Published:Updated:

பெத்த மனசு..! - குறுங்கதை #MyVikatan

Representational image
Representational image ( muxuproo from Pixabay )

மழையின் நீர்த்தடம் மண்ணில் மட்டுமல்ல அவள் கண்களிலும் தென்பட்டது. விரக்தியின் உச்சமாய் அவள் முகம் காணப்பட்டது.

பொறுப்புத் துறப்பு: இந்தக் கட்டுரை, வாசகரின் படைப்பு. கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்களுக்கும் கருத்துகளுக்கும் அதன் ஆசிரியரே பொறுப்பாவார். கட்டுரை சம்பந்தமாக உங்களுக்கு ஆட்சேபனை இருந்தால், my@vikatan.com-க்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்!

இரவெல்லாம் கொட்டித் தீர்த்த மழையின் சுவடுகளாய் அந்த தார் சாலையின் இருபுறத்திலும் நீர் வழிந்தோடிய தடங்கள் காணப்பட்டன. அந்த சாலையில் ஆங்காங்கே குண்டும் குழியுமாக இருந்ததால் நீர் பல இடங்களில் தேங்கியிருந்தது.

சாலையின் தேங்கிய நீரை உரிஞ்சிக் கொண்டு அந்த மிதிவண்டிச் சக்கரம் பாய்ந்து சென்றது. "ஸ்ரீனிவாசன் இல்லம்" என்று எழுதப்பட்டு சுவரில் பதிக்கப்பட்டிருந்த டைல்ஸ் கல்லை தொடர்ந்து பால் பாக்கெட் வைப்பதற்காக இருந்த இரும்புக் கூடையில் அந்த மதிவண்டியிலிருந்து வந்த இளைஞன் இரு பால் பாக்கெட்டுகளை போட்டு விட்டு அருகிலிருந்த காலிங் பெல்லையும் அடித்துவிட்டு சென்றான்.

இரவெல்லாம் மழையின் நனைந்து ஊறிப் போயிருந்த அந்த கேட்டின் கைபிடியை சிவகாமி அம்மாள் திறந்து பால் பாக்கெட்டுகளை எடுத்துச் சென்றாள். மழையின் நீர்த்தடம் மண்ணில் மட்டுமல்ல அவள் கண்களிலும் தென்பட்டது. விரக்தியின் உச்சமாய் அவள் முகம் காணப்பட்டது.

Representational Image
Representational Image
Rajesh Balouria from Pixabay

காபி போட்டு விட்டு அதை நான்கு டம்ளர்களில் ஊற்றி தனது மகள் ஜனனியின் அறைக்குச் சென்று கொடுத்தாள். பின் தனது மகன் முகிலனின் அறைக்குச் சென்று கொடுத்தாள். இதில் எவருடனும் உரையாடவோ? இல்லை முகமலர்ச்சியோ? கூட தென்படவில்லை.

நிசப்தத்தின் உச்சமாய் திகழ்ந்தது அந்த வீடு அன்று. இறுதியாய் கையிலிருந்த இரு டம்ளர்களுடன் வீட்டின் முகப்பு தாழ்வாரத்தில் நாற்காலியில் அமர்ந்திருந்த ஸ்ரீனிவாசனிடம் சென்று முன் இருந்த டேபிள் மீது காபி டம்ளரை வைத்தாள். அருகிலிருந்த நாற்காலியில் தானும் அமர்ந்தாள். சற்று நேரம் மௌனம் குடிகொண்டது.

இரவை உடைக்கும் ஒளியாய் மௌனத்தை உடைத்தது சிவகாமியின் குமுறல் "நாம யாருக்கு என்ன பாவம் செஞ்சோம்...." நேத்து நீங்களாச்சும் கொஞ்சம் விட்டுக்குடுத்துப் பேசிருக்கக் கூடாதா... அதுங்க வயசு புள்ளைங்க... அனுபவமும் பத்தாது... கொஞ்சம் படபடன்னு தான் யோசிக்காம பேசுவாங்க, நாம தான் கொஞ்சம் விட்டுக் கொடுத்து போணும்....." என்று கண்களில் நீரின் ஊற்றைத் தேக்கினாள்.

``நேரங்காலம் சரியில்லனா பேசாத பேச்செல்லாம் பேசதான் தோணும் கேட்காத வார்த்தையெல்லாம் கேட்கத்தான் வேணும் சிவகாமி....'' என்றார் ஸ்ரீனிவாசன், சற்று ஆவேசமாய்...

``40 வருசமாய் நானும் இந்த குடும்பத்த நடத்திட்டு வர்றேன்.... எத்தன கஷ்டம் எத்தன பிரச்சனை எல்லாத்தையும் சமாளிச்சு வந்திருக்கேன், அப்போல்லாம் யாரோட உதவியும் இல்ல, ஆனா இன்னைக்கு எல்லாம் வேலைக்குப் போறாங்க சம்பாதிக்கராங்கன்னு ஆளாளுக்கு பேசுதுங்க....'' என்று ஒரு நொடி விரக்தியாய் தலையைக் கவிழ்ந்தார்.

''என்ன பண்ண, எல்லாம் நேரம்'' என்று சொல்லி மௌனமானார். சிறியதொரு மௌனத்திற்க்குப் பிறகு,

"வசதி வாய்ப்புகள் தான் மாறியிருக்கே தவிர வாழ்க்கை அன்னைக்கும் இன்னைக்கும் ஒன்னு தான சிவகாமி....'' என்று தொனிந்த குரலில் சிவகாமியைப் பார்த்தார்... செய்வதறியாது திகைத்த சிவகாமி..., கண்களின் நீரை அடக்கிக்கொண்டு, நேரம் காலம் சரியில்லன்னா... என்று ஏதோ சொல்லத் தொடங்கி பின் ஒருநொடி நிதானித்து...., நம்ம முகிலனின் ஜாதகத்தை ஜோசியர் கிட்ட ஒரு தடவ பாத்துட்டு வந்துடறீங்களா... என்று ஸ்ரீனிவாசனைப் பார்த்தாள்.

Representational Image
Representational Image
Photo by Tristan Le from Pexels

மௌனத்தில் ஆழ்ந்த அந்த வறாண்டாவை சில்லென்ற காற்று சட்டென்று நிரப்பியது... ஒரு நீண்ட பெருமூச்சுக்குப் பின்,

``நம்மள எதிர்த்து பேசுற பிள்ளைகளோ இல்ல நம்ம கைய மீறி செயல்படற பிள்ளைங்களோ இல்ல நம்ம பிள்ளைங்க, ஏனோ போதாதா காலம் அந்த கிரகங்களும் நம்ம குடும்பத்தை பாடா படுத்துது’’

``அதுவும் சரி தான் நேரம் காலம் சரியில்லன்னா மனுசன் தன்னிலையில இருக்க மாட்டான், கிரகப் பலன்கள் எப்படி இருக்குன்னு பாத்துட்டு வந்துடலாம், நீ அவன் ஜாதக நோட்டை எடுத்துட்டு வா..., நான் கிளப்பிட்டு வந்துட்றேன்’’ என்று அவ்விடம் விட்டு நகர்ந்தார் ஸ்ரீனிவாசன்.

சிறிது நேரத்துக்கெல்லாம் ஸ்ரீனிவாசன் கிளம்பி வந்துவிட்டார், வாசலில் தன் காலணிகளை மாட்டிக் கொண்டே... சிவகாமி..... சிவகாமி... என்று கூப்பிட்டார்...

ம்ம்ம்... இதோ வந்திட்டேன் என்று கையில் மஞ்சள் பையுடன் சிவகாமி வந்தாள்.

நல்லா தெளிவா கேட்டுட்டு வாங்க, ஏதாச்சும் பரிஹாரம் சொல்றாரான்னும் கேளுங்க... என்றாள். தலையசைத்தவாறு மஞ்சள் பையை வாங்கிக் கொண்டு தனது ஸ்கூட்டரை ஸ்டார்ட் செய்தார்..., ஸ்ரீனிவாசன்.

Representational Image
Representational Image

ஏங்க... ஒரு நிமிசம்... வரும் போது அப்படியே மார்க்கெட்டுல சிவப்பு நண்டு இருந்தா வாங்கிட்டு வந்துடரீங்களா..., முகிலன் நண்டுன்னா விரும்பி சாப்பிடுவான் என்றாள் கொஞ்சம் தயங்கியவாறு..., அவளை ஒருகணம் ஏற இறங்க பார்த்துவிட்டு, கூடையை எடுத்துட்டு வா..., அப்படியே காய்கறிகளும் வாங்கிட்டு வந்துடறேன்.... என்றார்.

புதுமழையின் முதல் துளியாய் சட்டென விரைந்துக் கூடையைக்அச்ந் கொண்டு வந்து கொடுத்தாள் சிவகாமி. வீட்டின் முன்கதவு கேட்டைத் தாண்டியது ஸ்ரீனிவாசனின் ஸ்கூட்டர். சாலையில் தேங்கிக் கிடந்த நீரோ வழிந்து அதன் இருக்கரைகளிலும் மண்ணில் ஓடிக் காய்ந்திருந்தது.

-ஐஷ்வர்யா சந்திரன்

விகடனில் உங்களுக்கென ஒரு பக்கம்...

உங்கள் படைப்புகளைச் சமர்ப்பிக்க இங்கே க்ளிக் செய்க https://www.vikatan.com/special/myvikatan/

My Vikatan
My Vikatan

ஏதோ ஓர் ஊரில், எங்கோ ஒரு தெருவில் நடந்த ஒரு விஷயம்தான் உலகம் முழுக்க வைரலாகிறது. உங்களைச் சுற்றியும் அப்படியொரு வைரல் சம்பவம் நடந்திருக்கலாம்... நடந்துகொண்டிருக்கலாம்... நடக்கலாம்..! அதை உலகுக்குச் சொல்வதற்காகக் களம் அமைத்துக் கொடுக்கிறது #MyVikatan. இந்த எல்லையற்ற இணையவெளியில் நீங்கள் செய்தி, படம், வீடியோ, கட்டுரை, கதை, கவிதை என என்ன வேண்டுமானாலும் எழுதலாம். மீம்ஸ், ஓவியம் என எல்லாத் திறமைகளையும் வெளிப்படுத்தலாம்.

உங்கள் படைப்புகளைச் சமர்ப்பிக்க இங்கே க்ளிக் செய்க https://www.vikatan.com/special/myvikatan/

அடுத்த கட்டுரைக்கு