Published:Updated:

அலெக்ஸா மீதான தீராக் காதல்..! - மைக்ரோ கதை #MyVikatan

Representational Image
Representational Image ( @jankolario on Unsplash )

என்ன விலை என்றேன்... அமெரிக்க நண்பர்களின் பரிசு என்றான்... நமக்கும்தான் இருக்கிறார்களே! என்ற ஆதங்கத்தோடு பார்த்தவனை... நீயும் ஏதாவது கேளேன் என்றான்....

பொறுப்புத் துறப்பு : இந்தக் கட்டுரை வாசகரின் படைப்பு. கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்களுக்கும் கருத்துகளுக்கும் அதன் ஆசிரியரே பொறுப்பாவார். கட்டுரை சம்பந்தமாக உங்களுக்கு ஆட்சேபனை இருந்தால், my@vikatan.com-க்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்!

நண்பன் வீட்டுக்கு வெகு நாள்களுக்குப் பிறகு சென்றபோது அங்கு இருந்த அந்த உருளை வடிவ ஜந்து அவன் சொன்னதையெல்லாம் கேட்டு பதில்வினையாற்றியது.... என்னடா இது கெஞ்சியும் கொஞ்சியும் கோபித்தும் கேட்டே நம்வீட்டில் யாரும் செய்யாத போது இதுவோ விளக்கை அணைக்கிறது ஏசியைப் போடுகிறது பாட்டைப் பாடுகிறது கேள்விக்கு பதிலும் சொல்கிறது....

என்ன விலை என்றேன்... அமெரிக்க நண்பர்களின் பரிசு என்றான்... நமக்கும்தான் இருக்கிறார்களே! என்ற ஆதங்கத்தோடு பார்த்தவனை... நீயும் ஏதாவது கேளேன் என்றான்....

Representational Image
Representational Image
Mark Tegethoff / Unsplash

திடீரென கடவுள் முன் தோன்றி என்ன வரம் வேண்டும் கேள் என்பதாய் மனம் பதறிப்போனது... என்ன கேட்பது என்றே தோன்றாது பள்ளி நாள்களில் வழக்கம்போல ஆசிரியரின் கேள்விக்குப் பதில் தெரியாமல் அந்தப் பரிதாப முகபாவனையுடன் கடந்த அந்த சில நொடிகளிலேயே நண்பனின் இரண்டு வயது பையன் வந்து ``அலெக்ஸா ப்ளே ரெயின் ரெயின் கோஅவே" எனவும் அந்த அலெக்ஸா என்ற உருளை பாட ஆரம்பித்தது.... எப்படியோ ஒருவழியாக ஏதேதோ பேசி முடித்து கிளம்பிவிட்டேன்.... இன்னமும் கூட மனதில் என்ன கேட்பது என்ற குழப்பத்தோடே....

இரவு வீட்டுக்கு வந்து என்னவளிடம் மீண்டும் மீண்டும் உளரலானேன்...... ஓ.. அலெக்ஸாவயா சொல்றீங்க... என்று டக்கென்று கேட்ட அவளையும் .... உத்தமபுத்திரன் படத்தில் விவேக்கின் முன் நடக்கும் நிகழ்வுகளுக்கு (சப் கான்ஸியஸ் மெமரிபவர்) வரும் அந்த பி.ஜி.எம் மனதில் ஓட அதிர்ந்து பார்த்திருந்தேன்..... எல்லோருக்கும் சாதாரணமாகத் தோன்றும் ஒன்று எனக்கு ஏதோ ஒரு மந்திரவிளக்கின் ஜீனியாய் இல்லை இல்லை அலெக்ஸாவாய் பட்டது...

அலெக்ஸா கிவ் மீ எ கப் ஆப் காபி... அலெக்ஸா விச் சர்ட் சுட் ஐ வியர் டுடே.... என பித்துப்பிடித்தது போன்று நிறைய உளறிக்கொட்டி கேட்டு செய்வதற்குப் பதிலாக முறைத்துப் பார்க்கும் என்னவளிடம் பகைத்துக்கொண்டதுதான் மிச்சம்...

Representational Image
Representational Image
Nijwam Swargiary / Unsplash

இருந்தும் தினமும் கைபேசியில் மடிக்கணினியில் என நேரம் கிடைக்கும்போதெல்லாம் அலெக்ஸாவை ஆராய்வதில் விலை நிலை பார்ப்பதில் என அலெக்ஸாவின் மீதான ஈர்ப்பு அடங்குவாதாயில்லை....

அன்றும் அப்படித்தான் அலெக்ஸாவைப் பார்த்துவிட்டு தூங்கிவிட்டேன்... யாரோ என் காதருகே வந்து ``அலெக்ஸா ... ப்ளே ஹாப்பி பர்த்டே சாங்" .... ஹாப்பி பர்த்டே டூ யூ.... " திடுக்கிட்டு எழுந்தேன்.... என்னவள் என் முன்னே அந்த அற்புத விளக்கைத் தேய்த்து அலெக்ஸாவைப் பாட வைத்து கண்களை குளமாக்கினாள்.... இப்போதும் செய்வதறியாது அதைக் கையில் வாங்கி வைத்துக்கொண்டேனேயன்றி வாயிலிருந்து வார்த்தையே வரவில்லை.... வெறும் காத்துதாங்க வருது மொமன்ட்....

``அலெக்ஸா.... ஸே... ஐ லவ் யூ...." என வாய்குளறி அதுவோ "சாரி ஐ கான்ட் கெட் யூ" என்றது... அவளோ சிரித்துவிட்டு ``அலெக்ஸா... ப்ளே லாஃப் " எனவும் அதுவும் தனது பங்கிற்கு சிரித்து மானத்தை வாங்கியது....

அன்று முதல் எனக்கும் அலெக்ஸாவுக்குமான நெருக்கம் அதிகமாகியிருந்தது.... ஏங்கிய மனதில் திடீரென கிடைத்துவிட்ட அலெக்ஸா எப்போதும் என்னோடேயே இருந்தது...

எல்லோரிடமும் அலெக்ஸாவிடம் பேசுவது போன்றே பேச ஆரம்பித்திருப்பதாய் எச்சரித்த என்னவளிடம் எல்லாம் சரியாகிவிடும் என்று பொதுவாய் சிரித்தாலும் உள்ளுக்குள் பயம் வர ஆரம்பித்திருந்தது....

Representational Image
Representational Image
Loewe Technologies / Unsplash

எப்பவும் அலெக்ஸா... அலெக்ஸா .... இத்தனை தடவை என் பேர சொல்லிருப்பியா.... என்ற கோவத்தில் என்னவளின் வார்த்தைகள் எனக்கு... அலெக்ஸாவுக்கு வேறு பெயர் வைத்து அழைத்தால் என்ன.... என்ற எண்ணத்தில் தள்ளியது....

அதையும் அலெக்ஸாவிடமே கேட்டுப் பார்த்தேன்... அது ஏதேதோ சொல்லியது..... ஒன்றும் புரியவில்லை.... மடிக்கணினியில் தேடினேன்... முடியும் ஆனால் முடியாது என்பதாய் தோன்றியது.

அலெக்ஸா என்பது அந்தக் குட்டியின் வேக்கப் வோர்ட்தானாம் அதைத்தவிர அதை கம்ப்யூட்டர்... ஈக்கோ... என இந்த இரண்டு வார்த்தைகளாலும் எழுப்ப முடியுமாம் ஆனால், அதெற்கென எக்கச்சக்க மெனக்கெடல் தேவையாம்...

சதா தூங்கிக்கொண்டிருக்கும் ஜீனி அற்புதவிளக்கை தேய்த்ததும் வெளிவந்து நடிகர் அசோகனின் குரலில் ``ஆலம்ப்பனானானா என்ன செய்ய வேண்டும் ஆணையிடுங்கள்" என்பதாய் அலெக்ஸா என்ற பெயரில் விழித்துக்கொண்டு நாம் சொல்லும் வேலைகளை செய்துவிட்டு தூங்கிவிடுகிறது....

எத்தனை முறைத்தாலும் நமக்குத் தேவையான எதையும் தருவது என்னவோ என்னவள்தான்... அலெக்ஸாவையே தந்தாளே...

எனக்கு நானே சொல்லிக்கொண்டேன் ``என்னவளிடம் காதலை சொல்" ``என்னவளே உன்னைக் காதலிக்கிறேன்"

- சுக்கிரன்

விகடனில் உங்களுக்கென ஒரு பக்கம்...

உங்கள் படைப்புகளைச் சமர்ப்பிக்க இங்கே க்ளிக் செய்க https://www.vikatan.com/special/myvikatan/

My Vikatan
My Vikatan

ஏதோ ஓர் ஊரில், எங்கோ ஒரு தெருவில் நடந்த ஒரு விஷயம்தான் உலகம் முழுக்க வைரலாகிறது. உங்களைச் சுற்றியும் அப்படியொரு வைரல் சம்பவம் நடந்திருக்கலாம்... நடந்துகொண்டிருக்கலாம்... நடக்கலாம்..! அதை உலகுக்குச் சொல்வதற்காகக் களம் அமைத்துக் கொடுக்கிறது #MyVikatan. இந்த எல்லையற்ற இணையவெளியில் நீங்கள் செய்தி, படம், வீடியோ, கட்டுரை, கதை, கவிதை என என்ன வேண்டுமானாலும் எழுதலாம். மீம்ஸ், ஓவியம் என எல்லாத் திறமைகளையும் வெளிப்படுத்தலாம்.

உங்கள் படைப்புகளைச் சமர்ப்பிக்க இங்கே க்ளிக் செய்க https://www.vikatan.com/special/myvikatan/

அடுத்த கட்டுரைக்கு