Published:Updated:

ரெய்ன் தமிழ்க் குழுமம்: ஜெர்மனியில் கோலாகலமாகக் கொண்டாடப்பட்ட தீபாவளி பண்டிகை!

ரெய்ன் தமிழ்க் குழுமம்

'ரெய்ன் தமிழ்க் குழுமம்' என்ற தமிழர் அமைப்பு, தீபாவளி பண்டிகையை ஜெர்மனியில் கோலாகலமாகக் கொண்டாடியுள்ளது.

ரெய்ன் தமிழ்க் குழுமம்: ஜெர்மனியில் கோலாகலமாகக் கொண்டாடப்பட்ட தீபாவளி பண்டிகை!

'ரெய்ன் தமிழ்க் குழுமம்' என்ற தமிழர் அமைப்பு, தீபாவளி பண்டிகையை ஜெர்மனியில் கோலாகலமாகக் கொண்டாடியுள்ளது.

Published:Updated:
ரெய்ன் தமிழ்க் குழுமம்

தமிழர்கள் உலகம் முழுவதும் பல்வேறு நாடுகளுக்குப் புலம்பெயர்ந்து வாழ்ந்து வருகின்றனர். அவர்கள் தங்களின் சொந்த ஊரை நினைவுகூரும் வகையில் தற்போது வசிக்கும் நாடுகளில் குழுமங்களாக ஒன்றிணைந்து தமிழ் மற்றும் இந்தியக் கலாச்சரங்களின் பண்பாட்டு நிகழ்வுகளையும் பண்டிகைகளையும் கொண்டாடி வருகின்றனர். அந்த வகையில் இந்தியா முழுவதும் கொண்டாடப்படும் தீபாவளி பண்டிகையை நவம்பர் 12-ம் தேதி உலகம் முழுவதும் இருக்கும் பல்வேறு நாடுகளைச் சேர்ந்த தமிழர் அமைப்பினர் கோலாகலமாகக் கொண்டாடினர்.

ரெய்ன் தமிழ்க் குழுமம், தீபாவளி திருநாள் கொண்டாட்டம்
ரெய்ன் தமிழ்க் குழுமம், தீபாவளி திருநாள் கொண்டாட்டம்

இந்தச் சூழலில் ஜெர்மனியின் கொலோன் நகரில் உள்ள 'ரெய்ன் தமிழ்க் குழுமம்' என்ற தமிழர் அமைப்பு, கடந்த நவம்பர் 12-ம் தேதி தீபாவளி திருநாளைப் புத்தாடை, இனிப்புகள், பட்டிமன்றம், கலைநிகழ்ச்சிகள் மற்றும் வினா விடை போட்டிகள், அறுசுவை உணவு, நண்பர்களுடனான கலந்துரையாடல் எனக் கோலாகலமாகக் கொண்டாடியுள்ளனர். இந்நிகழ்ச்சியை 'ரெய்ன் தமிழ்க் குழுமம்' அமைப்பின் தலைவர் மற்றும் குழு உறுப்பினர்கள் குத்துவிளக்கு ஏற்றி வைத்துத் தொடங்கி வைத்துள்ளனர். இந்த விழாவின் சிறப்பம்சமாகத் தமிழருடன் பிறமாநிலத்தவரும் ஜெர்மானியர்களும் பங்கேற்றுச் சிறப்பித்துள்ளனர்.