Published:Updated:

ஆண்ட்ராய்டு வகுப்புகளும், அரண்ட ஆசிரியர்களும்..! - குட்டி ஸ்டோரி #MyVikatan

ஏப்ரல் போனது, மே மாதமும் கடந்தது, முடிஞ்சது கோடை விடுமுறை... தொடங்க வேண்டுமே நான் என் வகுப்பறையை!

பொறுப்புத் துறப்பு: இந்தக் கட்டுரை வாசகரின் படைப்பு. கட்டுரையில் குறிப்பிடப்பட்டிருக்கும் தகவல்களுக்கும் கருத்துகளுக்கும் அதன் ஆசிரியரே பொறுப்பாவார். கட்டுரை சம்பந்தமாக உங்களுக்கு ஆட்சேபனை இருந்தால், my@vikatan.com-க்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்!.

மார்ச் முதல் எனக்கும் அதே லாக் டெளன், அதே கபசுர குடிநீர்; உங்கள் வீடுகளில் இருக்கும் அதே வயது முதிர்ந்த பிள்ளைகள்; அதே யூடியூப் யுவ யுவதிகள்; அதே வொர்க் ஃப்ரம் ஹோம்கள்; அச்சுபிசராத அதே தலைப்புச் செய்திகள்... அனைத்தும் அப்படியே என் வீட்டிலும்!

ஏப்ரல் போனது, மே மாதமும் கடந்தது, முடிஞ்சது கோடை விடுமுறை... தொடங்க வேண்டுமே நான் என் வகுப்பறையை!

தொடக்க மணி இல்லாமல், சீருடைகள் இல்லாமல், புத்தகங்கள் இல்லாமல்,

``சத்தம் போடாதிங்கமா’’ என்று சத்தமாகச் சொல்லாமல்,

தொடங்க வேண்டுமே நான் என் வகுப்பறையை.

Online class (Representational Image)
Online class (Representational Image)

slate-ல் தொடங்கி note-ல் முடித்தவன் நான்.

90-களில் பிறந்து, இலவச மடிக்கணினிக்கு முன் கல்வியை முடித்தவன் நான்.

புதியன புகுதலை முழுவதாகப் புரிந்த என் ஆன்லைன் பாடப் பதிவை தொடங்கினேன்.

நிற்க..

வகுப்பில் நான் தாளம், என் பிள்ளைகள் சுருதி. நான் சேப்பாக்கம், என் பிள்ளைகள் தோனிகள். தனித்து நின்றாலும் சேர்ந்தால் மட்டுமே century-கள்.

ஒரு வகுப்பின் 2700 நொடிகளும், ஓயாத ஒரு நீர்வீழ்ச்சியின் ஆற்றலாய் இருப்பர் என் மாணாக்கர்.

இன்று 5 அங்குல தொலைபேசியுடன் அத்துணை சலிப்புடன் என் மகனோ மகளோ மட்டுமே எனக்கு முன்னால்.

தொடர்க சார்... இங்க பாருங்க... என்று யாரேனும் சொல்லும் பொழுது புன்னகைக்கத் திணறும் 95% மக்களில் நானும் ஒருவன்.

``நல்லா பாடுவல, Uncle-க்கு ஒரு பாட்டு பாடிக் காட்டு" என்றவுடன் மிரளும் ஒரு குழந்தையைப் போலவே என் வகுப்புச் சுவர்களின் அப்பால் என் பாடங்கள் செல்லும் என்பதின் மிரட்சி சற்றும் விலகவில்லை இன்னும்.

7 நிமிட காணொலியைப் பதித்து முடிக்க இரண்டரை மணி நேரம் பிடித்தது எனக்கு.

பெற்றோர் உங்களுக்கும், பிள்ளைகள் அவர்களுக்கும், ஆன்லைன் வகுப்புகள் எப்படி புதுசோ அப்படியே அச்சுபிசராமல் எனக்கும் புதுசு.

- உங்களில் ஓர் ஆசிரியர் ராபின் சிங்

விகடனில் உங்களுக்கென ஒரு பக்கம்...

உங்கள் படைப்புகளைச் சமர்ப்பிக்க இங்கே க்ளிக் செய்க https://www.vikatan.com/special/myvikatan/

My Vikatan
My Vikatan

ஏதோ ஓர் ஊரில், எங்கோ ஒரு தெருவில் நடந்த ஒரு விஷயம்தான் உலகம் முழுக்க வைரலாகிறது. உங்களைச் சுற்றியும் அப்படியொரு வைரல் சம்பவம் நடந்திருக்கலாம்... நடந்துகொண்டிருக்கலாம்... நடக்கலாம்..! அதை உலகுக்குச் சொல்வதற்காகக் களம் அமைத்துக் கொடுக்கிறது #MyVikatan. இந்த எல்லையற்ற இணையவெளியில் நீங்கள் செய்தி, படம், வீடியோ, கட்டுரை, கதை, கவிதை என என்ன வேண்டுமானாலும் எழுதலாம். மீம்ஸ், ஓவியம் என எல்லாத் திறமைகளையும் வெளிப்படுத்தலாம்.

உங்கள் படைப்புகளைச் சமர்ப்பிக்க இங்கே க்ளிக் செய்க https://www.vikatan.com/special/myvikatan/

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு