Published:Updated:

சாலை..! - சிறுகதை #MyVikatan

Representational Image
Representational Image

எதற்கெடுத்தாலும் அவசரப்படும் கதாநாயகி நம் பவித்ரா. மாமியார் ஏதாவது சொல்லப் போக இவள் ஏடாகூடமாக புரிந்து கொண்டிருப்பாள். உடனே தாட் பூட் என்று கத்திவிட்டு இங்கே வந்திருப்பாள்...

பொறுப்புத் துறப்பு: இந்தக் கட்டுரை, வாசகரின் படைப்பு. கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்களுக்கும் கருத்துகளுக்கும் அதன் ஆசிரியரே பொறுப்பாவார். கட்டுரை சம்பந்தமாக உங்களுக்கு ஆட்சேபனை இருந்தால், my@vikatan.com-க்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்!

சாரு ஓரக்கண்ணால் பவித்ராவை பார்த்தாள். படபடப்பும் அவசரமுமாக வந்து இவளை கிளப்பிக்கொண்டு போகிறாளே. என்னவாக இருக்கும்?

'பவி ' மெதுவாக அவள் தோளைத் தொட்டாள் சாரு.

'சாரு , ப்ளீஸ், எல்லாம் சொல்றேன். முதலில் ஏதாவது ஒரு ஹோட்டலுக்கு போய் விடுவோம்.'

சாலையில் கண்களை பதித்த படியே அவள் சொல்ல சாரு மௌனமானாள்.

**

பவித்ரா அவளுடைய நெருங்கிய தோழி.

சமீபத்தில் தான் திருமணமாயிற்று.. ஒரே பையன். அம்மா மட்டும் தான். பிறந்த வீட்டிலும் அவளுக்கு எந்த குறையுமில்லை.

கை நிறைய சம்பாதிக்கும் அன்பான கணவன். அடிக்கரும்பு மாதிரி தித்தித்துக் கொண்டிருக்கும் வாழ்க்கை. இதில்என்ன பிரச்சினை இன்று இவளுக்கு வந்திருக்க கூடும்? உள்ளடங்கிய சினம் அவள் முகத்தில் நன்றாக தெரிந்தது ‌‌.

ஹோட்டலை அடைந்ததும் சர்வரை அழைத்து இருவருக்கும் ஆர்டர் பண்ணி விட்டு நிமிர்ந்தாள் பவித்ரா.

'இப்போ சொல்றேன் கேளு. என் மாமியாரை உடனடியாக முதியோர் இல்லத்தில் சேர்க்கணும் . அதுக்கு ஒரு வழி சொல்லு'

அவள் திகைத்தாள்

'ஏன் என்ன ஆச்சு உடம்பு சரி இல்லையா?

உன்னால் பார்க்க முடியவில்லையா'

'அதெல்லாம் ஒன்றுமில்லை கிழவிக்கு என்ன, நல்லாத்தான் இருக்கு.'

'உஷ் ,பவி, என்ன இது ,மரியாதை இல்லாமல்' கண்டித்தாள் சாரு.

'உனக்கு பிடிக்கலை இல்லையா? என்ன செய்யறது? நீ வந்து இருந்து பாரு தெரியும்.'

‌'நான் வரது இருக்கட்டும். நீ முதலில் சொல்லு என்ன பிரச்சினை?'

Representational Image
Representational Image

எதற்கெடுத்தாலும் அவசரப்படும் கதாநாயகி நம் பவித்ரா. மாமியார் ஏதாவது சொல்லப் போக இவள் ஏடாகூடமாக புரிந்து கொண்டிருப்பாள். உடனே தாட் பூட் என்று கத்திவிட்டு இங்கே வந்திருப்பாள்.

'என்ன யோசிக்கிறே சாரு. நான் ஒவ்வொண்ணா சொல்றேன் கேளு.'

அழமாட்டா குறையாக அவள் சொல்ல ஆரம்பித்தாள்.

'காலையில் எழுந்ததும் காபி கொடுக்கறதிலிருந்து ஆபீசுக்கு சாப்பாடு கொடுக்கிறது வரைக்கும் எல்லாம் நான் தான் செய்யணும் . ஒரு விஷயம் கூட என் இஷ்டப்படி செய்ய முடியாது. அப்புறம் நான் எதுக்கு அந்த வீட்டிலே.?'

எரிச்சலுடன் மேலும் தொடர்ந்தாள் அவள்.

'அது மட்டும் இல்லை . ஏதாவது புது டிஷ் பண்ணலாம் என்று நினைத்தால் அது அவனுக்கு பிடிக்காது வேண்டாம் என்று தடுத்து விடுகிறார்கள்.'

'சரி எங்கேயாவது வெளியே போகலாம் என்று நினைத்தால் அதையும் சொல்லிக் கொண்டு தான் போகணும்.'

இதெல்லாம் ஒரு விஷயமா?

மனதுக்குள் நினைத்துக் கொண்டு மௌனமாக கேட்டுக் கொண்டிருந்தாள் சாரு.

'அதுக்கு தான் சொல்றேன். எப்படியாவது ஒரு முதியோர் இல்லத்தில் பார்த்து தள்ளிவிட்டால் அப்புறம் இந்த தொந்தரவு இருக்காது பார்.'

சாரு உள்ளுக்குள் சிரித்துக் கொண்டாள்.

திருமணமாகி இரண்டு மாதம் தான் ஆகிறது அதற்குள் மாமியாருடன் பூசல். மாமியாரை தள்ளி விட வேண்டுமாம். இவள் அம்மாவை இப்படி சொன்னால் இவள் சும்மா இருப்பாளா?

'ஏய் சாரு என்ன யோசிக்கிறே?'

'ம்ம் அவர்களை சேர்த்து விட உன் கணவரின் அனுமதி வாங்கி விட்டாயா? அது தான் நினைத்து கொண்டிருக்கிறேன்.'

'அவர் என்ன சொல்லப் போகிறார்!. எல்லாம் என் இஷ்டப்படி தான் நடக்கணும். நீ எனக்கு ஒரு வழி சொல்லு'

பிடிவாதத்துடனும் தீவிரமான முகபாவத்துடனும் அவள் பேசுவதை கேட்டு சாரு திகைத்தாள்.

இதில் நான் என்ன செய்ய முடியும்? இவளை எப்படி வழிக்கு கொண்டு வருவது, யோசித்து விட்டு மெதுவாக சொன்னாள்.

Representational Image
Representational Image

'இதோ பார் . அவசரப்படாமல் மெதுவாகத்தான் எதுவும் செய்ய முடியும். இரண்டு நாள் பொறு, பார்க்கலாம்..

அவசரப்படக்கூடாது. என்னதான் இருந்தாலும் அவருடைய அம்மா பாரு.'

குழந்தைக்கு சொல்வது போல ஆதுரமாக சொன்ன சாரு யோசித்த படி எழுந்தாள்.

எப்படியும் இவளை சரி செய்தாக வேண்டும்

என்ன செய்யலாம்?!

பிரச்னையின் கனத்தை அவளிடம் கொட்டி விட்டதாலோ என்னவோ பவித்ரா கலகல வென்று இருந்தாள்.

திரும்பும் போது ஒரே அரட்டை வம்புப் பேச்சு.

பேசிக் கொண்டே காரை ஓட்டிய அவள் திருப்பத்தில் சட்டென்று நிறுத்தினாள்.

'ஏன் ,என்ன ஆச்சு?'

'ஒன்று மில்லை ,மெயின் ரோட்டில் வண்டி வழி விட வில்லை பார்.'

பளிச்சென்று மின்னல் அடித்தது சாருவுக்கு

'உன் மாமியார் மாதிரி என்று சொல்'

'எதற்கெடுத்தாலும் அந்தம்மாவை ஏன் இழுக்கிறாய் அவர் மாதிரியே ' அவள் சலித்துக்கொண்டாள்.

'இல்லை பவி . டிராபிக் ரூல்ஸ் மாதிரியே வாழ்க்கையிலும் சில நியதிகள் இருக்கின்றன. நீ கேட்கிறாயில்லையா?'

'இரு ,திருப்பிக் கொள்கிறேன்'

மெயின் ரோட்டில் திரும்பியதும் வண்டி சீரான வேகமெடுத்தது

'ஊம் சொல்லு இப்போ' சுவாரசியமாக அவளை பார்த்து கேட்டாள் பவித்ரா.

'முதலில் மெயின் ரோடு வண்டி உன்னை திருப்ப விடாமல் இடைஞ்சல் செய்தது இல்லையா! இப்போது பார் அந்த வண்டியால் உனக்கு எந்த பிரச்சனையும் இல்லை.'

அவள் முன்னால் சென்று கொண்டிருந்த அந்த வண்டியை சுட்டிக் காட்டினாள்.

'அது மாதிரி என்ன சொல்ல வருகிறாய்?'

'அது மாதிரி தான் உன் மாமியார் மெயின் ரோட்டில் வரும் வண்டி.

நீ இப்போதுதான் சேர்ந்து கொள்ள போகிறாய் அந்த சாலையில் கொஞ்சம் வழி ஏற்படுத்தி கொண்டு போகலாமில்லையா'

'அதற்காகத்தான் இரண்டு மாதம்

வெயிட் பண்ணினேன்'

'வெயிட் பண்ணினே சரி. ஏதாவது அனுசரித்துப் போனாயா ?முதலில் அவர்கள் இஷ்டம் போல் வளைந்துக் கொடுத்துப் பாரேன்.'

காரை ஒதுக்குப்புறமாக நிறுத்திவிட்டு அவளை கூர்மையாக பார்த்தாள் பவித்ரா.

'நீ என்ன சொல்ல வர?'

'பவி, ப்ளீஸ் முதலில் நான் சொல்வதைப் புரிந்துக்கொள்.

இந்த ரோடு யாருக்கும் சொந்தமில்லை. ஆனால் உன் வண்டி போகும்போது உனக்கு அது சொந்தமாகிவிடுகிறது. ஆனால் சில நிமிடங்கள் மறுபடி வேறு திருப்பம் வேறு ரோடு'

ஏதோ சொல்ல வாயெடுத்தவளை அடக்கிவிட்டு அவள் மேலே தொடர்ந்தாள்.

'நம் வாழ்க்கையையும் ஒரு ரோடு மாதிரி வைத்துக் கொண்டால் அதில்தான் எத்தனை வாகனங்கள் அதுதான் எத்தனை பேர் நம் வாழ்வில் தலையிட்டிருப்பார்கள் இல்லையா?'

'சிலருக்கு முன்னுரிமை கொடுத்துத்தான் ஆக வேண்டும். பிடிக்கிறது பிடிக்கவில்லை என்று சொல்ல முடியாது சொல்லவும் கூடாது.'

'நீ என்னதான் சொல்ல வரே?'

அவளைப் பார்த்து திரும்பி நன்றாக உட்கார்ந்து கொண்டாள் சாரு.

'ரோடு முழுவதுமாக நாம் ஆக்ரமிக்க முடியாது. ஆனால் ஒழுங்காக போனால் அது நம்முடையதாகி விடுகிறது'

'இந்த கோணத்திலிருந்து பார்.

உன் கணவன் உனக்கு மட்டுமே சொந்தம் என்றிருக்க முடியாது'

'அவருடைய தாயார் அவரது நண்பர்கள் என்று ஆயிரம் வாகனங்கள் அவர் சாலையிலும் இருக்கும் இல்லையா.? அப்படி நினைத்து பாரேன்.'

அதே மாதிரி உன் வாழ்க்கையிலும் மற்ற உறவுகள் இல்லையா.?’

Representational Image
Representational Image

யோசிக்கும் பாவனை அவள் முகத்தில் தெரிந்தது

'இன்னும் கேள் பவி . உனக்கு ஒரு குழந்தை பிறந்தால் அதற்கு இரு பக்க உறவுகளும் வேண்டாமா?'அவருடைய மனதை முறித்து அவருடன் வாழ்வதை விட அவர் மனம் போல் விட்டுக் கொடுத்து தான் வாழ்ந்துபாரேன்.'

'என் மகன் என்று அவர்கள் உரிமைக் கொண்டாடுகிறார்கள் அது நிஜம் தானே'!

'நீ விட்டுக்கொடுத்து, ஆமாம் நீங்களே செய்யுங்கள்.எனக்கும் சொல்லிக் கொடுங்கள் என்று சொல்லிப்பாரேன். உன்னை மருமகளாக பார்க்காமல் மகளாக பார்க்கும் பக்குவம் அவர்களுக்கும் வரும்.'

'அதெல்லாம் முன்பே அப்படித்தான் நடந்து கொள்கிறார்கள் .' மெதுவாக முணுமுணுத்தாள் அவள்.

'பின்னே யோசிக்காமல் நீ என்னவெல்லாம் சொல்லிவிட்டாய்?'

'நீ மட்டுமில்லை பவி. நிறைய பேர் இந்த தப்பை செய்கிறார்கள்.'

'நெரிசலான சாலையில் நிதானமாக போக வேண்டும். உணர்ச்சிகரமான தருணங்களில் பொறுமையாக யோசிக்க வேண்டும். '

'சில இடங்களில் நேர் சாலையில் போகும் வாகனங்களுக்கு முன்னுரிமை கொடுக்கிறோம். ஏன் ஆக்ஸிடென்ட் எதுவும் நடந்து விடக்கூடாது என்று தானே. அது மாதிரி வாழ்க்கையிலும் நடந்து கொள்ளலாம் இல்லையா?'

'இப்போ சொல்லு என்ன செய்யலாம்?'

'சாரு' , ஸ்டீயரிங்கிலிருந்து கையை எடுத்து அவள் கரங்களை பற்றிக் கொண்டாள் பவித்ரா.

' தப்பு தான் சாரு . நான் அவசரப்பட்டு விட்டேன் ஆத்திரம் என் கண்களை மறைத்து விட்டது .


'ஸாரி, நல்ல வேளை நான் உன்னிடம் வந்தேன்.'

'நான் கோபமாக சொன்னதையெல்லாம் மறந்து விடு ப்ளீஸ்'

மென்மையாக புன்னகைத்தாள் அவள்.

'ஓகே! இனிமே கிளம்புவோமா?'


'சாரு நீ எனக்கு ஃப்ரெண்ட் மட்டுமில்லை குருவும் கூடத்தான். நன்றி சாரு'.

அவள் முகத்தில் தெரிந்த சிரிப்பை பார்த்து

'என்ன சாரு' என்றாள்.

'இல்லை இப்போது உன் ரோட்டில் நான் எந்த வாகனம் என்று யோசித்துக் கொண்டிருக்கிறேன்.'

' போதும் சாரு'

முகம் முழுவதும் சிரிப்புடன் அவள் வண்டியை கிளப்ப அது வெகுஜோராக விரைந்தது மெயின் சாலையில் தடங்கல் எதுவுமில்லாததால்.

-காந்திமதி உலகநாதன்

விகடனில் உங்களுக்கென ஒரு பக்கம்...

உங்கள் படைப்புகளைச் சமர்ப்பிக்க இங்கே க்ளிக் செய்க https://www.vikatan.com/special/myvikatan/

My Vikatan
My Vikatan

ஏதோ ஓர் ஊரில், எங்கோ ஒரு தெருவில் நடந்த ஒரு விஷயம்தான் உலகம் முழுக்க வைரலாகிறது. உங்களைச் சுற்றியும் அப்படியொரு வைரல் சம்பவம் நடந்திருக்கலாம்... நடந்துகொண்டிருக்கலாம்... நடக்கலாம்..! அதை உலகுக்குச் சொல்வதற்காகக் களம் அமைத்துக் கொடுக்கிறது #MyVikatan. இந்த எல்லையற்ற இணையவெளியில் நீங்கள் செய்தி, படம், வீடியோ, கட்டுரை, கதை, கவிதை என என்ன வேண்டுமானாலும் எழுதலாம். மீம்ஸ், ஓவியம் என எல்லாத் திறமைகளையும் வெளிப்படுத்தலாம்.

உங்கள் படைப்புகளைச் சமர்ப்பிக்க இங்கே க்ளிக் செய்க https://www.vikatan.com/special/myvikatan/

அடுத்த கட்டுரைக்கு