கென ஒரு பக்கம்...

உங்கள் படைப்புகளைச் சமர்ப்பிக்க இங்கே க்ளிக் செய்க https://www.vikatan.com/special/myvikatan/

My Vikatan
My Vikatan

ஏதோ ஓர் ஊரில், எங்கோ ஒரு தெருவில் நடந்த ஒரு விஷயம்தான் உலகம் முழுக்க வைரலாகிறது. உங்களைச் சுற்றியும் அப்படியொரு வைரல் சம்பவம் நடந்திருக்கலாம்... நடந்துகொண்டிருக்கலாம்... நடக்கலாம்..! அதை உலகுக்குச் சொல்வதற்காகக் களம் அமைத்துக் கொடுக்கிறது #MyVikatan. இந்த எல்லையற்ற இணையவெளியில் நீங்கள் செய்தி, படம், வீடியோ, கட்டுரை, கதை, கவிதை என என்ன வேண்டுமானாலும் எழுதலாம். மீம்ஸ், ஓவியம் என எல்லாத் திறமைகளையும் வெளிப்படுத்தலாம்.

உங்கள் படைப்புகளைச் சமர்ப்பிக்க இங்கே க்ளிக் செய்க https://www.vikatan.com/special/myvikatan/

அடுத்த கட்டுரைக்கு