Published:Updated:

கரடு முரடு பூவே..! - சிறுகதை #MyVikatan

Representational Image
Representational Image ( Ivanniaarellano from Pixabay )

முகிலன் கனத்த இதயத்துடன் எழுந்தான். என்ன முகிலன் இன்னைக்காவது அஞ்சலி பக்கத்துல உட்கார்ந்துட்டு போவீங்களா இல்லே இப்படியே தூரமா பார்த்துட்டு போகப் போறீங்களா..எனக்கு அந்த அளவுக்கு தைரியம் இல்லை டாக்டர் இப்படியே கிளம்புறேன்..

பொறுப்புத் துறப்பு: இந்தக் கட்டுரை, வாசகரின் படைப்பு. கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்களுக்கும் கருத்துகளுக்கும் அதன் ஆசிரியரே பொறுப்பாவார். கட்டுரை சம்பந்தமாக உங்களுக்கு ஆட்சேபனை இருந்தால், my@vikatan.com-க்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்!

சென்னை

கீழ்பாக்கம் மனநல மருத்துவமனை..

முகிலன் தூரத்திலிருந்து தன் மனைவி அஞ்சலியை பார்த்துக் கொண்டிருந்தான்...

அஞ்சலி தன் கையில் இருந்த பொம்மையின் வாயில் குச்சியை விட்டு ஆட்டிக் கொண்டிருந்தாள்..

பால் குடி பாப்பா பால் குடி பாப்பா என்று...

தன் மீது பைத்தியமாக இருந்தவள் தன்னால் பைத்தியமாகி விட்டதை எண்ணி கண்களால் பூமியை நனைத்துக் கொண்டிருந்தான்...

முகிலன் மனநல மருத்துவர் ரகுராம் வருவதைக் கண்டு கண்களை துடைத்துக் கொண்டு அவரை நோக்கி நகர்ந்தான்.

குட் மார்னிங் டாக்டர்..

வாங்க மிஸ்டர் முகிலன்.. என்ன ரொம்ப நாளா ஆளையே காணோமே. மனைவி மேல் உள்ள பாசம் அவ்வளவு தானா...

நீங்க வேற ஏன் டாக்டர் என்னை காயப்படுத்துறீங்க..

ஹைய்யோ சாரி முகிலன்.. நான் சும்மா விளையாட்டுக்கு சொன்னேன். எதுவும் மனசுல வச்சிக்காதீங்க..

பரவாயில்லை டாக்டர் நீங்க விளையாட்டுக்கு தான் சொல்றீங்கனு இந்த முட்டாளுக்கு புரியுது.. ஆனால் என்னோட குற்ற உணர்ச்சி அஞ்சலி விஷயத்துலே என்னை தினம் தினம் கொல்லுது டாக்டர்.

இங்கே பாருங்க முகிலன்.. நீங்க அஞ்சலியை நினைச்சு நினைச்சு உங்களுக்குள்ளே

மன அழுத்தத்தை உண்டாக்கிக் கிட்டா நீங்களும் அஞ்சலி பக்கத்துல அட்மிட் ஆக வேண்டியது வரும்.. நடந்ததை விடுங்க நடக்க போறதை மட்டும் யோசிங்க..

நானும் இப்போ பிரஸ்ஸர் மாத்திரை எடுத்துக்கிட்டு இருக்கேன் டாக்டர் ஒரு வாரமா..

ஆஹான் என் பேச்சை கேட்டுருந்தா மாத்திரை மருந்துனு எடுத்துக்க தேவையில்லை.. நீங்களும் உங்க பிரச்சினையை விட்டு வெளியே வர்ற மாதிரி இல்லை.. அதுக்கு மேலே ஒரு டாக்டரா நான் என்னதான் பண்றது..

என் டிப்ரஸ்ஸனை கொறைக்க தான் டாக்டர் வெளியூர் கிளம்பி போனேன். ஆனால் அங்கே போனதுக்கு அப்புறம் டிப்ரஸ்ஸன் ஓவர் ஆகி ஹாஸ்பிட்டல்லே அட்மிட் ஆயிட்டேன். அவங்க மாத்திரையை கொடுத்து அனுப்பிட்டாங்கே..

ஓகே முகிலன் உடம்பை பத்திரமா பார்த்துக்கோங்க..

தேங்க்யூ டாக்டர்.. இப்போ அஞ்சலிகிட்டே ஏதாவது இம்ப்ரூவ்மென்ட் சேஞ்சஸ் தெரியுதா டாக்டர்..

Representational Image
Representational Image
Pixabay

இரண்டு வருசமா இதைத் தான் முகிலன் பேசிக்கிட்டு இருக்கோம்..

உங்கள் குழந்தை இறந்து இரண்டு வருஷத்துக்கு அப்புறம் தான் அஞ்சலிக்கு இந்த மாதிரி ஆயிருக்கு..

இப்போ தான் எங்களுக்கு இன்னொரு குழந்தை இருக்குதே டாக்டர். அப்புறம் ஏன் அஞ்சலிக்கு இந்த மாதிரி..

ஒன்னு மட்டும் புரிஞ்சிக்கோங்க முகிலன்... உங்கள் முதல் குழந்தை இறந்ததுக்கு அப்புறம் அஞ்சலி மனதளவில் ரொம்ப பாதிக்கப்பட்டுருக்கா. ஆனால் அஞ்சலியோட கவலை அழுகை உங்களை பாதிக்கும்னு மனசுக்குள்ளேயே வச்சி அடக்கிட்டாங்கே. உங்கள் முதல் குழந்தை இறந்ததுலே அஞ்சலி அழுகலே ஆர்ப்பாட்டம் பண்ணவே ஒப்பாரி வைக்கலே..

ஆனால் மனசுக்குள்ளே அந்த ஃபீலிங் நீங்கள் இன்னொரு குழந்தை பெத்துக்கிட்டதுக்கு அப்புறமும் இருந்துருக்கு. உங்கள் பிரச்சினை உங்களோட இரண்டாவது குழந்தை மூலமா தீர்ந்துருக்கலாம். ஆனால் அஞ்சலிக்கு முதல் குழந்தையோட இறப்பை இப்போ வரைக்கும் தாங்கிக்க முடியலே. அதான் இந்த அளவுக்கு கொண்டு வந்து விட்டுருக்கு.. இதுக்கு மருந்து இல்லை முகிலன்.

அவளுக்கு உங்களோட ஆதரவு உங்கள் குடும்பத்தோட ஆதரவு அஞ்சலி குடும்பத்தோட ஆதரவு தான் தேவை.‌ ஆனால் உங்கள் எல்லோருக்கும் அஞ்சலியை கண்ட்ரோல் பண்ண முடியலைனு இங்கே கொண்டு வந்து விட்டுடீங்க.

பிரச்சினை இரண்டு வருசமா போகும்னு யாரும் எதிர் பார்க்கலையே டாக்டர். அஞ்சலினாலே இப்போ கையிலே இருக்குற குழந்தைக்கு எந்த பாதிப்பும் வந்துறக் கூடாதுனு தான் டாக்டர் இந்த முடிவு எடுக்க வேண்டியதா போச்சு‌..

ஹ்ம்ம் புரியுது முகிலன்.. ஆனால் அஞ்சலிக்கு உங்களுடைய அரவணைப்பு தேவைப்படும் நேரத்துலே நீங்க கொடுக்க தவறிட்டீங்க.

இனி அஞ்சலி எப்போ ரெகவர் ஆகுவாள்னு என்னாலே சொல்ல முடியாது. எங்களால் முடிஞ்சதை பண்ணிக்கிட்டு இருக்கோம். அதுக்கு மேல் கடவுள்கிட்டே வேண்டிக்கோங்க..

முகிலன் கனத்த இதயத்துடன் எழுந்தான்.

என்ன முகிலன் இன்னைக்காவது அஞ்சலி பக்கத்துல உட்கார்ந்துட்டு போவீங்களா இல்லே இப்படியே தூரமா பார்த்துட்டு போகப் போறீங்களா..

எனக்கு அந்த அளவுக்கு தைரியம் இல்லை டாக்டர் இப்படியே கிளம்புறேன்..

எனக்காக ஒரு தடவை அஞ்சலி பக்கத்துலே உட்கார்ந்துட்டு போங்களேன் முகிலன்.. ஏதாவது மேஜிக் நடக்குதானு பார்ப்போமே...

சாரி டாக்டர் நான் கிளம்புறேன்...

Representational Image
Representational Image

முகிலன் காரை எடுத்துக் கொண்டு வீட்டை நோக்கி பறந்தான்...

முகிலனின் அம்மா மீனாட்சி வீட்டு வாசலில் காய்கறி வாங்கிக் கொண்டிருந்தவள் முகில் காரிலிருந்து இறங்குவதை கவனித்தாள்...

வாடா நல்லவனே.. வீட்டை விட்டு போய் ஒரு வாரமாச்சு.. ஒரு ஃபோன் இல்லே எங்கே இருக்கேன்னு தகவல் இல்லே. உனக்குலாம் எப்போ தான்டா பொறுப்பு வரும்..

வந்த உடனே ஆரம்பிக்காம போறியாமா அங்குட்டு... எப்போ பாரு நொய் நொய்னு. நீ எப்போதான் திருந்துவே.. சும்மா பொறுப்பு இல்லே பருப்பு இல்லைனு கத்திகிட்டு...

பேதில போவே ஏன்டா பேச மாட்டே..

உனக்காக ஒவ்வொரு நாளும் கண்ணீர் சிந்திக்கிட்டு இருக்கேன்லே நீ இதுவும் பேசுவே இன்னமும் பேசுவே...

எனக்காக நீ எதுக்கு கண்ணீர் சிந்தனும்..

நான் என்ன செத்தா போயிட்டேன்.. நான் செத்து போனா கூட நீயெல்லாம் எனக்காக கண்ணீர் சிந்தாதே.. என் வாழ்க்கை இப்படி நாசமா போய் நான் இப்படி ஆனதுக்கு நீ தான் காரணம்...

முகிலன் கத்தினான்..

கேசவன் கத்தினார்.. டேய் வாயை மூடுடா.. உன் வாழ்க்கை இப்படி போறதுக்கு உன் அம்மா என்னடா பண்ணுனா.. ஒழுங்கா பொண்டாட்டியை அடக்கி வாழ துப்பில்லை உனக்கு. நீ என் பொண்டாட்டியை குத்தம் சொல்லிக்கிட்டு திரியுறியா...

அம்மா மட்டும் காரணம் இல்லை. நீங்களும் தான் காரணம். இந்த குடும்பத்துலே இருக்குற அத்தனை பேரும் தான் காரணம் என் வாழ்க்கை நாசமா போனதுக்கு..

அம்மா அப்பாவை குறை சொல்றதுக்கு வெட்கமா இல்லை உனக்கு... காயத்ரி எகிறினாள் முகிலனிடம்...

நீ வாயை மூடிட்டு போ.. அப்புறம் அக்கானு கூட பார்க்க மாட்டேன்..

உன் அம்மாவோட தம்பி பொண்ணை காதலிச்சேன். கல்யாணம் பண்ணி வைங்கனு போறாடுனேனே.. யாராவது என்னையோ அந்த பொண்ணையோ மதிச்சீங்களா...

அது நொட்டே இது நொட்டேனு குறை சொல்லிட்டு திரிஞ்சிங்கே.. நீயும் உன் புருஷனும் என்ன சொன்னீங்க. அந்த வீட்டுலயெல்லாம் கல்யாணம் பண்ணுனா கல்யாணத்துக்கு வரமாட்டேனு பிளாக் மெயில் பண்ணுனீங்கே...

எல்லோரும் சேர்ந்து இந்த உம்முனா மூஞ்சியை என் தலையிலே கட்டி வச்சிட்டு இப்போ உருகுறீங்களா.. நல்லாருங்கே நீங்கெல்லாம்..

நீங்க தானே கல்யாணம் பண்ணி வச்சீங்கே எனக்கு. அப்போ நீங்களும் அனுபவிங்க..

முகிலன் வாய்விட்டு அழுதான்...

சத்யா ஆறுதல் படுத்தினான்..

Representational Image
Representational Image
Pixabay

அண்ணா அழாதே அண்ணிக்கு சரியாகும் கவலைப்படாமே இரு... அண்ணியை போய் பார்த்துட்டு வந்தியா. குட்டி பாப்பாவை பார்த்தியா..

முகிலன் சத்யாவின் கையை தட்டிவிட்டு மாடிப் படி ஏறி அவன் ரூமிற்கு சென்றுவிட்டான்...

ஹைய்யோ என் புள்ளை வாழ்க்கையை நானே நாசம் பண்ணிட்டேனே.. அவளை என் புள்ளைக்கு கல்யாணம் பண்ணி வச்சி என் புள்ளை வாழ்க்கையை அழிச்சிட்டேனே.. கண்ட கண்ட மருந்துகளை திண்ணு ஒழுங்கா சாப்பிடாமே என் பேத்தியையும் கொன்னுட்டாளே பாவி.. இப்போ பைத்தியக்காரியா மாறி என் புள்ளை சந்தோசத்தையும் பறிச்சிட்டு என் பேரனையும் அம்மா இல்லாத புள்ளையா ஆக்கிட்டு போயிட்டாளே...

மீனாட்சி ஒப்பாரி வைத்து கொண்டிருந்தாள்..

முகிலன் கட்டிலில் படுத்து கண்களை மூடினான்..

ஏன் அஞ்சலி என்னை இப்படி தவிக்க விட்டுட்டு போயிட்டே...

நீ என் மேலே அளவுக்கதிகமான பாசம் காட்டி அடிமையா வச்சிக்கணும்னு நெனச்சியே தவிர என்ன புருசனா மதிக்கவே இல்லையேடி.

அப்புறம் எங்கே இருந்துடி உன் மேலே பாசம் காதல் வரும்.

என் மேலே அதிகமா கோவப்பட்டு கோவப்பட்டு என்னை விட்டு தூரமா போனியே தவிர என் பக்கத்துலே வர்றதுக்கு நீ முயற்சி பண்ணவே இல்லையேடி.. நீயும் திருந்துவே திருந்துவேனு எவ்வளவோ வாய்ப்பு கொடுத்தேனே அஞ்சலி, ஆனால் உனக்கு உன் கோபமும் உன் முட்டாள்தனமான எண்ணங்களும் தானே பெருசா தெரிஞ்சது..‌ நிச்சயமாக சொல்லுவேன் அஞ்சலி நம்ம பொண்ணு இறந்ததுக்கு உன்னோட கோபமும் உன்னுடைய அவசரபுத்தியும் தான் காரணம். அந்த கோபம் கண்டிப்பா போகாது எனக்கு.

இனிமேலாவது நீ திருந்தி என் கூட சந்தோசமா வாழ்வேனு நினைச்சேன் அஞ்சலி.. அதுக்கு அப்புறம் அழகான பையனை என் கையிலே பெத்து கொடுத்துட்டு நீ பைத்தியக்காரியாகி என்ன பழி வாங்கிட்டு போய்ட்டியா..

முகிலனுக்கு தன்னுடைய இரண்டு வயது மகன் தர்ஷனை பார்க்க வேண்டும் போல இருந்தது... முகத்தை கழுவிக் கொண்டு கீழே இறங்கிய முகிலன் தன் மகனை பார்த்து வருவதற்காக அஞ்சலி வீட்டிற்கு காரில் பறந்தான்...

அஞ்சலியின் அம்மா கற்பகம் தர்ஷனை மடியில் அமர்த்தி சோறூட்டிக் கொண்டிருந்தாள்..

முகிலனை பார்த்ததும் எழுந்து உள்ளே போனாள் வாயில் ஏதோ முனங்கிக் கொண்டு..

தர்ஷன் நின்று கொண்டிருந்தான்..

முகிலன் இரண்டு கைகளையும் தூக்கி காட்டினான்...

வாங்க இங்கே....

தர்ஷனும் உள்ளே ஓடினான்..

ரூமிலிருந்து கேசவன் வெளியே வந்தார் கண்ணாடியை துடைத்துக் கொண்டு..

வாங்க மாப்பிள்ளை.. எப்படி இருக்கீங்க..

நல்லா இருக்கேன் மாமா..

நீங்களாவது என்னை வாங்க மாப்பிள்ளைனு கூப்பிட்டீங்களே...

மன்னிச்சிருங்க மாப்பிள்ளை. நாங்க பெத்ததோ ஒரே ஒரு புள்ளை. அதுவும் பொம்பளை புள்ளை.. அவளையும் பைத்தியக்கார ஹாஸ்பிட்டல்லே இரண்டு வருசமா பறிகொடுத்துட்டு உட்கார்ந்துருக்குறோம்.. அதான் உங்க அத்தை கோவத்துலே இருக்கா..

என் மேலே என்ன மாமா கோவம். அஞ்சலி என் கூட இருந்த வரைக்கும் நான் நல்லாத்தானே வச்சிருந்தேன். என்னைக்காவது உங்கள்கிட்டே வந்து குறை சொல்லிருப்பாளா என்னைப் பத்தி.. அஞ்சலியோட கோபத்தையெல்லாம் நான் எனக்குள்ளே அடக்கிகிட்டு நான் வாழத் தானே செஞ்சேன். உங்கள் மகளை பத்தி நான் உங்களிடம் குறை சொல்லிருக்கேனா. அப்புறம் அத்தை என் மேலே கோவப்பட என்ன மாமா இருக்கு...

Representational Image
Representational Image

உண்மைதான் மாப்பிள்ளை.. ஆனால் எங்க மகளை நீங்களாவது கவனிச்சிருக்கலாமே. பேரனை நாங்க வளர்த்துருப்போமே.. என் பேரனையும் உங்க வீட்ல பார்த்துக்க முடியாதுனு சொல்லிட்டாங்க உங்க அம்மாக்கு உடம்பு சரியில்லைனு.. எங்களாலே எப்படி மாப்பிள்ளை பேரனையும் என் மகளையும் எங்க இரண்டு பேருனாலே பார்த்துக்க முடியும். நீங்களும் எங்க வீட்ல வந்து தங்கி அஞ்சலியை பார்த்துக்குறதுக்கு உங்க தன்மானம் இடம் தரலைலே.. அதான் கோவமா இருக்கா உங்க அத்தை..

சரி மாமா என் பிள்ளையை என்கிட்டே கொடுத்துருங்கே.. நான் பார்த்துக்குறேன். உங்களுக்கு எந்த சிரமமும் வேண்டாம்.. என் பிள்ளையை நான் பார்க்க வரும் போதுலாம் உங்க மனைவி மூஞ்ச தூக்கி வச்சிகிட்டு என்னை அவமானப் படுத்துறது என்னாலே சகிச்சிக்க முடியாது...

கேசவன் முகிலனின் காலை பிடித்துக் கொண்டு அழுதார்..

இனிமேல் எங்கே வாழ்க்கைக்கு அர்த்தமே எங்க பேரன் தான். அவனை எங்கள்கிட்ட இருந்து பிரிச்சுறாதீங்க மாப்ளே. உங்க அத்தையை நான் கண்டிச்சு வைக்குறேன். நீங்க எப்போ வேணும்னாலும் இந்த வீட்டுக்கு சந்தோசமா வாங்க மாப்ளே.

என் பேரனை பிரிச்சி எங்களை அனாதையாக்கிடாதீங்க மாப்ளே...

இதற்கு மேல் முகிலனால் அங்கு இருக்க முடியாமல் தர்ஷனுக்காக வாங்கி வந்த விளையாட்டு திண்பண்ட பொருட்களை வைத்துவிட்டு நகர்ந்தான்...

காரில் ஏறி அமர்ந்தவன் காரை நகர்த்தாமல் தலையில் கை வைத்து உட்கார்ந்தான்...

அப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்பாஆஆஆ

முகில் திரும்பி பார்த்தான்...

தேடிப் பார்த்தும் யாரும் இல்லை..

அஞ்சலியின் வீட்டை ஏறிட்டு ஏக்கத்தோடு பார்த்தான்..

அஞ்சலியோட இந்த வீட்டுக்கு எத்தனை தடவை வந்துருக்கேன்.. என்னை எல்லா நேரமும் சந்தோசமாக தானே வைத்திருந்தாள். நான் எப்படி என் அஞ்சலியை வெறுக்க ஆரம்பித்தேன். அஞ்சலியை திருமணம் செய்து கொண்டு இரண்டு பிள்ளைகளை பெற்றெடுத்து இந்த ஐந்து வருடத்தில் ஏதோ கடமைக்கு தானே அவளுடன் வாழ்ந்தேன். அவள் என் மீது வைத்திருந்த அளவுக்கதிகமான பாசம் தான் என்னை அஞ்சலியை வெறுக்க வைத்ததா..

மனைவி தன் கணவன் மீது பாசம் வைக்குறது தவறில்லையே. அவளின் பாசம் என்னை ஏன் அஞ்சலியை வெறுக்க வைத்தது.. சுதந்திரமாய் பறக்க விடாமல் என்னை அவளின் கட்டுப்பாட்டுக்குள் அடக்கி ஆள நினைத்தது தான் அவள் செய்த தவறு..

முகிலன் அஞ்சலி வீட்டையே பார்த்துக் கொண்டிருந்தான்...

காரை விட்டு இறங்கியவன் அஞ்சலியுடன் தான் வாழ்ந்த ரூமிற்குள் சென்று கதவை பூட்டிக் கொண்டான்....

அஞ்சலியுடன் தான் வாழ்ந்த நாட்களில் இருந்த நறுமணம் அந்த ரூமில் அப்படியே நிறைந்திருந்தது... முகிலின் துணிகளை யாரையும் துவைக்க விடாமல் அவளே துவைப்பாள்.. காய்ந்த துணிகளை எடுத்து அயன் செய்து மடித்து வைப்பாள்..

Representational Image
Representational Image
kira schwarz from Pexels

அவ்வாறு அடுக்கப்பட்ட துணியில் அஞ்சலியின் முகம் வந்து சென்றது முகில் முன்பு... இந்த வீட்டிற்கு வந்து விட்டாள் முகிலை குழந்தை போல பார்த்துக் கொள்வாள்..

ஒவ்வொன்றையும் நினைக்க நினைக்க கண்களில் இருந்து கண்ணீர் வழிந்தோடியது.

முகிலன் வாழ்க்கையில் முதன் முதலாக அஞ்சலியை தேடினான்...

தங்களின் திருமண புகைப்படம் சுவற்றில் தொங்கிக் கொண்டிருந்தது...

அதை கையில் எடுத்தவன் காதலோடு அஞ்சலியின் முகத்தில் முத்தங்களை பதிந்து கண்ணீர் சிந்தினான்...

ஐ லவ் யூ டி பைத்தியக்காரி..

ஐ லவ் யூ சோ மச்..

என் மேலே பைத்தியமா இருந்து என்னை

உன் மேலே பைத்தியமாக்க தெரியாமே

இப்படி என்னை தவிக்க விட்டு போய்ட்டியேடி அஞ்சலி... எப்போ எப்படி நான் உன்னை மீட்டெடுப்பேன்... ஹைய்ய்யோ என் பாசக்காரியை தொலைச்சிட்டேனே...

கடவுளே எனக்கு ஒரு வாய்ப்பு கொடுவேன்டா..

முகிலன் கண்ணீர் விட்டு கதறி அழுதான்...

அஞ்சலியை கட்டிப்பிடித்து அழவேண்டும் போல இருந்தது...

கண்களை துடைத்துக் கொண்டு கதவைத் திறந்தவன் வெளியே சோஃபாவில் தூங்கிக் கொண்டிருந்த தர்ஷனையும் தூக்கிக் கொண்டு மருத்துவமனையை நோக்கி பறந்தான்..

அஞ்சலி மருத்துவமனையில் தனக்கென ஒதுக்கியிருந்த கட்டிலில் உறங்கிக் கொண்டிருந்தாள்..

தோளில் தூங்கிக் கொண்டிருந்த தர்ஷனை கட்டிலின் ஒரு ஓரமாக படுக்க வைத்துவிட்டு அஞ்சலியின் கால்களை பிடித்துக் கொண்டு முகிலன் அழ ஆரம்பித்தான்...

என் கண் முன்னாடி எப்பவும் அழகா இருக்கனும்னு உன்னை அழகு படுத்திகிட்டே இருப்பியேடி. இப்போ இப்படி அலங்கோலமா கிடக்குறியே அஞ்சலி.. உன் மனசுக்குள்ளே எவ்வளவு கவலைகள் பாரங்கள் இருந்தாலும் என் தோள் மேலே சாஞ்சி அழுதுருக்கலாமேடி பைத்தியக்காரி. உன் பிரச்சனையை காது குடுத்து கேட்க முடியாத அளவுக்கு நான் கல் நெஞ்சக்காரனாடி..

Representational Image
Representational Image
Pixabay

முகிலனின் தலைமுடியை யாரோ கோதிக் கொண்டிருப்பதை உணர்ந்தவன் திடுக்கிட்டு எழுந்தான்...

அஞ்சலி ஒரு கையில் தர்ஷனையும் ஒரு கையில் முகிலனின் தலை மீதும் வைத்து கண்ணீர் சிந்தி கொண்டிருந்தாள்....

அஞ்......ச.....லி......

முகில் என்னை எங்கேயாவது கூப்பிட்டு போறியா. உன் வீட்டுக்கும் வேண்டாம் என் வீட்டுக்கும் வேண்டாம்... நாமே எங்கயாவது போய்றலாம்... நீ நான் நம்ம குழந்தை மூணு பேரு மட்டும்...

அஞ்..... ச.... லி......

நான் பைத்தியம் இல்லை டா...

நான் இந்த ஹாஸ்பிட்டலுக்கு வரும் போது ஒரு மன அழுத்த நோயாளியாக தான் வந்தேன்.. நீ என் பாசத்தை புரிஞ்சிக்கனும்னு ஆசைப்பட்டேன்.. அதான் பைத்தியமா நடிக்க வேண்டியதா போச்சு‌.

என்னைக்காவது நீ என்ன புரிஞ்சிக்க மாட்டியானு தான்டா ஏங்கிகிட்டு காத்திருந்தேன்.. என்னை புரிஞ்சிக்க உனக்கு இரண்டு வருசம் தேவைப்பட்டுச்சாடா....

அஞ்சலி அழுதாள்..

அப்படிலாம் இல்லே டி என் செல்லமே..

வேற எப்படிடா... இரண்டு வருஷம்

ஆயிருச்சுலே நீ என்னை இங்கே விட்டுட்டு‌போயி... நீ வரும் போதுலாம்

நானும் ஆசையோடு காத்துக்கிட்டு இருப்பேன் நீ என் பக்கத்துலே வந்து என் கையை புடிச்சு எனக்காக அழுவேனு.. நான் ஒவ்வொரு தடவையும் ஏமாந்து போகும் போது எவ்வளவு வலிச்சது தெரியுமா முகில்.. நான் உனக்கு அவ்வளவு கொடுமை பண்ணிருக்கேனா டா.....

ஹைய்யோ அப்படிலாம் இல்லைடி என் தங்கம்ம்ம்மே....

இல்ல முகில் நானும் தப்பு நிறையவே பண்ணிருக்கேன்.. எங்க அம்மா பேச்சை கேட்டு கேட்டு நானும் நீ என் கூட தான் இருக்கனும் நீ எனக்கு மட்டும் தான்னு உங்களை நிறைய கோவப் படுத்திருக்கேன் காயப் படுத்திருக்கேன்... அதனாலே நமக்கு யாருமே வேண்டாம் முகில்.. நாமே எங்கேயாவது போயிடலாம் ப்ளீஸ்....

என்னை கூட்டிட்டு போறீயா டா ப்ளீஸ்....

ஹே அஞ்சலி என் செல்லம்மே... முகிலன் அஞ்சலியின் முகம் முழுவதும் முத்தங்களை பதித்து தன் காதலை உணர்த்தினான்... இனிமேல் என் வாழ்க்கை உனக்காகவும் நம்ம பையனுக்காக மட்டும் தான் அஞ்சலி.. வா கிளம்பலாம்...

என்ன முகிலன் சந்தோசமா இருக்கீங்க போலே...

டாக்டர் ரகுராம் உள்ளே நுழைந்தார்..

நான் தான் சொன்னேன்லே முகிலன் அஞ்சலி பக்கத்துலே உட்காருங்கே மேஜிக் நடக்கும்னு. நீங்க தான் என் பேச்சை கேட்கலே‌..

ஹைய்யோ சாரி டாக்டர்...

பரவாயில்லை முகிலன் இனிமேலாவது ஒருத்தருக்கொருத்தர் புரிஞ்சி நடந்துக்கோங்க...

ஓகே டாக்டர் தேங்கயூ என் மனைவியை பத்திரமா பார்த்துகிட்டதுக்கு..

அது என் டியூட்டி முகிலன்.. நீங்க பத்திரமா போயிட்டு வாங்க..

தர்ஷன் கண் விழித்துப் பார்த்தான்..

கற்பகம் இரண்டு வருடமாக அஞ்சலியை தர்ஷனுக்கு ஃபோட்டோவில் காண்பித்து அம்மா அம்மா என்று சொல்லி வளர்த்தாள். அதனால் அஞ்சலியை அடையாளம் கண்டு கொண்டு அப்பா இது தான் அம்ம்மா என்றான்...

அஞ்சலியும் முகிலனும் பூரித்துப் போய் தர்ஷனை உச்சி முகர்ந்தார்கள்...

இரண்டு பேரும் தங்களுடைய வீடுகளில் விஷயத்தை சொல்லிவிட்டு புதிய பயணத்தை நோக்கி அடியெடுத்து வைத்தார்கள்...

அவர்களுக்கான புதிய வாழ்க்கை காத்திருந்தது...

-ஹசன் அப்பாஸ்

விகடனில் உங்களுக்கென ஒரு பக்கம்...

உங்கள் படைப்புகளைச் சமர்ப்பிக்க இங்கே க்ளிக் செய்க https://www.vikatan.com/special/myvikatan/

My Vikatan
My Vikatan

ஏதோ ஓர் ஊரில், எங்கோ ஒரு தெருவில் நடந்த ஒரு விஷயம்தான் உலகம் முழுக்க வைரலாகிறது. உங்களைச் சுற்றியும் அப்படியொரு வைரல் சம்பவம் நடந்திருக்கலாம்... நடந்துகொண்டிருக்கலாம்... நடக்கலாம்..! அதை உலகுக்குச் சொல்வதற்காகக் களம் அமைத்துக் கொடுக்கிறது #MyVikatan. இந்த எல்லையற்ற இணையவெளியில் நீங்கள் செய்தி, படம், வீடியோ, கட்டுரை, கதை, கவிதை என என்ன வேண்டுமானாலும் எழுதலாம். மீம்ஸ், ஓவியம் என எல்லாத் திறமைகளையும் வெளிப்படுத்தலாம்.

உங்கள் படைப்புகளைச் சமர்ப்பிக்க இங்கே க்ளிக் செய்க https://www.vikatan.com/special/myvikatan/

அடுத்த கட்டுரைக்கு