Published:Updated:

யாசகனின் வாழ்த்து! - மைக்ரோ கதை #MyVikatan

Representational Image
Representational Image ( Pixabay )

சற்று முன் அடிவாங்கிக் கொண்டு மீண்டும் அங்கு வந்து நின்று கொண்டிருக்கும் அந்த யாசகனுக்கு அடி வாங்க வேண்டும் என்று ஆசையா என்ன?

பொறுப்புத் துறப்பு : இந்தக் கட்டுரை வாசகரின் படைப்பு. கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்களுக்கும் கருத்துகளுக்கும் அதன் ஆசிரியரே பொறுப்பாவார். கட்டுரை சம்பந்தமாக உங்களுக்கு ஆட்சேபனை இருந்தால், my@vikatan.com-க்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்!

கல்யாண மண்டபத்தில் அனைவரும் மகிழ்ச்சி ததும்ப ஒருவரை ஒருவர் நலம் விசாரித்துக் கொண்டிருந்தார்கள். ஒருபுறம் வாண்டுகள் ஓடிப் பிடித்து விளையாடிக் கொண்டிருந்தார்கள். மணமேடையில் மாப்பிள்ளை, பொண்ணுக்கு மொய் கவர் கொடுத்தபடி கல்யாணத்திற்கு வந்திருந்தவர்கள் போஸ் கொடுத்துக் கொண்டிருந்தனர். மண்டபத்தின் வாயிலில் பிச்சைக்காரன் ஒருவன் வந்து நின்றான்.

Representational Image
Representational Image
Vikatan Team

சற்று முன்புதான் மண்டப வாயிலில் தர்ம அடி வாங்கினான். ஆனால் மீண்டும் வந்து நின்றான். மணடபத்தில் இருந்த நடுத்தர வயதுக்காரர்கள் சிலர் வாசலில் பிச்சைக்காரனைப் பார்த்ததும், கோவப்பட்டு,

``என்னா திமிரு இருந்தா மறுபடியும் வந்துருப்பான்..’’ என்று துணைக்கு நாலு, ஐந்து பேரை அழைத்துக் கொண்டு மீண்டும் பிச்சைக்காரனை துவைத்து எடுக்க வேகமாக முகப்பு நோக்கி நடந்து வந்தனர்...

Representational Image
Representational Image
Vikatan Team

சற்று முன் அடிவாங்கிக் கொண்டு மீண்டும் அங்கு வந்து நின்று கொண்டிருக்கும் அந்த யாசகனுக்கு அடி வாங்க வேண்டும் என்று ஆசையா என்ன?

கடும் வயிற்றுப் பசி .. ஊசி போல்... இல்லை ஆணி குத்துவது போல் இருந்தது. அந்த வழியே வந்து கொண்டிருந்தபோது கல்யாண மண்டபத்தைப் பார்த்து பசியாற்றுவார்கள் என்று நம்பி நின்றுவிட்டான்..

ஆனால் கிடைத்ததோ தர்ம அடி.. ஆனாலும் பசி அவனை அங்கிருந்து போகவிடவில்லை.

மண்டபத்தின் வாயிலில் இரு புறமும் பாதுகாப்புக்கு நிற்கும் காவலாளி போல் இரு வாழை மரங்கள். முழு பௌர்ணமி போல் நல்ல குலை. குலையில் பசுமையும், மஞ்சள் ஒட்டிக் கொண்டிருந்த செங்காய்களும் அவன் கண்களைப் பறித்தன.

ஆணி குத்திய இடத்தில் மருந்து வைப்பதுபோல் , பறித்து திங்கலானான் பசிக்கு. இப்போது தர்ம அடி கொடுக்க வந்தவர்கள் பிச்சைக்காரன் வாழையைப் பறித்து திண்பதைப் பார்த்து அப்படியே நின்றனர். பிச்சைக்காரன் குலையில் உள்ள வாழை பூவை பறித்து, அங்கே வாயிலில் உள்ள மணமகன், மணமகள் பேரை தாங்கிய பதாகையில் பூவை தூவி விட்டு நடந்து சென்றான். அங்கிருந்தவர்கள் தலைக்குணிந்து நின்றனர்!

- செந்தில் வேலாயுதம்

விகடனில் உங்களுக்கென ஒரு பக்கம்...

உங்கள் படைப்புகளைச் சமர்ப்பிக்க இங்கே க்ளிக் செய்க https://www.vikatan.com/special/myvikatan/

My Vikatan
My Vikatan

ஏதோ ஓர் ஊரில், எங்கோ ஒரு தெருவில் நடந்த ஒரு விஷயம்தான் உலகம் முழுக்க வைரலாகிறது. உங்களைச் சுற்றியும் அப்படியொரு வைரல் சம்பவம் நடந்திருக்கலாம்... நடந்துகொண்டிருக்கலாம்... நடக்கலாம்..! அதை உலகுக்குச் சொல்வதற்காகக் களம் அமைத்துக் கொடுக்கிறது #MyVikatan. இந்த எல்லையற்ற இணையவெளியில் நீங்கள் செய்தி, படம், வீடியோ, கட்டுரை, கதை, கவிதை என என்ன வேண்டுமானாலும் எழுதலாம். மீம்ஸ், ஓவியம் என எல்லாத் திறமைகளையும் வெளிப்படுத்தலாம்.

உங்கள் படைப்புகளைச் சமர்ப்பிக்க இங்கே க்ளிக் செய்க https://www.vikatan.com/special/myvikatan/

அடுத்த கட்டுரைக்கு