Published:Updated:

ஊரடங்கும் வாட்ஸ்அப் குழுவும்..! - ஒரு காமெடி துணுக்கு #MyVikatan

Representational Image
Representational Image ( Unsplash )

அவ்வளவு விறுவிறுப்பாக இருந்த குழு இந்த மூன்று மாதங்களாகக் கிணற்றில் கல்லைப் போட்டதுபோல கம்முன்னு இருந்தது.

பொறுப்புத் துறப்பு : இந்தக் கட்டுரை வாசகரின் படைப்பு. கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்களுக்கும் கருத்துகளுக்கும் அதன் ஆசிரியரே பொறுப்பாவார். கட்டுரை சம்பந்தமாக உங்களுக்கு ஆட்சேபனை இருந்தால், my@vikatan.com-க்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்.

நண்பர்களின் வாட்ஸ்அப் குழு மூன்று மாதங்கள் முன்புவரை மிகவும் பரபரப்பாக இருந்தது. ஒரு நாளைக்கு நூறு மெஸேஜ் வந்த வண்ணம் இருந்தது.

ஒரு மெஸேஜுக்கு பதில் அளிப்பதற்குள் பத்து மெஸேஜஸ் குவிந்துவிடும்.

அரசியல், அலுவலகம், சினிமா, சீரியல் என்று ஒன்று விடாமல் எல்லாமும் குழுவில் புரட்டி எடுக்கப்படும்.

அவ்வளவு விறுவிறுப்பாக இருந்த குழு இந்த மூன்று மாதங்களாக கிணற்றில் கல்லை போட்டதுபோல கம்முனு இருந்தது.

Representational Image
Representational Image
Pixabay

மெதுவாக குழுவில் ராமு...

" எல்லாரும் இருக்கீங்களா? ஏன் ஒரு மெசேஜும் இப்பெல்லாம் யாரும் போடறதே இல்ல... ஒரு கொரோனா ஃபார்வேட் மெசேஜ் கூட காணோமே ஹலோ டியர் நண்பர்களே."

ரொம்ப நேரம் கழித்து கோமுவிடமிருந்து பதில் வந்தது.

கோமு: "டேய் ராமு உனக்கு வாட்ஸ்அப் ல மெசேஜ் பண்ணுற அளவுக்கு டைம் இருக்காடா?

ரவி : அப்போல்லாம் ஆபீஸ் போயிட்டிருந்தோம் வாட்ஸ்அப் ல ஜாலியா அரட்டை அடிச்சிட்டு இருந்தோம்... இப்போ அப்பிடியா. வீட்டு வேலை பென்டெடுக்குதுடா... சரி சரி... நான் துணியை துவைத்துக்கொண்டிருந்தேன்... பாதிலேயே விட்டுவிட்டு உங்களோட பேச ஆரம்பிச்சிட்டேன்... குட்... பை... நண்பர்களே..."

ரகு: சீக்கிரமே ஆபீஸுக்கு வரச் சொல்லனுமுனு வேண்டிக்கோங்கடா...

கொரோனாவால் பதிக்கப்படுவது உடல்நலம் மட்டும் அல்ல.

- பார்வதி நாராயணன்

விகடனில் உங்களுக்கென ஒரு பக்கம்...

உங்கள் படைப்புகளைச் சமர்ப்பிக்க இங்கே க்ளிக் செய்க https://www.vikatan.com/special/myvikatan/

My Vikatan
My Vikatan

ஏதோ ஓர் ஊரில், எங்கோ ஒரு தெருவில் நடந்த ஒரு விஷயம்தான் உலகம் முழுக்க வைரலாகிறது. உங்களைச் சுற்றியும் அப்படியொரு வைரல் சம்பவம் நடந்திருக்கலாம்... நடந்துகொண்டிருக்கலாம்... நடக்கலாம்..! அதை உலகுக்குச் சொல்வதற்காகக் களம் அமைத்துக் கொடுக்கிறது #MyVikatan. இந்த எல்லையற்ற இணையவெளியில் நீங்கள் செய்தி, படம், வீடியோ, கட்டுரை, கதை, கவிதை என என்ன வேண்டுமானாலும் எழுதலாம். மீம்ஸ், ஓவியம் என எல்லாத் திறமைகளையும் வெளிப்படுத்தலாம்.

உங்கள் படைப்புகளைச் சமர்ப்பிக்க இங்கே க்ளிக் செய்க https://www.vikatan.com/special/myvikatan/

அடுத்த கட்டுரைக்கு