Published:Updated:

கொரோனா செல்பி! - சிறுவன் உணர்த்திய பாடம் #MyVikatan

உணவுப் பொட்டலங்கள் கொடுக்கும்போது செல்ஃபி எடுத்துக் கொள்ள நினைத்த வாசகருக்கு நேர்ந்த கசப்பான அனுபவத்தை பகிர்ந்திருக்கிறார்..

பொறுப்புத் துறப்பு : இந்தக் கட்டுரை வாசகரின் படைப்பு. கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்களுக்கும் கருத்துகளுக்கும் அதன் ஆசிரியரே பொறுப்பாவார். கட்டுரை சம்பந்தமாக உங்களுக்கு ஆட்சேபனை இருந்தால், my@vikatan.com-க்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்!

அவன் அப்போது தான் தூங்கி எழுந்து வந்திருக்க வேண்டும். வாயில் இன்னும் ஜொல்லு ஒழுகிய தாரை காயவில்லை. தோளால் துடைத்தப்படியே அரைக்கால் டிரவுசரை தூக்கி பிடித்தபடி வெளியே வந்தான். எல்லோருக்கும் தூங்கி எழும் அந்த நிமிடங்கள் அந்தரங்கமானது. கனவு கலையப்பட்டு இருக்கலாம். எறும்பு கடித்து புரண்டு இருக்கலாம், வெளிப்பேச்சு சத்தம் நனவாகி இருக்கும், எதுவானாலும் தூக்கம் கலைதல் ஒரு நுண்ணிய எரிச்சல். ஏனெனில், தூக்கம் தான் அவனின் ஆனந்தம்! அவா! அவனின் ஆதிக்கம். தூக்கம் கலைதல் என்பது மகாபாவமாக பழங்காலத்தில் நம்பினர். கும்ப கர்ணன் பல மாதங்கள் தூங்கிய இதிகாச கதைகள் உண்டு.

Representational Image
Representational Image

வெள்ளை பனியன் சுருங்கி சுருங்கி வயிற்றை அழுத்திக்கொண்டிருந்தது. பின்புறம் லேபிள் வெளியே தெரிந்தது. பனியன் போட்டிருக்கும்போது இருக்கும் சந்தோசம் சட்டைபோடும் போது இருப்பதில்லை. துள்ளித் திரியும் பையன்கள் பெரும்பாலும் பனியனோடு தான் தெருவில் ஓடிக்கொண்டிருப்பார்கள். சட்டைபோட்ட பையன்கள் துப்பாக்கி வைத்து விளையாடிக்கொண்டிருப்பார்கள். ஆடைகள் மாறும் போது சந்தோசத்தின் தீவிரமும் மாறுகிறது. டிரவுசரில் ஒரு பட்டன் இல்லாமல் இருந்தது.

காலை எட்டுமணி இருக்கும். நானும் இரண்டு நண்பர்களும் உணவுப் பொட்டலம் வழங்கப் போயிருந்தோம். இந்த ஊரடங்கு தொடங்கியதிலிருந்து இது பத்தாவது நாள். காலை ஆறுமணிக்கு தொடங்கி வசதி இல்லாதவர்கள், உறவுகளால் கைவிடப்பட்டவர்கள், ரோட்டில் வசிப்பவர்கள் என எல்லோருக்கும் பொட்டலம் கொடுத்து வருகிறோம்.

Representational Image
Representational Image
Credits : Vikatan Team

பாதுகாக்கப்பட்ட உணவுப் பொட்டலம் கட்டுவது பற்றி நான் கேள்விப்பட்ட கதை சுவாரஸ்யமானது. நெப்போலியனின் வெற்றிகளுக்கு முக்கிய காரணமே அவரது சூடான செயல்பாடுகள்தான். சில சமயம் உணவுப் பற்றாக்குறை ஏற்பட்டால், அது இப்போதைய கொரோனா வைரஸ் தொற்றினால் மக்களிடையே ஏற்பட்டிற்கும் பதற்றம் போல, அவரின் படை வீரர்களுக்கும் பதற்றம் மற்றும் பயம் வந்துவிட்டால், அது வெற்றியை பாதிக்கும் என நினைத்திருப்பார் போலும். எனவே, யாராவது உணவு கெடாமல் இருக்கும் வழிமுறையை கண்டுப்பிடித்தால் இருபதாயிரம் பிராங் தருவதாக அறிவித்தார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

பாரிஸில் உள்ள சமையல்காரர் உணவை பாட்டிலில் அடைத்து வைக்கும் முறை கண்டுப்பிடித்து பரிசு பெற்றார். பின்னர் இது லண்டனில் தகர டப்பாவுக்கு மாறியது. அது படிப்படியாக மாறி இப்போதைய பொட்டலம் முறைக்கு வந்தது.

இந்த ஊரடங்கு சமயத்தில் தினமும் ஆயிரம் பொட்டலங்கள் விநியோகம் செய்கிறோம். இந்த கொரோனா வைரஸ் உலகத்தையே கதிகலங்க வைத்திருக்கிறது. இந்தப் பகுதியில் இதுவரை எந்த நிவாரண உதவியும் இல்லை என எங்கள் வாட்ஸப் குழுவில் ஒருவர் வீடியோ போட்டிருந்தார்.

Representational Image
Representational Image
Credits : Vikatan Team

அதனால், இந்த பகுதிக்கு முதலில் வந்தோம். இது நான்காவது வீடு. கதவு கொஞ்சமாக சாத்தப்பட்டிருந்தது. திண்ணையில் தூசிப்படிந்த புத்தக பை ஓரமாக கிடந்தது. அதில் அட்டை கிழிந்த சில புத்தகங்கள் எட்டிப்பார்த்துக் கொண்டிருந்தன. அது, பள்ளி விடுமுறை விட்டு பல நாள்கள் ஆகி விட்டன என சொல்லாமல் சொன்னது.

அதை பார்த்துக்கொண்டே வந்த ஒரு நண்பன்,``வீட்டில் யாருமில்லையா?” என சத்தமிட்டான். மூன்றாவது சத்தத்திற்கு தான் பையன் வெளியே வந்திருக்கிறான்.

பனியனை திருப்பி போட்டிருப்பது கண்டு நான்,``என்ன இது?” எனக்கேட்டேன்.

உடனே உள்ளே ஓடிபோய் பனியன் திருப்பி போட்டுக்கொண்டு, டிரவுசர் பட்டனை சரி செய்துக்கொண்டு வெளியே வந்தான்

திண்ணையில் உட்கார்ந்திருந்த ஒரு நண்பன்,``ரோஷக்காரனா இருப்ப போல!” என சொல்லி சிரித்தான். அதை மெல்லிய புன்னகையில் கடந்தான். அந்தரங்கம் அனாவசியமாக அவமானப்படுவதை யார் தான் விரும்புவார்கள்?

தம்பி, அப்பா இல்லையா?

இல்லை. மதியம் தான் வருவார்! என சொல்லி விட்டு எங்களை சுற்றியும் பார்த்தான்.

வேலைக்கு போயிட்டாரா?

இல்லை.

ஊருக்கு போயிட்டாரா?

இல்லை! பதிலில் சின்ன தயக்கம்.

எங்கே போயிருக்கிறார்? எப்பா வருவார்?

மேட்டுப்பாளையம், கணபதி ஹாலுக்கு…மத்தியானம் ஆயிடும்!

அம்மா, எங்கே?

அவங்க, ரேசன் கடைக்கு போயிருக்காங்க…

அவங்க எப்ப வருவாங்க?

அம்மாவும் மத்தியானம் தான் வருவாங்க. காலையில் ஆறுமணிக்கு போனாங்க!

Representational Image
Representational Image
Credits : Vikatan Team

மேலும் எதுக்காக என கேட்க விரும்பவில்லை. சில சமயம் இப்படித்தான், பதில் சொல்வதை விட கேள்வி கேட்பது கடினம், கேட்டாலும் சொல்ல தயங்குவான். காரணம், டவுனில் தான் ஊரடங்கு சமயத்தில் மதிய உணவு மற்றும் ரேசனில் ஆயிரம் ரூபாய் தருகிறார்கள் என்பது எங்களுக்கு தெரியும்.

என்ன படிக்கிற?

எட்டாவது…

உன் பேரன்ன?

ராமசந்திரன்…

கண்டிப்பாக இது எம்.ஜி.ஆர் நினைவாக இருக்கவேண்டும் என நினைத்துக்கொண்டேன்.

இப்ப டிபனுக்கு என்ன செய்ய?

கொஞ்ச சாப்பாடு இருக்கு…

நேற்று வாங்கிய சாப்பாட்டின் மிச்சமாக இருக்கவேண்டும், கவலையாக இருந்தது.

நாங்களும் காலை டிபன் பாக்கெட் கொடுக்கத் தான் வந்திருக்கோம். எத்தனை பாக்கெட் வேணும்?

Representational Image
Representational Image
Credits : Vikatan Team

அம்மா,அப்பா மதியம் தான் வருவாங்க, எனக்கு மட்டும் போதும், பக்கத்தில் என் பிரண்ட்ஸ் இருக்காங்க… அவங்களுக்கும் கொடுக்கலாம்.

நான் பொட்டலம் ஒண்ணு கொடுத்து விட்டு என்னோடு வந்த இன்னொரு நண்பனை ஒரு செல்பி எடுக்க சொன்னேன். ராமசந்திரன் உள்ளே என்ன இருக்கிறது என பார்க்க, பொட்டலத்தின் மேல் முடியை திறக்க முயற்சிக்கும் போதே,``தம்பி, கொஞ்சம் இரு,பிரிக்காதே, இப்படி வந்து டிபன் வாங்கிற மாதிரி பக்கத்தில நில்லு, ஒரு செல்பி எடுக்கலாம்!” என சொன்னேன்.

அண்ணா, நான் வரல…பிரண்ட்ஸ் கிண்டல் செய்வாங்க…

என சொல்லிக்கொண்டே டிபன் பொட்டலத்தை திண்ணையில் வைத்து விட்டு வீட்டுக்குள் ஓடி விட்டான்.

எங்களை ஓங்கி அறைந்தார்போல் இருந்தது.

-சி.ஆர்

விகடனில் உங்களுக்கென ஒரு பக்கம்...

உங்கள் படைப்புகளைச் சமர்ப்பிக்க இங்கே க்ளிக் செய்க https://www.vikatan.com/special/myvikatan/

My Vikatan
My Vikatan

ஏதோ ஓர் ஊரில், எங்கோ ஒரு தெருவில் நடந்த ஒரு விஷயம்தான் உலகம் முழுக்க வைரலாகிறது. உங்களைச் சுற்றியும் அப்படியொரு வைரல் சம்பவம் நடந்திருக்கலாம்... நடந்துகொண்டிருக்கலாம்... நடக்கலாம்..! அதை உலகுக்குச் சொல்வதற்காகக் களம் அமைத்துக் கொடுக்கிறது #MyVikatan. இந்த எல்லையற்ற இணையவெளியில் நீங்கள் செய்தி, படம், வீடியோ, கட்டுரை, கதை, கவிதை என என்ன வேண்டுமானாலும் எழுதலாம். மீம்ஸ், ஓவியம் என எல்லாத் திறமைகளையும் வெளிப்படுத்தலாம்.

உங்கள் படைப்புகளைச் சமர்ப்பிக்க இங்கே க்ளிக் செய்க https://www.vikatan.com/special/myvikatan/

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு