Published:Updated:

`ஒரு மாஸ்க் வித்தா அஞ்சு ரூவா கெடைக்கும், ஆனா..!’ - கலங்க வைத்த வியாபாரிகள் #MyVikatan

பட்டினப்பாக்கம் சுகுமார்

பொதுவெளியில் எல்லோரும் முக கவசம் அணியவேண்டியே நடமாட வேண்டி இருப்பதால், சென்னை நகரில் பலர் இப்போது முக கவசம் விற்பதை காண முடிகிறது...

`ஒரு மாஸ்க் வித்தா அஞ்சு ரூவா கெடைக்கும், ஆனா..!’ - கலங்க வைத்த வியாபாரிகள் #MyVikatan

பொதுவெளியில் எல்லோரும் முக கவசம் அணியவேண்டியே நடமாட வேண்டி இருப்பதால், சென்னை நகரில் பலர் இப்போது முக கவசம் விற்பதை காண முடிகிறது...

Published:Updated:
பட்டினப்பாக்கம் சுகுமார்

பொறுப்புத் துறப்பு: இந்தக் கட்டுரை வாசகரின் படைப்பு. கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்களுக்கும் கருத்துகளுக்கும் அதன் ஆசிரியரே பொறுப்பாவார். கட்டுரை சம்பந்தமாக உங்களுக்கு ஆட்சேபனை இருந்தால், my@vikatan.com-க்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்!

கடந்த 6 மாதகாலமாக ஆட்டம் காட்டும் கோவிட்-19 தமிழகத்தில் அனைத்து தரப்பு மக்களிடமும் பாதிப்பை ஏற்படுத்தி உள்ளது. குறிப்பாக அன்றாடம் காய்ச்சிகள் என்று சொல்லப்படும் அடித்தட்டு மக்கள் சொல்லொண்ணா துயரத்திற்கு ஆளாகி உள்ளனர்.

பொதுவெளியில் எல்லோரும் முகக் கவசம் அணிந்தே நடமாட வேண்டி இருப்பதால், சென்னை நகரில் பலர் இப்போது முக கவசம் விற்பதைக் காண முடிகிறது. இதற்கு முன்னர் வெவ்வேறு சாலையோரக் கடைகள் போட்டிருந்தவர்களும், தற்போது மாஸ்க் விற்கும் தொழிலில் ஈடுபட்டு வருகின்றனர்.

என் வேலை நிமித்தமாக இந்த லாக்டெளன் காலக்கட்டத்திலும் சென்னையில் சில இடங்களுக்கு பயணிக்க நேர்ந்தது. அப்படியாக நான் கடந்து வந்த நடைபாதைகளில் மாஸ்க் வியாபாரம் செய்தவர்கள் சிலரிடம் பேச்சுக் கொடுத்தேன். அவர்கள் வாழ்வாதாரம் பற்றித் தெரிந்துகொள்ள வேண்டும் என்று தோன்றியது. அவர்களின் சம்மதத்துடன் அவர்களை புகைப்படமும் எடுத்தேன். இங்கே என் உரையாடல்களையும் புகைப்படங்களையும் பகிர்கிறேன்.

முருகன்-தாம்பரம்
முருகன்-தாம்பரம்

பட்டினப்பாக்கத்தில் சுகுமார் என்ற வியாபாரியிடம் பேச்சு கொடுத்தபோது, ``இதுக்கு முன்னாடி மயிலாப்பூர் கோயில்கிட்ட வளையல், பொட்டு, கண்ணாடி, சீப்பு-ன்னு பேன்ஸி ஐட்டங்கள் வித்துட்டு இருந்தேன். இப்போ கோயில் மூடிட்டதால், வேற வழியில்ல. அதான் திருப்பூர் பார்ட்டிகிட்ட மொத்தமாக மாஸ்க், கையுறை வாங்கி விற்கிறேங்க." என்றவரிடம், "எதிர்பார்த்த லாபம் கிடைக்குதாங்க?" என்று கேட்டேன்.

``எங்கேங்கே, பெருசா லாபம் ஏதும் கிடையாதுங்க... எப்படியாவது பிழைக்கனுமில்லங்க.. இங்கே மீன் வாங்க வர்றவங்க வாங்குவாங்கன்னு நம்பிக்கையில் கடையை போட்டிருக்கேன். மீன் வாங்க வர்றவங்க பெரும்பாலும் மாஸ்க்கோட தான் வர்றாங்க. ஆனா நீங்களே பாருங்க.. இங்கே கடை போட்டிருக்கிறவங்க மாஸ்க் இல்லாமதான் இருப்பாங்க, நீங்க பார்த்தாலே தெரியும். அவங்ககிட்ட வற்புறுத்தி கெஞ்சிதான் விற்பேன்" என்றார்.

நான் தி.நகர் செல்ல நேர்ந்த போது அங்கு பாஃத்திமா என்ற பெண் சாலையோரம் மாஸ்க் விற்று கொண்டிருந்தார். அவரிடமும் பேச்சுக் கொடுத்தேன்.

``இதுக்கு முன்னாடி நான் கல்யாண வீடுகள்ல கோலம் போடுறது, மெகந்தி அலங்காரம் செய்யுறதுன்னு பண்ணிட்டு இருந்தேன். இப்போ லாக்டௌன்ங்கிறதால 5 மாசமா வேலைக்கே போகலை. வீட்டுக்காரர் இங்கே தி.நகரில் பிளாட்பாரக் கடை போட்டிருக்கார். அவருக்கும் சரியா வியாபாரம் இல்லை. அதான் இப்போ இந்த வியாபாரத்தில இறங்கிட்டேன்."

ராஜன்-மேடவாக்கம்
ராஜன்-மேடவாக்கம்

ராஜன்-மேடவாக்கம்:

``எனக்கு இங்கே கீழ்க்கட்டளையில் வீடு இருக்குங்க. முன்னர் ஆலந்தூர் கோர்ட் காம்பஸ்ல தம் டீ வித்தேன். இப்போ கோர்ட்டை மூடிட்டாங்க. எப்போ திறப்பாங்கன்னு தெரியலை. அதான் வேற வழியில்லை. முன்ன இந்த டி.வி.எஸ்-50 வண்டியில தான் டீ வித்தேன். இப்போது மாஸ்க், கையுறை, கர்சிப், மணி பர்சுன்னு வியாபாரத்தை மாத்திக்கிட்டேன்."

முருகன்-தாம்பரம்;

"நான் தி.நகர் ரங்கநாதன் தெருவுல வாட்ச் கடை போட்டிருந்தேன். இப்ப வியாபாரம் இல்லைங்கே. அதான் இங்கே ரோட்டோரம் கடை போட்டு மாஸ்க் வித்துகிட்டு இருக்கேன்."

"இப்ப தான் தி.நகரில் எல்லா கடைகளும் திறந்துட்டாங்களே?"

"கடை திறந்தா மட்டும் போதுமாங்க.. பஸ், ட்ரெயின் ஓடுனாத்தானே ஜனங்க வருவாங்க.? அப்பத்தானே எங்களுக்கும் வியாபாரம் நடக்கும்?" என்றார்.

நான் சந்தித்த மனிதர்கள் அனைவருமே, ``இந்த மாஸ்க் விற்பதால் பெருசா லாபம் கிடையாதுங்க. ஒரு மாஸ்க் விற்றா 5 ரூபாய் கிடைக்கும். இந்த 5-க்கும் 10-க்கும் ரொம்ப கஷ்டப்பட வேண்டி இருக்கு’’ என்னும் வருத்தத்தையே வெளிப்படுத்தினர். இவர்களுக்கு விரைவில் தீர்வு கிடைக்கட்டும்.!

-அ.லேகா ஸ்ரீ

விகடனில் உங்களுக்கென ஒரு பக்கம்...

உங்கள் படைப்புகளைச் சமர்ப்பிக்க இங்கே க்ளிக் செய்க https://www.vikatan.com/special/myvikatan/

My Vikatan
My Vikatan

ஏதோ ஓர் ஊரில், எங்கோ ஒரு தெருவில் நடந்த ஒரு விஷயம்தான் உலகம் முழுக்க வைரலாகிறது. உங்களைச் சுற்றியும் அப்படியொரு வைரல் சம்பவம் நடந்திருக்கலாம்... நடந்துகொண்டிருக்கலாம்... நடக்கலாம்..! அதை உலகுக்குச் சொல்வதற்காகக் களம் அமைத்துக் கொடுக்கிறது #MyVikatan. இந்த எல்லையற்ற இணையவெளியில் நீங்கள் செய்தி, படம், வீடியோ, கட்டுரை, கதை, கவிதை என என்ன வேண்டுமானாலும் எழுதலாம். மீம்ஸ், ஓவியம் என எல்லாத் திறமைகளையும் வெளிப்படுத்தலாம்.

உங்கள் படைப்புகளைச் சமர்ப்பிக்க இங்கே க்ளிக் செய்க https://www.vikatan.com/special/myvikatan/