சிந்துவெளி நாகரிகம் சார்ந்து 30 ஆண்டுகளுக்கும் மேலாக ஆய்வுசெய்துவருபவர் ஓய்வுபெற்ற ஐஏஎஸ் அதிகாரியும், இந்தியவியலாளருமான ஆர்.பாலகிருஷ்ணன். அந்த ஆய்வுகளின் விளைவாக அவர் எழுதிய, Journey of a Civilization: Indus to Vaigai (‘ஒரு நாகரிகத்தின் பயணம்: சிந்துவெளி முதல் வைகை வரை') என்ற முக்கியத்துவம் வாய்ந்த நூலை ரோஜா முத்தையா ஆய்வு நூலகம் 2019-ம் ஆண்டு வெளியிட்டது. சிந்துவெளி நாகரிகம் சார்ந்து புதிய திறப்புகளை வழங்கிய இந்த நூல் உடனடிக் கவனம்பெற்று, விற்பனையிலும் சிறப்பிடத்தைப் பிடித்தது.

குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்துக்கு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இந்த நூலைப் பரிசளிக்க, இந்த நூலுக்கு மேலும் கவனம்கூடியது. இந்தப் பின்னணியில், இந்த நூலை மையப்படுத்திய நாள்காட்டி ஒன்றை ரோஜா முத்தையா ஆய்வு நூலகம் வெளியிட்டிருக்கிறது.
ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!
உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க
VIKATAN DEALSரோஜா முத்தையா ஆய்வு நூலகத்தில் நடந்த நாள்காட்டி வெளியீட்டு விழாவில், இந்த நூலக அறக்கட்டளையின் மூத்த அறங்காவலர் ரமணி நடராஜன் நாள்காட்டியை வெளியிட ஓவியர் டிராட்ஸ்கி மருது, மூத்த பத்திரிகையாளர் ஏ.எஸ்.பன்னீர்செல்வன் நாள்காட்டியைப் பெற்றுக் கொண்டனர்.

ரோஜா முத்தையா ஆய்வு நூலக இயக்குனர் சுந்தர் கணேசன் இந்த நாள்காட்டி குறித்துப் பேசும்போது, “‘ஒரு நாகரிகத்தின் பயணம்: சிந்துவெளி முதல் வைகை வரை' நூலை டிசம்பர் 2019-ல் வெளியிட்டோம். முதல் பதிப்பாக இரண்டாயிரம் பிரதிகள் அச்சிட்டிருந்த நிலையில், நூல் கவனம்பெற்று உடனடியாக விற்றுத்தீர்ந்தது. எனினும் 100 பிரதிகளை நாங்கள் பத்திரப்படுத்தியிருந்தோம். நூல் தேவை என்று பல்வேறு இடங்களில் இருந்து கோரிக்கை வந்துகொண்டிருந்த நிலையில், குடியரசுத் தலைவரை முதலமைச்சர் ஸ்டாலின் சந்தித்தபோது இந்த நூலைப் பரிசளிக்க, மீண்டும் இந்த நூல் கவனம்பெற்று இரண்டாம் பதிப்பு அச்சிடுவதற்கான தேவையை உருவாக்கியது. இதைத் தொடர்ந்து கடந்த ஜூலை மாதம் இரண்டாம் பதிப்பாக ஆயிரம் பிரதிகள் அச்சிட்டோம். இதுவரை 900 பிரதிகள் விற்றுத்தீர்ந்துவிட்டன,” என்றார்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
தொடர்ந்து பேசிய சுந்தர் கணேசன், “நூல் பெற்ற வரவேற்பைத் தொடர்ந்து சாத்தியமுள்ள வழிகளில் சிந்துவெளி நாகரிகம் பற்றிய விழிப்புணர்வை மக்களிடம் கொண்டுசெல்ல விரும்பினோம். அதன்படி Journey of a Civilization நூலை அடிப்படையாகக் கொண்டு நாள்காட்டி ஒன்றை வெளியிடுவது என கடந்த செப்டம்பர் மாதம் திட்டமிட்டோம். ஆனால், நிதியுதவி இல்லாமல் திட்டம் செயல்வடிவம் பெறுவதில் தாமதம் ஏற்பட்ட நிலையில், இப்போது 500 பிரதிகள் அச்சிட்டு வெளியிட்டிருக்கிறோம். ஓவியர் டிராட்ஸ்கி மருது காலண்டர் ஓவியங்களின் வரலாறு மற்றும் முக்கியத்துவம் குறித்துப் பேசியது வெளியீட்டு நிகழ்வில் சிறப்புரையாக அமைந்தது,” என்றார்.

“ஆதாரங்கள் அடிப்படையில், நம்பத்தகுந்த வகையில் அமைந்த சிந்துவெளி நாகரிகத்தின் சிறப்புகள் எல்லோரையும் சென்றடைய வேண்டும் என்ற நோக்கில், நாள்காட்டியின் மென்பிரதியை இணையத்தில் இலவசமாக வெளியிட்டிருக்கிறோம். ஜான் மார்ஷல் சிந்துவெளி நாகரிக இடங்களைக் கண்டுபிடித்த ஆண்டின் நூற்றாண்டு 2024-ல் வருகிறது. அந்தக் கொண்டாட்டங்களுக்கு முன்னோட்டமாகவும் இந்த நாள்காட்டி அமைந்திருக்கிறது!” சுந்தரின் குரலில் பெருமை நிறைந்திருக்கிறது.
Journey of a Civilization நாள்காட்டியை இலவசமாகத் தரவிறக்கம் செய்ய, இங்கு க்ளிக் செய்யவும்...