Published:Updated:

`கறியும் சோறும்!' - உண்மை குறுங்கதை #MyVikatan

Representational Image
Representational Image

மகளுக்கு கஷ்டங்களின் நிழல்கூடத் தெரியாது வளர்த்துவிட்டாள். யுனிவர்ஸிட்டி ரேங்க் வாங்கும் பிள்ளையாச்சே..!

பொறுப்புத் துறப்பு: இந்தக் கட்டுரை, வாசகரின் படைப்பு. கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்களுக்கும் கருத்துகளுக்கும் அதன் ஆசிரியரே பொறுப்பாவார். கட்டுரை சம்பந்தமாக உங்களுக்கு ஆட்சேபனை இருந்தால், my@vikatan.com-க்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்!

``அம்மா... ரொம்ப நாளாச்சு கறியும் சோறும் சாப்பிட்டு. இன்னைக்கு பண்ணி வைக்கறியாம்மா? ப்ளீஸ்...'' என்று சொல்லி கல்லூரி சென்ற மகளுக்கு, கறியும் சோறும் வாங்க வழி தெரியாமல் யோசித்தவாறே நடந்தவளின், வீட்டைத் தாண்டித்தான் அத்தனை சொந்தங்களின் வீடும். `கறியும் சோறும் போட இவர்களிடமா பணம் கைமாற்றாக கேட்பது?' என்று யோசித்தவாறே நடந்தாள் தாயம்மா.

மகளுக்குக் கஷ்டங்களின் நிழல்கூடத் தெரியாது வளர்த்துவிட்டாள். யுனிவர்ஸிட்டி ரேங்க் வாங்கும் பிள்ளையாச்சே..!

குறுங்கதை
குறுங்கதை

``இந்த வயதில், இந்த நேரத்தில் யாருதான் வேலை தருவா? வேலை முடிஞ்சு போனாலும், கறி வாங்கி செய்யறதுக்குள்ள என் பிள்ளை வீட்டுக்கு வந்துடுவாளே?’’ என்று யோசித்தவாறே நடந்த தாயம்மாள், நின்ற இடம் ஒரு மருத்துவமனை அருகில்.

அங்கு வெள்ளையும் சொல்லையுமாக வந்த ஒருவர், ``என்னம்மா ரத்தம் குடுக்கறீங்களா? காசு தந்துடுவேன்...’’ என்றார்.

``எவ்வளவு பணம் தருவீங்க?’’

``ரத்தப் பிரிவைப் பொறுத்து இருக்கும்மா...’’

``என் ரத்தம்`பி' நெகட்டிவ்...’’

``கிடைக்கறது ரொம்ப கஷ்டம்மா... வாங்கம்மா’’ என்று மரியாதையாகக் கூட்டிக்கொண்டுப் போய், ஒரு பாட்டில் ரத்தம் எடுத்துக் கொண்டு, ரூ.1000 கொடுத்தார்.

``நூறு ரூபாயா குடுங்க... அப்போதான் என் கை நிறைஞ்சு, காசு வாங்கின மாதிரியிருக்கும்..’’ என்று கேட்டு வாங்கிக்கொண்டார்.

Mother - Representational Image
Mother - Representational Image
Image by Clker-Free-Vector-Images from Pixabay

சந்தோஷமாக வரும் வழியிலேயே, ``தனிக்கறி குடுங்க பாய்’’ என்று கேட்டு வாங்கிச் சமைத்து முடித்தாள்.

`தாயம்மாவுக்கு புருஷன் சரியில்லைனாலும், அக்கம் பக்கம் அஞ்சோ பத்தோ வாங்காம, வீட்டுச் சத்தம் வெளியே வாராம, கறியும் சோறும் மணக்க, குடும்பம் நடத்துற திறமையே திறமை’ என்று பக்கத்து வீட்டு ராஜியக்கா பேசுவதைக் கேட்டும், கல்லூரி முடிந்து வந்த மகள் கறி வாசனை பிடித்து, தன் பெரிய கண்ணை உருட்டிச் சாப்பிட்ட அழகிலும் மயங்கிய தாயம்மாவின் பாசத்துக்கும் சுயமரியாதைக்கும் விலை ரூ.1,000 அல்ல... அளவிடமுடியாதது!

- ரபியா, திருச்சி

விகடனில் உங்களுக்கென ஒரு பக்கம்...

உங்கள் படைப்புகளைச் சமர்ப்பிக்க இங்கே க்ளிக் செய்க https://www.vikatan.com/special/myvikatan/

My Vikatan
My Vikatan

ஏதோ ஓர் ஊரில், எங்கோ ஒரு தெருவில் நடந்த ஒரு விஷயம்தான் உலகம் முழுக்க வைரலாகிறது. உங்களைச் சுற்றியும் அப்படியொரு வைரல் சம்பவம் நடந்திருக்கலாம்... நடந்துகொண்டிருக்கலாம்... நடக்கலாம்..! அதை உலகுக்குச் சொல்வதற்காகக் களம் அமைத்துக் கொடுக்கிறது #MyVikatan. இந்த எல்லையற்ற இணையவெளியில் நீங்கள் செய்தி, படம், வீடியோ, கட்டுரை, கதை, கவிதை என என்ன வேண்டுமானாலும் எழுதலாம். மீம்ஸ், ஓவியம் என எல்லாத் திறமைகளையும் வெளிப்படுத்தலாம்.

உங்கள் படைப்புகளைச் சமர்ப்பிக்க இங்கே க்ளிக் செய்க https://www.vikatan.com/special/myvikatan/

அடுத்த கட்டுரைக்கு