Published:Updated:

தாமதமான ரயில்.. ஒன்றிணைந்த மனங்கள்..!

Representational Image
Representational Image ( Pixabay )

திருத்தப் படாத புருவங்களும், மை தீட்டப்படாத விழிகளும், காதோரம் நரைத்த முடியும் பார்வதியிடம் மிகுந்த மாற்றத்தை ஏற்படுத்தி இருக்கவில்லை.. அதனால் சிவாவால் பார்வதியை சுலபமாக அடையாளம் கண்டுகொள்ள முடிந்தது...

பொறுப்புத் துறப்பு: இந்தக் கட்டுரை, வாசகரின் படைப்பு. கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்களுக்கும் கருத்துகளுக்கும் அதன் ஆசிரியரே பொறுப்பாவார். கட்டுரை சம்பந்தமாக உங்களுக்கு ஆட்சேபனை இருந்தால், my@vikatan.com-க்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்!

பயணிகளின் பணிவான கவனத்திற்கு, வண்டி எண் 12675, கோவையிலிருந்து திருப்பூர், ஈரோடு, சேலம் ஜோலார்பேட்டை காட்பாடி மார்க்கமாக புறப்பட்டு சென்னை செல்லும் கோவை அதிவிரைவு வண்டி, தவிர்க்க முடியாத காரணத்தால் இரண்டு மணி நேரம் தாமதமாக ஈரோடு சந்திப்பை வந்தடையும் என அறிவிக்கப்படுகிறது.. பயணிகளுக்கு ஏற்பட்ட அசௌகரியத்திற்கு வருந்துகிறோம்....

என்ன வருண் இது? இந்த வேகாத வெயில்ல இன்னும் ரெண்டு மணி நேரம் காத்திருக்கணுமா"?

ஆமாம்மா வேற வழி இல்ல... நீங்க வெயிட்டிங் ஹால்ல வெயிட் பண்ணுங்க.. ஆபீஸ் வரைக்கும் போயிட்டு வந்துடறேன்...

ரயில்
ரயில்

சரி ட்ரெயின் வர்றதுக்குள்ள வந்திடுப்பா..

அரை மணி நேரத்துல வந்துடுவேன்... பார்த்து பத்திரமா இருங்க என்று அக்கறையுடன் கூறிய மகன் வருணின் தலையை வருடியவாறே, சரிப்பா என்றாள் பார்வதி.....

கடும் வெயில் காரணமாக ஏசி வெயிட்டிங் ஹால் நிரம்பி வழிந்தது... இருப்பினும் தன் உடைமைகளுடன் ஹாலின் ஒரு ஓரத்தில் நின்று கொள்ளலாம் என திட்டமிட்ட பார்வதியின் கண்கள் அறையை நோட்டமிட்ட பொழுது, அறையில் கிட்டத்தட்ட ஐம்பது வயது மதிக்கத்தக்க ஒருவர், வெள்ளை நிற முழுக்கை சட்டையும், சாம்பல் நிற ப்ளேஸரும், கருப்பு நிற பேண்ட்டும் அணிந்திருந்தார்., ட்ரிம் செய்த மீசையும், காதின் ஓரம் நரைமுடியும் அவரை சிறிது இளமையாகக் காட்டியது...... அவரின் அலைபேசி உரையாடல்கள், வெளிநாட்டில் வேலை செய்பவர் என உறுதி படுத்தியது... அவரைப் பார்த்ததும் அவள் கண்கள் மகிழ்ச்சியில் அகண்டு விரிந்தன...

அவரும் பார்வதியை வைத்த கண் மாறாமல் பார்ப்பதை பார்வதி கவனிக்காமல் இல்லை...

சிவா, வாட் எ சர்ப்ரைஸ்! " நீங்க எப்படி இங்கே"?

திருத்தப் படாத புருவங்களும், மை தீட்டப்படாத விழிகளும், காதோரம் நரைத்த முடியும் பார்வதியிடம் மிகுந்த மாற்றத்தை ஏற்படுத்தி இருக்கவில்லை.. அதனால் சிவாவால் பார்வதியை சுலபமாக அடையாளம் கண்டுகொள்ள முடிந்தது...

ஹே பாரு, எவ்வளவு வருஷம் ஆச்சு உன்னைப் பார்த்து? சோ ஹாப்பி... நான் ஆஃபீஸ் கிளைண்ட் பார்க்க இங்க வந்தேன்... எப்படி இருக்கே? இன்னும் ஈரோட்டில் தான் இருக்கியா?

"நான் சூப்பரா இருக்கேன்... சொந்த ஊர விட்டு எங்க போக சொல்றீங்க?"

"அதுவும் சரிதான்.... "

இருவரின் மனங்களும் பதினெட்டு வருடங்களைப் பின்னோக்கி ஓடியது....

****

Representational image
Representational image

பாரு, நம்ம கல்யாணத்துக்கு அம்மா அப்பா என்ன சொன்னாங்க? அவங்களுக்கு சம்மதம் தானே?

"அவங்களுக்கு பரிபூரண சம்மதம் தான், ஆனா....!!!"

"என்ன பாரு ஏதோ ட்விஸ்ட் குடுக்குற?

" ட்விஸ்ட் எல்லாம் ஒண்ணுமில்ல சிவா, வருணுக்கு இந்த விஷயத்துல ஈடுபாடு இல்ல".

அவனுக்கு இப்போ பதினாலு வயசு தான் ஆகுது... அவனுக்கென்ன விவரம் தெரியும்?

"அப்படி நினைக்காதே சிவா, இந்த வயசுல தான் குழந்தைகளுக்கு தங்களோட வாழ்க்கையில நடக்குற ஒவ்வொரு விஷயமும் கல்வெட்டு மாதிரி பதியும்...."

"சரி வருண் என்கிட்டே நல்லாதானே பழகறான்... அவனைப் பொறுத்தவரைக்கும் நான் ஒண்ணும் அறிமுகமில்லாத ஆள் இல்லையே?"

"இதுவரைக்கும் உங்களை என்னோட நண்பனா பார்த்து பழகிட்டான்... அங்கிள்ன்னு பழகிட்டு இருந்தவனால திடீர்னு உங்களை அப்பாவா அவனால ஏத்துக்க முடியல..."

"அதெல்லாம் நாள்பட சரி ஆயிடும் பாரு... நீ கவலைப்படாத!!"

"இல்லை சிவா, வருணுக்கும் எனக்கும் இடையில யாரும் வரக்கூடாதுன்னு ரொம்ப பிடிவாதமா இருக்கான்... அப்பா அம்மாவும் எவ்வளவோ சொல்லி பார்த்தாங்க, அவன் மனசு மாறுவது போல தெரியல".

"இப்போ என்னை என்ன பண்ண சொல்ற?"

"எனக்கு உங்க ரெண்டு பேரோட சந்தோஷமும் முக்கியம்..."

"இப்போ என்ன சொல்ல வர்ற?"

"இந்த புது வாழ்க்கை சரிப்பட்டு வராது..."

"அதனால?''

Representational image
Representational image

"அதனால நீங்க அம்மா பார்த்து வைச்சிருந்த பொண்ண கல்யாணம் பண்ணிக்கிட்டு நிம்மதியா வாழுங்க..."

ஓஹோ அப்படியா? இதுக்கு தான் நான் ஏழு வருஷமா காத்திட்டிருந்தேனா? வீட்ல எல்லோர் கிட்டயும் கடுமையா போராடி சம்மதம் வாங்கி இருக்கேன்... வெண்ணை திரண்டு வர்ற நேரத்துல இப்படி பண்ணிட்டியே பாரு...??

"புரியாம இல்ல சிவா, நம்ம ரெண்டு பேரோட நல்லதுக்கு தான் சொல்றேன், நான் வரேன்" என்று சிறுநொடி கூட தாமதிக்காமல் அந்த இடத்தை விட்டு நகர்ந்து சென்று இன்றோடு பதினெட்டு வருடங்கள் மூன்று மாதங்கள் பதினான்கு நாட்கள் ஆகி விட்டன...

"வருண் எப்படி இருக்கான்?"

உடனே பார்வதியின் முகம் வாடிப்போனதை சிவா கவனிக்காமல் இல்லை...

"என்ன பாரு, வருணை பத்தி விசாரிச்சதும், உடனே டல் ஆயிட்ட.. ஆர் யூ ஆல்ரைட் ?"

"ஐ யம் ஓகே சிவா... கொஞ்சம் வெளியே போய் பேசுவோமா?"

இருவரும் அந்த அறையை விட்டு வெளியே வந்து கேன்டீனுக்கு முன்புறம் வந்து நின்று கொண்டனர்..

" நான் வருணைப் பத்திக் கேட்டேன்... ஈஸ் ஹி ஆல் ரைட்?"

பார்வதியின் கண்களில் குபுக்கென்று கண்ணீர் எட்டிப் பார்த்தது..

"பாரு வருணுக்கு என்னாச்சு? எதுக்கு இப்போ அழற?"

பார்வதி குலுங்கி குலுங்கி அழ ஆரம்பித்தாள்...

"பாரு, எதுவா இருந்தாலும் அழாம சொல்லு, நான் பார்த்துக்கிறேன் ..."

Representational image
Representational image

பார்வதியின் தலையை வருடி விட வேண்டும் போல இருந்தது சிவாவிற்கு...

பார்வதி கண்களைத் துடைத்துக் கொண்டே ,

"ஏழு வருஷத்துக்கு முன்னாடி, என் அண்ணன் மகளைத்தான் வருணுக்கு கட்டி வெச்சோம்... யார் செஞ்ச பாவமோ தெரியல, ஒன்றரை வருஷத்துல ஒரு கார் ஆக்சிடெண்ட்ல அவ எங்களை எல்லாம் நிரந்தரமா விட்டுட்டுப் போயிட்டா,"

"வெரி சாரி பாரு, பழைய விஷயத்தை கேட்டு உன்னை நான் கஷ்டப் படுத்திட்டேன்.."

"பரவால்ல சிவா, நீங்க எப்படி இருக்கீங்க?"

அதெல்லாம் இருக்கட்டும்... வருணுக்கு குழந்தைங்க இருக்கா?

ஆமா அவன் மனைவி இறக்கும் போது வருண் பையன் ஆறு மாச குழந்தை..

கடவுளே, என்ன கொடுமை இதெல்லாம் என்று அங்கிருந்த சுவற்றின் மீது கையை ஓங்கி அடித்தான் சிவா..

சரி வருணுக்கு ரெண்டாவதா ஒரு கல்யாணத்தை பண்ணி வெச்சிருக்கலாமே?

நானும் சொல்லாத நாள் இல்லை, அதுக்கு மட்டும் அவன் ஒத்துக்கவே மாட்டேங்கிறான்... எனக்குப் பிறகு அவனுக்கும் பையனுக்கும் ஒரு உறவு வேணும் இல்லையா?

"கண்டிப்பா, நான் வருண் கிட்ட பேசறேன்.."

"அதெல்லாம் சரி, உங்களைப் பத்தி ஒண்ணுமே சொல்லலையே?"

" நான் சொல்றேன் அம்மா," என்று சிரித்த படியே வந்தான் வருண்...

"நீ எப்படா வந்தே?" என்று கலவரத்துடன் கேட்ட பார்வதியிடம்,

" நான் இப்போதான் வந்தேன்,ஆனால், நாங்க ரெண்டு பெரும் மூணு மாசத்துக்கு முன்னாடியே ஃ பேஸ்புக்ல பிரெண்ட்ஸ் ஆகிட்டோம்..."

செல்ல கோபத்துடன் பார்வதி வருணையும் சிவாவையும் மாறி மாறிப் பார்க்க,,

அம்மா, "நீங்க எனக்காக உங்க வாழ்க்கையை தியாகம் பண்ணினீங்க... அவரும் நமக்காக அவரோட இளமையை தொலைச்சிட்டு, நமக்காக இன்னும் காத்துக்கிட்டு இருக்காரும்மா..."

நீங்களும் அப்பாவும் சேர்ந்து கணவனை இழந்த அல்லது கைவிடப்பட்ட பொண்ணா பாருங்க, நிச்சயமா கல்யாணம் பண்ணிக்கிறேன், என்று இருவரின் கைகளையும் சேர்த்து அழுத்திப் பிடித்தான் வருண்..

அன்புடன்

நித்யா இறையன்பு :)

விகடனில் உங்களுக்கென ஒரு பக்கம்...

உங்கள் படைப்புகளைச் சமர்ப்பிக்க இங்கே க்ளிக் செய்க https://www.vikatan.com/special/myvikatan/

My Vikatan
My Vikatan

ஏதோ ஓர் ஊரில், எங்கோ ஒரு தெருவில் நடந்த ஒரு விஷயம்தான் உலகம் முழுக்க வைரலாகிறது. உங்களைச் சுற்றியும் அப்படியொரு வைரல் சம்பவம் நடந்திருக்கலாம்... நடந்துகொண்டிருக்கலாம்... நடக்கலாம்..! அதை உலகுக்குச் சொல்வதற்காகக் களம் அமைத்துக் கொடுக்கிறது #MyVikatan. இந்த எல்லையற்ற இணையவெளியில் நீங்கள் செய்தி, படம், வீடியோ, கட்டுரை, கதை, கவிதை என என்ன வேண்டுமானாலும் எழுதலாம். மீம்ஸ், ஓவியம் என எல்லாத் திறமைகளையும் வெளிப்படுத்தலாம்.

உங்கள் படைப்புகளைச் சமர்ப்பிக்க இங்கே க்ளிக் செய்க https://www.vikatan.com/special/myvikatan/

அடுத்த கட்டுரைக்கு