Published:Updated:

அத்தா..! - குறுங்கதை #MyVikatan

Representational Image
Representational Image

அந்த வெள்ளிக்கிழமை வந்தது. அம்மாஜி என்ற அதே குரல் மிகுந்த ஆர்வத்துடன் என் மனைவிக்கு முன்னாள் எழுந்து சென்றேன்...

பொறுப்புத் துறப்பு: இந்தக் கட்டுரை, வாசகரின் படைப்பு. கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்களுக்கும் கருத்துகளுக்கும் அதன் ஆசிரியரே பொறுப்பாவார். கட்டுரை சம்பந்தமாக உங்களுக்கு ஆட்சேபனை இருந்தால், my@vikatan.com-க்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்!

"அம்மாஜி", என்று ஒரு சத்தம் கேட்டால் அன்று வெள்ளிக்கிழமை வந்து விட்டது என்று பொருள்.

வாசலில் யாசகர்கள்..

வழக்கம் போல் என் மனைவி அவர்களுக்கு உணவுக் கொடுக்க சென்றாள், அவசரமாக ஒருவர் என்னை அழைத்ததின் பேரில் நானும் வெளியே சென்றேன். அவரிடம் பேசிக்கொண்டு இருக்கும் போதே அந்த யாசகம் கேட்கும் கூட்டத்தில் என் மகளுடைய வயதை ஒத்த பெண்ணை கண்டேன்,

"கருப்பு நிற புர்ஹாவும் மஞ்சள் நிற துப்பட்டியும், அழுக்கு நிறைந்த அவளின் முகம்" காண்போருக்கு ஒரு நெருடலை உண்டாக்கும்.

நாம் தான் சுத்தமான ஆட்கள் ஆயிற்றே, அழுக்கை உள்ளே வைத்து கொள்ளும் ஆட்கள்.,

ஆடையில் தெரியும் வறுமை அவள் கண்களில் இல்லை, நிச்சயமாக இல்லை.

என்னை அறியாமல் அவளிடம் பேசத் தொடங்கினேன்.

Representational Image
Representational Image
Pixabay

"உன் வீடு எங்கே இருக்கிறது என்று கேட்டேன்..

ரயில்வே ஸ்டேஷன் பின்னாடி அத்தா..

ஒ! அப்பா என்ன பண்றார்?

அவருக்கு ஒரு கை இல்லை வீட்லதான் இருக்கார்தா, என்றாள்.

ஸ்கூல் போகிறாயா? ஆமா தா அஞ்சாப்பு, சரி என்று வீட்டிற்குள் நுழைந்தேன்,

சிறிது நேரத்தில் அவள் கிளம்பிவிட்டாள்...

ஆனால் அவள் குரலும், அந்த கண்களும், என்னை தொந்தரவு செய்யாமல் இல்லை.

அந்த பெண்ணின் குரலும் என் அண்ணன் மகனின் குரலும் ஒத்ததாகவே இருக்கும்.

செல்வ செழிப்புடன் இருக்கும் மகளின் குரலும் யாசகருடைய மகளின் குரலும் ஒரு கலக்கத்தை உண்டு பண்ணியது, ஒரு கணம் கண்ணில் ஒரு துளி கண்ணீர்.....

யாரும் பார்க்காத வண்ணம் மறைத்து கொண்டேன்.

ஏன் இந்த கண்ணீர்? எதற்கு வருத்தப்படுகிறேன்! ஒன்றும் புரியவில்லை ஏற்றத் தாழ்வுகளை இன்று நேற்றா பார்க்கிறோம்? ஏதேனும் உதவி செய்து அவள் வாழ்க்கை தரத்தை உயர்த்தி விடலாம் என்று இன்று போல் பலமுறை தோற்று இருக்கிறேன்.

அன்று இரவு முழுவதும் தூக்கம் வரவில்லை, விடிந்ததும் அவள் வீட்டிற்கு சென்று ஏதேனும் உதவிகள் தேவையா என்று கேட்கலாம் போல் இருந்தது. வேண்டாம் அது தவறாகிவிடும், கையறு நிலை என்றும் கேவலம் தான்.... இவர்களை போன்றோர்களுக்கு என்ன தான் தேவை? ஒரு நாள் உணவு? புது ஆடை? இல்லை கௌரவமான ஒரு வாழ்க்கை நிம்மதி இவை தானே , நம்மால் இதை தர முடியுமா? ஆயிரம் கேள்விகள் எனக்குள் கேட்டுக்கொண்டேன், நிறைய யாசகர்களை கடந்து சென்று இருக்கிறேன் இது போன்று யாரும் என்னை பாதித்தது இல்லை, மிக சாதாரண விஷயம் இது என்று எடுத்து கொண்டாலும் ஒரு இனம் புரியா கவலை இருந்து கொண்டுதான் இருந்தது.

காலம் கடக்கும் என்ற நம்பிக்கையில் அவளையும் என் மகளாகவே ஏற்றுக் கொண்டேன்.

Representational Image
Representational Image

ஒரு வழியாக விடிந்தது. அடுத்த வெள்ளிக்கிழமைக்காக காத்திருந்தேன், அவளை பற்றி சிந்தனை அவ்வப்போது வரும் எப்போதெல்லாம் வரும் என்றால், என் மகளை பார்க்கும் போதெல்லாம் வரும் அடடா அவள் பெயரை கேட்காமல் விட்டுட்டோமே இந்த வாரம் கேட்டு விடுவோம், என்ன பெயர் இருக்கப் போகிறது? ஒரு ஆயிஷா இல்லை பானு அல்லது ரீன் என்று முடியும் ஏதேனும் ஒரு பெயர் தான் இருக்க வேண்டும்.

அந்த வெள்ளிக்கிழமை வந்தது. அம்மாஜி என்ற அதே குரல் மிகுந்த ஆர்வத்துடன் என் மனைவிக்கு முன்னாள் எழுந்து சென்றேன்.

ஓய்.. என்று சொன்னேன் அத்தா என்று புன்னகைத்தாள், அஸ்ஸலாமு அலைக்கும் என்றேன்.

முகத்தில் சிறிது புன்னகையும் புரியாத தன்மையும் தெரிந்தது நான் சொன்னது புரியவில்லை போலும் என்று மீண்டும் அஸ்ஸலாமு அலைக்கும் என்றேன், நான் சொன்னது ஒன்றுமே புரியாதவளை போல் முகம் சுருங்கியது..

பின்னால் வந்த என் மனைவி ஸலாம் சொல்லு புள்ள என்று சொன்னதும் சிறிது சிரிப்புடன் இன்னும் குழம்பிபோனாள், என் இதயம் நொறுங்கியது வந்திருப்பது பசியால் வாடும் என் மகள் தானே தவிர ஆயிஷாவோ பானுவோ இல்லை என்று நினைத்த தருணத்தில் என் கண்ணீரை துடைக்க முயன்றபோது அவள் என்னாச்சுதா என்றாள்...!

-ஹசன் பவா

விகடனில் உங்களுக்கென ஒரு பக்கம்...

உங்கள் படைப்புகளைச் சமர்ப்பிக்க இங்கே க்ளிக் செய்க https://www.vikatan.com/special/myvikatan/

My Vikatan
My Vikatan

ஏதோ ஓர் ஊரில், எங்கோ ஒரு தெருவில் நடந்த ஒரு விஷயம்தான் உலகம் முழுக்க வைரலாகிறது. உங்களைச் சுற்றியும் அப்படியொரு வைரல் சம்பவம் நடந்திருக்கலாம்... நடந்துகொண்டிருக்கலாம்... நடக்கலாம்..! அதை உலகுக்குச் சொல்வதற்காகக் களம் அமைத்துக் கொடுக்கிறது #MyVikatan. இந்த எல்லையற்ற இணையவெளியில் நீங்கள் செய்தி, படம், வீடியோ, கட்டுரை, கதை, கவிதை என என்ன வேண்டுமானாலும் எழுதலாம். மீம்ஸ், ஓவியம் என எல்லாத் திறமைகளையும் வெளிப்படுத்தலாம்.

உங்கள் படைப்புகளைச் சமர்ப்பிக்க இங்கே க்ளிக் செய்க https://www.vikatan.com/special/myvikatan/

அடுத்த கட்டுரைக்கு