தமிழக அரசு "மீண்டும் மஞ்சப்பை" என்ற இயக்கத்தை ஆரம்பித்துள்ளது. இது பிளாஸ்டிக்குகள் பயன்பாட்டை குறைப்பதற்கான முயற்சிகளில் ஒன்று. ஆனால், பிளாஸ்டிக்குகள் பயன்பாடு அதிகரித்துக்கொண்டே போகிறது. இன்றைக்கு உற்பத்தி செய்யும் பிளாஸ்டிக்குகளைப் போல இரண்டு மடங்கு பிளாஸ்டிக்குகள் 2040 ஆம் ஆண்டு உற்பத்தி செய்யப்படும்.
நாம் அதிகம் பயன்படுத்தும் பிளாஸ்டிக்குகள் PET, Polyethylene மற்றும் Polystyrene. தண்ணீர் மற்றும் குளிர்பான பாட்டில்கள் தயாரிக்க PET பயன்படுகிறது. உணவுப் பண்டங்களுக்கான பேக்கேஜிங்கில் Polystyrene பயன்படுத்தப்படுகிறது. நாம் பயன்படுத்தும் கேரி பேக்குகள் Polyethylene ஆல் தயாரிக்கப்படுபவை. பயன்படுத்திய பிறகு பிளாஸ்டிக்குகளை குப்பையில் போடுகிறோம். அது நிலத்தில் புதைந்து விடுகிறது. அல்லது நீர்நிலைகள் மூலம் கடலில் கலந்து விடுகிறது. கடலில் பிளாஸ்டிக் குப்பைகள் குவிந்திருக்கும் பகுதியை Great Pacific Garbage Patch என்று அழைக்கிறோம். அதன் பரப்பளவு பிரான்ஸ் நாட்டைப் போல மூன்று மடங்கு பெரியது.

கடலில் இருக்கும் காலத்தில் அந்த பிளாஸ்டிக்குகள் மைக்ரோ பிளாஸ்டிக்குகளாக மாறுகிறது. மைக்ரோ பிளாஸ்டிக்குகள் என்பவை ஐந்து மில்லி மீட்டருக்கும் குறைவான அளவை கொண்டவை. ஒரு அரிசி அளவு இருப்பவை மைக்ரோ பிளாஸ்டிக்குகள். இவற்றை கடல் பறவைகள் மற்றும் விலங்கினங்கள் சாப்பிட்டு விடுகின்றன. 2050 ஆம் ஆண்டுக்குள் கடல் பறவைகளில் 99% மைக்ரோ பிளாஸ்டிக்குகளை உட்கொண்டிருக்கும் என்று கணிக்கப்படுகிறது. இதுவரை மனிதனுக்கு இந்த மைக்ரோ பிளாஸ்டிக்குகளால் என்ன பாதிப்பு என்று தெரிந்திருக்கவில்லை. தி நெதர்லாந்து நாட்டின் Vrije பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் அதிர்ச்சிகரமான தகவல்களை வெளியிட்டுள்ளனர். 22 நபர்களுடைய ரத்தத்தை பரிசோதித்த பொழுது, 17 நபர்களின் ரத்தத்தில் மைக்ரோ பிளாஸ்டிக்குகள் இருந்ததை கண்டுபிடித்திருக்கிறார்கள்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!
உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க
VIKATAN DEALSஇந்த மைக்ரோ பிளாஸ்டிக்குகள் PET, Polystyrene மற்றும் Polyethylene ஆல் ஆனவை என்பதையும் கண்டுபிடித்துள்ளனர். முன்பொரு ஆராய்ச்சியில் இந்த மைக்ரோ பிளாஸ்டிக்குகள் இரத்த அணுக்களில் ஒட்டிக்கொள்வதை கண்டறிந்திருந்தனர். அதன் காரணமாக ஆக்ஸிஜன் இரத்தத்தில் கடத்தப்படுவது பாதிக்கப்படும் என்றும் குறிப்பிட்டிருந்தனர். அதற்கு முன்பு பிளாஸ்டிக்குகள் ரத்தத்தில் கலக்காது என்று நம்பிக் கொண்டிருந்தனர். குழந்தைகளின் மலத்தில் மைக்ரோ பிளாஸ்டிக்குகள் இருப்பதை கண்டுபிடித்தனர். பால் பாட்டில்களில் இருந்து மைக்ரோ பிளாஸ்டிக்குகள் உணவுக் குழாய்க்குள் சென்றிருக்கலாம். அவை இரத்தத்தில் கலக்காமல் மலத்தில் வெளியேறிவிடும் என்பது நம்பிக்கையாக இருந்தது. ஆனால், அது உண்மையல்ல என்று நிரூபிக்கப்பட்டுள்ளது.

கர்ப்பமாக இருந்த எலிகளில் மைக்ரோ பிளாஸ்டிக்குகள் கருவில் வளர்ந்து வரும் எலியின் மூளை, இதயம் மற்றும் நுரையீரல் போன்ற உறுப்புகளுக்கு மிக விரைவாக கடத்தப்படுவதை விஞ்ஞானிகள் கண்டறிந்திருக்கிறனர். மனிதர்களின் ரத்தத்தில் இருக்கும் மைக்ரோ பிளாஸ்டிக்குகள் அவர்களின் மூளை இதயத்திற்கும் செல்லுமா? இந்த மைக்ரோ பிளாஸ்டிக்குகள் என்னவிதமான நோய்களை மனித உடலில் உண்டாக்கும்? இப்போதைக்கான பதில், தெரியவில்லை.
-முனைவர்.கோதண்டம் கிருஷ்ணமூர்த்தி, மூத்த முதன்மை விஞ்ஞானி, சி.எஸ்.ஐ.ஆர்
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
விகடனில் உங்களுக்கென ஒரு பக்கம்...
உங்கள் படைப்புகளைச் சமர்ப்பிக்க - my@vikatan.com என்ற மின்னஞ்சலுக்கு அனுப்புங்கள்!

ஏதோ ஓர் ஊரில், எங்கோ ஒரு தெருவில் நடந்த ஒரு விஷயம்தான் உலகம் முழுக்க வைரலாகிறது. உங்களைச் சுற்றியும் அப்படியொரு வைரல் சம்பவம் நடந்திருக்கலாம்... நடந்துகொண்டிருக்கலாம்... நடக்கலாம்..! அதை உலகுக்குச் சொல்வதற்காகக் களம் அமைத்துக் கொடுக்கிறது #MyVikatan. இந்த எல்லையற்ற இணையவெளியில் நீங்கள் செய்தி, படம், வீடியோ, கட்டுரை, கதை, கவிதை என என்ன வேண்டுமானாலும் எழுதலாம். மீம்ஸ், ஓவியம் என எல்லாத் திறமைகளையும் வெளிப்படுத்தலாம்.