Published:Updated:

`சொல்ற பேச்சை மனசு கேட்கலையா? இந்தக் கட்டுரை உங்களுக்குத்தான்!’ - வாசகர் பகிர்வு #MyVikatan

Representational Image
Representational Image ( Credits : Pixabay )

``கொரோனா கிட்ட இருந்து கூட தப்பிச்சுடலாம் போல.. இந்த செல்போன் கவனச் சிதறல்களிலிருந்து தப்பிக்க முடியாது போலயே” என்று கேட்கும் உங்கள் மைண்ட் வாய்ஸ் புரிகிறது. அதற்கு இதுதான் தீர்வு..

பொறுப்புத் துறப்பு : இந்தக் கட்டுரை வாசகரின் படைப்பு. கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்களுக்கும் கருத்துகளுக்கும் அதன் ஆசிரியரே பொறுப்பாவார். கட்டுரை சம்பந்தமாக உங்களுக்கு ஆட்சேபனை இருந்தால், my@vikatan.com-க்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்!

ஒரு சின்ன குழந்தை தான் படத்தில் ரசித்த தன் அபிமான ஹீரோ அஜித்தைப் பற்றிச் சிலாகித்துப் பேசிக்கொண்டே இருக்கும். திடீரென்று யாராவது அந்தக் குழந்தைக்குப் பிடித்த விளையாட்டையோ அல்லது ஐஸ்கிரீமையோ ஞாபகப்படுத்தினால் கவனம் அதற்குள் சென்றுவிட்டு எதை பத்திப் பேசினோம் என்பதையே மறந்துவிட்டு மற்றவற்றிற்குள் கவனம் சென்றுவிடும். இதேபோலதான் நானும் ...ஆனால் நான் 47 வயதுக் குழந்தை.. ஒரு விசயத்தைப் பற்றித் தீவிரமாக யோசித்துகொண்டே கார் டிரைவிங் செய்யும்போது ரெட் சிக்னல் வந்ததையே கவனிக்காமல் உள்ளே நுழைந்து பின் நண்பனிடம் திட்டு வாங்கினேன்.

Representational Image
Representational Image

ஒரு நாள் காலையில் பல் துலக்கும்போது மவுத்வாஷுக்கு பதிலா ஆஃப்டர்ஷேவ் -ஐ கொப்பளிக்கப் போய் கடைசியில் சுதாரித்து நான் வழிந்ததைப் பார்த்து என் மனைவி கீதா என்னிடம் “இந்த உலகத்துக்கு வா .. எங்க இருக்க” என்று முறைத்துக்கொண்டே கேட்டார். கடைக்குப் போய் 5 பொருளை கீதா வாங்கிட்டு வரச் சொல்வார், 2 பொருளை மறந்துவிட்டு அவளிடம் வாங்கிக்கட்டி கொள்வதையும் வழக்கமாகக் கொண்டிருந்தேன்..

ஆபீஸிலிருந்து வீட்டுக்கு வந்தவுடன் கீதா ஆசையாக காபி கொண்டு வந்து உட்கார்ந்து என் அருகில் ரொமான்டிக் ஆக பேசும்போது, `நாளைக்கு எப்படி அந்த code ல உள்ள bug ஐ fix பண்ணி project deliver பன்றது’ என்று தீவிரமாக ஆபீஸ் வேலையைப் பற்றி யோசித்துக்கொண்டிருப்பேன். பேட்டை படத்தில் சிம்ரனை ஸ்கிரீனில் பார்த்தவுடன் குஷி மூடில் ஒரு நிமிடம் ரஜினியையும் சிம்ரனையும் ஸ்கிரீனில் eraser வைத்து அழித்துவிட்டு 13 வருடம் பின்னே time machine ல் பயணம் செய்து அதே பேட்ட பட ஸ்கிரீனில் “ஆள்தோட்ட பூபதி” பாட்டில் உள்ள பழைய இளமை ததும்பும் சிம்ரனை ஒரு நிமிடம் ஆடவிட்டு ரசித்தது என் மனம்.

இந்தியாவில் நடக்கும் CAA பிரச்னை மற்றும் நித்தியின் கைலாஷ் நாட்டு அட்ராசிட்டியைப் பற்றியும் நன்பர்களின் காரசார விவாதத்தையும், கலாய்ப்பதையும் நினைத்துக் கொண்டே ski resorts ல் நான் ski செய்த போது balance தடுமாறி snow வில் தொப்பென்று விழுந்து அவமானப்பட்டேன். இப்படி பக்கம் பக்கமாகச் சொல்லிக்கொண்டே போகலாம் என்னுடைய கவனச் சிதறல்களைப் பற்றி.

மேலே சொன்ன அனைத்தையும் ஒரு உளவியல் நிபுணரிடம் நான் சொன்னால் அவர் உடனே எனக்கு ADD(attention deficit disorder )இருக்க வாய்ப்பு நிறைய இருப்பதாகச் சொல்லி அதற்கான மாத்திரைகளை உபயோகிக்கப் பரிந்துரை செய்தார். “இது ஒரு சாதாரண பிரச்னை ..எனக்கும்தான் இருக்கு.. எதுக்கு இப்படி அலட்டிக் கொள்ளணும்” என்று சிலர் கேட்கலாம்.. எப்பாவது இருந்தால் சாதாரண பிரச்னைதான்.. எப்பவுமே இருந்தால் கொஞ்சம் சிக்கலானது தானே. அது ஒருவரின் வாழ்க்கையையே மாற்றக்கூடியது.

Representational Image
Representational Image

இது படைத்தவன் என்னை வடிவமைத்த டிசைன் issue வா என்றால் கண்டிப்பாக இல்லை என்றுதான் சொல்வேன். இது எல்லோருக்கும் இருப்பதுதான். இப்படி நான் என் கவனச் சிதறல்களைப் பற்றி வெகு நாள்களாகக் கவலைப்பட்டுக்கொண்டு இருந்தபோது சில மாதம் முன் என் அலுவலகத்தில் கவனச் சிதறல்களை எப்படி சாதுர்யமாகக் கையாண்டு எப்படி நம் ஆபீஸ் வேலையில் Focus செய்வது என்பது தொடர்பாக ஒரு Seminar நடந்தது. இவ்வளவு நாள்களாக நான் கவலைப்பட்டதற்கு அது ஒரு தீர்வாக அமைந்தது. இதைப் பற்றிதான் இந்தக் கட்டுரை..

ஒரு மனிதனின் மனம் காந்தம் போன்றது. அது தினம் சந்திக்கும் எல்லா இரும்புகளையும்(தகவல்களையும்) ஈர்க்கும் சக்தி கொண்டது. நல்ல இரும்பு கெட்ட இரும்பு என்றெல்லாம் அந்தக் காந்தத்திற்குத் தெரியாது. அப்படி ஈர்க்கப்பட்டவற்றில் நெகட்டிவ் சக்தி கொண்ட தேவையில்லாத ஆணிகள் 80% க்கும் மேல் இருக்கும்.

Representational Image
Representational Image

ஒரு நாளில் 75000 சிந்தனை வலைகள் நம் மூளையின் background ல் நடப்பதாக நியூரோ சைன்டிஸ்ட்கள் சொல்கிறார்கள். உதாரணத்துக்கு நான் கண்ணை மூடி அயர்ந்து தூங்கிக்கொண்டிருக்கிறேன் என்று வைத்துக் கொள்ளுங்கள். தொடந்து 8 மணிநேரம் 10 நிமிடத்துக்கு ஒரு முறை என்னை எழுப்பி யாராவது தொந்தரவு செய்தால் எனக்கு எப்படி தூக்கம் தொந்தரவாகும் என்று கற்பனை செய்து பாருங்கள்.. இங்கே தூக்கம் என்று நான் சொன்னது ஆபீஸ் வேலையை .. 10 நிமிடங்களுக்கு ஒரு முறை தொந்தரவு செய்பவர் யாரென்றால் என் செல்போனிலிருந்து வரும் வாட்ஸ் அப் பார்வர்டு மெசேஜ்கள், செய்திகள், முகநூல் போஸ்ட்கள், ஆங்கிலச் செய்திகள், தமிழ் செய்திகள், சினிமா செய்திகள், மீம்ஸ்கள், கலாய்ப்புகள்..இப்படி பல தொந்தரவுகள். நல்ல செய்திகளாக இருந்தாலும் பரவாயில்லை.. 90% toxic information தான்..

இப்படி இருந்தால் சத்தியமாக யாராலும் எந்த வேலையையும் 10% கூட முழுமையாக கவனமாகச் செய்ய முடியாது. நியூரோ சைன்டிஸ்ட்கள் செய்த ஆய்வுகளில் ஒரு மனிதனின் மனம் 2008 ல் 11 நிமிடங்களுக்கு ஒரு முறை தடைபட்டு அவனின் கவனம் குறைக்கப்படுகிறது. அதுவே 2011 ல் 3 நிமிடங்களுக்கு ஒருமுறை தடைபடுகிறது. பின் 2018ல் 90 secs க்கு ஒரு முறை தடைபடுகிறது. 2020ல் எத்தனை seconds என்பதை கொரோனா வைரஸ், பொருளாதாரம் மற்றும் வேலையின்மை போன்றவைதான் தீர்மானிக்கும்.

Representational Image
Representational Image

கவனக் குறைபாடுகளை(attention deficit) பற்றி ஆய்வு செய்யும் நியுரோ சைன்டிஸ்ட் குழு ஒன்று செல்போன் அடிக்‌ஷன் உள்ள டீன் ஏஜ் மாணவர்களிடம் ஆய்வு செய்தார்கள். அந்த ஆய்வில் முதலில் அவர்கள் மேஜையில் அவர்களின் செல்போனை வைத்து ஒரு பாடத்தைக் கவனிக்கச் சொல்லி ஆய்வு செய்தார்கள். பிறகு அதேபோல் அவர்களின் செல்போனுக்குப் பதிலாக ஒரு பொம்மை வடிவ செல்போன் ஒன்றை அவர்கள் மேஜையில் வைத்துப் பாடத்தைக் கவனிக்கச் சொன்னார்கள். இந்த முறையிலும் அவர்களால் வழக்கம் போல் பாடத்தை ஈடுபாட்டுடன் கவனிக்க முடியவில்லை.

“என்னடா இது.. செல்போனைக் கையில் இருந்து வலுக்கட்டாயமாக எடுத்த பிறகும் கூட ஏன் இவர்களால் முழுமையாகக் கவனிக்க முடியவில்லை’’ என்று நீங்கள் ஆச்சர்யமாகக் கேட்கலாம்.. எனக்கும் அதே கேள்விதான். பதில் இதுதான்.. மனித மனம் ஒரு விசயத்தை நினைக்கும் போது கூடவே அதோடு சேர்ந்து பல உணர்வுகளும் மனதில் சேகரிக்கப்படுகின்றன.. நினைவுகள் நீங்கினாலும் உணர்வுகள் அப்படியேதான் மனதில் ஒரு Loop ல் நம்மையும் அறியாமல் background process-ல் சுற்றிக் கொண்டே இருக்கும் .. இதனால்தான் அந்த டீன் ஏஜ் மாணவர்களுக்கு அந்த செல்போன் பொம்மையாகவே இருந்தாலும் அவர்கள் மனதில் அதன் தொடர்பான பல உணர்வுகளிலிருந்து மீள முடியாமல் பாடத்தில் ஈடுபாட்டுடன் கவனிக்க முடியவில்லை.

Representational Image
Representational Image

“கொரோனா கிட்ட இருந்து கூட தப்பிச்சுடலாம் போல.. இந்த செல்போன் கவனச் சிதறல்களிலிருந்து தப்பிக்க முடியாது போலயே” என்று கேட்கும் உங்கள் மைண்ட் வாய்ஸ் புரிகிறது. அதற்கு இதுதான் தீர்வு.. தினம் நடக்கும் வேலையை 30 நிமிடங்கள் கொண்ட பல சின்ன வேலைகளாகப் பிரித்துக்கொண்டு டைமரை ஆன் செய்யுங்கள். இந்த 30 நிமிடங்களும் வேலை செய்யும் போது இ-மெயில், சொஸியல் மீடியா, வாட்ஸ் அப், செய்தி சேனல்கள் போன்ற எதையும் பார்க்கக் கூடாது. இந்த 30 நிமிடங்களில் 30 சிந்தனைகள் வந்து நம்மைச் சிதறடிக்கும். அவற்றை ஒரு பேப்பரில் ஒவ்வொரு சிந்தனை வரும்போதும் அதை பேனாவால் எழுதுங்கள். அப்படி எழுதுவதும்போது நாம் நியூராலஜிக்கலாக மனதில் background ல் நடக்கும் loop process ல் இருந்து வெளிவர நம் மூளைக்குக் கட்டளை இடுகிறோம். அந்த 30 நிமிடங்களுக்கு ஒரு முறை 5 நிமிடங்கள் பிரேக் எடுங்கள். 5 நிமிடங்கள் பிரேக்கில் மனதில் அதிகம் ப்ராசஸ் நடக்காத ஒரு விசயத்தை நீங்கள் செய்து ரிலாக்ஸ் பண்ணலாம் . நல்ல இசையைக் கேட்கலாம் அல்லது ஒரு சின்ன வாக்கிங் போயிட்டு தண்ணீர் குடிக்கலாம். தொடர்ந்து 8 வாரம் கடைப்பிடித்துப் பாருங்கள். பிறகு உங்களுக்கே புரியும்..

முதல் நாளில் 30 நிமிடங்களில் வந்த 30 சிந்தனைகள் 8 வாரத்திற்குப் பிறகு 3 ஆக குறைவதை உணர்வீர்கள்.. நம் மனம் அவ்வளவு அழகானது.. சோஸியல் டிஸ்டன்ஸ் என்பது வெறும் பிஸிகல் டிஸ்டன்ஸ் மட்டும் அல்லாமல் சோஸியல் மீடியாவிற்கும் சேர்த்தே இருந்தால் நம் மனம் அமைதியாகும். அமைதியானால் நம் உடல் எதிர்ப்பு சக்தியும் வலுப் பெறும். கொரோனாவே வந்தாலும் கூட அதிலிருந்து மீண்டு வரலாம். அடுத்த பாகத்தில் multitasking ஆல் நம் மனம் எவ்வாறு தடுமாறுகிறது என்பதை பகிர்கிறேன்.

நன்றி - நியூரோ விஞ்ஞானி மற்றும் கலிபோர்னியா பல்கலைக்கழக விரிவுரையாளர், டாக்டர் சாஹர் யூசெப்

-பாலமுருகன்

விகடனில் உங்களுக்கென ஒரு பக்கம்...

உங்கள் படைப்புகளைச் சமர்ப்பிக்க இங்கே க்ளிக் செய்க https://www.vikatan.com/special/myvikatan/

My Vikatan
My Vikatan

ஏதோ ஓர் ஊரில், எங்கோ ஒரு தெருவில் நடந்த ஒரு விஷயம்தான் உலகம் முழுக்க வைரலாகிறது. உங்களைச் சுற்றியும் அப்படியொரு வைரல் சம்பவம் நடந்திருக்கலாம்... நடந்துகொண்டிருக்கலாம்... நடக்கலாம்..! அதை உலகுக்குச் சொல்வதற்காகக் களம் அமைத்துக் கொடுக்கிறது #MyVikatan. இந்த எல்லையற்ற இணையவெளியில் நீங்கள் செய்தி, படம், வீடியோ, கட்டுரை, கதை, கவிதை என என்ன வேண்டுமானாலும் எழுதலாம். மீம்ஸ், ஓவியம் என எல்லாத் திறமைகளையும் வெளிப்படுத்தலாம்.

உங்கள் படைப்புகளைச் சமர்ப்பிக்க இங்கே க்ளிக் செய்க https://www.vikatan.com/special/myvikatan/

அடுத்த கட்டுரைக்கு