Published:Updated:

முதல்வர் நிவாரண நிதி: சக்தி மசாலா நிறுவனம் சார்பில் ரூ.5 கோடி நன்கொடை!

இயக்குநர்கள் பி.சி துரைசாமி, சாந்தி துரைசாமி
இயக்குநர்கள் பி.சி துரைசாமி, சாந்தி துரைசாமி

சக்தி மசாலா நிறுவனம் சார்பில், கொரோனா நிவாரண நிதியாக ரூ.5 கோடி தமிழக முதல்வர் நிவாரண நிதிக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

இது குறித்து சக்திமசாலா நிறுவனம் தெரிவித்துள்ள அறிக்கையில், "ஈரோட்டில் உள்ள சக்தி மசாலா நிறுவனம் பல்வேறு சமூக பணிகளில் தொடர்ந்து ஈடுபட்டு வருகிறது. கொரோனா முதல் அலை வந்த கடந்த ஆண்டும், பல்வேறு நிவாரணப்பணிகளில் முழு மூச்சுடன் செயல்பட்டார்கள். இந்த ஆண்டும் சக்தி மசாலா நிறுவனம் பல்வேறு கொரோனா நிவரண பணிகளில் தொடர்ந்து ஈடுபட்டு வருகிறது.

தமிழகத்தில் கொரோனா பேரிடரை எதிர்கொள்ள நிவாரண நிதியாக அனைவரும் பங்களிப்பு செய்ய வேண்டும் என ஊடகங்கள் வாயிலாக முதல்வர் ஸ்டாலின், கேட்டுக்கொண்டுள்ளார். அதன்படி, சக்தி மசாலா நிறுவனம் சார்பில் ரூ.5 கோடி நிவாரண நிதியை தமிழக முதல்வர் நிவாரண நிதிக்கு மே.15-ம் தேதி ஆர்டிஜிஎஸ் மூலம் அனுப்பி வைக்கப்பட்டது. இது குறித்து முதலவருக்கும் கடிதம் அனுப்பி உள்ளார்கள்.

முதல்வர் ஸ்டாலின்
முதல்வர் ஸ்டாலின்

தமிழக முதல்வர் ஸ்டாலின் தலைமையின் கீழ் அமைச்சர்கள், எம்எல்ஏ-க்கள், சுகாதாரம், வருவாய் துறை, காவல்துறை, உணவு வழங்கல் துறை, தொழிலாளர் நலத்துறை, தீயணைப்பு துறை, மாநில பேரிடர் மேலாண்மை துறை, உள்ளாட்சி துறை, அனைத்து மாவட்ட நிர்வாகம் மற்றும் அனைத்து துறை அதிகாரிகள், களப்பணியாற்றி வரும் பணியாளர்கள், மருத்துவர்கள், செவிலியர்கள், சுகாதாரப் பணியாளர்கள், காவலர்கள், ஊர்க்காவல் படையினர், முன்னாள் ராணுவத்தினர், தன்னார்வலர்கள், தொண்டு நிறுவனங்கள் போன்ற அனைவரும் ஒன்றிணைந்து கொரோனா வைரஸ் பரவல் தடுப்பு பணிகளில் போர்க்கால அடிப்படையில் இரவு பகலாக ஓய்வின்றி சிறப்பாக பணிபுரிந்து வருவதற்கு சக்தி மசாலா நிறுவனம் வணக்கத்தையும், பாராட்டையும், நன்றியையும் தெரிவித்து கொள்கிறது."

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டு உள்ளது. கூடிய விரைவில் கொரோனா வைரஸ் முழுமையாகக் கட்டுப்படுத்தப்பட்டு பொது மக்கள் அனைவரும் நலமுடன் வாழ இறைவனை வணங்கி வேண்டுகிறது சக்தி மசாலா நிறுவனம், என நிர்வாக இயக்குநர்கள் பி.சி துரைசாமி, சாந்தி துரைசாமி தெரிவித்தனர்.

அடுத்த கட்டுரைக்கு