Published:Updated:

கார்ப்பரேட்.. கதிர்.. காதல்! - சிறுகதை #MyVikatan

Representational Image
Representational Image ( RODNAE Productions from Pexels )

கதிர் தன் கண்ணாடி அறையின் வெளியே, அபி தன் தோழியுடன் பேசிக் கொண்டு வெளியே செல்வதைக் கண்டான். அவர்கள் பேசுவதை உன்னிப்பாக கவனித்தான்.

பொறுப்புத் துறப்பு: இந்தக் கட்டுரை, வாசகரின் படைப்பு. கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்களுக்கும் கருத்துகளுக்கும் அதன் ஆசிரியரே பொறுப்பாவார். கட்டுரை சம்பந்தமாக உங்களுக்கு ஆட்சேபனை இருந்தால், my@vikatan.com-க்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்!

சென்னை -

வெள்ளிக்கிழமை காலை 11 மணி -

காட்சி 1:

தான் வாங்கிய புத்தம் புது காரை ஓட்டிக்கொண்டு, சென்னையின் அழகான வெயிலை ரசித்துக்கொண்டு (சகித்துக்கொண்டு ) ஒரு பெரிய பிரபலமான ஐ.டி. நிறுவனத்தின் வாசலில் காரை நிறுத்துகிறான் , நாராயணன்.

வாசலில் இருபெரும் காவலர்கள். காவலர்களிடம் "ட்ராவல்டெஸ்க் (cab Traveldrsk) " எங்கே என்று விசாரித்தவன் , நேராக முதல் மாடியின்

ட்ராவல்டெஸ்க் அலுவலகத்தினுள் சென்று, அதன் மேலாளரை சந்தித்தான்.

அவரிடம் ஒரு வேண்டுகோள் வைக்கிறான்.

" ஐயா, நான் புதிதாக ஒரு வாகனம் வாங்கி உள்ளேன். அதை இந்த நிறுவனத்தின் ஊழியர்களுக்காக பயன்படுத்த விரும்புகிறேன். தயவுசெய்து என் வாகனத்துக்கு அனுமதி தாருங்கள் ஐயா" என்றான்.

வேண்டுகோள் நிராகரிக்கப்படுகிறது...

கார்ப்பரேட் நிறுவனத்தில் அவ்வளவு எளிதாக வேலை நடந்து விடுமா என்ன?

மேலாளரின் உறவினர் அதே நிறுவனத்தின் இரண்டாவது மாடியில், ஊழியர்களுக்கான உணவு விடுதி நடத்திக் கொண்டு இருப்பதை அறிகிறான்.

அவனிடம் சென்றவன், ரூபாய் 50 ஆயிரத்தை லஞ்சப் பணமாக கொடுத்து, தன் வாகனம் அந்த நிறுவனத்தில் ஓட மேலாளரிடம் பரிந்துரைக்க வேண்டுகிறான்.

பரிந்துரையும் வெற்றிகரமாக முடிகிறது.....

நாராயணனும் திங்கட்கிழமை முதல், இந்த நிறுவனத்தில் தான் வண்டி ஓட்ட போவதை நினைத்து ,பெருமிதத்துடன் வெளியே உள்ள தன் வாகனத்தை நோக்கி நடக்க ஆரம்பித்தான்.

Representational Image
Representational Image

காட்சி 2 :

உணவு விடுதி நடத்துபவர் அந்த ஐம்பதாயிரத்தை எடுத்துக்கொண்டு மூன்றாவது மாடியில் உள்ள "நுகர்வோர் சேவை மேலாளர் " கதிரைப் பார்த்து தனக்கு திங்கட்கிழமை முதல், கேன்டீனில் பழக்கடை ஆரம்பிக்க அனுமதி கொடுக்க வேண்டுமென்று அந்த ஐம்பதாயிரத்தை அவரிடம் லஞ்சப் பணமாக கொடுக்கிறான்.

கதிரும் அனுமதி கொடுக்கிறார்...

திங்கட்கிழமை உணவு விடுதியுடன், பழக்கடையும் ஆரம்பிக்கப் போவதை நினைத்து, மிக்க மகிழ்ச்சியுடன் திங்கட்கிழமைக்காக காத்திருக்கத் தொடங்கினான்.

காட்சி 3 :

கதிர் தன் கண்ணாடி அறையின் வெளியே, அபி தன் தோழியுடன் பேசிக் கொண்டு வெளியே செல்வதைக் கண்டான்.

அவர்கள் பேசுவதை உன்னிப்பாக கவனித்தான்.

அபி: அடுத்த வாரம் ஐம்பதிராயிரம் அவசரமாக தேவைப்படுது. யாராவது கடனாக கொடுத்தால் நல்லாயிருக்கும்.

தோழி: எதுக்குடி

அபி: பகுதி நேர பாடப்பிரிவு ஒன்றில் சேர பணம் கட்டனும்.

அபி என்பவள் கதிர் ஒருதலைபட்சமாக காதலிக்கும், அவன் டீமில் உள்ள அழகான மற்றும் திறமையான பெண்.

அபி வெளியே சென்றவுடன் அவளது கேபினில் சென்று பார்க்கிறான். மேசை டிராயர் சிறிது திறந்துள்ளது. அபியின் மடிக்கணினி மேசையின் மேல் உள்ளது.

கதிருக்கு கணப்பொழுதில், பாழாய்ப்போன பழைய ஐடியா ஒன்று தோன்றுகிறது.

ஒரு காகிதத்தில், அவசரமாக காரின் 120 KM வேகத்தில், பழரசம் சொட்ட சொட்ட காதல் கடிதம் எழுதுகிறான். அதில் அவளுக்கு உதவுவதற்கு ஐம்பதாயிரம் பணத்தை வைத்து, சுருட்டி அவளின் மேசை டிராயரில் வைத்து விட்டு தன் அறைக்கு சென்று விடுகிறான்.

Representational Image
Representational Image
RODNAE Productions from Pexels

மாலை 5 மணி -

வெளியே சென்ற அபி தன் கேபின்னுக்கு வருகிறார். மேசை டிராயரில் என்ன இருக்கிறது என்றுக் கூட பார்க்காமல் அதனை பூட்டி சாவியை எடுத்துக் கொண்டு, தன் மடிக்கணினியும் எடுத்துக்கொண்டு வீட்டுக்கு கிளம்பி விடுகிறார்.

ஏமாற்றத்தில் கதிர்.....

ஆயினும் திங்கட்கிழமை அவள் திரும்பி வந்து தன் கடிதத்தையும், பண உதவியையும் கண்டிப்பாக பார்ப்பாள் என்ற நம்பிக்கையுடன் அவனும் வீட்டிற்கு கிளம்புகிறான்.

அனைவரும் திங்கட்கிழமைக்காக காத்திருக்க ......

காட்சி 4:

மாலை 7 மணி –

அரசு அறிவிப்பு :

"கொரோனா தொற்று நோய் பரவலை தடுப்பதற்காக நாடு முழுவதும் நாளை முதல், முழு ஊரடங்கு அமல்படுத்தப்படுகிறது. அனைத்து ஐ.டி. நிறுவன ஊழியர்களும் வீட்டிலிருந்து பணிபுரிய கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்."

ஒன்றரை வருடங்கள் உருண்டோடிவிட்டன...

மூடிய நிறுவனம் மூடியதாகவே இருக்க...

அபிக்கு, அவள் அத்தை மகனுடன் சொந்த ஊரிலேயே திருமணம் நடக்க...

ஐம்பதாயிரம் பணமும் , அழகிய காதல் கடிதமும் அபியின் மேஜை டிராயரில் தூங்கிக் கொண்டிருக்க...

மாறி மாறி பணம் கொடுத்த அனைவரும் மல்லாக்கப் படுத்துக்கொண்டு வீட்டின் விட்டத்தை பார்த்து பார்த்து முழிக்க....

-முற்றும் -

-பேளுக்குறிச்சி கதிரவன்

விகடனில் உங்களுக்கென ஒரு பக்கம்...

உங்கள் படைப்புகளைச் சமர்ப்பிக்க இங்கே க்ளிக் செய்க https://www.vikatan.com/special/myvikatan/

My Vikatan
My Vikatan

ஏதோ ஓர் ஊரில், எங்கோ ஒரு தெருவில் நடந்த ஒரு விஷயம்தான் உலகம் முழுக்க வைரலாகிறது. உங்களைச் சுற்றியும் அப்படியொரு வைரல் சம்பவம் நடந்திருக்கலாம்... நடந்துகொண்டிருக்கலாம்... நடக்கலாம்..! அதை உலகுக்குச் சொல்வதற்காகக் களம் அமைத்துக் கொடுக்கிறது #MyVikatan. இந்த எல்லையற்ற இணையவெளியில் நீங்கள் செய்தி, படம், வீடியோ, கட்டுரை, கதை, கவிதை என என்ன வேண்டுமானாலும் எழுதலாம். மீம்ஸ், ஓவியம் என எல்லாத் திறமைகளையும் வெளிப்படுத்தலாம்.

உங்கள் படைப்புகளைச் சமர்ப்பிக்க இங்கே க்ளிக் செய்க https://www.vikatan.com/special/myvikatan/

அடுத்த கட்டுரைக்கு