Published:Updated:

ஏன் இந்திய-சீன எல்லையில் இத்தனை சலசலப்பு..? - ஒரு ஃப்ளாஷ்பேக் #MyVikatan

திபெத்துடனா லடாக்கின் உண்மையான எல்லையை யாருமே துல்லியமாக வரையறுக்கவில்லை. அதுவே பிரச்னைக்குரியதாகியது.

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள... இங்கே க்ளிக் செய்து இன்றே விகடன் ஆப் இன்ஸ்டால் செய்யுங்கள்!

பொறுப்புத் துறப்பு : இந்தக் கட்டுரை வாசகரின் படைப்பு. கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்களுக்கும் கருத்துகளுக்கும் அதன் ஆசிரியரே பொறுப்பாவார். கட்டுரை சம்பந்தமாக உங்களுக்கு ஆட்சேபனை இருந்தால், my@vikatan.com-க்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்!

``வெல்ல நினைப்பவர்களும் அழிக்க நினைப்பவர்களும் தான் போரை விரும்புகிறார்கள்.

வாழ நினைப்பவர்கள் வேறு வழியின்றி அந்தப் போரை எதிர்கொள்கின்றனர்'' என எழுதியிருப்பார் சு.வெங்கடேசன்.

அதுபோல்தான் எதிர்கொள்ள வேண்டிய நிலை இந்தியாவுக்கு ஏற்பட்டது 1964 சீனப்போரில்.

இந்தியாவும் சீனாவும் நட்பு நாடுகளாகவே இருந்தன. இந்தியா 1947-லிலும், சீனா 1949-ல் கொமின்டாங் கட்சியினர் கம்யூனிஸ்டுகளால் முறியடிக்கப்பட்டு மக்கள் குடியரசு நாடாக விடுதலையானவை. ஐநாவில் சீனா இடம்பெறவும், பஞ்ச சீலக் கொள்கை உருவாக்குவதிலும் இணைந்த கைகளாய்ச் செயல்பட்டன. பல காரணங்களினால் சீனாவிற்கும் நமக்கும் விரிசல் உண்டானது.

Representational Image
Representational Image
AP

#மக்மோகன் கோடு

பிரிட்டிஷாரால் 1873ம் ஆண்டு இந்திய எல்லையில் ஒழுங்கைக் கொண்டுவர நிர்வாகப் பணிகளுக்காக உள் எல்லைக் கோட்டினையும், அரசியல் பிரச்னைக்காக வெளி எல்லைக்கோடும் வரையப்பட்டது. பின் 1914-ல் பிரிட்டன் அதிகாரி மெக்மோகன் என்பவரால் வரையப்பட்டது. அப்போது சீனப் பிரதிநிதி இலான் கலந்துகொண்டு இது ஒரு சம்பிரதாயக் கையொப்பம், இதனை சீனா அங்கீகரிக்கவில்லை எனக் கூறி கையொப்பமிட்டார். அடுத்தமுறை இந்தியா-திபெத் மட்டுமே கையொப்பமிட்டது.

பிரிட்டிஷாரின் மாறுபட்ட 11 எல்லை வரையறை இருப்பதாகக் கூறியும், வரைபடத்தில் மிக்யிடுன் கிராமம் திபெத் புனிததலம் என்பதால் 20 மைல் சீன இடத்தில் தள்ளி வரைபடம் வந்துள்ளதாகவும் சீனா கையொப்பமிடவில்லை.

#எல்லையே தொல்லை

இந்திய சீன எல்லை 3488 கி.மீ நீளமுடையது. இந்திய சீன எல்லையை மூன்றாகப் பிரிக்கலாம். சிந்து-காரக்கோரக் கண்வாயிலிருந்து டெம்சாக் வரை மேற்குப்பகுதியும், அங்கிருந்து நேபாளம் வரை நடுப்பகுதியும், பூட்டானிலிருந்து பர்மாவரை கிழக்குப்பகுதியாக வரையறுத்தது.

திபெத்துடனா லடாக்கின் உண்மையான எல்லை யாராலும் துல்லியமாக வரையறுக்கப்படவில்லை. அதுவே பிரச்னைக்குரியதாகியது.

Representational Image
Representational Image

லடாக் பகுதியிலிருந்த அக்சாய் சின் எனும் தரிசு நிலத்தில் சிங்கியாங்- யார்க்கண்ட் நகரிலிருந்து மேற்கு திபெத் கார்டேக் வரை செல்ல சாலை அமைத்தது. 750 கி.மீ நீளமுள்ள மொத்தச் சாலையில் 112 கி.மீ இந்திய நிலப்பரப்பு எனத் தெரியவந்தது.

அப்போதைய துணைக் குடியரசுத் தலைவர் ராதாகிருஷ்ணனின் மகன் கோபால், லண்டன் சென்று ஆய்ந்து சர்ச்சைக்குரிய அக்சாய் சின் பகுதி சீனாவைவிட இந்தியாவுக்கு உரிமை உள்ளதென அறிக்கை தந்தார். ஆனால் சீனாவோ தம்முடைய நாட்டு வரைபடத்தில் அக்சாய் சின் சீனாவிற்கானது என வாதிட்டது. மெக்மோகன் கோடு ஏகாதிபத்திய திணிப்பாகக் கருதியதால், சீனர்கள் அதை ஏற்க மறுத்தனர்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

#திபெத் கிளர்ச்சி

1954 ஏப்ரல் 1, பஞ்சசீலக் கொள்கை உருவானது.

1955ல் சீனா திபெத்தை முழுவதும் கைப்பற்றியது. அதனை எதிர்த்து 1959 திபெத்தியர் கிளர்ச்சியில் ஈடுபட்டனர். இதனை இந்தியா தூண்டுவதாக சீனா நினைத்தது. அப்போது நாட்டின் அதிபராக இருந்த 14வது தலாய்லாமா, தன் ஆதரவாளர்கள் 9,000 பேருடன் இந்தியா வந்தார். அவர்கள் முசௌரியில் தங்கவைக்கப் பட்டனர்.

தலாய்லாமாவுக்கு அடுத்த தலைவரான பஞ்சன்லாமா திபெத்திலேயே தங்கிவிட்டார். திபெத்தியர்களுக்கும் லாமாவுக்கும் ஆதரவு கொடுத்ததினால் இந்தியா மீது சீனா சினம் கொண்டது.

1959 ஆகஸ்ட் 25ல் லாங்ஜூ-கொங்கா-கணவாய் மோதல் ஏற்பட்டது. ஒருவர் பலியானார். சீன எல்லையில் வந்ததால் சுட நேர்ந்தது எனவும் எல்லைப் பிரச்னை பேசித்தீர்க்க விரும்புவதாக சீனா தெரிவித்தது. அஸ்ஸாம் மாநில எதிர்க்கட்சித்தலைவர் புதிய கோடு போடலாம் என யோசனை தெரிவித்தார்.

Nehru
Nehru

#பரஸ்பரச் சந்திப்புகளும் விளைவுகளும்

1954 ல் நேரு சீனா சென்றபோதும், 1955 பாண்டுங் மாநாட்டில் சூ என் லாயைச் சந்தித்த போதும் முடிவு ஏற்படவில்லை. பின் கடிதப் போக்குவரத்து தொடர்ந்தது.

சூ என் லாய் மேற்குப் பிராந்தியத்தில் அவரவர் கட்டுப்பாட்டு எல்லையிலிருந்து 20 கி.மீ பின்வாங்கிய பிறகு பேச்சுவார்த்தை தொடங்கலாம் என்றார். ஆனால், இந்தியா சிங்கியான் பகுதியை விட்டு சீனா செல்லவேண்டும் என்றது. அதற்கு லாய், ``இந்தியா மேற்குப் பகுதியில் உரிமை கொண்டாடினால் சீனாவுக்குக் கிழக்குப்பகுதியில் விட்டுக் கொடுக்கவேண்டும்’’ என்றார்.

1960 ஏப்ரல் 19ல் சூ என் லாய் இந்தியா வந்தார். ஆனாலும் சுமுக உறவு ஏற்படவில்லை. எல்லை பற்றி விவாதம் குறைந்தது.

*1959ல் அமெரிக்க அதிபர் ஐஸனோவர் இந்தியா வந்தபோது இந்தியாவுக்கு உதவுவதாகக் கூறினார். 1961ல் நேருவும் வாஷிங்டன் சென்றார். இது சீனாவுக்குப் பிடிக்கவில்லை.

*தலாய்லாமா சீனாவை விமர்சிப்பதும், மும்பையில் சீனத் தூதரகம் முன்பு நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் மாவோவின் உருவப்படத்தின் மீது சோசலிஸ்ட் உறுப்பினர் முட்டைவீசித் தாக்கியதும் நேருவுக்கு தர்மசங்கடத்தை ஏற்படுத்தியது.

*ராணுவத்தளபதி திம்மையா ஓய்வு பெற்றபோது chief of army staff தாப்பரும், Chief of general staff கெளலும் பொறுப்பேற்றனர். கெளல் தனக்கு உரியவர்களைப் பணியில் அமர்த்தினார்.

*1961 கோவாவில் சர்ச்சை ஏற்பட்ட போது ராணுவம் மூலம் இந்தியாவுடன் இணைக்கப்பட்டது. இது சீனாவுடன் போராடும் நம்பிக்கையைக் கொடுத்தது.

 Xi Jinping  and Narendra modi
Xi Jinping and Narendra modi
AP

*காஷ்மீர் பிரச்னை, உள்நாட்டுப் பிரச்னை ஆகியவற்றால் மூன்றாவது ஐந்தாண்டுத் திட்டத்தில் ஆர்வமில்லை. முழுக்க அந்நிய முதலீட்டையே நம்பியிருந்தது.

*1960ல் பர்மா உடனான எல்லைப் பிரச்னையிலும்,1962ல் பாகிஸ்தான் உடனான எல்லைப் பிரச்னையிலும் 750 சதுரமைல் சீனா விட்டுக் கொடுத்தது. மங்கோலியாவுடனும் பேசி தீர்த்ததால், இந்தியாவுடனும் பேசவே முற்பட்டது.

*எதிர்க்கட்சிகளும், பத்திரிகைகளும் சீனாவுக்குப் பதிலடி தர அழுத்தம் கொடுத்தன.

"முடங்கிக்கிடப்பது அல்லது கையில் கிடைத்த ஆயுதம் கொண்டு போரிடுவது'' எனக் கூறி நேரு இரண்டாவதைத் தேர்ந்தெடுத்தார்.

#போர்

சீனாவுக்கு ஏற்கெனவே எல்லைப்பகுதிக்குச் சாலை வசதி இருப்பதால் மூன்று மணிநேரத்தில் அடைந்துவிடும். ஆனால் இந்தியா 13,000 அடி உயரம் கொண்ட பகுதியை அடைய 6 நாள்களாகும். அதிரடி தாக்குதலுக்கு "லெக்ஹார்ன்" என இந்தியா பெயரிட்டது. நம்காசூவில் இந்தியா படைகளைக் குவித்தது. ராணுவத் தளபதி கெளல் தோலாவில் ஆய்வு செய்தபோது விமானத்தாக்குதல், படைபலம் அதிகரிக்க வேண்டுமெனத் தகவல் அளித்தார். ஆயுதங்கள் பழங்கால என்பீல்ட் துப்பாக்கியே பயன்படுத்தப்பட்டது. அக்டோபர் 10 ம் தேதி காலை 4.30 மணிக்கு 1:20 எனும் முறையில் சீனா தாக்கி முன்னேறியது. தால்வியிடம் பொறுப்பை ஒப்படைத்துவிட்டு டெல்லி வந்துவிட்டார் கெளல். அப்போது 7 வீரர்கள் இறந்ததாகக் கூறப்பட்டது.

*ராணுவ பலத்தை அதிகரிப்பது, போர் ரத்து செய்தாலும் 7 பிரிகேட் பிரிவை ஆற்றங்கரையில் நிற்கவைப்பது என முடிவு எடுக்கப்பட்டது.

*களத்தில் 2,500 வீரர்களும் 500 ஊழியர்களும் இருந்தனர். இருப்பினும் 9 நாள்கள் குழப்பமாய் இருந்தது. தகவல் சொன்னால் லம்புவுக்கு எடுத்துச் சென்று அங்கிருந்து தேஜ்பூர் வழியாக டெல்லி செல்வதால் தகவல் வர தாமதமாவது இடர்பாடாய் இருந்தது.

*அக்டோபர் 17ல் பனிப்பொழிவு ஆரம்பித்தது. சாங்கினில் குளிர் வாட்டியது. கம்பளி ஆடை தரவேண்டும் அல்லது மலையை விட்டு கீழே வர வேண்டும் என இருதலை கொள்ளியாய் வீரர்கள் தவித்தனர்.

*அக்டோபர் 18-ல் சீனா, படைகளை அதிகரித்தது. அக்டோபர் 20ல் அதிகாலை 5 மணிக்கு எச்சரிக்கை வெடி வெடித்தது. தாக்லாவில் கண் இமைக்கும் நேரத்தில் தாக்குதலில் ஈடுபட்டது. இந்தத் தாக்குதல் காலை 5 மணிக்குத் தொடங்கி 9 மணிக்கு முடித்தது.

*அடுத்து சாங்தார், பொம்டிலா, ஹாதங்லாவைப் பிடித்தது. போதிய படை மற்றும் உணவு இல்லாததால் 7 பிரிகேட் படையும் சிதறியது. முடிந்தவரை போரிட்டும் முடியாத நிலையில் சூழலைப் பொறுத்து வேறு இடத்துக்கு மாற அறிவுறித்தியிருந்தது ராணுவம். தாக்லாவைத் தொடர்ந்து வாலாங்கிலும் தோல்வி அடைந்தது இந்தியா.

Representational Image
Representational Image
AP

#போரின் விளைவுகள்

1962ம் நவம்பர் 22ம் தேதி போர் நிறுத்தம் அறிவித்தது சீனா.1959 நவம்பர் 7ம் தேதி இருந்த நிலைக்கே ராணுவம் திரும்ப வேண்டும் என்பது சாரமாகும்.1,383 பேர் இறந்ததாகவும், 1,696 பேர் காணாமல் போனதாகவும் 3,968 பேர் சிறைப்பிடிக்கப்பட்டதாகவும் கூறினர்.

மீண்டும் டெல்லி அல்லது பெய்ஜிங்கில் பேச்சுவார்த்தைக்கு இந்தியா அழைத்தது. 39 நாடுகள் இந்தியாவை ஆதரித்தன. இந்தியா, அக்சாய் சின் சீன வரைபடத்தை ஏற்கமறுத்தால் சீனாவும் மெக்மோகன் கோட்டை ஏற்கமறுக்கும் என்றது. இதுவரை 22 முறை பேச்சுவார்த்தை நடந்துள்ளது.

ஒருவருடைய தவறு இன்னொருவரின் தவறை நியாயப்படுத்திவிடாது என்பது போல் இன்னும் தொடர்கிறது.

-மணிகண்டபிரபு

விகடனில் உங்களுக்கென ஒரு பக்கம்...

உங்கள் படைப்புகளைச் சமர்ப்பிக்க இங்கே க்ளிக் செய்க https://www.vikatan.com/special/myvikatan/

My Vikatan
My Vikatan

ஏதோ ஓர் ஊரில், எங்கோ ஒரு தெருவில் நடந்த ஒரு விஷயம்தான் உலகம் முழுக்க வைரலாகிறது. உங்களைச் சுற்றியும் அப்படியொரு வைரல் சம்பவம் நடந்திருக்கலாம்... நடந்துகொண்டிருக்கலாம்... நடக்கலாம்..! அதை உலகுக்குச் சொல்வதற்காகக் களம் அமைத்துக் கொடுக்கிறது #MyVikatan. இந்த எல்லையற்ற இணையவெளியில் நீங்கள் செய்தி, படம், வீடியோ, கட்டுரை, கதை, கவிதை என என்ன வேண்டுமானாலும் எழுதலாம். மீம்ஸ், ஓவியம் என எல்லாத் திறமைகளையும் வெளிப்படுத்தலாம்.

உங்கள் படைப்புகளைச் சமர்ப்பிக்க இங்கே க்ளிக் செய்க https://www.vikatan.com/special/myvikatan/

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு