Published:Updated:

முதலமைச்சர்‌ மு.க.ஸ்டாலினுடன்‌ ரெலா மருத்துவமனை தலைவர்‌ முகமது ரெலா சந்திப்பு!

ரெலா மருத்துவமனை தலைவர்‌ முகமது ரெலா, ஸ்டாலினுடன்...
ரெலா மருத்துவமனை தலைவர்‌ முகமது ரெலா, ஸ்டாலினுடன்...

முதலமைச்சருடனான இந்தச் சந்திப்பு சுமார்‌ 15 நிமிடங்கள் நீடித்தது.

நடந்த முடிந்த தமிழக சட்டசபை தேர்தலில்‌ அமோக வெற்றி பெற்று தமிழக முதலமைச்சராக பொறுப்பேற்றுள்ள மு.க.ஸ்டாலின்‌ அவர்களை மரியாதை நிமித்தமாக அவரது இல்லத்தில்‌ ரெலா மருத்துவமனை தலைவரும்‌ உலகப்புகழ்‌ பெற்ற கல்லீரல்‌ அறுவை சிகிச்சை நிபுணருமான பேராசிரியர்‌ முகமது ரெலா மற்றும்‌ ரெலா மருத்துவமனையின்‌ தலைமை செயல்‌ அதிகாரி டாக்டர்‌ இளங்குமரன்‌ கலியமூர்த்தி ஆகியோர்‌ சந்தித்து தங்களது வாழ்த்துகளைத் தெரிவித்துக்‌ கொண்டனர்‌. முதலமைச்சருடனான இந்தச் சந்திப்பு சுமார்‌ 15 நிமிடங்கள் நீடித்தது.

அதனைத்‌ தொடர்ந்து வெளியே வந்த பேராசிரியர்‌ ரெலா கூறுகையில்‌,

"முதலமைச்சருடான இந்தச் சந்திப்பு மரியாதை நிமித்தமான ஒன்று. தற்போது தமிழக அரசு அமைத்துள்ள கொரோனா கட்டளை மையம்‌ வரவேற்கத்தக்க ஒன்றாகும்‌. இது துன்பத்தில்‌ உள்ள ஏராளமான நோயாளிகளுக்கு மிகுந்த பயன்‌ அளிக்கும்‌. மேலும்‌ தற்போது முதலமைச்சர்‌ அறிவித்துள்ள ஊரடங்கும்‌ வரவேற்கத்‌ தக்கதாகும்‌. இதன்‌ காரணமாக தொற்றின்‌ வேகம்‌ குறையும்‌. மேலும்‌, அடுத்த சில வாரங்களில்‌ கொரோனா பாதிப்பு வெகுவாக குறைய வாய்ப்புள்ளது" என்று அவர்‌ தெரிவித்தார்‌.

அடுத்த கட்டுரைக்கு