Published:Updated:

கார்பென்டர்! - நெகிழ்ச்சி குறுங்கதை #MyVikatan

Representational Image
Representational Image ( Shashank Thapa / Unsplash )

மைக்ரோ நொடிகளில் என்னுள் பரபரப்பு தொற்றிக்கொண்டது. என்னாச்சுடா ....?என்றேன்..

பொறுப்புத் துறப்பு : இந்தக் கட்டுரை வாசகரின் படைப்பு. கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்களுக்கும் கருத்துகளுக்கும் அதன் ஆசிரியரே பொறுப்பாவார். கட்டுரை சம்பந்தமாக உங்களுக்கு ஆட்சேபனை இருந்தால், my@vikatan.com-க்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்!

மாலை 3 மணி .

மாத இறுதிக்கான

நோயாளர் வருகையின் புள்ளி விவர அறிக்கையோடு ஆழ்ந்திருந்தேன்.

"நல்லதோர் வீணை செய்தே " ..... என் கைபேசி அலைப் பொலியில் சிந்தனையை விடுவித்தேன்.

எதிர்முனையில் என் வீட்டைக் கட்டிய இன்ஜினீயர் தம்பி .

அக்கா ...வேலூரில் எந்த ஹாஸ்பிட்டல்ல டாக்டர் இருப்பாங்க என, எந்த ஒரு முகமன்னுமற்று, என் பதிலுக்கான அவசர விசாரிப்பு , அவனிடமிருந்து வெளிப்பட்டது .

மைக்ரோ நொடிகளில் என்னுள் பரபரப்பு தொற்றிக் கொண்டது.

என்னாச்சுடா ....?என்றேன் .

Representational Image
Representational Image
Pixabay

நம்ம வீட்ல வேலை செஞ்ச கார்பென்டர், படபடப்புனு பஸ் ஸ்டாப்ல படுத்திருக்காராம். எனக்கு போன் பண்ணி அவர் சொல்லிக்கொண்டிருக்கும் போதே அவரின் போன் கட் ஆகிடுச்சி. நான் அங்கு போய்க்கொண்டிருக்கிறேன். அதான் எந்த ஹாஸ்பிட்டல் இருக்கும் எனக் கேட்டான் .

55 வயது.

அமைதியான முகம்.

கருத்த தேகத்திலும் ஒளி வீசும் கண்கள்.

ஒரு வருட என் வீட்டுப் பணிகளில் நாங்கள் மொத்தமாகவே 20 வார்த்தைக்குள்ளே பேசியிருப்போம் .

தான் உண்டு, தன் பணி உண்டு என வேலையே கண்ணாக இருப்பார்.

அவரின் இரு பெண் குழந்தைகளில்

ஒருவளை குருப் II pass பண்ண வைத்தவர்.

இன்னொரு பெண் bank exam க்கான பயிற்சி வகுப்பில் இருக்கிறாள்.

காய்ந்து போன மரக்கட்டைகளைத் தேய்த்துத் தேய்த்துக் காய்த்து போன அவரின் கரங்களால் தன் பெண் பிள்ளைகளின் அறிவு தாகத்தை அணையாமல் காத்தவர்.

இவை அனைத்தும் அவரின் 20 வார்த்தைகளில் சுருக்க விடையளித்ததில் நான் அறிந்து கொண்டவை.

இன்று எதுவும்மற்று ,பேருந்து நிறுத்தத்தில் தனித்துக் கிடப்பது, என் மனக்கண்ணில் விரிந்தது...

பணியை விட்டு அகலமுடியா மருத்துவக்கடமை அழுத்த, அந்த இன்ஜினீயர் தம்பியிடம் தனியார் மருத்துவமனையைத் தேடுவதை விடுத்து அரசு மருத்துவமனைக்குச் செல் எனக் கூறி விட்டு அலைப்பேசியை அணைத்து வைத்தேன் .

Representational Image
Representational Image
Jonnica Hill / Unsplash

அருகே உள்ள அரசு மருத்துவமனை பணியாளர்க்குத் தகவல் அனுப்பி, தயாராக இருக்கச் செய்தேன் .

அரை நொடியில் மீண்டும் அழைப்பு , உடல் வியர்த்து கொட்டுவதாகவும், அவரால் எழுந்து அமர இயலவில்லை எனவும் பதறினான் இன்ஜினீயர் தம்பி.

என் இதயத் துடிப்பின் வேகம் உடலெங்கும் பரவ, எவ்விதத் தகவலும் என் பணியிடத்தில் வழங்க இயலாது கிளம்பி விட்டேன்.

மனம் எங்கோ சுயமற்று சுழலன்றபடி இருக்க வேகமாய் அரசு மருத்துவ மனைக்குள் நுழைந்தேன்.

அங்கே மருத்துவமனையின் முதலுதவி கரங்கள், அவரை சூழ்ந்து நிற்க அவரின் BP - 110/70 என்றது.

பாதுகாப்பு வட்டத்தில் நிற்க வைத்த முறுவலிப்பில் இன்ஜினீயர் தம்பியும் , இதர மேஸ்திரிகளும் அவரின் அருகே நின்றுகொண்டிருந்தனர்.

மெல்லிய மூச்சில், ஊக்க திரவம் உள்ளிறங்க, சன்னமான அவரின் ஒலியில் நாங்கள் ஆசுவாசித்து நின்றோம்.

இரண்டு மணி நேரம் கழித்து, கண் விழித்தார்.

முன் பின் விலாசமற்ற இடந்தன்னில், பரபரத்த அவரின் பார்வைக்குள் நாங்கள் சிக்கியதும் அதே பழைய சிரிப்பொன்று முகம் முழுவதும்.

Representational Image
Representational Image
Tobias Tullius / Unsplash

உடம்பைக் கவனித்துக்கொள்ளுங்கள் Sir என்றேன்.

சிறிய தலையசைப்போடு சிரிப்பை இன்னும் நீட்டித்தபடியே படுத்திருந்தார்.

டிஸ்சார்ஜ் செய்து, அனுப்பிவிட்டு அவர்களின் வண்டியைப் பின் தொடர்ந்தேன்.

ஏதோ சொல்வதற்காய்த் திரும்பி என்னைப் பார்த்தார் .

வண்டி ஓட்டியவாறே அவரின் அருகே சென்றேன் .

``இன்னிக்கு எனக்கு திருமண நாளம்மா....’’ என்றார் .

அவர் அதைச் சொல்லும்போது அவரின் கண்களில் அத்தனை நிம்மதி. திருமண நாளன்று உயிர் போய் உயிர் வந்திருக்கிறது.. என்ற நிம்மதியாக இருக்கலாம். மனைவி பிள்ளைகளை மீண்டும் பார்க்கப் போகிறோம் என்ற மகிழ்ச்சியாக இருக்கலாம். அவரின் மகிழ்ச்சியை மீட்டுக் கொடுத்துவிட்ட நிம்மதி எனக்கு.

சிறகொன்று துளிர்க்கத் தொடங்கியது என் பின்னால். பறந்துகொண்டே இருக்கின்றேன் கீழிறங்க மனமின்றி வெகு நேரமாய்.

-மருத்துவர். சித்ரா சுப்பையா

விகடனில் உங்களுக்கென ஒரு பக்கம்...

உங்கள் படைப்புகளைச் சமர்ப்பிக்க இங்கே க்ளிக் செய்க https://www.vikatan.com/special/myvikatan/

My Vikatan
My Vikatan

ஏதோ ஓர் ஊரில், எங்கோ ஒரு தெருவில் நடந்த ஒரு விஷயம்தான் உலகம் முழுக்க வைரலாகிறது. உங்களைச் சுற்றியும் அப்படியொரு வைரல் சம்பவம் நடந்திருக்கலாம்... நடந்துகொண்டிருக்கலாம்... நடக்கலாம்..! அதை உலகுக்குச் சொல்வதற்காகக் களம் அமைத்துக் கொடுக்கிறது #MyVikatan. இந்த எல்லையற்ற இணையவெளியில் நீங்கள் செய்தி, படம், வீடியோ, கட்டுரை, கதை, கவிதை என என்ன வேண்டுமானாலும் எழுதலாம். மீம்ஸ், ஓவியம் என எல்லாத் திறமைகளையும் வெளிப்படுத்தலாம்.

உங்கள் படைப்புகளைச் சமர்ப்பிக்க இங்கே க்ளிக் செய்க https://www.vikatan.com/special/myvikatan/

அடுத்த கட்டுரைக்கு