Published:Updated:

தெரிந்த படத்தின் தெரியாத குறும்பாடல்கள்..! - மியூசிக் விரும்பிகளுக்கான பகிர்வு #MyVikatan

Representational Image
Representational Image ( Pixabay )

கில்லி திரைப்படம் தமிழ் மக்களுக்கு அதிகம் பரிட்சையமான திரைப்படம் என்பதில் யாருக்கும் மாற்றுக்கருத்து இருக்காது. அப்படியிருந்தும் கில்லியில் நிமிடத்திற்கும் குறைவான ஒரு பாடல் இருப்பது நம்மில் பலருக்குத் தெரியாது.

பொறுப்புத் துறப்பு: இந்தக் கட்டுரை வாசகரின் படைப்பு. கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்களுக்கும் கருத்துகளுக்கும் அதன் ஆசிரியரே பொறுப்பாவார். கட்டுரை சம்பந்தமாக உங்களுக்கு ஆட்சேபனை இருந்தால், my@vikatan.com-க்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்!

பாடல்களை விரும்பி உணர்ந்து கேட்பதே அலாதியான அனுபவம்தான். பெரும்பான்மையான பாடல்களின் காலஅளவு ஐந்து நிமிடங்கள், நான்கு நிமிடங்கள் என இருக்கும். சில பாடல்களின் காலஅளவு ஏன் இவ்வளவு தூரம் நீள்கிறது என்று தோன்றும். சில பாடல்களின் கால அளவை இன்னும் அதிகப்படுத்தியிருக்கலாம் என்று தோன்றும். மக்களிடம் நன்கு வரவேற்பு பெற்ற படங்களில்கூட 'இன்னும் இப்பாடல் நீண்டிருக்கலாம்' என்ற உணர்வையும், 'இப்படியொரு பாடல் இந்த படத்தில் இருக்கிறதா' என்ற கேள்வியையும் எழுப்பும் பாடல்கள் பல இருக்கின்றன.

தெரிந்த படத்தின் தெரியாத குறும்பாடல்கள் என்ற தலைப்பில் வெளிவந்த கட்டுரையில் அம்மாதிரியான பாடல்கள் சிலவற்றை குறிப்பிட்டிருந்த நிலையில், அதன் நீட்சியாக இக்கட்டுரையில் மேலும் சில பாடல்களை காண்போம்.

தெரிந்த படத்தின் தெரியாத குறும்பாடல்கள்! - சினிமா காதலரின் ஷேரிங்ஸ் #MyVikatan
Representational Image
Representational Image
Pixabay

தாண்டவம் - அதிகாலை பூக்கள்:

தாண்டவம் திரைப்படத்தில், திருமணம் முடிந்தபின் தன் கணவனான விக்ரம் வீட்டிற்கு அனுஷ்கா குடியேறுவார். அப்போது இனிமையாய், விக்ரம் அவர்களின் மனநிலையை நா.முத்துக்குமார் அவர்கள் எழுதிய வரிகளால், ஜீ.வி.பிரகாஷ்குமார் தன் குரலில் பாந்தமாய் வெளிப்படுத்தியிருப்பார்.

"அதிகாலை பூக்கள்

உன்னை பார்க்க ஏங்கும்

அந்திமாலை மேகம்

உன்னை பார்த்தே தூங்கும்

கனவுகள் தருகிறாய்

கவிதைகள் தருகிறாய்

உறவுகள் தருகிறாய்

உயிரிலே "

என்று விக்ரம் அவர்களின் மனநிலையை கூறிமுடிக்கும் இப்பாடல், வரிகளால் இசையால் குரலால் காலஅளவை இன்னும் சற்று நீட்டிருக்கலாம் என்ற எண்ணத்தை எழுப்புகிறது.

கில்லி - காதலா காதலா:

'கில்லி' திரைப்படம் தமிழ் மக்களுக்கு அதிகம் பரிட்சையமான திரைப்படம் என்பதில் எவருக்கும் மாற்றுக்கருத்து இருக்காது. இருந்தாலும் கில்லியில் நிமிடத்திற்கும் குறைவான ஒரு பாடல் இருப்பது நம்மில் பலருக்கும் தெரியாது.

விமானத்தில் வெளிநாடு செல்லவிருக்கும் தனலட்சுமியை வேலு அவசர அவசரமாக பல தடைகளுக்கு மத்தியில் விமான நிலையத்திற்கு, பேருந்தின் வாயிலாக அழைத்துச்செல்லும்போது வேலுவை பிரியும் துயர் தாளாதும், காதலை வெளிப்படுத்தாமலும் இருக்கும் துயரை முகபாவணைகளால் வெளிவரத்துடிக்கும் கண்ணீர்த்துளிகளால் தனலட்சுமி வெளிபடுத்திக்கொண்டிருக்கும்போது,

"காதலா காதலா

காதலை காதலால்

சொல்லடா

மெளனமாய் கொல்வது

நல்லதல்லடா

உயிரிலே உயிரிலே

சடுகுடு ஆடினாய்

உண்மையில் உண்மையில்

புரியாமல் போகிறாய்"

என்ற பா.விஜய் அவர்களின் வரிகள், வித்யாசகர் இசையில் ஏக்கமாக ஒலிக்கும்.

Representational Image
Representational Image
Pixabay

யாகவராயினும் நாகாக்க - நீ சொன்ன:

'ஈரம்' திரைப்படத்தில் நடித்து பலரின் கவனத்தை ஈர்த்த ஆதி அவர்களின் நடிப்பில் 'யாகவராயினும் நாகாக்க' 2015-ல் வெளியானது. இத்திரைப்படத்தில் பலருக்கும் தெரிந்த பாடலென்றால் 'சோக்கான பொண்ணு' பாடல் மட்டுமே!

ஆனால், கவிஞர் தாமரையின் வரியில் சில நிமிடங்களே ஒலிக்கும் 'நீ சொன்ன வார்த்தை என்னது' என்கிற பாடல்,

பலருக்கும் தெரியாத ஒன்றே. மிக எளிய குறுகிய வரிகளில் பாடல் இசைத்துக்கொண்டிருக்க நீண்டிருக்கலாம் என்ற எண்ணம் மனதோடு எழும்.

"அழாத விழி

விழாத நடை - என்றே

எனைக் கூறினாய்

தொடாத விரல்

துலாவும் குரல் - கொண்டே

எனைத் திருடினாய் "

போன்ற வரிகளைக் கொண்டது அப்பாடல். கதாநாயகன் ஆதியிடம் கதாநாயகியான நிகில் கல்ராணி தன் விருப்பத்தை கூறும்போது இப்பாடல் ரீங்கராமிடும்.

தங்கமீன்கள் - யாருக்கும் தோழனில்லை:

'மகள்கள் கேட்பவற்றை முடிந்தவரை

முடியாது என்று சொல்லிவிடக்கூடாது

என்கிற வாழ்க்கையை வாழத்தான் அப்பாக்கள் ஆசைப்படுகிறார்கள்'. இவ்வரிகள் பாடல் ஆரம்பிக்கும் முன்னமே இயக்குநர் ராம் அவர்களால் எழுதப்பட்டது. இப்பாடலின் ஆதியும் இதுதான். பின்பு பாடலானது.

"யாருக்கும் தோழனில்லை

தோழனில்லை - வாழ்க்கை

தோழனில்லையே

கேட்டபோது கேட்டயாவும்

வாரி வாரி தந்திட

கடந்துவருவேன் கண்மணி

பனியில் உன்

நனைந்த உருவம் பார்க்கிறேன் "

என்றபடி துவங்கும்.

Representational Image
Representational Image
Pixabay

'தங்கமீன்கள்' திரைப்படத்தில் செல்லம்மாவுக்கு நாய்குட்டி வாங்குவதற்கென மலைக்கு மேல் உள்ள கிராமத்திற்கு கல்யாணி பயணப்படுவான். செல்லம்மாவுக்கு கொடுத்த வாக்கை காப்பாற்ற வேண்டுமென நிகழும் நிகழ்வுகளையும் கல்யாணியின் உயிர் முழுவதும் பரவிக்கிடக்கும் அன்பையும் செல்லம்மாவிடம் நாய்க்குட்டியை சேர்த்துவிட வேண்டுமென்ற தவிப்பையும் வைராக்கியத்தையும் நா.முத்துக்குமார் தன் வரிகளாலும் யுவன் சங்கர் ராஜா தன் இசையாலும் வலிமையாக வெளிப்படுத்தியிருப்பார்கள்.

"சொன்ன தேதி, சொன்ன நேரம்

உன்னை வந்து சேருவேன்

இல்லையென்று ஆகும்போது

என்னை நானே கொல்லுவேன்."

என்ற வரியோடு முடிவடையும் பாடல்.

காதல் கொண்டேன் - நட்பினிலே நட்பினிலே:

'காதல் கொண்டேன்' திரைப்படத்தில் சீனு, அவன் செய்த ஒரு தவறை வினோத் செய்ததாக அனைவரையும் நம்பவைப்பான். அந்த தவறுக்குப் பின்னால் சீனு இருப்பது தெரியவந்ததும் basket ball மைதானத்தில் சீனுவை வினோத் இரத்தம் வெளிவரும் அளவிற்கு அடிப்பான். அதைக் கண்டதும் திவ்யா திகைத்து நிற்க, மெளனமாக அங்கிருந்து விடைபெறுவான் வினோத்.

Representational Image
Representational Image
Pixabay

அப்போதுதான் நா.முத்துக்குமார் வரிகள் யுவனின் இசையில் ஹரிஷ் ராகவேந்திரா குரலில்

"நட்பினிலே நட்பினிலே

பிரிவு என்பது ஏதுமில்லை

என் மனமும் உன் மனமும்

பேச வார்த்தைகள் தேவையில்லை"

என்று ஒலிக்கும். அதன் பின் வினோத்தின் மனநிலையை

"உள்ளுக்குள்ளே உள்ளுக்குள்ளே

ஆயிரம் எண்ணங்கள் ஓடுதடி

அத்தனையும் அத்தனையும்

உன்தன் பார்வையைத் தேடுதடி

எத்தனை நாள் எத்தனை நாள்

இப்படி நானும் வாழ்ந்திருப்பேன்

நீயூமில்லை என்று சொன்னால்

எந்த நிழலில் ஓய்வெடுப்பேன் "

என்று நா.முத்துக்குமார் எழுதியிருப்பார்.

- சுரேந்தர் செந்தில்குமார்

விகடனில் உங்களுக்கென ஒரு பக்கம்...

உங்கள் படைப்புகளைச் சமர்ப்பிக்க இங்கே க்ளிக் செய்க https://www.vikatan.com/special/myvikatan/

My Vikatan
My Vikatan

ஏதோ ஓர் ஊரில், எங்கோ ஒரு தெருவில் நடந்த ஒரு விஷயம்தான் உலகம் முழுக்க வைரலாகிறது. உங்களைச் சுற்றியும் அப்படியொரு வைரல் சம்பவம் நடந்திருக்கலாம்... நடந்துகொண்டிருக்கலாம்... நடக்கலாம்..! அதை உலகுக்குச் சொல்வதற்காகக் களம் அமைத்துக் கொடுக்கிறது #MyVikatan. இந்த எல்லையற்ற இணையவெளியில் நீங்கள் செய்தி, படம், வீடியோ, கட்டுரை, கதை, கவிதை என என்ன வேண்டுமானாலும் எழுதலாம். மீம்ஸ், ஓவியம் என எல்லாத் திறமைகளையும் வெளிப்படுத்தலாம்.

உங்கள் படைப்புகளைச் சமர்ப்பிக்க இங்கே க்ளிக் செய்க https://www.vikatan.com/special/myvikatan/

அடுத்த கட்டுரைக்கு